திருச்செந்தூர் செங்குந்த முதலியார் மரபினர்கள்

0

திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடாகும். முருகப்பெருமான் தேவர்களை காக்க சூரபத்மனை வதம் செய்த ஊராகும். முருகப்பெருமானின் மற்ற படை வீடுகளின் திருத்தலம் மலையின் மீது இருந்தாலும் திருச்செந்தூர் திருத்தலம் கடற்கரை அமைந்துள்ளது தினச்சிறப்பாகும். இப்படி சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தினரான செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தினர் பிற அறுபடை வீடு முருகன் கோயில் உள்ளது போல திருச்செந்தூர் முருகன் கோயில் பல வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளன.


திருச்செந்தூரில் 14 நாட்டு செங்குந்தர் முதலியார்கள் மற்றும் பிற ஊர் செங்குந்தர்கள்  பல்வேறு தர்ம காரியங்களை தொடர்ந்து பாரம்பரியமாக செய்து வருகின்றன.  அவற்றின் விவரங்களை கீழே காண்க 


திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின்  உரிமைகள்:

1. திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் ஆவணி மற்றும் மாசி திருவிழாவில்  முதல் நாள் திருவிழா கொடியேற்றம் திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த முதலியார் சமூகத்தினர் நெய்து உபயமாக கொடுக்கும் கொடிசீலை(கொடிப்பட்டத்தை) திருச்செந்தூர் முருகன் கோவில் கொடிமரத்தில் ஏற்றினால் தான் இக்கோவிலில் விழாவே தொடங்கும். அதேபோல் கொடியேற்றம் அன்று கொடி மரபூஜையும் 14 நாட்டு செங்குந்த முதலியார் மரபினர் பாரம்பரியமாக நெடுங்காலமாக செய்து வந்துள்ளனர்.

2. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் ஆவணி,மாசி மாத திருவிழாவில் 12-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா மண்டகப்படி செங்குந்தர் மரபினர் உடையது.  14 நாட்டு செங்குந்த முதலியார் 12-ம் திருவிழா மண்டபம் சுவாமி உற்சவர் அபிஷேக பூஜைகள் நடத்தி வைத்து கோவில் திருவிழாவின் கணக்கு வழக்குகளை சரி பார்த்து முருகப்பெருமானின் உற்சவர் கோவிலுக்குள் அனுப்பி வைப்பார்கள்.


திருச்செந்தூரில் முருகப்பெருமான் நரகாசுரன் என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்ததால் தனது போர்ப்படையை தலைமையேற்று நடத்திய வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் விழா தொடங்கும் போதும்,விழா முடிவின் போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற முருகப்பெருமானின் ஆணைப்படி திருவிழாவில் முதல் நாள்,12-ம் நாள் மண்டகப்படி செங்குந்த முதலியார் மரபினர் உடையது என்று புராணங்கள் கூறுகிறது.


3.ஆவணி/மாசி திருவிழா திருநெல்வேலி செங்குந்தர் வடக்கு வம்சத்தினர் சார்பாக மடம்  முன்பு 7-ம் நாள் (சிவப்பு சாத்தி) மண்டகப்படி நடைபெறுகிறது.


4.திருநெல்வேலி செங்குந்தர் வடக்குவம்சத்தினர் பாத்தியப்பட்ட அருள்மிகு அகத்தியர் ஆலயம் திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.


5.திருநெல்வேலி(நெல்லை) செங்குந்தர் பக்தமுடையார் வம்சத்தினர் மடம்    சார்பாக 8-ம் நாள் (பச்சை சாத்தி) மண்டகப்படி நடைபெறுகிறது.


வெயில் உகந்த அம்மன் என்பதை வேலுகந்த அம்மன் என்றும் சொல்வார்கள்.முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு சென்றபோது, அம்பாள் தனது சக்தியை வேலாக மாற்றி அவரிடம்கொடுத்தாள். வேலனுக்கு உகந்த வேலைக் கொடுத்ததால் அவள் வேலுகந்த அம்மன் ஆனாள். இதுவே வெயிலுகந்த அம்மனாக திரிந்தது என்பர். இந்த கோவில் செங்குந்த முதலியார் குலதெய்வம்


திருச்செந்தூர் மாசி திருவிழா 14 நாட்டு செங்குந்த முதலியார் உரிமைகள் விரிவான வரலாறு:

