முக்கிய கோவில்களில் செங்குந்தர் கைக்கோள் முதலியார்களுக்கு உள்ள உரிமைகள்.

3

இந்த பட்டியலை முழுமையாக தயார் செய்ய எந்தெந்த கோவில்களில் நம் சமூகத்துக்கு என்னென்ன உரிமைகள், திருநாள் மண்டபம் படிகள்/கட்டளைகள்  உள்ளது என்று கிழே Comment இல் சொல்லுங்க அல்லது உரிமை தொடர்பான பத்திரிக்கை மற்றும் கல்வெட்டுகளை  78269 80901 க்கு what's appp செய்யவும். அல்லது இங்கு(Click)செய்து படிவத்தை நிரப்புங்கள்.  

 

தமிழீழம் இலங்கை
 வடக்கு மாகாணம்
உலகப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலில் நடக்கும் அனைத்துப் பிரிவுகளிலும் கொடி சீலையை பிடித்து திருவிழாவை தொடங்கி வைப்பது மற்றும் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் வேடமணிந்து சூரசம்ஹாரம் செய்வது யாழ்ப்பாணம் செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களின் உரிமை

கிழக்கு மாகாணம்
● 
 

தொண்டைமண்டலம்(வட தமிழகம்)

ஆந்திரா - சித்தூர் மாவட்டம்
புத்தூர் முருகன்(சுப்ரமணிய சுவாமி கோவில்) நம் சமூகத்தில் உள்ள 
வசந்தராய, அதியமான் கோத்திரம் பங்காளிகளுக்கு பல உரிமைகள் உள்ளது. 

● காளஹஸ்தி திருக்காளத்தீஸ்வரர் அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை
திருக்கல்யாணத் திருவிழா
மேலும் தகவலுக்கு: (Click)


சென்னை மாவட்டம்
● 


காஞ்சிபுரம் மாவட்டம் 
●  கொடியேற்றம் மண்டபகடி - காஞ்சிபுரம் கட்சபேஸ்வர் கோயில், காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயில், திருமேற்றலிஸ்வர் கோயில், பண்ணமுடிஈஸ்வர் கோயில், அறம் வளதீஸ்வார் கோயில்,


செங்கல்பட்டு மாவட்டம்
● 


திருவள்ளூர் மாவட்டம் 
● 


திருவண்ணாமலை மாவட்டம் 
● திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் கொடி சீலையை வழங்கி திருவிழாவை தொடங்கி வைப்பது மற்றும் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 - 00 மணிக்குள் அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி செங்குந்தர் குல
சாமி முதலியார் குடும்பத்தின் மண்டகப்படி ஆகும். தான்ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல் மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும் அந்தக் குடும்பத்தின் அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே உலா வருவார்கள்.

● திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தின் போது மலை தீபம் ஏற்றுவது தேவையான நெய்  பொருட்களை கடலூர் மாவட்ட முதனை(முதல் நெய்) கிராம செங்குந்த கைக்கோளர் மக்கள் தான் தொட்டு தொட்டு வழங்கி வருகின்றனர்


● வந்தவாசி
அருள்மிகு ஜலகண்டேஸ்வர் ஆலய பிரம்மோற்சவ விழாவில் 6 ஆம் நாள்
விழா யானை வாகன வீதி உலா செங்குந்தர் சமூகம் செய்கிறது.


இராணிப்பேட்டை மாவட்டம் 
● 


வேலூர் மாவட்டம்
 
 



திருப்பத்தூர் மாவட்டம்

● 



விழுப்புரம் மாவட்டம் 
● புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முத்தியால்பேட்டை செங்குந்தர்கள் சார்பில் 1-திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழாவிற்காகவும்(பொம்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது), 


கள்ளக்குறிச்சி மாவட்டம்
● ரிஷிவந்தியம் சிவன் கோயிலில் பல மண்டகப்படி உரிமைகள் மற்றும் சூரசம்ஹாரம் செய்யும் உரிமை செங்குந்தர் கைக்கோளர் சமூகத்துக்கு உள்ளது

கடலூர் மாவட்டம் 

●  சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெறும் விழாக்கள் அனைத்திலும் செங்குந்தர் சமூகம் சார்பாக கொடியேற்றம் நடைபெறும்.

●கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள் சன்னதியில் உள்ள ஏழு குழந்தையம்மன் கோவில் நிர்வாகம் உற்சவம் எல்லாம் செங்குந்தர் பொது மக்களை சார்ந்தது. பங்குனி மாதத்தில் 10 நாட்கள் உற்சவம் நடக்கும்.

● பண்ருட்டி அருள்மிகு ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி
சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழா

● விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கொடிமரத்தில் கொடி ஏற்றும் உரிமை  மற்றும் சூரசம்ஹாரம் செய்யும் உரிமை முழு தகவலுக்கு: (Click )
விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரிஸ்வரர் ஆலயம் 
1 ஆழத்து விநாயகர் கொடியேற்றம் 
2 வேடுபுரி
3 மாசி மகம் கொடியேற்றம் 
4 சூரசம்ஹாரம்



பாண்டிச்சேரி 
● புதுவை மாநகர
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
பெருவிழாவில் சிங்க வாகன மண்டப கட்டளை நம் சமூகத்துக்கு உள்ளது.

● அட்டப்பாக்கம் அருள்மிகு
இராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் சூரசம்ஹாரப் பெருவிழா.

● புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவிற்காக, ஆகிய கோவில்களில் கொடி ஏற்றப்பட்டு வருகின்றது

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம்
செங்குந்தர்கள் மிகுதியாக வசிக்கும் ஊர்களில் இதுவும் ஒன்றாகும். இராச
சோழேச்சுரப்பெருமான் இங்கு கோயில் கொண்டுள்ளார். அபிராமி அம்மை அருள்பாலித்து வருகின்றான். சுமார் முந்நூறு ஆண்டுகட்கு முன்பு இவ்வாலயம் ஒரு சிவாச்சாரியார் கைக்கு வந்திருக்க லாம் என்று யூகிக்கப்படுகிறது. சிவாச்சாரியார் பொறுப்பிலிருந்தபோது கோயிலுக்குரிய நிலபுலங்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கின்றன. போதிய வருவாய் இல்லாது சிரமப்பட்டு பரிபாலித்து வந்த இவர்கள், எந்த சமூகத்தினரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்தனர். நல்லொழுக்கமும் அறச் சிந்தனை யும் உடைய செங்குந்தப் பெருமக்களின் முதல்வரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்
தனர். அதுமுதல், நமது குலப் பெரிய
வர்கள் கண்ணும் இடும் கவசமும் போல் ஆலயத்தைக் காத்து ஆண்டுதோறும் பொருட்பெருக்கம் செய்து வளர்ச்சியடை யாச் செய்கின்றனர். இக்காலத்தில் பெரும்
பொருள் உள்ள ஆலயங்களுள் இதுவும்
ஒன்றாக இருப்பதற்கு இப்பெருமக்களே
காரணம், இவ்வாலயத்திற்கு ஐந்துகாலப் பூசையும், சிவபெருமான் முருகப்பெருமான் அம்பிகை இவர்கட்குரிய சிறப்பு விழாக்களும் இங்கு முறையாக நடந்து வருகின்றன. இவ்வாலயும் நல்ல நிர்வாகத்திலும் சிறந்த பராமரிப்பிலும் பரம்பரையாக இருந்துவருகிறது. உலகப் புகழ்பெற்ற ஆயிரம் மாகாளி அம்மனுக்குச் சிறப்பு ஆலயம் உண்டு. ஐந்தாண்டுக்கொருமுறை அம்பிகையைப் பேழையில் இருந்து எடுத்துப் பூசிப்பது வழக்கம். முதல் நாள் பூசையில் வைக்கப் படும் பொருள் வகைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் எண்ணிக்கையுடையன. அம்மனின் திருவுருவம் அருள் பொழியும் திருமுகமாகும். பார்ப்பவர் பரவசமடைவர். மூன்று நாள் பூசையிலும் இலட்சக்கணக் கான மக்கள் மதவேறுபாடின்றி வந்து தரிசித்துப் பயன் பெறுகின்றனர். பழங்கால மன்னர்கள் முதல் தற்காலக் கலைஞர்கள் வரை இவ்வம்பிகையின்பால் பக்தி பூண்டு, காணிக்கை வருகின்றனர். 



சோழமண்டலம் (கிழக்குத் தமிழர்கள்)

அரியலூர் மாவட்டம் 


பெரம்பலூர் மாவட்டம் 
● குன்னம் பெருமத்து ஏரிக்கரையில் வீற்றிருக்கும் அருள்மிகு செல்லியம்மனுக்கு சித்திரை பெருவிழாவின் ஐந்தாம்நாள் விழா செங்குந்தர்களின் மண்டகப்படி


மயிலாடுதுறை மாவட்டம் 
● கூறைநாடு
தொன்றுதொட்டு பழமையான
நாகரீகத்திற்கு இன்றியமையாத உடை
யினை நெய்து புகழ்பெற்று விளங்கிய தம் செங்குந்தர்கள் பெரும் பகுதியாக வாழ்த்து வரும் இவ்வூர் திருமணத்திற்கு கூறை நெய்து கொடுத்த காரணத்தினால் கூறை நாடு எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்வூர் பொன்னிமா நதியின் தென்பால் புனுகீஸ்வரக் கோட்டத்தில் தனி யூர் என்ற சிறப்புப் பெயர்பெற்ற நாடாகும். இவ்வூர் செங்குந்தர்கள், திருமயிலாடு துறை (மாயூரம்) அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலின் வசந்த உற்சவத் துலா உற்சவத்திலும் கொடி
யேற்று விழாவினைத் தொன்றுதொட்டு செய்து வருகின்றனர் கூறை தாட்டில் ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஸ்வாமி கோயிலை செங்குந்தர் பெரு மக்களே முன்னின்று சமைத்து ஐந்து கால பூசை நைவேத்யங்களுக்கான அறக்கட்டளைகளையும் நிறுவிவைத்து செவ்வனே நடத்தி வருகின்றனர். அக்கோயிலின் அறங்காவலர்களாக, சித. அ. வீரப்ப முதலியார் அவர்களும் தி. வைத்திலிங்க முதலியார் அவர்களும் ச. கு. பாவாடை முதலியார் அவர்களும் நிர்வாகிகளாக செயலாற்றினார்கள், இப்பொழுது திரு. வே. வி கோவிந்தசாமி முதலியார் அவர்கள் நிர்வாக அறங்காவலராக அறப்பணி புரிந்து வருகிறார்கள். பிரதி ஆண்டும் கந்த சஷ்டிப் பெருவிழாவினை பத்து நாட் களுக்கு சகோபுர தரிசனம் - சூரசம்மாரம் திருக்கல்யாணம் - ரத உற்சவம் தீர்த்த வாரி முதலான சிறப்பு விழாக்களுடன் நம்மவர்களே நடத்தி வருகின்றனர். பெருமானுக்கு ஆலயம் அமைத்து, தாட்பூசையும் செய்து வருகின்றனர். இராமர் திருமடம் ஒன்று அமைத்து வழிபட்டு வருகின்றனர். தக்க பெரியோர்களைக் கொண்டு அடிக்கடி, பெரிய புராணம், இராமாயணம் போன்ற நூல்களை விளக்கம் செய்து சமய உணர்வை வளர்த்து வருகின்றனர். 

● நம்குல மக்கள் சீர்காழி புழுகாப்பேட்டையில்
அமைந்திருக்கும் விநாயகருக்கு நாள்
தோறும் வழிபாடு நடைபெற நிவந்தங்கள் அளித்துள்ளனர்.

