கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார்

0

 செங்குந்தர் கைக்கோள முதலியார்               

  ⚜️குலத் தோன்றல்⚜️
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
தேசியக் கொடியை காக்க உயிரை விட்ட தியாகி
கொடிகாத்த திருப்பூர் குமரன் (எ) OKSR. குமாரசாமி முதலியார் 



                             (04.10.1904 - 11.01.1932)

பிறப்பு

திருப்பூர் குமரன் என்கிற 'தேசியக் கொடியை காத்த தந்தையின்' இயற்பெயர் குமாரசாமி முதலியார். ஈரோாடு மாவட்டம்
சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி,வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் வம்சாவழியான செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் கன்னிமார் கோத்திரம் பங்காளிகள் குடும்பத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் திருப்பூர் குமரன் பிறந்தார். 

இவருடன் பிறந்தவர்களில்
மாரியப்பன் முதலியார் சென்னியப்பன் முதலியார் இருவரும் இளமையிலேயே இறந்து போய் விட்டனர்.
மற்றவர்கள் முறையே மாரியப்பனும் தெய்வானையையும் குமரனுக்கு 
மூத்தவர்கள் நல்லம்மாள், சென்னியப்பன் ஆறுமுகம் , நாகம்மாள் நால்வரும் இளையவர்கள்.


வாழ்க்கை
சென்னிமலையில் தொடக்கக்கல்வி பயின்ற குமரன் ஜந்தாம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் குடும்பத்தினரின் வறுமை காரணமாக பள்ளிபாளையம் சென்று தனது தாய்மாமனின் உதவியால் நெசவுத் தொழிலைச் செய்துவந்தார்.

ஈரோடு நகரில் இருந்து ஜவுளி கடைக்காரர் ஒருவரிடமிருந்து வாரம் ஒருமுறை நூல்லெடுத்து வந்து, பின் அதை நெய்து, கைத்தறி சேலையினை அதே கடைக்காரரிடம் கொடுத்து கூலி பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

1926ஆம் ஆண்டுகளில் இவரது 12-ஆம் வயதிலேயே வறுமையுடன் போராடிய குமரன் நெசவுத் தொழிலின் அவல நிலை கண்டு கொதித்தார்.
1922 வாக்கில் குமரனின் உறவினர்களிடையே நடைபெற்ற 63 திருமணங்களில், ஒரு ரூபாய் கூட "மொய்' வைக்க இயலாத சூழலில், குடும்பம் திருப்பூர் நகரத்திற்கு குடிபெயர்ந்தது.
திருப்பூர் நகரில் ஓ.கே.சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் என்கிற ஊரைச் சார்ந்த
இ.ஆர். ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சுத் தரகு மண்டியில் எடைக்குறிப்பு எழுத்தர் என்கிற டேலி கிளார்க் வேலையைச் செய்து வந்தார்.
குமரன் உண்மையும், நேர்மையும், உழைப்பும் கொண்ட குமரன் தேசபக்தியில் தனது சிந்தனையைச் செலுத்தினார். 
குமரனுக்கு உதவிய ஓ.கே.சென்னியப்ப முதலியார்



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு
உள்ளூரில் சுதந்திர போராட்டம் சார்ந்த நாடகம் நடத்துவதும், ஆன்மிக இறையுணர்வுடன் பக்தி நெறியில் ஈடுபடுவதும் இவரது பணிகளாக இருந்தது.

குமரன் திருப்பூரில் குடியிருந்த போது அவரது வயது பதினெட்டு.
குமரனின் பத்தொன்பதாவது வயதில் பெற்றோர் இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். மனைவி பெயர் இராமாயி அம்மாள். இவரது வயது திருமணத்தின் போது பதினான்கு. இவர்கள் ஆறு ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளால் வாழ்ந்தனர். இத்தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லை. திருப்பூரில் குமரன் வாழ்ந்த போது சுதந்திரப் போராட்டம் நாடு முழுக்க வேகமாக நடந்து வந்தது. அச்சமயம் திருப்பூரிலும் சுதந்திரத் தாகம் கொண்ட பலரும் இருந்தனர். குமரனும் சுதந்திர வேள்வித் தீயில் தன்னையும் இணைத்தி
கொண்டார்.

