முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருக்கு முன்பே மட்டக்களப்பில் சில தமிழ் அறிஞர்கள் தோன்றியிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஆரையம்பதி குமாரசாமி ஐயர்(1879). இவர் சுவாமி விபுலானந்தருக்குச் சமஸ்கிருதம் போதித்தவர் என்பர்.
தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமைபெற்ற குமாரசுவாமி ஐயரின் அடிச்சுவட்டை பின்பற்றி ஆரையம்பதியில் தமிழில் புலமை பெற்ற ஒரு செங்குந்தர் குடும்பம் உருவானது. அக்குடும்பத்தில் புலவர் சிவ. சோமசுந்தரம்(டாக்டர்), அவரது தம்பியார் சிவ. விவேகானந்த முதலியார், அவரது சகோதரி. சி. திருமலர் பாக்கியம், மற்றும் இவர்களது உறவில் வந்தவரான ஆரையூர் நல் .அளகேச முதலியார் அடங்குவர்.
மரபு இலக்கியத்தில் அறிவும் ஆற்றலும் மிக்க இவர்கள், செய்யுள் இயற்றுவதில் மிகவும் திறமை பெற்றிருந்தனர். இந்த நால்வரும் செய்யுள் வடிவில் சிறு பிரபந்தங்கள் பல பாடியுள்ளனர். அவை பெரும்பாலும், ஆலயங்கள் பற்றியும் அறநெறி பற்றியும் அமைந்தவை.
இவர்களுள் சிவ. விவேகானந்த முதலியார் சற்று வேறுபட்டு, உரைநடை இலக்கியத்திலும் திறமை பெற்றவர். இவர் இயற்றிய சைவ சமய சாரம், சைவ சித்தாந்த கோட்பாடுகளைப் பிழிந்தெடுத்த சாரமாக உள்ளது. இது தவிர, பல ஆய்வுகட்டுரைகளயும், இலக்கிய நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். அவை இலங்கைப் பத்திரிகைகளிலும். வானொலியிலும் வெளிவந்துள்ளன.
வாழ்க்கை குறிப்பு
19 ஆம் நுற்றாண்டின் இறுதிப்பகுதியில், பழம்பதியான ஆரையம்பதியில் சிறந்த கொடை வள்ளாக இருந்தவர் நொத்தாரிஸ் மூத்தம்பி என்பவர். அந்த காலத்திலேயே ஆங்கிலமும், தமிழுங்கற்று நெத்தாரிஸ் பதவியும் பெற்று ஆரையபதியில் ஒரு முக்கிய பெரியாராக இவர் விளங்கினார். ஆலயங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தும், பாடசாலைகளை உருவாக்கியும் புகழ்பெற்ற இவர் பெயரில் “ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்தம்பி வித்தியாலயம்“ இயங்கி வருகின்றது.
இவரது மகன் சிதம்பரப்பிள்ளை புகழ்பெற்ற விதானையாராக இருந்தவர். மேற்படி சிவ. சிதம்பரம்பிள்ளைக்கும் ஆறுமுகம் விசாலாட்சி அம்மையாருக்கும் கனிஷ்ட புதல்வனாக 12.11.1920 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழ் மணி விவேகானந்த முதலியார்.
இவருக்கு மூத்தவரான டாக்டர் சிவ. சோமசுந்தரம், பணி விடு துது, ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி திருப்பதிகம், மாரியம்மன் பதிகம் முதலியவற்றை இயக்கியவர். இவருக்குத் தங்கையாகிய திருமலர் பாக்கியம் சாவித்திரி சரிதை, மட்டு வைத்தியசாலை பழனியாண்டவர் பதிகம், கல்லடி சித்தி விநாயகர் பதிகம் முதலியவற்றை இயற்றியவர்.
தமிழ் இலக்கணம், இலக்கியம், சைவாகமம் தொடர்பாகச் சிவ. விவேகானந்த முதலியார் ஒர் உசாத்துணையாக விளங்குவதால், அனைவரும் இவரை “சேர்” (Sir) என்று அழைப்பர்.
தமிழ்ப் பயிற்சி
தனது ஆரம்ப கல்வியைப் பாட்டனார் மூத்த தம்பி நொத்தாரிசார் அவர்கால் அமைக்கப்பட்ட நொத்தாரிஸ் மெ.மி பாடசாலையில் பெற்ற தமிழ்மணி, கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் தனது இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.
சுவாமி விபுலானந்தரால் உருவாக்கப்பட்ட இராமகிருஷணமிசன் ஆங்கில பாடசாலையென்பதும், இங்கே அவர் நீண்ட காலம் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவானந்தா வித்தியாலயத்திற்கு அருகே “ சிவபுரி“ என்ற ஆச்சிரமம் அமைத்து சுவாமி விபுலானந்தர் தங்கியிருந்தார். சுவாமி விபுலானந்தரிடம் கல்வி கற்ற செல்வப் பிள்ளைகளில் தமிழ்மணியும் ஒருவராக திகழ்ந்தார். ஒய்வு நேரங்களில் அடிகளார் சிவபுரி ஆச்சிரமத்திற்கு தமது தமிழ்மணியை அழைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், கதைகளும், வேடிக்கையான சம்பவங்களும் கூறுவாராம்.
