சிவனுக்கு பெண் கொடுத்த செங்குந்த முதலியார் வம்சம் ஸ்ரீ காளஹஸ்தி ஞானப்பூங்கோதை அம்மன்

2
ஆந்திர காளஹஸ்தி கோவில் 
 சிவன்- பார்வதி திருக்கல்யாணமும்
"செங்குந்த கைக்கோள முதலியார்"
சமூகத்துக்கும் உள்ள வரலாறு:





ஆந்திரா  காளஹஸ்தி
சிவன கோவில்
              

⚜️ லகத்திலேயே வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மாமன்னர் இராசேந்திர சோழனால் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. 



⚜️ சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 



⚜️ இக்கோவிலில் உள்ள மூலவர்: ஞானப்பூங்கோதை (எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி) உடனுறை காளகத்தீசுவரர்(சிவன்)

⚜️ பல ஆயிரம் ஆண்டுகளுகு முன்பு நம் செங்குந்தர்கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள
வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் மனித ரூபத்தில் பிறந்து, பின்பு கடவுளாக மாறியவர் "ஞானப்பூங்கோதை(எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி)" ஆகும்.

⚜️ கடவுள் காளத்தீஸ்வரர்(சிவன்) சுவாமிக்கும்
(பார்வதி)ஞானபிரசுனாம்பிகை தேவி அம்மனுக்கும் 
காளஹஸ்தி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

⚜️ இதனால் வருடம் தேறும் மகாசிவராத்திரி நாளன்று திருக்கல்யாணத் திருவிழா நம் சமூகத்தார் சார்பில் நடைபெறும்.

⚜️ ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில்  மகாசிவராத்திரி நாளன்று ஞானபூங்கோதை அம்மனுக்கு வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில், செங்குந்தர் சமூக வெள்ளாத்தூர் கோத்திர பங்காளிகளின்  சார்பில் பெண் வீட்டு சீதனம்( மலர்மாலை, ஆடை மாங்கல்யம், சீர்வரிசை) ஆகியவை காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு(புகுந்த வீடு) கொண்டு சென்று சமர்ப்பிப்பது வழக்கம். 


 


⚜️ இதன் மூலம்
சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம்
செங்குந்தர்கைக்கோள முதலியார் வம்சம் என்று தெரிகிறது.

சிவனுக்கு பெண் கொடுத்த செங்குந்தர் வம்சம்..
சென்ற வாரம் நடைபெற்ற ஆந்திரா ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிவன் பார்வதி கல்யாணம் செங்குந்த கைக்கோளர் மண்டகப்படி..

இக்கோவிலின் மூலவர் ஞானப்பூங்கோதை  அம்மன் செங்குந்தர் வெள்ளாத்தூரான்  கூட்டம் பங்காளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பல நூறு ஆண்டுகளாக இப் பங்காளி வகையறா வைத்து சேர்ந்தவர்களே கோவிலில் நடைபெறும் சிவன் பார்வதி கல்யாணத்துக்கு பெண் வீட்டு சீதனம் வழங்கி வருகின்றனர்..
ராஜேந்திர சோழனின் கோவிலை கட்டிய காலம் முதல் இது நடைபெற்று வருகிறது.

செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினர் சங்கம்
இடம்
*சொரக்காயப்பேட்டை*
*செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினர்*

வெள்ளாத்தூரான் கூட்டம் என அந்த மரபினரின் பங்காளிகள் அழைக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்
சொரக்காயப்பேட்டை
பொதட்டூர்பேட்டை
வங்கனூர்
அத்திமாஞ்சேரிப்பேட்டை
அம்மையார் குப்பம்
R K பேட்டை
மத்தேரி
புச்சிரெட்டிப்பள்ளி
மத்தூர்
திருத்தணி

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர்
அரக்கோணம்
வளர்புரம்
குருவராஜபேட்டை
மின்னல்
நரசிங்கபுரம்

அந்திரமாநிலம்
சத்திரவாடா
ஏகாம்பரகுப்பம்
புதுப்பேட்டை
சிந்தலப்பட்டடை
புத்தூர்
நாராயணவனம்
கீளகரம்
பாபாநாயுடுபேட்டை
திருப்பதி

சென்னை

ஆகிய ஊர்களில் இந்த பங்காளிகள் 1500 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊர்களில் உள்ளவர்களிடம் மட்டுமே பெண் கொடுப்பது
பெண் எடுப்பது என்ற வழக்கம் உடையவர்கள்.
எந்தெந்த ஊர்களில் யார்யார் வெள்ளாத்தூர் கூட்டத்தார் வசிக்கிறார்கள் என்பதை அனைவருமே அறிந்து வைத்திருப்பதால் பங்காளிகளை எளிதில் அறிந்து பங்காளிகளிடம் சம்பந்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி
ஆலங்காட்டான் கூட்டம்
செராத்தூரான் கூட்டம்
எச்சான் கூட்டம் 
போன்ற கூட்டத்தினரிடையே சம்பந்தம் செய்வார்கள்.