காந்தியடிகள் திருப்பூர் நகருக்கு ஆறு முறை வருகை தந்துள்ளார். காந்தி 1896-ல் முதல் முறையாகத் தமிழகம் வந்தார்.

1989 முதல் 1946 வரை இடைப்பட்ட 50 ஆண்டுகளில் 20 முறை காந்தியடிகள் தமிழகம் வந்தார். கதர் துணிகளின் தலைநகரமான
திருப்பூருக்கு காந்தி வந்திருந்த போது சேவாதளத் தொண்டராக, ஒரு குல்லாவும், அரைக்கால் டிராயரும் அணிந்து கொண்டு குமரன் காந்திக்குப் பாதுகாவலராக நின்றார் முழுக்க முழுக்க கதராடை அணியத் தொடங்கினார். குமரன், 19-03-1925ல் திருப்பூர்க்கு வந்த காந்தி, பி.டி.ஆஷரின் வீட்டில் தங்கினார். அங்கு காந்தியைக் கண்டு குமரன் வணங்கினார்.

அதன்பின் காந்தி வட்டமேஜை மாநாட்டிற்கு சென்று திரும்பிய பின்னர், சட்ட மறுப்பு இயக்கம் புதிய எழுச்சியைப் பெற்றது. அதனால் ஆங்கிலேய அரசு காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், மறியல்செய்வதற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சட்ட விரோதமான கட்சி என்றுஆங்கிலேய அரசாங்கம் அறிவித்தது. அதன் எதிரொலியாக திருப்பூரில் காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டது. 

எனவே அரசாங்கத்தின் தடையை மீறி திருப்பூரில் ஊர்வலம் நடத்துவது என, திருப்பூர் தேச பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது அந்தக் கட்டத்தில் திருப்பூரில் செல்வாக்காக இருந்தவர்
கே.ஆர். ஈஸ்வரமூர்த்தி கவுண்டர். அவரை ஊர்வலத்திற்கு தலைமையேற்க வருகை தர வேண்டும் என்று பி.எஸ்.சுந்தரம் அவரது வீட்டிற்கே சென்று வேண்டுகோள் வைத்தார். அவர்வருகை தர மறுத்தார் இந்நிலையில் திரும்பி வந்த பி.எஸ்.சுந்தரம் தானேதலைமை தாங்கினார். அவருடன் அணிவகுத்தவர்கள் கொடிகாத்த திருப்பூர் குமரன்,பொங்காளி முதலியார்,  ராமன் நாயர், விஸ்வநாத ஐயர், நாச்சிமுத்துக்கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், அப்புக்குட்டி மற்றும் நாராயணன் என ஒன்பது பேர் அனைவரும் இப்போதைய திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாகப்புறப்பட்டனர். ஆங்கிலேய அரசாங்க ஆவணங்களின் படி ஏறத்தாழ 500பேர் ஊர்வலத்தின் பின்னால் வந்தனர். இப்போதைய திருப்பூர்
வடக்கு காவல் நிலையம் முன்பு ஊர்வலம் சென்ற போது, காவல் துறையினர் குண்டாந்தடிகளுடன் ஊர்வலத்தில் புகுந்து அடிக்கத்
தொடங்கினர்.


குண்டாந்தடியால் அடிபட்ட குமரனின் மண்டை உடைந்தது. ஆயினும் தனது கையில் இருந்த கொடியை விடாமல் இறுக்கிப்பிடித்தபடி, தனது உடம்பில் இரத்தம் கொட்டி மண்டை உடைந்த போதும் நிலைகுலையாமல் நின்று கொடியைக் காத்தார் குமரன்.

10-01-1932 ல் நடந்த இந்தச் சம்பவம் போன்ற ஒரு கொடி
ஊர்வலம் இந்தியாவில் வேறெங்கும் நடைபெறவில்லை அடிபட்டு மயங்கிக் கிடந்த குமரன், ராமன் நாயர் பி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட அனைவரையும் ஒரு வாகனத்தில்
அள்ளிப்போட்டுக் கொண்டு சென்ற போலீஸார், இப்போதைய பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள மருத்துவ மனையில் அனைவரையும் சேர்த்தனர்.
அங்கே, பெயரளவிற்கு ஏதோ ஒரு சிகிச்சை என்கிற நாடகம் நடத்தப்பட்டது. அனாதைகளைப் போல் அனைவரும் திண்ணையில் கிடந்தனர்.

