தில்லையாடி வள்ளியம்மை

0


செங்குந்தர் கைக்கோள முதலியார்               
      ⚜️குலத் தோன்றல்⚜️
காந்தியடிகளுக்கு சுதந்திர உணர்வை தூண்டிய விடுதலைப் போராட்ட வீரமங்கை
தில்லையாடி வள்ளியம்மை

        (22.02.1899 - 22.02.1914)
வாழ்க்கை வரலாறு
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் பெப்ரவரி 22, 1898ஆம் ஆண்டில் நவவீர்கள் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார்  குடும்பத்தில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார் பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.

தில்லையாடி வள்ளியம்மை புதுச்சேரி டூப்ளே தெருவில் தனது பெற்றோருடன் ஒரு இளைஞர் வாழ்ந்து வந்தார். அவரது பெயார் ஆர். முனுசாமி
முதலியார். இவர் மயிலாடு துறைக்கு அருகில் உள்ள தில்லையாடி கிராமத்தில் வசித்து வந்த மங்களம் என்கிற ஜானகியை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின் அதே ஊரில் நெசவு நெய்து வாழ்ந்து வந்தார் அக்காலங்களில் சுதேசித் தொழில்களை ஆங்கிலேயர் நசித்து வந்தனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் கூலி வேலை செய்ய தமிழர்கள் பலரையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அப்படி அழைழைத்துச் செல்ல கங்காணிகள் என்கிற தரகர்கள் ஏராளமான பேர் தமிழ்நாட்டில் இருந்தனர் அப்படி ஒரு கங்காணி ஆசை வார்த்தை காட்டி 1897 ல் முனுசாமி முதலியாரை கப்பல் ஏற்றி விட்டான். அதற்கு முன்பே 1860 களில் இருந்தே பல தமிழர்கள் கூலி வேலைக்காக கப்பல்களில் தென் ஆப்பிரிக்கா சென்றனர்.

முனுசாமி முதலியார், கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி ஜானகியையும் கூட்டிக் கொண்டு சென்றார் தென் ஆப்பிரிக்கா ஜோகன்ஸ் பர்க் நகரத்தில் ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்து பிழைப்பைத் தொடங்கினார் 8ல் ஜான கி ஒரு பெண்குழந்தையைப் பெற்த வள்ளியம்மை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார் வள்ளியம்மை அதே பகுதியில் இருந்த பள்ளியில் கல்வி பயின் நல்ல அறிவு நிறைந்த பெண்ணாக உயர்ந்த வள்ளியம்மை கன்னைச் சுற்றி நிகழும் போக்குகளை கூர்மையாகக் கவனித்து வந்தார்.

சமூக உணர்வில் நாட்டம் கொண்டு விளங்கினார். அச்சமயத்தில், தென்ஆப்பிரிக்காவை ஆண்ட ஆங்கிலேயர்கள் அடக்கு முறை ஆட்சி நடத்தினர் இந் தியாவிவிருந்து வந்த பலரையும் கொடுமைப் படுத்தினர். மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள் இந்தியர்கள் வெள்ளையர் படிக்கும் பள்ளியில் கல்லி கற்கக் கூடாது. வெள்ளையர்களோடு பயணம் செய்யக் கூடாசு வாக்குரிமைகள் கிடையாது என்றெல்லாம் அடக்கு முறைச் சட்டங் களை அமுல் படுத்திய அரசாங்கம், இந்தியர் ஒவ்வொருவரும் தென்னாப்பிரிக்காவில் வாழ வேண்டுமெனில் மூன்று பவுன் தலைவரி கட்ட வந்தனர் வேண்டும் என சட்டம் கொண்டு இந்தியர்களை மிக மோசமாக அடிமைகளைப் போலவே
நடத்தினர். இக்கால கட்டத்தில் 1893 ல் காந்தி தென்னாப்பிரிக்கா
வந்தார் வள்ளியம்மையும், காந்தியும் தாதா அப்துல்லா நிறுவனத்தின் வழக்குகளை தீர்த்து வைக்கும் வழக்குரைஞர் பணிக்காகவே காந்தி தென்னாப்பிரிக்கா வந்தார்.

ஏறத்தாழ 18 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் காந்தி காந்தி சட்டம் பயின்றவர் என்பதால் அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியமக்களின் அவல நிலையைப் போக்கி உரிமைகளை மீட்டுத் தர முனவந்தார்.

அதன் செப்ட்டம்பர் 1 1, 1906ல் ஜோகன்ஸ்பார்க்கில் ஓ ரு மாநாட்டைக் கூட்டினார் அதற்குள் ஏறத்தாழ 13 ஆண்டுகள் காந்திக்கு தென்னாப்பிரிக்கா அனுபவம் கிடைத்திருந்தது. மாநாட்டில் மூன்றாயிரம் போர் கலந்து கொண்டனர். அதில்தமிழர்களே அதிகம் காந்தி டிரான்ஸ் வால் என் கிற கு டி யேற்றக்கட்டுப்பாடு
மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. 1912 ல் காந்திக்கும், ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது அதன் படி தலைக்கு மூன்று பவுன் என்கிற தலைவரி ரத்து செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒரு ஆண்டுக்குள் ரத்து செய்யப்படும் என்று கூறிய வெள்ளையர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர் இதனிடையே 1913 மார்ச் 14 ஆம் தேதி கேப்டவுன் உச்ச நீதிமன்ற நீதிபதி சியர்லே ஒரு தீர்ப்பை வழங்கினார். அதன்படி தென்னாப்பிரிக்காவில் வாழ்பவர்கள் கிறிஸ்துவ சடங்கு முறைப் படி திருமணம் செய்யாவிட்டால், மேற்படி திருமணங்கள் செல்லாது என்று அறிவித்தார் இதனால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே திருமணமான இந்தியப் பெண்கள் சட்ட பூர்வமான மனைவி என்கிற நிலையை இழக்க நேரிட்டது. குழந்தைகளுக்கும் வாரிகு இல்லாத சூழல் ஏற்பட்டது.