கொடிபட்டம் பூஜை பிற்பகல் 4.00 மணி நமது 14 நாட்டு செங்குந்த முதலியார் கல்  மண்டபத்தில் உள்ள சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று  பின்னர் கொடிபட்டம் பூஜை நடைபெறும், கொடிபட்டத்தை நமது 14 நாட்டு செங்குந்த முதலியார் நாட்டாமை (எ) நாட்டுத்தலைவர் அவர்கள் மண்டபம் முன்பு நிற்கும் கோவில் யானை மீது அமர்ந்துள்ள கோவில் அய்யரிடம் கொடுப்பார். பின்னர் மேற்படி கொடிப்பட்டம் எட்டு வீதி வலம் வந்து திருக்கோவில் சென்றடையும்.


1-ம் மண்டகபடி திருவிழா:

அதிகாலை 5.00 மணிக்கு திருக்கோவிலில் கொடி ஏற்றம் நடைபெறும். நமது சமுதாயத்தின் சார்பாக சுவாமிக்கு மரியாதை செலுத்துதல், பின்பு காலை 9.00 மணிக்கு திருக்கோவிலில் ஸ்ரீ அஸ்திரத்தேவர் - ஸ்ரீ அப்பர் - ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆகிய மும்மூர்த்திகளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெறும்.

பின்புதாலை 6.00 மணிக்கு திருவிழா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பூமாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், சுவாமிகள் பரிவாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க திருக்கோவிலிலிருந்து புறப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு நெய்வேத்தியம் பிரசாதம் வழங்கப்படும்.


12-ம் மண்டகாடி திருவிழா மஞ்சள் நீராட்டு 

பிற்பகல் 4.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கப் பெருமானை, ஸ்ரீ தெய்வானை அம்பாளுடன் அழைக்க நமது மண்டபத்திலிருந்து பழைய கோவிலுக்கு செல்லுதல் அங்கு சுவாமிகளுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்ற பின்பு சுவாமிகள் எட்டு வீதி வலம் வந்து நமது மண்டபத்திற்கு வந்து சேர்தல், நமது 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை திருவிழா மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரங்கள், தீபஆராதனை நடைபெறும். இரவு 9.00 மணிக்கு மண்டபத்திலிருந்து சுவாமிகள் புறப்பட்ட பின்பு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படும் பின்பு சமுதாய தலைவர்கள் மற்றும் சமுதாய பெரியோர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்படும்.

திருச்செந்தூர் நகரில் 14 நாட்டு செங்குந்த முதலியார் மரபினர் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட செங்குந்தர் என்று பல மண்டபங்கள் மற்றும் மடங்கள உள்ளன.




மாசித்திருவிழா அழைப்பிதழ் - 2021







திருச்செந்தூர் ஆவணி திருவிழா 14 நாட்டு செங்குந்த முதலியார் உரிமைகள் விரிவான வரலாறு: 

ஆவணி திருவிழா
பிற்பகல் 4.00 மணி நமது 14 நாட்டு செங்குந்த முதலியார் கல் மண்டபத்தில்  உள்ள சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று பின்னர் கொடிபட்டம் பூஜை நடைபெறும். கொடிபட்டத்தை நமது நாட்டுத்தலைவர் செங்குந்தர் நாட்டாமை அவர்கள் மண்டபம் முன்பு நிற்கும் கோவில் யானை மீது அமர்ந்துள்ள கோவில் அய்யரிடம் கொடுப்பார். பின்னர் மேற்படி கொடிப்பட்டம் எட்டு வீதி வலம் வந்து திருக்கோவில் சென்றடையும்.

1ம் திருவிழா கொடியேற்றம் அன்று அதிகாலை 5 மணிக்கு திருக்கோளில்கொடி ஏற்றம் நடைபெறும். நமது சமூகம் சார்பாக சுவாமிக்கு மரியாதை செலுத்தல். பின்பு காலை 5 மணிக்கு திருக்கோவிகில் ஸ்ரீ அவதி அஸ்திரத்தேவர்-1 அப்பர்-ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆகிய மும்மூர்த்திகளுக்கு அபிஷேகம் சிறப்பு பூகை நடைபெறும். பின்பு மாலை 6 மணிக்கு திருவிழா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீசுப்பிரமணியர் தெய்வானை சுவாமிகளுக்கு பூமாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் சுவாமிகள் பரிவாரங்களுடன் & பக்தர்களுக்கு அருள்பாலிக்க திருக்கோவிலிலிருந்து புறப்பட்ட பின்னண பக்தர்களுக்கு நெய்வேத்தியம் பிரசாதம் நம் சமூகம் சார்பாக  வழங்கப்படும்.