அப்போதைய மருத்துவர்களான கோபால மேனனும் அரங்கநாதனும் சிகிச்சையளித்தனர். அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சுயநினைவு இல்லாத நிலையில் 11-01-1932 ல் குமரனின் உயிர்பிரிந்தது. இறந்த குமரனை திருப்பூரின் ஜம்மானை ஆற்றுப்பகுதியில் புதைத்தனர், புதைத்த இடம் இதுதான் என யாருக்கும் தெரியாது.
ஒரு விடுதலை வீரனின் லட்சியப் பயணம் இவ்வாறாகவே முடிந்தது. தனது மனைவி இராமாயி அம்மாளை ஊர்வல
தினத்திற்கு முன்பே, பள்ளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டார் குமரன், மளிகைக் கடைக்காரருக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை, முடி திருத்தும் நிலையத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை என அனைத்தையும் கொடுத்த பின் ஊனர்வலத்தில் கலந்து கொண்டார் குமரன்,
 
தான் சுதந்திர போராட்டத்தில் தான் இறந்து போக நேரிடும் என்பதை குறிப்பால் உணர்ந்திருந்தார் அதன்பின்பு, வெள்ளைக் காரர்களின் ஆவணங்கள் மூலம்
பல உண்மைகள் நமக்குத் தெரிய வருநின்றன. பொள்ளாச்சியை சேர்ந்த சப்மாஜிஸ்ட்ரேட் துரைராஜ் என்பவர்,

குமரனின் மரணசம்பவம் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்து, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.ஏ.சிலேட்டர் என்கிற வெள்ளையரிடம் அளிக்கிறார். அவர் சென்னையில் இருந்த தலைமைக் காவல் நிலையத் தலைவர் சி.பி.கன்னிங்ஹாம் என்பவரிடம் ஒரு அறிக்கை தயார் செய்து தருகிறார். அவரிடமிருந்து திருப்பூர் குமாரசாமி
என்கிற குமரனின் அனைத்து விவரங்களையும், ஒன்று சேர்த்து ஒரு
அறிக்கைதயார் செய்து ஜி.டி.ஹெச்.பிரேக்கன் என்கிற ஆங்கிலேய அரசின் செயலாளரிடம் அளிக்கிறார். இவ்வாறு வரலாற்றில் பதிவாகிப் போன குமரனை
இளைய தலைமுறை மறக்கக்கூடாது. 28-வயதில் நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் குமரன் இவரைக் குறித்த செய்திகளை சுதந்திரப் போராட்ட
வீரர்கள் குறித்த நூல்களில் சிறிய அளவில் கூட யாரும் பதிவு செய்வதில்லை.இனிவரும் தலைமுறையினர் அக்குறைகளைப் போக்க வேண்டும். திருப்பூர் என்கிற பெயரைக் கேட்டாலே பனியன், கதர்துணி என்று கூறுவதற்கு முன்பே குமரன் என்கிற பெயர் உச்சரிக்கப்பட வேண்டும்.


இறப்பு
ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கொள்ளி வைத்தனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .


துணைவியார்
இவரது துணைவியார் இராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.

தபால் தலை
இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.



நினைவகம்
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. 
படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கரூர் டவுன் காவல் நிலையம் அருகில்  உள்ள சிலை

சென்னிமலையில் உள்ள சிலை




ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இவருக்கு முழு உருவ சிலை

சென்னையில் உள்ள சிலை

சேலம் 5 ரோடு ரவுண்டானாவில் உள்ள சிலை



வாழ்க்கை வரலாறு புத்தகம்















திருப்பூர் குமரன் அய்யாவை பற்றி திரு.குமரி ஆனந்தன் exMP, MLA



   _______________________________________

Pictures for status and story

















இவரின்
கோத்திரம் பெயர்: எருமைகாரர் கூட்டம்
குலதெய்வம்: சென்னிமலை முருகன், கரூர் மாவட்டம் புன்னம் அங்காளம்மன்

Post a Comment

0Comments
Post a Comment (0)