சீர்காழி பிரமபுரீசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடை 
பெறும் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத் திற்குக் கொடியளித்தும் உரிமை, அத்திருவிழா வினைத் தாங்களே ஏற்றும், நடத்தி
வருகிறார்கள். இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழாவின் போதும் சில பணிகளைச் செய்துவருகின்றனர். நவராத்திரி விழாவில் திரு நிலை நாயகி அம்மனுக்கு சந்தனக் காப்பணிவித்து வழிபாடாற்றுகின்றனர். ஆதிரைத் திரு
நாளில் திருக்கோலக்காவிலுள்ள அம்பலவாணர்க்கு அபிடேக ஆராதனைச்செய்து வருகின்றனர். தாடாளன் (சீராம விண்ணகரம்) கோயில் பெருமானின் வைகாசி விழாவின் இரண்டாம் நாள் விழாப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். இவ்வாலயத்திலுள்ள இராமபிரானுக்குக் கால சந்திக் கட்டளை ஏற் படுத்தியுள்ளனர். வைத்தீசுவரன் கோயிலில் கார்த்திகைதோறும் அன்னதானம் செய்துவருகின்றனர். இவ்வறப் பணி செய்துவரும் இவ்வன்பர்கள் கல்விப் பணியும் செய்யக்கருதி, புழுகாப்பேட்டை தெருவில் இராதாகிருட்டினன் தொடக்கப் பள்ளி என்னும் பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று அமைத்து நிருவாகம் செய்து வருகின்றனர்.

ஆக்கூர்
ஆளுடைய பிள்ளையும், ஆளுடைய
அரசும் பாடும் பேறுபெற்ற திருத்தலம், ஞானசம்பந்தப்பெருமான், இன்மை யால் சென்றிரந்தார்க்கு இல்லையென்னாது ஈந்துவக்கும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே " என்று போற்றுகின்றார். அறுபான்மும்மை நாயன்மாரும் சிறப்புலி நாயனாரும் வாழ்த்தபதி. மாடக்கோச்செங்கண் அமைத்த
கோயில்களில் இதுவும் ஒன்று. நமது
சங்கத்தலைவர் திரு சு. இராமலிங்க முதலியார் அவர்கள் அக்கோயிலுக்கும் இராசகோபால பெருமான் கோயிலுக்கும் அறங்காவலராக இருந்து தொண்டாற்றி வருகின்றனர்
மற்றும் இவ்விரு கோயில் களுக்கும் அங்குள்ள மாரியம்மன் கோயி லுக்கும் அங்கு வாழ் நம்குல மக்கள் பல் வேறு அறப்பணிகள் செய்துவருகின்றனர். ஸ்ரீ தான்சேன் றீஸ்வரர் ஆலயத்திற்கு
5ம் திருவிழாவையும் ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு 4ம் திருவிழாவையும் திரு. சு. இராமலிங்க முதலியார் அவர்களும் ஸ்ரீ தான்ருேன்றீஸ்வரர் ஆலயத்தின் 6ம்
திருவிழாவை திரு. M. உத்திராபதி முதலியார் அவர்களும் ஆக்கூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித்திருநாளை ஆக்கூர் பெருமக்களும் வருகின்ஞர்கள்.

● திருச்செம்பொன்பள்ளி
(செம்பொன்னார்கோயில்)
திருச்செம்பள்ளி, செம்பொன்னார்
கோயில் என்ற இரண்டு வார்களாகத் தற்போது வழங்கினாலும், தேவார
ஆசிரியர்கள் காலத்திலும், முன்பும் இவ்விரு நிலப்பரப்பும் சேர்த்து, திருச்செம்பொன்பள்ளி என்ற ஒரு பேருராகவே வழங்கி வந்தது. இங்குள்ள நம் மக்கள், சுவர்ணபுரீசுவரர் தேவாலயத்தில் நடைபெறும் பூசத்திருவிழாவின் முதல் நாள் விழாவான கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர். தருமையாதீனத் திற்குச் சொந்தமான திருக்கடவூர் அமிர்த கடேசுவரர் ஆலயத்தின் சிறப்பான சித்திரைப் பெருவிழாவில் கால சம்மாரம் மிகச்சிறப்பாக நடை பெறும் இவ்விழாவின் ஆரம்பமாகிய கொடியேற்று விழாவையும் இவ்வூர்ச் செங்குந்தரே நடத்திவருவது பெருமைதரும் செய்தியாகும்,

மேலப்பாதி மாயவரம் ஊர்
பொன்னியாற்றங் கரையில் செம்
பொன்னார் கோயிலுக்கு வடபாலுள்ள சிற் அராகும். உருத்திராபதியார் மடம் ஒன்றுள்ளது. அம்மடத்தில் திரு. அ. அருணாசல முதலியார் அவர்கள் இந்து உதவி ஆரம்பப் பாடசாலையினை திறம்பட நடத்தி வருகின்றார்கள் இறை யன்புகொண்டு இறைவழிபாடுகளை செவ்வனே செய்து சிறக்கும் செங்குந்தர் கள் வாழும் சிறந்த சிற்றுராகும். மேலப் பாதி கலைமகள் செங்குந்தர் வாலிபர் சங்கம் நன்கு தொண்டாற்றி வருகின்றது.

புஞ்சை கிராமம்
திருச்செம்பொன்பள்ளிக் கண்மையில் உள்ள சிற்றூராகும். புஞ்சையம்பதிவைத் தேவாரத்தில் நனி பள்ளி என்று கூறப்பட்டுள்ளது. இவ்வூர் திருஞான சம்பந்தரின் தாய்மாமன் பவராகும். மூன்றும் வயதில் தன் தந்தை யின் தோள் மீது அமர்ந்து பாலையை நெய்தலாக மாற்றப் பாடிய பதியாகும். இவ்வூர் பாடல் பெற்ற தலமாகும். கந்தர் சஷ்டி கார்த்திகை சோமவாரம் தைப்பூச உற்சவம் சிவன் ராத்திரி முதலியன் நம் மவர்களால் நடத்தப்பெறுகின்றன.