12ம் திருவிழா மஞ்சள் நீராட்டு பிற்பகல் 4 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கப் பெருமானை. ஸ்ரீ தெய்வானை அம்பாளுடன் அழைக்க நமது மண்டபத்திலிருந்து பழைய கோவிலுக்கு செல்லுதல் அங்கு சுவாமிகளுக்கு மஞ்சள் நீராட்டுநடைபெற்ற பின்பு சுவாமிகள் எட்டு வீதி வலம் வந்து நமது மண்டபத்திற்கு வந்து சேர்தல், நமது 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை திருவிழா மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரங்கள் தீபஆராதனை நடைபெறும். இரவு 9 மணிக்கு மண்டபத்திலிருந்து சுவாமிகள் புறப்பட்ட பின்பு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படும் பின்பு செங்குந்தர் சமுதாய தலைவர்கள் மற்றும் சமுதாய பெரியோர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்படும்.

ஆவணி திருவிழா அழைப்பிதழ்










14 நாட்டு செங்குந்த முதலியார் 12-ம் திருவிழா கல்மண்டபம் நம் முன்னோர்களான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் பற்றிய பழமையான கல்வெட்டு.



1981 ஆம் ஆண்டு திருக்கைலாய பரம்பரை சவார மங்கல வம்சம் 14 நாட்டு செங்குந்தர் சீர்த்திருத்த சங்கம் பதிவு செய்ய சான்றிதழ்






14 நாடு செங்குந்தர் உறவின்முறை சங்கம்
பழைய ஆவணங்கள்











ஆவணி 1-ம் திருவிழா கொடியேற்றம் மண்டகப்படி 14 நாட்டு செங்குந்த முதலியார் கொடிசீலை வழங்கும் விழா










14 நாட்டு செங்குந்த முதலியார் 12-ம் நாள் திருவிழா மண்டகப்படி
(14 நாட்டு செங்குந்த முதலியார் 12-ம் திருவிழா மண்டபம்)



முருகப்பெருமானின் போர்ப்படை தளபதி வீரபாகுசெங்குந்தரின் சக்தி வேல் உடன் 12ம் திருவிழா செங்குந்த முதலியார் மண்டபத்திற்கு முருகப்பெருமான் அழைத்தல்







  

....................................................................................................


திருச்செந்தூர் கோவிலில் திருநெல்வேலி செங்குந்த முதலியார் மண்டகப்படி



திருச்செந்தூர் மாசி திருவிழாவின் 7ம் திருவிழா (சிவப்பு சாத்தி) இந்து செங்குந்தர் வடக்கு வம்சத்தார் மண்டகபடியான* நேற்று நம் மடத்தின் வாயிலில் நின்று காட்சி கொடுத்து சிறப்பு பூஜை செய்யபட்டு முருக பெருமான் வழியனுப்பி வைக்கப்பட்டார் பின்னர் எனது தாத்தா ச.சண்முக சுந்தரம் முதலியார் (மூக்கன் முதலியார்) செலவில் பல அண்டுகளாக நடத்த பெரும் அன்னதானம் மிக சிரும் சிறப்புடன் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.அ.ரவீந்தர் முதலியார், இந்து செங்குந்தர் வடக்கு வம்சத்தார் காரிய கமிட்டி தலைவர் சண்முகம் முதலியார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


ஆவணி திருவிழா திருநெல்வேலி(நெல்லை) செங்குந்தர் வடக்கு வம்சத்தினர் மடம் 7-ம் நாள் (சிவப்பு சாத்தி) மண்டகப்படி




ஆவணி திருவிழா திருநெல்வேலி(நெல்லை) செங்குந்தர் பக்தமுடையார் வம்சத்தினர் மடம் 8-ம் நாள் (பச்சை சாத்தி) மண்டகப்படி 






திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக  அம்பாசமுத்திரம் செங்குந்தர் குல 
வள்ளல் திரு.V.RM.A.நடராஜ முதலியார் பணியாற்றி உள்ளார்.













திருச்செந்தூர் உள்ள செங்குந்த முதலியார் சமூக மடங்கள்:


14 ஊர் செங்குந்தர் உறவின்முறை சங்கம் திருமண மண்டபம்

திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்தர் சமுதாய கல்மண்டபத்தை சீரமைத்து மிகப்பிரமாண்டமாக நிறுவிய ஸ்ரீலஸ்ரீ ஏகானந்த சுவாமிகள்





திருநெல்வேலி செங்குந்த முதலியார் வடக்கு வம்ச மடம்.

