வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களின் வம்சம் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் தான் என்பதற்கான ஆதாரங்கள்

2



நவவீரர்களின் பட்டியல்:
1.வீரபாகு (மூத்தவர்)
2.வீரகேசரி
3.வீரமகேந்திரர்
4.வீரமகேஸ்வரர்
5.வீரபுரந்தரர்
6.வீரராக்கதர்
7.வீரமார்த்தாண்டர்
8.வீரராந்தகர்
9.வீரதீரர்
👆 இவர்களின் வம்சமே
செங்குந்தர் கைக்கோள முதலியார்கள்


செங்குந்தர்கைக்கோள முதலியார்கள் தான் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சம் என்று பல கல்வெட்டு செப்பேடு இலக்கிய ஆதாரங்கள் உள்ளது, அதில் சில ஆவணங்களை கீழே  உள்ளது.👇


1. அலைவாய்மலை செப்பேடு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பழந்தின்னிபட்டி கிராமத்தில் அலைவாய்கிரிமலை என்ற சிறு குன்று உள்ளது. இங்கு குகையீசுவரர் மடம் என்று செங்குந்தர்கைக்கோள முதலியார்களுக்கு பழமையான குலகுரு மடம் உள்ளது.

இந்த மடத்தில் உள்ள 700வருடம் பழமைவாய்ந்த செப்பேடு ஒன்றில் "செங்குந்தர்கைக்கோள முதலியார்களின்" வீரம், ஈகை, பக்தியை பற்றி உள்ளது மேலும் தமிழ் கடவுள் முருகனுக்கு உதவிய வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களின் வம்சம் நாம் தான் என்று சொல்கிறது.

(செப்பேட்டில் உள்ள தகவல் கிழே👇 போட்டோவில் உள்ளது)








Note: இந்த செப்பேடு அரசு 👆தொல்லியல் துறையிடம் உள்ளது. மேலும் புலவர். ராசு எழுதிய "கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் என்ற புத்தகத்திலும் இந்த செப்பேட்டின் நகல்  உள்ளது. 
Thanjavur Tamil University: Book link (click)


2. நாவினால் மழுஎடுத்த ஞானப்பிரகாசார் செங்குந்தர் மயிலாடுதுறை செப்ப்பேடு:

இந்த செப்பேடு 12ஆம் நூற்றாண்டில் த
நடந்த செய்தியைக் கூறுகிறது.
தற்போது அரசு தொல்லியல் துறையிடம் உள்ளது.

இந்த செப்பேட்டிலும் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சம் என்று உள்ளது.

செப்பேட்டில் உள்ளதை கீலே போட்டோவில் காணலாம்.👇




இந்த செப்பேட்டில் உள்ள சிற்பங்களில் வீரபாகு நவவீரர்கள் உள்ளது


👆இந்த செப்பேடு தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்திலும் உள்ளது👉 Book link Chick here


3. சேவூர் செப்பேடு:

17ஆம் நூற்றாண்டில் சேவூர் கச்சி அண்ணாமலை முதலியார் மகன் முத்துக்குமார நயினார் என்னும் சைவ மத சித்தர் கடவுளை வேண்டி நவகண்டம் செய்து கொண்டதாக பண்டைய கல்வெட்டுகள் கூறுகிறது

மைசூர் மகாராஜா முத்துக்குமாரசாமி சித்தரை நேரில் வந்து வணங்கி 1741ஆம் ஆண்டு முத்துக்குமாரசாமி மடத்திற்கு செம்பு பட்டயம் எழுதிக் கொடுத்தார்.

இந்த செப்பேட்டில் முதற்கண் செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் பெருமை, வீரம் மற்றும் இவர்களிம் மூதாதையரான 
வீரபாகு நவவீரர்களைப் பற்றி தொகுத்துக் கூறப்பட்டது. கொங்கு 24 சமயமுதலி பட்டக்காரர் உள்ளிட்ட சமூகப் பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் தலைப்பலி(நவகண்டம்) செய்து கொண்ட சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார் தன் மகன் குப்பமுத்து முதலியார்க்கு ராஜாதிபதி மண்டல அதிபதி மடாதிபதி என்று பட்டம் சூட்டினார். செங்குந்தர்கள் மடத்திற்கு கொடுக்க வேண்டிய வரிகளை பற்றி கூறப்படுள்ளது.