● குத்தாலம்
திருத்துருத்தி என்ற இப்பதியின்
பெயர்தான் குத்தாலம் என்று அழைக்கப் அலைபடுகின்றது... இத்தல விருட்சம் உத்தால மரம் எனவே உத்தாலம் என்பதே மருவி நாளடைவில் குத்தாலம் ஆகியது. பதவி பறிபோன கதிரவன் இத்தலத்தில் கார்த்திகை ஞாயிறில் வழிபட்டு இழந்த பதவியை பெற்றன். எனவே கார்த்திகைத்திங்கள்
ஞாயி தோறும் கார்த்திகை
வி (முழுக்கு) வும் கடை ஞாயிறு அன்று கடை முழுக்கு விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின் றன. ஆலயத்திலுள்ள பதும் தீர்த்தத்தில் சுத்தாமூர்த்தி நாயனார் மூழ்கி அவர்கள் நோய் நீங்கப்பெற்றதால் சுந்தர தீர்த்தம் என்று பெயர் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்களால் பாடப்பெற்ற தலம் ஸ்ரீ உக்தவேதேசுவரர் ஆலயத்தில் சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன்வரை நடைபெற்று வந்த வசந்த உற்சவத்தின் போது நம்மவரிடமிருந்து கொடிச்சீலை பெற்றுதான் கொடி உயர்த்துவார்களாம். நிறைமணி என்ற உற்சவமும் தம்மவர்கள் நடத்திவந்தனராம். இவ்விரண்டு விழாக் களையும் நாற்பதாண்டுகளாக ஆலயத்தார் நடத்துவதில்லை. ஆண்டுதோறும் டி ஆலயத்தின் சார்பாக சூரசம்கார விழாவை நம்மவர் சிறப்பாக நடத்திவருகின் றனர். அதைத் பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும் நம் தொடர்ந்து மவர்கள் செய்து வருகின்றனர். விழாக்களை நடத்துவதற்காக ஆலயத் திலிருந்து குளம் பூந்தோட்டம் தோப்புகள் மான்யமாக அளித்துள்ளனர். பெரிய செங்குந்தர் வீதியில் பிள்ளையார் கோயிலைக் கட்டி வினாயகசதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர். சின்ன செங்குந்தர் தெருவில் காளியம்மன் கோயிலை கட்டி நிர்வகித்து வருகின்றனர். தோறும் தைப்பொங்கலுக்குமுன் சுற்றுலா வரும் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
சுமார் 300 பேர்களை வரவேற்று உபசரித்து அமுது படைத்து வழி அனுப்பிவைக்கும் அறப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். 





நாகப்பட்டினம் மாவட்டம் 
● சிக்கல் 
சிங்காரவேலர் கோயில் சூரசம்ஹார விழா வில் அவ்வூரிலுள்ள செங்குந்தர் கைக்கோளர் மக்கள் நவவீர வீரபாகு வேடம் அணிந்து மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு சிங்காரவேலர் கோவிலில் வேல் வாங்கி வருவார்கள்.

● நாகூர் வெண்காடு சுவேதாரண்ய சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி நடைபெறும் பத்து நாள் உற்சவத்திற்கு கொடிச்சீலை தந்து கொடியேற்றி வைக்கின்றனர், தாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில்
பிரதி ஆண்டு தை மாதம் அமாவாசைக்கு மறுதினம் நடைபெறும் கருடசேவை விழாவிற்குப் பந்தல்
அலங்காரப் பொறுப்பினை தம் செங்குந்தர்கள் ஏற்று செய்து கொடுக்கின்றனர்.

● மஞ்சக்கொல்லை
இங்கு வெற்றி வேலாயுதப்பெருமான் கோயில் கொண்டுள்ளார். நாட்பூசையும் சிறப்புப் பூசையும் முறையாக நடைபெறும் ஆலயங்களில், இது தனிச் சிறப்புடைய தாகும், முருகப் பெருமானை நடுச் சன்னதியாகக் கொண்டது ஞானலிங்கப் பெருமானையும், ஞானாம்பிகையையும் எனைய மூர்த்தங்களையும் கொண்டிலங்கு வது. தினசரி ஆறு கால பூசையும் மற்ற சிறப்பு விழாக்களும் நடைபெறுகிறது. கீழ்ப்பால் இடும்பன் ஆலயம் அமைத் துள்ளது. இக்கோயிலின் சிறப்பு விழா கந்தசட்டித் திருவிழாவாகும். சிக்கலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து சம்மாரம் பார்த்துச் செல்வர். இவ் வாலயத்தின் அமைப்பையும், நடக்கின்ற பூசைகளையும் தக்க சமயச் சான்றோர்கள் பாராட்டியுள்ளனர். இவ்வூரி ஓள்ள செங்குந்தப் பெருமக்களே இவ்வாலயத்தை நிருவகித்து வருகின்றனர். விநாயகர் ஆலயங்கள் இரண்டு (வீர செங்குந்த விநாயகர், வெள்ளைவாரண விநாயகர் ) இவர்களுடைய பராமரிப்பில் வருகின்றன. திருஞான சமயப்பணி செய்து இங்குள்ள நம் பெருமக்களின் முயற்சியாலும், ஊக்கத்தாலும் குமரன் நடுநிலைப்பள்ளி, குமரன் உயர் பள்ளி என இரு பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

● நாகப்பட்டினம் அருகே பொருள்வைத்தசேரி இங்குள்ள செங்குந்தப் பெருமக்கள் தண்டபாணி கோயிலை திருவகித்து வருஇன்றனர். பொருள்வைத்தசேரி 
இப்பெருமான் திருவுருவம் சிற்பக்கலையின் சிகரம் எனலாம். கவரும் வனப்பும், பொலிவும் பெற்றது. கோயிலூர் மடாதிபதிக்கு ஞானகுருவாக விளங்கிய உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகள் அவதாரம் செய்ததும் இத் தலமே. அவர்கள் பரிபூரணமடைந்து அருள் பாலித்து வருகின்றார்கள்.

● திருமருகல் மாணிக்கவண்ணர் ஆலயம் அமைத்த சிறந்த தலம். இங்கு திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளியபோது, செட்டிப்பிள்ளைக்கு விடந்தீண்டியதறித்து இறை வன் திருவருளால் அதை நீக்கி, செட்டிப்பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத் தருளினார்கள். இத்திருக்கோயிலில் பண்டு தொட்டுச் செங்குந்தப் பெருமக்கள் தொடர்புகொண்டு பல திருப்பணிகள் செய்து வருகின்றனர். 



தஞ்சாவூர் மாவட்டம்
● சோழன்மாளிகை பட்டீஸ்வரம்
அருள்மிகு ஆறுமுகப் பெருமானுக்கு கந்த சஷ்டி பால்குட சூரம்சம்ஹார
பெருவிழா.