 


திருநெல்வேலி
செங்குந்தர் சமூக பக்தமுடையார் வம்சத்தினர் மடம்







ஏழூர் செங்குந்தர் சிவகாளை வம்சத்தினர் மடம்




திருநெல்வேலி
செங்குந்த முதலியார் வேம்படியார் மடம்

 



திருநெல்வேலி செங்குந்தர் முதலியார் களக்காட்டார் வம்ச மடம்



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பூபால்பட்டி செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செங்குந்தர் இல்லம்







திருச்செந்தூரில் திருநெல்வேலி செங்குந்த முதலியார் களால் கட்டப்பட்ட கல் மண்டபம்



அருள்மிகு ஸ்ரீ அகத்தியர் ஆலயம்
(திருநெல்வேலி செங்குந்தர் வடக்கு வம்சத்தினர் பாத்தியப்பட்டது)


திருச்செந்தூர் செங்குந்தர் கல் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு




14 நாட்டு செங்குந்த முதலியார் வரலாறு


சோழ மன்னர்களுக்கும், பாண்டிய மன்னர்களுக்கும் போர்ப்டை வீரர்களாகவும், மெய்க் காவல் படைகளாகவும் இருந்துள்ளனர். நெசவுத் தொழிலை முதன்மைத் தொழிலாக ஏற்றுக் கொண்ட பின்பு உலக புகழும் உயரிய பட்டு, பருத்தி நூல்களால் ஆன ஆடைகளை உருவாக்கி உலகம் புகழும் ஓர் சமூகமாக நம் சமூகத்தை இன்று வரை உயர்த்தியுள்ளனர்.

நெசவுத் தொழிலை உயிரென போற்றிய மக்களை கைக் கோளர் என்ற போதும் கோவிலில் பணி செய்தவர்களை கோவில் கைக் கோளர் என்றும், குடியிருப்பு ஊர்களில் முதன்மையாக இருந்து நிர்வாகம் செய்தவர்களை ஊர்  கைக்கோளர் என்றும் அரசனுக்கு அறிவுரை வழங்கும் உயர்மட்ட குழுவில் இடம் பெற்றவர்களை கைக்கோளமானி, கைக்கோள சேனாபதி என்றும் கைக்கோளர்களால் அமைக்கப்பட்ட படை கைக்கோள பெரும்படை எனவும், அரசனுக்கு மெய்க்காவல் புரிந்தபடை தெரிஞ்ச கைக்கோளப்படை எனவும் பலவாறாக சிறப்பிக்கப்பட்ட விபரங்கள்தமிழக கல்வெட்டுக்களிலும், செப்பு பட்டங்களும் தெளிவாக விளக்குகின்றன.


பாண்டியமன்னர்களின் ஆட்சி காலத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய ஆறுகள் வைகையும், தாமிரபரணியும் ஆகும். தாமிரபரணியில் ஒரு பகுதியான திருவழுதி நாடு என்ற பகுதியை காரிமாறன் சடகோபனின் முன்னோர்கள் புண்ணிய நதியாம் பொருநையின் வடகரையில் அமைந்துள்ள சிற்றூர் தொலைவில்லிமங்களம்(சிவராமங்கலம்) என்ற பெருமால் உறைந்துள்ள புண்ணிய பூமியாகும். தொலை வில்லி மங்களம் கோவில்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒன்று சிவராம மங்களம் என்பது. இவ்வூர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீரோடும் சிறப்போடும் இருந்தது. அங்கு வசித்து வந்த செங்குந்தர்கள் வேளாண் தொழிலோடு நெசவுத் தொழிலும் செய்து வந்துள்ளனர். அவர்கள் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இடையூறுகளாலும், ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்காலும் ஒட்டு மொத்தமாக அவ்வூரிலிருந்து புலம் பெயர்ந்து தனித்தனிக் குழுக்களாக பிரிந்து அருகில் இருக்கக் கூடிய 14 ஊர்களில் சென்று குடியேறியதாக தெரிய வருகிறது.