பின்னர் சிவ. விவேகானந்த முதலியார் முன்னோடி ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியாக புளியந்தீவில் அமைந்திருந்த ஆர்ச். அகுஸ்தீனார் கல்லுரியில் ஆசிரியரான பயிற்சியின் பின் 1947 ஆம் ஆண்டு கல்முனை சென்று மேரிஸ் ஆங்கில பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். அன்று முதல் முப்பத்தொரு வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்து ஈற்றில் 1978 ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலத்தில் ஆசிரியராக இளைப்பாறினார்.
ஆசிரியப் பணியாற்றிய காலத்தில், தமிழ் இஙக்கியம், தமிழ்மொழி, சைவசமயம் ஆகிய பாடங்களை சிறப்பாக கற்பித்து ஆசரியர்களினதும், மாணவர்களினதும் பாராட்டைப் பெற்றார், இப்பாடங்களில் சந்தோக விளக்கம் பெற அனைவரும் நாடும் ஒரே ஆசிரியரான விளங்கினார்.
சமூகப்பணி
இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் மக்களிடையே சமூக விழிப்புணர்வையும், சமய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் தனி மனிதனாக நின்று எதிர் நீச்சல் போட்டார். தமது செங்குந்த சமூகத்தினின் இளைஞர் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு உழைத்தார். இவர் நிறுவிய இளைஞர் சங்கம் மிகவும் துடிப்புடனும் சமூக பிரக்ஞயுடனும் செயற்பட்டது. ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் கோயிலில் ஆலயப்பணிகள், பண்ணிசைப்பயிற்சி, தேவார பாராயணம், பிள்ளையார் கதை படித்தல் போன்ற பல கைங்கரியங்களை இச் சங்கம் முன்னின்று நடத்தியது.
சித்திரை வருடப்பிறப்புப் போன்ற பண்டிகைக் காலத்தில் (அரிச்சந்திர புராணம்) மயான காண்டம், பாதுகா பட்டாபிஷேகம், ஒட்டக்கூத்தர் சரிதம், குமணன் சரிதம் முதலிய நாடகங்களை இவ் இளைஞர்களைகொண்டு தயாரித்து பழக்கி அரங்கேற்றினார் விவேகானந்த முதலியார்.
இன்றைய இலக்கிய மேடைகளில் வழக்காடு மன்றம் இடம் பிடிப்பதற்கு முன்னரே அந்தக்காலத்தில் விவேகானந்த முதலியார் “கோடு – கச்சேரி” நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் சூர்ப்பனகை மானபங்கம், திரௌபதி துயிலுரிதல் போன்ற வழக்காடல்களை சேர்த்துக்கொண்டார்.
செங்குந்தர் சமூகத்தை ஒரே குடும்பமாக க் கட்டியெழுப்பி வளர்ப்பதில் அரும்படுபட்டு அதில் வெற்றியும் கண்டார். இன்று அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் , டாக்டர்களாக, பொறியலாளர்களாக, வழக்கறிஞர்களாக, சர்வகலாசலை விரவுரையாளர்களாக இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையில் அச்சமூகம் நன்கு முன்னேறியுள்ளதைம் இன்று அவதானிக்க முடியும்.
இலக்கியப்பணி
சைவம், தமிழ், இலக்கியம் அகிய துறைகளில் ஆய்வு நோக்குக் கொண்ட இவர், பலநுால்களை துருவியராய்ந்து அவற்றிலுள்ள வழுக்களை களைவதில் துணை செய்துள்ளார். ஆலயங்கள் தொடர்பாகவும், சைவ அனுட்டானங்கள் தொடர்பாகவும் .பற்பல சிறு நுால்கள் பலவற்றை ஆக்கியுள்ளார். அந்த வகையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல இவர் எழுதிய சைவ சமய சாரம்(எழுத்துப்பிரதி) ஒரு மகத்தான உசாத்துணை நுாலாகும்.