● பட்டீஸ்வரம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு
ஆறுமுகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, திருக்கல்யாணம்.

கதிராமங்கலம் 
இவ்வூரில் செங்குந்தர் பெருமக்கள் உத்திராபதியார் உற்சவத்தையும் சூரசம்கஹார உற்சவத்தையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். பொதுச் சொத்துக் களை திறம்பட சேமித்து அறப்பணிகளை சிறப்பாக நடத்திவருகின்றனர்.

● அம்மாப்பேட்டை
இங்கு கீழைத்தெரு, மேலத்தெரு
என்ற இரு இடங்களிலும் நம் குல மக்கள் வசித்து வருகின்றனர். இரண்டு இடங்களிலும் விநாயகர் ஆலயம் நிறுவி, அறங்காவல் புரிந்துவருகின்றனர் குள்ள சிவன் கோயிலுக்கும், நாசிங்கப் பெருமாள் கோயிலுக்கும் பல பணிகள் செய்து வருகின்றனர். 

● திருநாகேச்சுரம் 
தேவார ஆசிரியர்கள் மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையதும், சோழ
நாட்டு முதன்மத்திரியாகப் பணியாற்றிய சேக்கிழார் பெருமானின் அபிமானத்தல முமாகும். இவ்வூரில் தஞ்சை மாவட்டத் திலேயே தம் செங்குந்தர் பெருமக்கள் அதிகமான எண்ணிக்கையினர் வாழ்த்து
வருகின்றனர். அண்மையில் உள்ள
திருவிடைமருது சமயாச்சாரியார் நால்வராலும் பட்டினத்தார், போன்ற
அருளாளர்களாலும் பாடப்பெற்ற தொன்மை நலம் வாய்ந்தது.
இவ்வூர் தைப்பூசப் பெரு விழா மிகச்
சிறந்த இலக்கியங்களுள் இடம் பெற்
துள்ளது. திருவாடுதுறை ஆதீனத்தைச்
சேர்ந்த இவ்வாலயத்தின் தைப்பூசத் திரு விழாவில் தேரோட்டும் பொறுப்பினை திருநாகேஸ்வர செங்குந்தப் பெருமக்கள் ஏற்று நடத்துகிருர்கள். செங்குந்தர் தலைவர்களுக்கு ஸ்ரீ நாகதாதர் இவ்வூர் செங்குந்தர்

சிரிகுஜாம்பிகை ஆலயத்திலுள்ள நாற்நெட்டுக்கால் மண்டபத்தில் பொறுப்புப் பட்டம் சூட்டுவது வழக்கம். விநாயகப் பெருமானுக்கு செங்குந்த விநாயகர் என்று பெயர் பலது திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் பிறந்த பெருமை பெற்றது இப்பதி.

● அய்யாவாடி
திருநாகேஸ்வரத்திற்கு தென்பாலுள்ள  சிற்றார். வடவாரண்யம் என்ற
புராதன பெயரும் உண்டு,
இங்கு பஞ்ச பாண்டவர் தங்கியிருந்ததால் அவரியாடி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிருர் கள்.
இவ்வூர் கற்பக விநாயகர் கோயிலை செங்குந்தர்கள் புதுப்பித்து வருகிறார்கள். 

சுந்தாப்பெருமாள் கோயில் எகின்ற இவ்வூர் செங்குந்தர்களுக்கு பொதுச் சொத்துக்கள் போதிய அளவு அந்தினை செங்குந்தர் பரிபாலன சபையினர் செவ்வனே நடத்தி வருகின்றனர். காளியம்மன் உற்சவம்
சிறப்பாக நடத்திவருகிறார்கள், விநாயகர் ஆலயத்தின் அறங்காவலர்களாக நம்மவர் களே இருந்து வருகின்றனர். இவ்வூர் M. S. ஆதிமூல முதலியார் அறக்கட்டளை யொன்று நமது தஞ்சை ஜில்லா செங்குந்த மகாஜன சங்கத்தின் பொறுப்பில் உள்ளது சுவாமிமலையின் சூரசம்ஹார விழாவை இவ்வூர் செங்குந்தப் பெருமக்கள் தான் நடத்தி வருகின்றனர், சுவாமிமலையில் நம் செங்குத்தர் சத்திரம் ஒன்றும் உள்ளது.

● மாரியம்மன்கோயில் 
இங்கு செயங்கொண்ட விநாயகர் ஆலயம், நம் தெருவில் அமைந்துள்ளது. அவ்வாலயத்தை செம்மையாக அமைத்து பூசையும் முறையாக நடத்திவருகின்றனர் இதன் மற்றோர் பகுதியில் காளியம்மன்
பேழையும் இருக்கிறது, ஐந்தாண்டுக்
கொருமுறை அம்பிகையை எடுத்து
வைத்துப் பெரும் பொருட்செலவில் பூசை செய்து வருகின்றனர். திருக்கூட்டம் அமைத்து திருமுறையும், திவ்வியப் பிரபந்தமும் ஓதுதற்காக இரண்டு திருமடங்கள் அமைந்துள்ளன.

● திருபுவனம் தருமை ஆதினம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் கொடியேற்றம் மண்டகபடின்மற்றும் சூரசம்ஹாரம்



திருவாரூர் மாவட்டம் 
முசுகுந்த சோழன் கட்டிய புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்துக்கு உள்ள உரிமைகள்..
1. பங்குனி உத்திரம் தெப்பக்குள திருவிழாவின் இரண்டாவது மண்டகப்படி நம் சமூகத்துக்கு உரியது.

2. புரட்டாசி பங்குனி திருவிழாக்களில் செங்குந்தர் குல சபாபதி முதலியார் குடும்பம் சார்பாக முசுகுந்த சோழன் அர்ச்சனை.

திருவாரூர் வடக்குவீதி ஸ்ரீ பழனி யாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டிப் கந்தசஷ்டிப் பெருவிழாவினைச் செங்குந்த மரபினர் நடத்தி வருகின்றனர். 

●  மன்னார்குடி இராலகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் உற்சவ பெருவிழாவில் செங்குந்தர் பட்டறையாளர்கள் சங்கம் சார்பில் 5ஆம் நாள் உற்சவம்.

