தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நம் சமூகத்துக்கு உள்ள உரிமைகள்

0

சேலம் மாவட்டம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
இந்த கோவிலை கெட்டி முதலியார் குடும்பத்தால் கட்டப்பட்டது.

தைப்பூசத் தேர் 4ஆம் நாள்  திருவிழாவில் 72 செங்குந்தர் நாடுகளில் ஒன்றான பூவேழ் நாடு தாரமங்கலம்  செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பில் யானை வாகன கட்டளை வருடம் தோறும் நடைபெறும்.

தாரமங்கலம் சேலம் மாவட்டம்.
எங்கள் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமி சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் தேர் திருவிழாவில் நான்காம் நாள் விழா *யானை வாகனகட்டளை செங்குந்தர் முதலியார் _ நம் சமுகத்தால் நடத்தபடுகின்றது.* (தாரமங்கலம் கிளை செங்குந்தர் சங்கம் எடுத்து நடத்துகிறார்கள்)

தேர்விழாவில் தேருக்கு முன்பாக 9 நாட்கள் விழா நடைபெறும் ஓவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினரும் அம்மன் தேர் ஒரு சமுதாயத்தினரும், தேருக்கு அடுத்த நாள் வண்டிக்கால் ஊர்வலம் ஒரு சமுதாயத்தினர் நடத்துகிறார்கள். அதில் நம் செங்குந்தர் சமுதாயத்திற்கு நான்காம் நாள் யானை வாகன கட்டளை.

தேர்த்திரு விழாவில் அம்மன் கோவில் கொடி ஏற்றத்திற்கும், கைலாசநாதர் கோவில் கொடி ஏற்றத்திற்கும் கொடித் துணி வழங்குவது நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக வழங்கி வருகின்றனர்.
தேர் நிலைக்கு வந்தபின்
சன்னதித் தெரு செங்குந்த முதலியார் கள் சத்தாபரன நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

சூரசம்ஹாரம் கட்டளையும் நம் சமுதாய குடும்பத்தினர் வழிவழியாக நடத்துகிறார்கள். சூரசம்ஹாரம் முடிந்து பள்ளியறை கட்டளையும் நம் சமுதாய குடும்பத்தினர் வழிவழியாக நடத்தி வருகின்றனர்.

பரனி தீப திருநாளுக்கு அடுத்தநாள் கார்த்திகை தீப நாள் கூம்பு என்று இக்கோவிலில் நடத்தபடும். அன்று இரவு 10 மணிக்கு மேல் ராஜகோபுரம் மேல் 90 அடி உயரத்தில் கொடி சீலை தீபம் ஏற்ற படும். அந்த கொடி சீலையை வழங்குவதும் நம் சமுதாய குடும்பத்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)