செப்பேட்டில் உள்ளதை கீலே போட்டோவில் காணலாம்.👇



சித்தரின் 8ஆம் வம்சாவளியான சின்னசாமி முதலியார் பாதுகாத்து வருகிறார்.

Note: இந்த செப்பேடு மைசூர் மஹாராஜா முத்துக்குமார்சுவாமி மடத்திற்க்கு தனிப்பட்ட முறையில் கொடுத்ததனால் இந்த செப்பேடு இந்த மடத்திலேயே உள்ளது. இதை தொல்லியல் துறையினர் நகலெடுத்து ஆவணப் படுத்திவிட்டனர். மேலும் புலவர். ராசு எழுதிய "கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் என்ற Thanjavur Tamil University புத்தகத்திலும் இந்த செப்பேட்டின் நகல்  உள்ளது. Book link click here



4. சோழர் பூர்வ பட்டயம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கொங்கு மண்டலத்தில் செங்குந்த கைக்கோளர், வேளாளர்,  வைசிய செட்டியார் முதலிய குடிகளை குடியேற்றி 32 ஆலயங்கள் கட்டிய செய்தியை கூறும் ஆவணம் இந்த "சோழர் பூர்வ பட்டயம்". இந்த ஆவணத்தின் 

செங்குந்தர்கைக்கோள முதலியார்கள் வீரபாகு  வம்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது👇



Book link

6. திருப்பூர் மாவட்ட கைலாசநாதர் கோவில் நாயகியம்மன் கோவில் கல்வெட்டு.

திருப்பூர் வட்டம், அழகுமலை கைலாசநாதர் கோவில் பெரியநாயகியம்மன் கோவில் சன்னிதியில் உள்ள கல்வெட்டு.

இந்த கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கன காலம் கி.பி. 1614 ஆம் வருடம் எழுதப்பட்டது.

இந்த கல்வெட்டில் வீரபாகு வம்சமான செங்குந்தர்கைக்கோள முதலியாரில் "சமய முதலி" கோத்திரம்/ கூட்டம் பங்காளிகள் தான் இந்த அலகுமலை கோவில் குமாரர்(முருகன்) சன்னிதியில் சீர்பாதம் தாங்கும் உரிமை உள்ளது என்று அரசு செய்த ஆணை பற்றி கூறுவது இக்கல்வெட்டின் செய்தி.👇

கூடுதல் தகவல்: தற்போது இந்த "சமய முதலி" கோத்திரம்/ கூட்ட பங்காளிகள் சென்னிமலை முருகன் மற்றும் கவுந்தபாடி புடவைக்காரி அங்காளம்மனை குலதெய்வமாக வணங்குகிறார்கள். இவர்களின் குலகுரு "இறையாமங்கலம் பரஞ்சோதி குருக்கள் மடம்" ஆகும்.

Note: 👆 இந்த கல்வெட்டி நகல் அரசு தொல்லியல் துறை வெளியிட்ட
"கோவை மாவட்ட கல்வெட்டு" என்ற புத்தகத்தில் உள்ளது. மேலே உள்ள போட்டோ இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


7. திருச்செங்கோடு திருப்பணிமாலை

 16ஆம் நூற்றாண்டில் எழுதிய திருச்செங்கோடு திருப்பணிமாலை என்னும் நூலி மற்றல்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் செங்கோட்டுவேலர் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை வீரவாகு குலம் என்ற செங்குந்தர் குலத்தை சேர்ந்த பெரியாள் என்பவர் கட்டினார்  என உள்ளது.

இந்த நூலை கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும்.


நூலிலுள்ள தகவல் கீழே போட்டோவில் உள்ளது👇



8. வீரபாகு தேவர் சமயச் செப்பேடு
பல நூற்றாண்டுகள் பழமையான இச்செப்பேடு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.
காப்பாட்சியர். கோவிந்தராஜ் மற்றும் புலவர். ராசு இச்செப்பேட்டை நகல் எடுத்தனர்.
முருகப்பெருமானின் படைவீீரர்களான நவவீரர்களில் மூத்தவரான வீரபாகு தேவருக்கு திருப்பணி பூஜை நடைபெற பல்வேறு தொழில் புரிவோர் அளித்த தர்மத்தை இச்செப்பேடு தெளிவாக விளக்குகிறது.மேலும் செங்குந்தர்கைக்கோளர் சமூகம் நாகரிக வம்சம் என்று குறிப்பிடபட்டுள்ளது.

