டி.வி. ராஜேஸ்வர் IPS, Governor

1



(28.08.1926 - 16.01.2018)


பிறப்பு
அன்றைய  பிரிட்டிஷ் இந்தியாவில்  மெட்ராஸ் மாகாணம் ஒன்றுபட்ட பழைய சேலம் மாவட்டம் ராசிபுரம் வட்டம் குருசாமிபாளையம் என்ற கிராமத்தில்  செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் நெசவு செய்யும் தா. மாரிமுத்து முதலியார் அவர்களின் மகனாக 28 ஆகஸ்ட் 1926 TV. ராஜேஸ்வர் என்று அழைக்கப்படும் தங்கவேலு ராஜேஸ்வரன் முதலியார் பிறந்தார். 

வாழ்க்கை:
குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்றார் பிறகு மாநிலக் கல்லூரி(Presidency College), (Madras University)சென்னை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.




இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் மக்ள் சுஜாதா ராஜேஸ்வர் முன்னாள் IFS அதிகாரி, ஜெர்மனிக்கான இந்திய தூதர் மற்றும் இந்திய வெளியியுறவு அமைச்சக செயலாளர். 


இவர் 1949 இல் இந்திய காவல் பணி(IPS) தேர்வில் வெற்றி பெற்றார். அப்போதை ஐதராபாத் மாநிலத்தில்  நிஜாமாபாத், ரைச்சூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டாக (SP) பணியாற்ற இந்திய அரசு உத்தரவு போட்டது.

பிறகு ஐதராபாத்தின் துணை ஆணையராக(Deputy Commissioner) பல ஆண்டுகள் பணியாற்றினார்.

இவருக்கு கொடுக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதால்
1962 இல் இந்திய உளவுத் துறையின் (Intelligence Bureau Of India) துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.

1963 முதல் 1967 வரை சிக்கிம் மற்றும் பூட்டானில் பகுதிகளில் இந்திய உளவுத்துறை தலைவராக பணியாற்றினார். 

பின்னர் அவர் இந்திய உளவுத்துறையின் துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குனராகப் பணியாற்றினார்.

பிப்ரவரி 1980 இல், அவர்
(Intelligence Bureau Of India) இந்திய உளவுத்துறையின் தலைவராகவே பதவி உயர்வு பெற்று ஆகஸ்ட் 1983 வரை இந்த இந்த உயரிய பதவியில் இருந்தார்.


10 ஆகஸ்ட் 1983 அன்று அருணாச்சல பிரதேசத்திற்கு (Governor) ஆளுநராக பதவி ஏற்றார். 

ஐ.ஏ.எஸ்/ ஐ.பி.எஸ் போன்ற இந்திய அரசியலமைப்பு பதவியில் இருந்த ஒருவர்  இந்திய மாநிலங்களின் ஆளுநராக பதவியேற்றது இதுவே முதல் முறை ஆகும் 

நவம்பர் 1985 முதல் மார்ச் 1989 வரை சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

2 மார்ச் 1989 முதல் 6 பிப்ரவரி 1990 வரை மேற்கு வங்கத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்

 பின்னர் சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றினார். மிக சமீபத்தில், அவர் ஆளுநராக இருந்தார்
உத்தரபிரதேசம் 2004 முதல் 2009 வரை.

8 ஜூலை 2004 முதல் 27 ஜூலை 2009 வரை இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராகப் பணியாற்றினார்.

இந்திய அரசியலமைப்பு சிவில் சேவையில் அறுபது ஆண்டுகள் மிக சிறப்பாக நேர்மையாக பணியாற்றிய இவருக்கு இவருக்கு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

2009-க்கு பிறகு டெல்லியில் வாழ்ந்து வந்த இவர் தனது 91வது வயதில்  16 ஜனவரி 2018 யில் மறைந்தார்.

இத்தகைய மிகப்பெரிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றிய இவருக்கு நம் செங்குந்தர் சமுதாயம் சார்பாக இதுவரை எந்த ஒரு மரியாதையோ, நன்றியோ செலுத்தவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இவர் நல்லது 88வது வயதில் எழுதிய  இந்தியா தி க்ரூயல் இயர்ஸ் என்ற புத்தகத்தின் EBook Link 👇
____________________________________
























.






அய்யாவின் 
கோத்திரம் பெயர்: நாச்சிமுத்தான் கூட்டம்
 குலதெய்வம்: அத்தனூர் அம்மன், பழனி முருகன்
குலகுரு: கூனம்பட்டி மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆதீனம்

Post a Comment

1Comments
Post a Comment