சிவராமமங்களம் செங்குந்தர்களுக்கு இடையூறு ஏற்பட்ட போது துணை வராத ஏனைய ஊர் செங்குந்தர்களை புறம் தள்ளி தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர். தங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவும். கொள்வினை கொடுப்பனை போன்ற வாழ்க்கை நெறிமுறைகளில் கட்டுப்பாடு காக்கவும், ஐம்பெரும் கிளைகள் இன்னும் இந்த ஐந்து கோத்திரம் பங்காளிகளுக்கு உள்ளையே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் வந்து விட்டது  (மஞ்சன்கோத்திரம், மாறிலான் கோத்திரம், வெற்றியான் கோத்திரம், பேறிலான் கோத்திரம், சலிப்பிலான் கோத்திரம் என்பனவாகும்).

சிவராமமங்களத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அயன்பொம்மையாபுரம், கடலையூர், எட்டயபுரம், அருப்புக்கோட்டை, நாகலாபுரம், விளாத்திக்குளம், புதியம்புத்தூர், ஏரல், முக்காணி, ஆத்தூர், வல்லநாடு, கொங்கு நாடு, பிரமியம், சத்திரப்பட்டி என்கிற 14 ஊர்களுக்குச்சென்றுதனது வாழ்க்கையை வாழ முற்பட்டனர். 14 ஊர்களே பின்னர் 14 நாட்டு செங்குந்தர்கள் என்ற தனி அமைப்பாக உருவாகியது. ஒரே சமூகமாக இருந்து பல்வேறு இடையூறுகளால் 14 நாட்டு செங்குந்தர்களாக பிரிந்தாலும் அனைவரும் தங்கள் சமுதாய தெய்வமாக திருச்செந்தூர் முருகனை, வண்டிமலைச்சி அம்மனை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் பூர்வீக ஊர்கள்

1. திருச்செந்தூர்(தலைமை)

2. கடலையூர், 

3. எட்டயபுரம், 

4. அருப்புக்கோட்டை, 

5. நாகலாபுரம்,

6. விளாத்திக்குளம், 

7. புதியம்புத்தூர், 

8. ஏரல் கீழவூர், 

9. ஏரல் மேலவூர்,

10. முக்காணி, 

11. ஆத்தூர்,

12. வல்லநாடு,

13. பிரமியம்,

14. அயன்பொம்மையாபுரம் 


திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் (கோத்திரம்/கூட்டம் ஐம்பெரும்கிளை) பெயர்கள் 

1. மஞ்சன்

2. மாறிலான்

3. வெற்றியான்

4. பேறிலான்

5. சலிப்பிலான்

ஒரே கிளை கூட்டம் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அண்ணன்-தம்பி அக்கா-தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அறிவியல் காரணங்கள் என்பது அவள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது.


திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்களின் குலதெய்வங்கள்.

1. சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில், திருச்செந்தூர்.

2. வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவவீரர்கள், திருச்செந்தூர்.

3. வெயில் உகந்த அம்மன் (வெயிலுகந்தம்மன் கோவில்), திருச்செந்தூர்.

4. பெரிய சாஸ்தா அய்யனார், சவராமங்கலம்.

5. ஸ்ரீஹரி கோவிந்த அய்யனார், ஆத்தோரங்கால்.

6. அங்காளம்மன், கருங்குளம்.

7. பாலாறு அய்யனார், புதியம்புத்தூர்.

8. சிவன் கோவில், உவரி

9. நட்டாத்தியம்மன் கோவில், ஏரல்

10. ராசாகோவில், வல்லநாடு

11. பூரண சமேத ஸ்ரீ மேகமுடையார் சாஸ்தா,வல்லநாடு

12. அருள்மிகு திட்டுமுட்டு சாஸ்தா,ஆத்தூர்,முக்காணி  








அயன்பொம்மையாபு - பொம்மராயபுரம் செங்குந்தர்  வந்த வரலாறு: ரம்வறண்ட பகுதியை வளமாக்கும் சிற்றாறு. வெள்ளப்பெருக்கெடுத்தால் காட்டாரு, அதன் கரையில் அமைந்துள்ள சிறி அரசு, ஒரு சில கிராமங்களைக் கொண்டஅமைதியும் ஆன்மீகமும் நிறைந்த அழகிய அரசு திம்மாராயபுரம் அரசர் திம்மராயரின் அரசாட்சியில் மக்கள் சகல நலன்களும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மக்களின் மனதரிந்து அரசு பரிபாலனம் செய்யும் மன்னர் திம்மராயரின் மனமெல்லாம் அன்னை மீனாட்சி கொலுவிருந்தனர். அன்னை மீனாட்சிக்கு ஆலயம் எழுப்பி தெய்வத் தொண்டில் தன்னை நிறைவாக ஈடுபடுத்திக் கொண்டார் மன்னர்.