● குடவாயில்
திருஞானசம்பந்தப் பெருமானால்
பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று, இங்குள்ள நம் பெருமக்கள் கோனேச்சுரப் பெருமான் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துவருகின் றனர், சமயம் கருதி அம்பலவாணர் மடம் அமைத்துத் இயற்றிவருகின்றனர். காளியம்மனுக்கு ஆலயம் அமைத்து நாள் தோறும் பூசை செய்துவருகின்றனர்) ஐந்தாண்டுக்கொருமுறை அம்பிகையைப் பேழையினின் றெடுத்து பெரும் பொருட் செலவில் பூசை செய்து வருகின் றனர். இங்கு சோழ மன்னனின் இடக்கைப்படை யிருந்ததாகப் பெரியோர் கூறுவர். இவ் ஆர் சங்க இலக்கியக் காலம் முதல் பல புலவர்களாலும் பெரிதும் பேசப்பட்டு வந் துள்ளது. குடவாயில் கீரத்தனார் இவ்வூர்ப் பெரும் புலவர், இங்குள்ள நம் பெருமக்கள் நல்ல பல அறப்பணிகளை ஆற்றி வருகின்றனர். இவ்வூர் இளைஞர் சங்கம், ஞானியாரடிகளால் வாழ்த்தப் பெற்றுத் தொடங்கும் பேற்றினையுடையது.

● மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் உற்சவப் பெருவிழா, சுவாமி மரவுரிராமர் அவதாரத்தில் பவனி வருதல்.

● மன்னுக்குடி
மாகியபாமணியாற்றங்கரையிலுள்ள
மன்னடிர்குடியில் 1950ஆம் ஆண்டு கணக்குப்படி சுமார் 500
செங்குந்தர் குடும்பங்களில் வசிக்
கின்றனர். இங்குள்ள ஸ்ரீ இராசகோபால ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவத்தில் கடந்த 1000 ஆண்டுகளாக நம் செங்குத் தர்கள் ஐந்தாம் திருவிழா சிறப்புற நடத்திவருகின்றனர். அன்று பஞ்சமுக அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதியுலா காண வேண்டிய காட்சியாகும். மன்னார்குடியில் உள்ள யாண்டவர் கோயில் நம் குலத்தவர்களால் தொன்றுதொட்டுப் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது அரசினர் தேவஸ்தான போர்டு வந்தபிறகும் நம்மவர்களே தர்மகர்த்தர் களாக இருந்து நடத்திவருவது குறிப் பிடத்தக்கதாகும். சூரசம்மாரம் நவவீரர்கள் வேடம் தரித்து சிறப்புற நடந்துவந்துள்ளது. செங்குந்தர் நான்காம் தெருவில் காளியம்மன்கோவிலை நிறுவிப் பூசித்து வருகின்றனர்.


நம் குல விரப் பெருமகன் முத்தையன் முமுதலியார் 

பிரிட்டிஷ் ஆட்சி 200 ஆண்டுக்கு முன்பு இவ்வூம் ஸ்ரீ ஜெயங்கொண்ட நாதர் ஆலயம் பண்டைச் சிறப்பு வாய்த்தது. சுமார் 150 ஏக்கர் நிலமும் போதிய வருவாயும் உள்ள ஆலியாம். அவ்வாலயா சொத்து சம்பந்தமாக பாப்பாநாடு ஜமீனுக்கும் நம்மவர்கட்கும் வழக்கு நடந்தது. அவ்வழக்கில் நியாயமான நம் கட்சி வெற்றி பெறச் எண்ணங்கொண்ட, நம்குல வீரப்பெருமகன் முத்தையன் அவர்கள், பாப்பா நாடு ஜமீன் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்று சொத்துக்கள் செங்குந்த மரபினரே உரியது என்பதை நிரூபிக்க தன் கையாலேயே தன் தலையை வாளால் வெட்டிவீழ்த்தி நவகண்டம் செய்து கொண்டதாகவும் இச்செயற்கரிய செயலைக்கண்ட மணப்பந்தலிலிருந்த மணமகன் திக்பிரமை கொண்டு கீழே வீழ்ந்து இறந்ததாகவும் இந்நிகழ்ச்சியால் தம்மவர்கட்கு வழக்கில் வெற்றி கிடைத்த தாகவும் வரலாறு ஒன்றுளது. 

முத்தையன் நினைவாக மன்னார்குடியில் வீதியும், நம் குலத்தவர்கள் தங்கள் வீட்டில் தடைபெறும் ஒவ்வொரு திதியிலும் வீர முத்தையனுக்கு தர்ம பீண்டம் இடுவது இன்னும் வழக்கி அள்ளது. வீர முத்தையனின் உருவம் நீ ஜெயங்கொண்டநாதன் ஆலயத்தில் சிலை வடிவில் உள்ளது. வீர முத்தையன் சமாதியில் இன்றும் வழிபாடு நடந்து வருகின்றது 

திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ வேணுகோபாலசாமிப் பெருமாள், ஸ்ரீ இராமசாமிப் பெருமாள் கோயில் இக்கோயில் தொன்றுதொட்டு செங்குந்த மரபினரின் நாட்டாண்மைக் காரரது பராமரிப்பில் இருந்து வருகிறது. இவர்களே இக்கோயிலுக்குப் பரம்பரை ஆதீன கர்த்தர்களாக இருந்து வருகின்றனர். தொடக்கத்தில் அ. சபாபதி முதலியார். இப்பொழுது திரு. தி சொ. மு.கங்காதா முதலியார் குடும்பம் அவர்கள இவ்வாலயத்தை நிர்வ கித்து வருகிறார்கள். 

மடப்புரம் ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடம்; ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயம் என்பவற்றிற்குப் பெரும் பொருள் உதவிச் செங்குந்தமரபினர் பல உபயங்கள் செய்து வருகின்றனர்.

மடப்புரம் விசுவநாத அன்ன சத்திரம். இதன் பராமரிப்பு முதலில் திரு த. சண்முக முதலியார் அவர்களின் பாட்டனார் சபாபதி முதலியாரவர்களிடம் ஒப்படைக்கப் பெற்றது இன்று திரு க. சண்முக முதலியார் அவர்களின் குமாரர் மைனர் கனகசபாபதி (கார்டியன் கமலாம்பாள்) பராமரிப்பில் இருந்து வருகிறது.