வெள்ளாத்தூரான் கூட்டத்தினரின் குலதெய்வம் கூட்டத்தின் பெயரில் உள்ளது போலவே
R K பேட்டை சோளிங்கர் சாலையில் உள்ள வெள்ளாத்தூர் எனும் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் குல தெய்வம் உள்ளது.
ஆடிமாதமும் தைமாதமும் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்
30 கிராமங்களில் உள்ள பங்காளிகள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி ஆயிரக்கணக்காணோர் ஒரே நாளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்வும் அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் என தினமும் ஒருவர் காலசந்தி பூசை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

திருத்தணி மலையில் உள்ள முருகன் கோவில் தெப்பத்திருக்குளமான சரவணப்பொய்கையின் அருகில் செங்குந்தர் குல வெள்ளாத்தூர் கூட்டத்தினருக்கான ஒரு சத்திரம் உள்ளது. அது தற்போது பாழடைந்துள்ளது.
காளஹஸ்தியில் உள்ள சத்திரத்தை பராமரிப்பில் முதல்கவனம் செலுத்தியதால் இதை கவனிக்க இயலவில்லை.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவம் நடைபெறும்.
பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் சாமி திருக்கல்யாணம் நடைபெறும்.அந்த திருக்கல்யாணத்தின் நிரந்தர உபயதாரராக செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினர் நடத்தி வருகின்றனர். எந்த வருடத்திலிருந்து என அறிய முடியவில்லை காலங்காலமாக நடைபெற்றுவருகிறது.இதற்காக நிரந்தர வைப்புநிதியாக தேவஸ்தானத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை அவ்வப்பொழுது உயர்த்தும்போதும் அதையும் இந்த மரபினர் வழங்கி புதுப்பித்து வருகின்றனர்.

நிரந்தர உபயதாரரை மாற்றி யார் வேண்டுமானாலும் திருக்கல்யாண உபயதாரராக வரலாம் என தேவஸ்தானம் முடிவெடுத்தபோது அதை கோர்ட்டில் சென்று வாதாடி அந்த உபயதாரர் உரிமையை தக்கவைத்துள்ளனர்.

பன்னெடுங்காலமாக திருவள்ளூர் மாவட்டம் சொரக்காயப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்களே இதை நிர்வகித்து இந்த பணியை செய்துவந்தனர்.திருக்கல்யாண தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் உள்ள பங்காளிகள் காளஹஸ்தியில் ஒன்று கூடுவர். அப்போது தங்களால் இயன்ற பொருளுதவி அரிசி பருப்பு வழங்குவார்கள்.

ஆனால் கடந்த இருபத்தியைந்து வருடங்களாக இந்த சேவையை அனைத்து ஊரில் உள்ள பங்காளிகளும் செய்யும் பொருட்டு சங்கம் ஏற்படுத்தி மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து திருக்கல்யாண வைபவத்தை சிறப்பாக நடத்துவர்.

தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் குல தெய்வ கோவிலான வெள்ளாத்தூர் அம்மன் கோவிலை நிர்வகித்தல் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் விழா எடுத்தல் தினசரி கால சந்தி பூசை நடத்துதல் காளஹஸ்தியில் திருக்கல்யாண வைபவத்தை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்துதல். காளஹஸ்தியில் உள்ள சத்திரத்தை பராமரித்தல் திருக்கல்யாண ஏற்பாடுகள் ஆகிய திருப்பணிகளை மேற்கொள்வர்.

முதலில் சுவாமி திருக்கல்யாண திருமண பத்திரிகை அச்சடித்து அனைத்து ஊர்களிலும் உள்ள பங்காளிகளுக்கு வழங்குவார்கள். பத்திரிகை பெறும்போதே திருப்பணிக்கான தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்குவார்கள்.
பிறகு சிவராத்திரிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே காளஹஸ்திக்கு சென்று  விழா ஏற்பாடுகளை கவனிப்பார்கள். தேவஸ்தான நிர்வாக அதிகாரி அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு பத்திரிகை வழங்கி அழைப்பு விடுப்பார்கள்.
நிச்சயதார்த்த விழாவுக்கும் அழைப்பார்கள்.