அரசு காரியங்களை தமையனின் இடத்திலிருந்து செயலாற்றும் அரசர் திம்மராயரின் இளவல் பொம்மராயர். மக்களின் அன்பிற்கு பாத்திரமான நல்ல நிர்வாசி மக்களின் தேவை அறிந்து செயலாற்றும் பணியாளர். அன்றாடம் கிராமச் சுவடிகளில் தங்கி மக்களின் குறைகளை கேட்டு தேவையான பரிகாரங்களை செய்து வந்தார்.

அவ்வாறு குறைகளைக் கேட்டு வந்த ஒரு நாளில், பெண்டு பிள்ளைகளுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் பசியும் பட்டினியுமாக, நாடோடிகளாக ஓர் கூட்டம் பொம்மராயரிடம் வந்தது. கண்ணீரும் கம்பளையுமாக தங்களின் ஆதரவற்ற நிலையினை எடுத்துரைத்தனர்.

தாங்கள் தாமிரபரணி நதிக் கரையோரம் அமைந்துள்ள தொலவில்லி மங்களம் (சவாரமங்கலம்) எண்ணும் புண்ணிய ஷேத்திரத்தில் அமைந்துள்ள +ஸ்ரீ தேவர்பிரான மற்றும் அரவிந்தலோசனன் திருக்கோவில்களில் சீர்பாத சேவை செய்து வந்ததாகவும், மக்களின் மானம் காக்கும் ஆடைகள் நெய்யும் கைக்கோளார் வம்சத்தவர்கள் என்றும் தெரிவித்தனர். அமைதியாக சென்ற தங்கள் வாழ்வில் புயல் வீசியது. தாங்கள் பார்த்து வந்த கோவில் பணியான சீர் பாத சேவையை கைப்பற்ற முயன்ற சிலர் தங்கள் மீது வீண்பழி சுமத்தி தங்களை களங்கப்படுத்திவிட்டனர். அங்கிருந்த ஒட்டு மொத்த கைக்கோளார் இனமும் மனம் நொந்து வேறுவழி தெரியாமல், கோவில் பணிக்கு மானியமாக அளித்த நில புலன்களை கைவிட்டு பஞ்சையாய், பராரியாய் பிழைக்க வழியின்றி இருக்க இடம் இன்றி நாடோடிகளாய் வந்த விபரத்தை கண்ணீர் மல்க கல் நெஞ்சமும் கரையும் வகையில் எடுத்தரைத்தனர். அது கேட்டு கலங்கிய பொம்மராயர் அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறி முன்பு ஆற்றங்கரையோரம் குடியிருந்தது போல் வைப்பாற்றின் கரையோரம் குடியமர்த்தினார். உழைப்பிற்கு அஞ்சாத கைக்கோளர்கள் கருவேலங்காட்டை வெட்டி திருத்தி குடியிருக்க ஏற்ற இடமாக மாற்றினார்கள்.

தங்களின் நன்றிக் கடனாக தங்களை அரவனைத்து அன்பு காட்டிய பெருந்தகையாளர் பொம்மராயர் பெயரால் பொம்மராயபுரம் என்ற குடியிருப்பை ஏற்படுத்தினார்கள், பொம்மராயரை மனதார வாழ்த்தி, அவரை கடவுளின் அவதாரமாக கருதி பொம்மையசாமி என்ற வழிபாட்டு தலத்தை அமைத்தனர். தாங்கள் காலம் காலமாய் வழிபட்டு வந்த பூர்ண புஷ்கலா சேவித்து சமேத அய்யனார் திருவுருவங்களை நிறுவினார்கள். தங்களின் சலியாத உழைப்பால் காடு திருத்தி கழனியாக்கினார்கள் வேளான் தொழிலோடு நெசவுத் தொழிலும் சிறப்புற்று விளங்கியது.



14 நாட்டு செங்குந்த முதலியார் குலதெய்வ பாமாலை







திருச்செந்தூர் முருகன் கோவில் சுவற்றில் உள்ள செங்குந்த முதலியார் கல்வெட்டு







இந்த 
பதிவில் குறிப்பிடப்படாத  செங்குந்த முதலியார் மரபினர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் விடுபட்டு  இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்புக்குழு எண்ணுக்கு அனுப்புங்கள்.
7826980901



Post a Comment

0Comments
Post a Comment (0)