● மாப்பிள்ளை குப்பம் இவ்வூரைச் சூழ தென்னஞ்சார். தளத்தாங்குடி, பிடாகை, இராசாக் களிருப்பூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் செங்குந்தரே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் கைலாயநாதர் ஆலயம் சிறப்பாக அமைந் துள்ளது. இவ்வாலயத்தின் அறங்காவல் பொறுப்புக்களை நம்மவர்களே ஏற்றுச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். நன்னிலத்துப் பெருங்கோயிலின் அறங்காவலர்களில் ஒருவராகப் பெரும்பாலும் நமது சமூகத்தினர் இருந்துவருகின்றனர். கானிகட்டித் திருவிழாவும் ஆண்டுதோறும் அவர்களால் நடத்தப்படுகின்றது. மற்றும் பல அறப்பொறுப்புக்களையும் வகித்து வருகின்றனர்.

●வலங்கைமான்
 இங்குள்ள செங்குந்தப் பெருமக்கள் விநாயகர் ஆலயத்தைப் பரிபாலித்து வருகின்றனர். ஐந்தாண்டுக்கொருமுறை பரம்பரையாக வழிபாடு நடத்திவரும் பத்திர காளியம்மனுக்கு தனியாக ஆலயம் திறுவி, பெரும் பொருட்செலவில் பூசை நடத்திவருகின்றனர். அம்மன் இருக்கும் பேழையில் புலி இலச்சினையிட்ட கொடியொன்று இருந்து வருகிறது. அக்கொடி எற்றியபின் அம்பிகை அலங்கரிக்கப் படுகிறது. அக்கொடி சோழ மன்னர்கள் காலத்தியது என்றும், கொடியும் அம்மனும் மன்னர்கள் வழியாக இவர்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், வலக்கைப்படை இருந்தது என்றும் பெரியோர்கள் கூறுவர். அக்கொடியின் வண்ணம் பல தூற்குண்டுகளாகியும் இன்னும் கவர்ச்சியாகயிருப்பது வியப்புக் குரியது.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் 
● 

புதுக்கோட்டை மாவட்டம் 



கொங்கு மண்டலம் (மேற்கு தமிழகம்)

கிருட்டிணகிரி மாவட்டம்
● கள்ளக்குறிச்சி காலபைரவர் கோவிலில் பூஜை செய்யும் உரிமை நம் சமூகத்துக்கு மட்டுமே உள்ளது

தருமபுரி மாவட்டம்
● 


கரூர் மாவட்டம் 


கோயம்புத்தூர் மாவட்டம்


ஈரோடு மாவட்டம் 
● வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவம்.

● கோபி வட்டம் பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன்
திருக்கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழா.

● சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செங்குந்தர் மணிகட்டிசடையன் குல பங்காளிகள் கோத்திரம் சார்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.அதோடு கந்தசஷ்டி விழா செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தினர் சார்பில் நடைபெறும். கோவையில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கொடியேற்றம் மற்றும் சில மண்டப படிகள் செங்குந்தர் சமுதாயத்துக்கு உள்ளது.

● அந்தியூர் பந்திரகாளியம்மன் கொடியேற்றம் மண்டகப்படி

திருப்பூர் மாவட்டம் 
● சிவன்மலை ஆண்டவர் முருகன் கோவில்:
தைபூச விழாவில் செங்குந்தர்கைக்கோள முதலியார்களுக்கு மண்டப கட்டளை மற்றும் கொடிசீலை கொடுக்கும் உரிமை உள்ளது. 

● திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம்
அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சித்ரா பௌர்ணம்
67ம் ஆண்டு பொங்கல் வசந்த உற்சவ பெருவிழா
செங்குந்த முதலியார்கள் மண்டகப்படி உள்ளது 

● கொங்கு மண்டலத்தில் கட்டப்பட்ட முதல் அங்காளம்மன் கோவிலான முத்தனம் பாளையம் அங்காளம்மன் கோவிலில் பூஜை செய்யும் உரிமை நம் சமூகத்துக்கு மட்டுமே உள்ளது


சேலம் மாவட்டம் 
 கெட்டி முதலியார் 
கட்டிய தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நம் சமூகத்துக்கு பல உரிமைகள் உள்ளது. 

● கொடியேற்றம் மண்டகப்படி தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்  , தாரமங்கலம் அருள்மிகு  பத்ரகாளியம்மன் கோவில் ,தொளசம்பட்டி அருள்மிகு அப்ரமேய பெருமாள் கோவில்

நாமக்கல் மாவட்டம் 

● திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலில் பல உரிமைகள் உள்ளது. 

● மல்லசமுத்திரம் ராஜேந்திர சோழன் கெட்டி முதலியார் மன்னரால் கட்டப்பட்ட அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திரிபுர சுந்தரி தாயார் கோவிலில் சோழ செங்குந்த கைக்கோள முதலியார் கொடியேற்றம் நடைபெறுகிறது மற்றும் மல்லசமுத்திரம் செங்குந்தர் ஊர் பெரிய மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் சோழ செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயத்தினரால் கொடியேற்றம் நடைபெறுகிறது.

● ராசிபுரம் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சித்திரைத் தேர் பெருவிழா பிரம்மோற்சவம் பங்குனி கொடியேற்றம் (துவஜாரோகணம்) துவக்கம். மண்டகபடிதாரர் : இந்நிகழ்ச்சியை பாச்சல், ராசிபுரம், குருசாமிபாளையம், அத்தனூர், சீராப்பள்ளி, சிங்களாந்தபுரம், ஆண்டலூர் கேட், பாலப்பாளையம், கடந்தபட்டி, கூனவேலம்பட்டி புதூர், தொப்பமபட்டி, ஜேடர்பாளையம்
ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பாச்சல் நாடு செங்குந்தர் முதலியார் சமுதாயத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டடு வருகிறது.