இச்செப்பேடு நவவீரர்கள்
ஒன்பது பேரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது
செப்பேட்டில் உள்ள செய்தி கீழே போட்டோவில் உள்ளது👇.



9. நாட்டு நியாய ஓலை

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.

பல நூற்றாண்டுக்கு முன்பு லிங்கனூர்
கருப்ப என்பவரை சமூகத்தில் இருந்து தள்ளிவைத்தனர்.
மீண்டும் லிங்கனூர் கருப்ப முதலியார் சமூகத்தில் இணைவதற்காக செய்த முயற்சிகள் மற்றும் அவர் கொடுத்த வாக்குமூலங்கள் பற்றி இந்த ஓலைப்பாட்டயம் கூறுகிறது.

வாக்குமூலத்தில் "நான் நவவீரர்கள் வம்சம் தான் மேலும் ராக்கபாளையம் பெரியதனக்காரர் சின்னப்ப முதலி, நாட்டாண்மைக்காரர் மாரப்ப முதலியாரின் உறவினர்" என்று லிங்கனூர் கருப்ப முதலியார் கூறுகிறார்👇









செங்குந்தர் காமாட்சி அம்மன் விருத்தம் பாடல்

காஞ்சிபுரத்தில் இருந்து பிற பகுதியில் குடியேறிய செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வாழும் ஊரில் காமாட்சி அம்மன் கோவில் கட்டி முதன்மை பெண் தெய்வமாக இன்றுவரை வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிலும் இந்துக் கோவில்களில் தேர்த்திருவிழாவின் போது செங்குந்தர்  ஆண்கள் தங்கள் உடம்பில் தேரின் சங்கிலி குத்தி தேரை இழுத்துச் செல்வர் அப்போது பாடும் இந்த செங்குந்தர் காமாட்சியம்மன் விருத்தம் பாடலில் தெளிவாக நவவீர வீரபாகு வம்சம் வீர செங்குந்தர் முதலியார் என்ற  செய்யுள் அடிகள் வருகிறது

சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம் 

சைவ சமயத்தின் தலைமை இடமான தில்லை நடராஜர் ஆலயம் நவ வீரர்கள் வம்சத்தினரான செங்குந்த முதலியார் மரபினர் பழங்காலந்தொட்டே பாரம்பரியமாக செய்து வருகின்றனர்
ஆதாரம் (கந்தசஷ்டி பத்திரிகை)




சுவாமிமலை முருகன் திருக்கோயில் (நான்காம் படைவீடு )

முருகப்பெருமானின் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் வீரபாகு நவ வீரர்கள் வம்சத்தினரான செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பாக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது (ஆதாரம்- செப்பேடு/திருக்கோயில் பத்திரிகை)







பழனி முருகன் திருக்கோயில் செப்பேடு (மூன்றாம் படைவீடு)

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சூரசம்ஹாரம் மண்டகப்படி வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் வம்சத்தினரான செங்குந்த முதலியார் மரபினர் சார்பாக நடைபெறுகின்றது (ஆதாரம்- செப்பேடு)





நாமக்கல் மாவட்ட செங்குந்தர் கோவில்

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோயில்

நாமக்கல் மாவட்டம் செங்குந்தர் குருசாமிபாளையம் கோவில் 



சோழ மண்டலம், திருமருகல் செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வீரபாகு நவவீரர்கள் சிலை



250 ஆண்டு பழைமை வாய்ந்த நாமக்கல் மாவட்ட குருசாமிபாளையம் செங்குந்தர் சுப்பிரமணியர் கோவிலில் முருகனின் போர்படை தளபதிகளான வீரபாகு செங்குந்தர் உளிட்ட கைக்கோள நவாவீரர்கள் சிலை

Post a Comment

2Comments
  1. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கண சாலை பேரூராட்சி கஞ்சமலை சித்தர் கோவில் செங்குந்தர் கெட்டி முதலி மன்னாரால் கட்டப்பட்டது.மேலும் இக்கோவில் கல்வெட்டு ஆராய்ந்தால் கெட்டி முதலி மன்னர் குடும்பம் கட்டிய கோவில் சித்தர் கோவில் என புலப்படும். இது எனக்கு கிடைத்த தகவல் ஆகும். நன்றி.

    ReplyDelete
Post a Comment