குலதெய்வமான வெள்ளாத்தூர் அம்மனே ஸ்ரீகாளஹஸ்தியில் காளத்திநாதரின் மனைவியாக ஞானப்பூங்கோதை என்ற ஞானபிரசுன்னாம்பிகை எனும் பெயருடன் தனி சன்னிதானத்தில் வீற்றிருக்கிறார்.

ஞானாம்பிகை எனும் சிவகாமி அம்மைக்கு தாய்வீடாக சொரக்காயப்பேட்டை வெள்ளாத்தூர் கூட்டத்தார் இருக்கின்றனர்.
இருப்பினும் 28 கிராமத்தை சேர்ந்த பங்காளிகளும் அம்மனுக்கு தாய்வீடு போலதான். தேவஸ்தான தஸ்தாவேஜ்களில் சொரக்காயப்பேட்டை பெயர் பதிவிடப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான திருத்தணியே இனி தலைமை இடமாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

இதை திருக்கல்யான வைபவம் நடைபெறும்போது சிவனுக்கும் அம்மைக்கும் தூது செல்லும்போது சொரக்காயப்பேட்டை கைக்கலவாடு ஞானம்மாள் என்று தேவஸ்தான அதிகாரிகளால் ஒலி பெருக்கியில் அறிவிப்பதிலிருந்து இதை அறியலாம்.

ஸ்ரீகாளஹஸ்தியில் வீற்றிருக்கும் ஞானாம்பிகைக்கு தாய்வீடாக இருப்பதுபோல 
காளஹஸ்தி காளத்திநாதருக்கு பிறந்தவீடாக ஆந்திரமாநிலம் செம்பேடு கிராமத்தை சார்ந்த கரிகாலபக்தலூ (கரிகால சோழனின் பக்தர்கள்)/கைக்கால என்றழைக்கப்படும் 
செங்குந்த கைக்கோளர் மரபினர் திகழ்கின்றனர்.
இவர்களின் சத்திரம் (கைக்கோல வாரி) என்று அழைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையன்று காளஹஸ்தியில் தேர்த்திருவிழாவும் அன்று இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறும் அதற்கு மறுநாள் நள்ளிரவில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு 03/03/2022 வியாழன் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்.
அதற்குமுன் அன்றைய தின பகல் 12 மணிக்கு காளஹஸ்தீஸ்வரர்க்கும் ஞானப்பிரசுன்னாம்பிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும்.இதை செங்குந்தர்குல வெள்ளாத்தூர் மரபினர் ஏபாட்டில் நடைபெறும்.பிள்ளைவீட்டாருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் வருவர்.தேவஸ்தான அதிகாரிகளும் வந்து கலந்துக்கொள்வர். இந்த நிச்சயதார்த்த விழா சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கும் வழக்கமான திருக்கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தின் அருகிலேயே வெள்ளாத்தூரான் கூட்டத்தினருக்கு சொந்தமான சத்திரத்தில்தான் நடைபெறும்.

இந்த சத்திரம் சமீபத்தில்லதான் இடிக்கப்பட்டு புதிதாக நான்கு அடுக்கு மாளிகையாக லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.இந்த மாளிகையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெறும்.செங்குந்தர்கள் திருமணம் போன்றே அந்த நிச்சயதார்த்தம் இருக்கும்.முடுப்பு மாற்றும்போது பெண்ணுக்கு தாய்மாமன் முறையுள்ளவர்தான் அதை பெற்றுக்கொள்வார்.அந்த வகையில் ஞானாம்பிகைக்கு தாய்வீடு வெள்ளாத்தூரான் கூட்டம் என்பதால். வெள்ளாத்தூரான் கூட்டத்திற்கு சம்பந்திகளான ஆலங்கட்டான் கூட்டத்தை சேர்ந்த சொரக்காயப்பேட்டை திரு.அவினாசி முதலியார் என்பவர்தான் அதை பெற்று வந்தார். அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் வேலு முதலியார் என்பவர் அதை பெற்றுவருகிறார்.இந்த நிச்சயதார்த்தத்தில் அம்மனுக்கு கட்டப்படும் தாலியும் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும்.இந்த தாலிக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டு தாலி செய்து கொண்டுவரும் பொறுப்பை தொடல்ந்து செய்துவருகிறார். சொரக்காயப்பேட்டையை சேர்ந்த சித்த வைத்தியர் லோகநாதன் அவர்கள். இந்த நிச்சயதார்த்த முடிவில் ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு பரிமாறப்படும். இந்தசெலவுகளை பெண்வீட்டாரான வெள்ளாத்தூரான் கூட்டத்தினரே ஏற்றுக்கொள்கின்றனர்.இதற்காக 30 ஊர் பங்காளிகளும் காளஹஸ்தி கல்யாணத்துக்கு வரும்போது அன்னதானத்துக்கு பணம் அளித்து ரசீது பெற்று செல்வார்கள்.