இது தவிர வைரவ சுவாமி காவியம்(1949), மாரியம்மன் உற்பத்தி(1950), மரணச்சடங்கு பாடல்கள்)1991), கந்த சஷ்டி விரதப்பாடல்கள்(1993), மாரியம்மன் சின்ன காவியம்(1993), மாரியம்மன் கும்மி(1983), எண்ணெய்சிந்து பாடல்கள்(1995), இவற்றுள் சில தொகுப்புநுால்கள் பாடபேதம் பார்த்து வழுக்கள் களைந்து, விளக்கமளித்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அச்சேறாது எழுத்துப் பிரதிகளான உள்ள சில நுால்கள் வருமாறு…
- சைவசமய சாரம்(1984)
- அவலந்தீர்க்கும் ஆரையூர் மரியம்மன் காவடிச்சிந்து(1984)
- சுவாமி விபுலானந்தர் வரலாற்று கும்மி(1992)
- விஞ்ஞான த த்துவங்களும் சைவசமய கோட்பாடுகளும்(1984)
- கிருஸ்ணஜெயந்தி தாலாட்டு(1884)
- ஒரங்க இலக்கிய நாடகங்கள்(1994)
இவை தவிர அவ்வப்போது பத்திரிகைகளில் வெளி வந்த கட்டுரைகளும் நறுக்குகளாக உள்ளன.
வரலாற்றுணர்வும் ஆய்வு நோக்கும்
சங்க இலக்கியநு ல்களில் ஆங்காங்கே இடம்பெறும் வரலாற்று செய்திகளைக்கொண்டு பண்டைத் தமிழரின் புகழ் புத்த வரலாறு தொடர்பான பல குறிப்புக்களை இவர் சேகரித் து வைத்துள்ளார். அவ்வாறே இலங்கைச் சரித்திரம் தொடர்பாக தமிழ்மன்னர்கள் ஆட்சிபற்றிய பலதகவல்களையும் இவர் சேகரித்து வைத்துள்ளார். அதன் காரணமான தவறான தகவல்கள் பிறரின் கட்டுரைகளில் வெளிவரும் போது அவற்றைச் சுட்டிக்காட்டிச் சரியான தகவல்களை கூறிகிறார்.
அந்த வகையில் ஆரையம்பதி தொடர்பான பல வரலாற்றுத் தொடர்புகளையும் இவர் தொகுத்து வைத்துள்ளார். இவர் எழுதியுள்ள கோவிற்குளம் ஆலயம் பற்றிய கட்டுரை, பல வரலாற்று தகவல்களை கொண்டுள்ளது. கொக்கட்டிச்சோலைத் தான்தோள்றிஈஸ்வர் ஆலயத்திற்கும், கோவில்குளம் காசிலிங்கேஸ்வரா ஆலயத்திற்கும் இடையில் இருந்த தொடர்பு காரணமாகவே தற்போது ஆரையம்பதி, கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தான்தோன்றிஈஸ்வர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு வேல் கொண்டு செல்லும் வழக்கம் ஆரம்பித்த து என்ற உண்மை இக்கட்டுரை மூலம் வெளிப்படுகின்றது.
மேற்படி காசிலிங்கேஸ்வர் ஆலயத்தின் கருங்கற்து ண்கள் கோவில் குளத்தில் இருந்து கந்தசுவாமி ஆலயத்தின் படிகளாகவும் திருநீலகண்டப்பிள்ளையார் ஆலயத்தின் நிலைப்படிகளாகவும் பயன்படுத்தப்பட்டன. மேற்படி ஆலய இடிபாடுகளில் அகப்பட்ட வெள்ளைக்கல்ப் பிள்ளையார் சிற்பமே, ஆரம்பத்தில் கந்தசுவாமி கோவில் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்து. இவ் உண்மைகளைத் தகுந்த ஆதார சான்றுகளுடன் சிவ. விவேகானந்த முதலியார் நிறுவியுள்ளார்.
நிறைவு
தமி ழ்மணி விவேகானந்த முதலியார் அவர்களின் பரந்துபட்ட தமிழ் அறிவையும்ஈ ஆய்வு நோக்கையும் பார்க்கும்போது, இத்தகைய பெருமகள் ஆரையம்பதியில் வாழ்ந்து நமக்கொல்லாம் பெருமை.
மரணப்படுக்கையில் சேலைன் பாய்ச்சப்பட்ட நிலையிலும் அவர் தமிழ் நுல்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். வழக்கம்போல் வெளியிடத்திட்ட மிட்டிருந்த பிள்ளையார் கதை என்னும் நு ல் அச்சாகி வெளிவருமுன் அவர் அமராகிவிட்டார். இறைவள் அவரைத் தன்னுடள் அழைத்துக்கொண்டார்.
எத்தனையே பேருக்கு இந்து சமய கலாசார திணைக்கள்ம் “தமிழ்மணி“ பட்டம் வழங்கியுள்ளது. அனால் இத்திட்டம் நடைமுறைக்கு வருமுன்னரே நமது தமிழ்மணியிள் தகமை அறிந்து அவரைத் தமிழ்மணி என மக்கள் அழைத்தனர். அந்த வகையில் அவர் முன்னோடித் தமிழ்மணி ஆகினார்.
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லையாதலால் இதன் இலக்கிய படைப்புகளில் என்றும் தமிழ்மணி வாழ்வார்.
நன்றி - இலக்கியப் புக்கள்