நீலகிரி மாவட்டம் 
● ஊட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் செங்குந்தர் மகாஜன சங்கம் மக்களால் கொடியேற்றம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் 
● 

பாண்டிய மண்டலம் (தென் தமிழகம்)

கன்னியாகுமரி மாவட்டம் 

மதுரை மாவட்டம்
● கள்ளழகர் திருவிழா வின்போது கள்ளழகரை சுமந்து செல்லும் சீர்பாத சேவை உரிமையை நாம் சமூகத்துக்கு மட்டுமே உள்ளது.

● முதல்படைவீடு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் மற்றும் மண்டகப் படி செய்யும் உரிமை சுவாமியை சுமந்து செல்லும் சீர்பாத சேவையும் நம் சமூகத்துக்கு மட்டுமே உள்ளது

● மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விழா தொடங்குவதற்கு கொடி சேலை கொடுக்கும் உரிமை மற்றும் சுவாமியை சுமந்து செல்லும் உரிமை நம் சமூகத்துக்கு மட்டுமே உள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் 
●  இராமநாதபுரம்
சமஸ்தானம் தேவஸ்தானம் நயினார்கோயில் நாகநாத சுவாமி
திருக்கோயில்  பசலி வைகாசி வசந்த உற்சவ திருவிழா 7
ஆம் நாள் 12 ஊர்களின் செங்குந்த கைக்கோள முதலியார்கள் மண்டகப்படி உள்ளது.

● பரமகுடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் 7ம் திருநாள் செங்குந்த முதலியார்கள் மண்டகப்படி.

பரமக்குடியில்‌ ஸ்ரீ சிவசக்தி விநாயகா கோவிலில்‌ 1௦௦ வருடங்களாக விழாககளை நடத்தி வருகிறார்கள்‌. ஸ்ரீ விநாயகர்‌ கோவிலுக்கு அருகே உள்ள அம்மன்‌ கோவிலில்‌ சிவராத்திரியன்று குல சுவாமிகள்‌ விழா சிறப்பாக அபிராமம்‌ செங்குந்தர்கள்‌ நடத்தி வருகிறார்கள்‌. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்‌ கோவில்‌, மற்றும்‌ நயினார்‌ கோவிலில்‌ செங்குந்தர்கள்‌ மண்டகப்படி ஒவ்வொரு வருடமும்‌ சிறப்பாக நடத்தி வருகிறார்கள்‌.

● இராமநாதபுரம் ஜில்லாவில் நயினார் கோவிலில் உள்ள நாகநாத சுவாமி சவுந்தர வல்லியம்மன் உற்சவம், வைகாசி மாதம் சுவாதியில் தேரோடும் திருநாள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்திருவிழாவுக்கு நாலா பக்கத்திலிருந்தும் திரள் திரளாக ஜனங்கள் வருவதுண்டு. சௌகரியத்திற்காகவும், பக்திக்காகவும், மண்டகப் படியும் நம்மவர்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இக்கைங்கரியத்துக்கு முன்னின்று முனைந்து வேலை பார்த்து வந்தவர் இம்மண்டல மாணிக்கம் செங்குந்தர்களேயாவார்கள்.

சிவகங்கை மாவட்டம் 


தேனி மாவட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் 
● திருச்செந்தூர் கோவில் கொடியேற்றும் மண்டகப்படி, 12ஆம் திருநாள் மண்டகப்படி, சூரசம்ஹாரம்.


திருநெல்வேலி மாவட்டம் 
● திருநெல்வேலி டவுனில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள், கொடியேற்றும் மண்டகப்படி, ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் சுவாமி அம்பாள் காட்சி கொடுப்பதற்குத் தனித் தனி கல் மண்டபங்கள் பெருஞ்சாலைகளின் மீது நிறையப் பொருள் செலவு செய்து அமைத்திருப்பவர் நம் சேங்குந்த முதலியார் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்கள்.


தென்காசி மாவட்டம்
● சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில்:
ஆடித்தபசு 4வது நாள் திருவிழா- செங்குந்தர் கைக்கோள முதலியார் மண்டகப்படி.
● குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா  தீர்த்தவாரி மண்டகப்படி பல்லக்கு செங்குந்தர் சமுதாயம்  

● குற்ராலநாதர் கோவில் தேரோட்டம் முடிந்ததும் பஞ்சமூர்த்திகளுக்கு செங்குந்தர் மடத்தில் மண்டகப்படி 
திருக்குற்றாலம் செங்குந்தர் நாட்டு மாடம்
இம்மடாலயம் தென்படல் 252 அடி அடி நீளமும் கீழ்மேல் 150 அடி அகலமும் உள்ள காம்பவுண்டுள் கிழக்குப் பார்த்த மடம், விநாயகர் ஆகாயம், தங்கும்டம், சமையல் அறை, தண்ணி கிணறு முதாபிய வசதிகள் அமைந்துள்ளன. தென்னை, மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நாரத்தை, சந்தனம் முதலியகட்டிடங்கள் வட பகுதியிலும், நந்தவன பகுதியிலும் நிறைந்துள்ளன. இம்மடத்தில், கழி மாதம் திருவாதிர 5ஆம திருநாள் மண்டகப்படி அபிடேக ஆராதனைச் சிறப்பும் திருவாதிரையன்று (மஹேஸ்வர பூஜை)
அன்னதானக் கைங்கர்யமும் திருக்குற்றால நாதருக்கு எல்லா உற்ப்பங்களிலும் கொடி ஏற்று விழாவும் நம்மவரால் நடைபெற்று வருகின்றன.


விருதுநகர்
● 





.












.



சங்கரன்கோவில் முதலியார்




சங்கரன்கோவில் மண்டகப்படி


Post a Comment

3Comments
  1. காஞ்சிபுரம் மாவட்டம்
    18 பேட்டைகலுகும் தலைமை பேட்டையான அய்யம்பேட்டை
    உல்ல அனைத்து ஆலயங்களிலும் நம்
    செங்குந்த பராமரித்து
    மற்றும் திருவிழாக்கள் அனைத்தும் சமுதாயத்தினரை
    நடத்துகிறார்கள்
    மேலும் இவுஊரில்
    மூன்று சூரசம்கார உற்சவங்கள் நடைபெறும்
    அனைத்துமே நம் சமுதாய நாள் நடைபெறுகிறது

    ReplyDelete
Post a Comment