இதன்பிறகு மாலை 5 மணியளவில் பெண்வீட்டாரான வெள்ளாத்தூர் கூட்டத்தார் பிள்ளைவீட்டாரான செம்பேடு கிராமத்தார் ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்யும் வகையில் ஒருமணிநேரம் இவர்களுக்கு என தனியாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனை பூசைகள் செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் காட்டப்படும்.இந்த ஒருமணிநேரத்தில் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

பின் கோவில் சார்பில் பிரசாதங்கள் நிறைய வழங்குவார்கள்.

இரவு 9 மணியளவில் கோவிலிலிருந்து மண்டபத்துக்கு சீர்வரிசையை நமது கூட்டத்தார் மேளதாளம் முழங்க யானை முன்னே செல்ல கொண்டுவருவர்.

பிறகு இரவு 12 மணிமுதல் 3 மணிவரை இந்த திருமணவைபவம் நடைபெறும். இதற்கிடையே சுவாமி ஞானாம்பிகையை பெண்கேட்டு வருவதும்.ஞானம்பிகை திருமணத்துக்கு மறுப்பதும் பிறகு சுவாமியின் வீரதீர செயல்களை விளக்கி பெண்கேட்பார்கள் அதன் பின்னும் அம்பாள் திருமணத்துக்கு மறுப்பார். மீண்டும் இறைவனை பற்றி திரும்ப திரும்ப எடுத்துரைத்து தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நேரத்தில்தான்.சொரக்கியப்பேட்டை பெண் ஞானாம்பிகை என தேவஸ்தான ஏட்டில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை கோவில் ஊழியர் படித்துக்காண்பிப்பது இன்னும் சிறப்பு.பிறகு அம்பாள் சம்மதம் தெரிவித்ததும். திருமணம் நிகழ்வு வேகாம் எடுக்கும்.அந்த திருமண மண்டபத்தின் உள்ளே அமர வெள்ளாத்தூர் கூட்டத்தாருக்கு 50 நுழைவுச்சீட்டும் செம்பேட்டாரான பிள்ளைவீட்டாருக்கு 30 சீட்டுகளும் வழங்குவார்கள்.இந்த வைபவத்தில் ஆந்திரமாநில அரங்காவல் குழுவினர் MLAக்கள் மினிஸ்டர்கள் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள்.திருமணத்தின்போது வெள்ளாத்தூரான் கூட்டத்தினரிடம் சம்மதம் கேட்பார்கள்.பிறகு திருமணம் இனிதே நடைபெறும்.பிள்ளைவீட்டார் தேங்காய் பைகளை வழங்குவர்.வந்திருக்கும் மக்கள் மொய்ப்பணம் வைப்பார்கள்.விடிந்ததும் 11 மணிக்கு நமக்கு சொந்தமான அந்த சத்திரத்திலேயே சக்தி பூசையை செய்து மீண்டும் அன்னதானம் நடைபெற்று விழா இனிதே நிறைவேறும்..

தகவல் உதவி
திரு.MG.ஆறுமுகம் செங்குந்த முதலியார் 
(சொரக்காயப்பேட்டை கிராமம்)
திருத்தணி.

இது போல் நம் சமுதாயம் சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901

 

Sengundhar Vellathur Chatram, Kaikala street, No 3-968 NEHRU ROAD
SRI KALAHASTI
SRI BALAJ I DISTRICT (CHITTOOR DISTRICT)
PIN No 517644
08578-223456








14 ஊர் கைக்கோளன் கைக்காளா வாரி திருவிழா மண்டபம்


































காளஹஸ்தி சிவன் கோவில் முதல் கோபுரத்தின் மேலிருந்து இரண்டாவதாக உள்ள மாடத்தில் 900 வருடம் பழமையான ஒரு செப்பேடு பொருத்தப்பட்டிருந்தது.
அந்த தகட்டில் திருக்கல்யாண உற்சவ உபயதாரர் பெண்வீட்டார் #சொரக்காயப்பேட்டை அன்னியப்ப_செங்குந்த_முதலி வகையறா என எழுதப்பட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்தது



Post a Comment

2Comments
  1. Which caste is Telugu mudaliar ??

    ReplyDelete
    Replies
    1. 1000 வருடங்களுக்கு முன்பு சோழர்கள் ஆந்திர பகுதியை பகுதியின் மீது படையெடுத்த போது சென்ற கைக்கோள முதலியார் களுக்கு தற்போது தமிழ் தெரியாது அதனால் அவர்கள் தெலுங்கு முதலியார் என்று அழைக்கப்படுகிறகள்.

      Delete
Post a Comment