இதனை எதிர்த்து காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அச்சமயத்தில்
காந்தி போன்ற தலைவர்களின் பேச்சை சிறுமியாக இருந்த தனது வள்ளியம்மை
தாயாருடன் சென்று கேட்டு தனது சமூக உணர்வை வளர்த்துக் கொண்டார் புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்கவும் டிரான்ஸ்வால் குடியிருந்த இந்திய மக்களிடம் அடையாளங்களையும், பத்திரத்தில் விரல் முத்திரைகளையும் பதிக்க வேண்டும் என்று கூறிய அரசின் அராஜகம் கண்டு வள்ளியம்மை கொதித்தார் 

இதனால், காந்தியுடன் சேர்ந்து தானும் போராட வேண்டும் என்று விரும்பினார். அப்போது வள்ளியம்மைக்கு பதினாறு வயதே நிரம்பியிருந்தது தந்தையார் மருத்துவமனையில் இருந்தார். தாயார் கூறிய ஆலோசனைகளையும் கேட்க வில்லை.

ஆயினும், வள்ளியம்மையுடன் தாயாரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

1913அக்டோபர் 29 ல் ஜோகன்ஸ்பார்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு பெண்கள் சத்தியாக்கிரக படை சென்றது வள்ளியம்மை, அவரது தாயார் ஜானகி, காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் உட்பட சென்றனர் ஏராளமான பெண்கள் பேரணியாகச் நியூகாசில் நகசந்தித்து வேலை நிறுத்தம் செய்யுமாறு வேண்டினார்கள். அதன்படி பெரும்பாலும் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியத்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர் நிலக்கரி சுரங்கதொழிலாளர்களை
இதனால் 1913 டிசம்பர் 22ஆம் நாள் பெண்கள் பவரும் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

அனைவருக்கும் மூன்று மாதம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது
வள்ளியம்மையும் சிறையில் அடைக்கப்பட்டார் கொலை, கொள்ளை, திருட்டுக் குற்றவாளிகள் உள்ள சிறைக் கொட்டடியில் வள்ளியம்மை அடைக்கப்பட்டார். மிகுந்த சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டார் பின்னர் 11.02. 1914 ல் விடுதலை செய்யப்பட்டார் உடல் நலிந்து நோய் வாய்ப்பட்டு வெளியில் வந்த அச்சிறுமி குறித்து, காந்தி வேதனையுடன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். வள்ளியம்மை ஆர்.முனுசாமி முதலியார் என்கிற அந்தப் பெண் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கத் தயார் என்று காந்தியிடம் கூறினார்
அதன்படியே ஆயிற்று. ஆம் வள் ளியம்மை 22.02.1914 ல்
கா ல மானார். 

பதினாறு வயதுச் சிறு மியின் தியாகம் அனைவரையும் வருந்தச் செய்தார்.

தனது சகோதரர் லட்சுமி தாஸ் காந்தியின் மரணத்தை விட, வள்ளியம்மையின் மரணம் தன்னைப் பாதித்ததாக காந்தி எழுதினார்

15.07.1914ல் ஜோகன்ஸ் பர்க்கில் திருமதி.சாஸ் பிலிப்ஸ் தலைமையில் வள்ளியம்மையின் தியாகத்தை போற்றும் வகையில்
ஒரு நினைவுச் சின்னத்தை காந்தி திறந்து வைத்தார்.

வள்ளியம்மையின் தியாகம் வீண் போகவில்லை. சுமார்
எட்டு ஆண்டுகளாக இந்தியர்களின் உரிமைக்காக போராடிய
போராட்டம் காரணமாக சில உரிமைகளை இந்தியர்களுக்கு
அரசாங்கம் வழங்கியது.

இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட மூன்று பவுன்
தலைவரியை ரத்து செய்தது. 1906 முதல் 1914 வரை நடைபெற்ற
அனைத்து மததிருமணங்களையும் அங்கீகரித்தது.

அதன் பின் 24.04.1915 அன்று சென்னை வந்திருந்த காந்தி
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் நடத்திய போராட்டம்
குறித்தும், வள்ளியம்மை குறித்தும் நினைவு கூர்ந்து பேசினார்.


ஏனென்றால் வள்ளியம்மை யை காந்தியால் எபொழுதுமே மறக்க முடியாது. ஒரு முறை வெறி பிடித்த வெள்ளையன் ஒருவன் காந்தியை துப்பாக்கியால் சுடுவதற்காக வந்தான். காந்தியின் முன்னாள் நின்று துப்பாக்கியை
தூக்கினான். பதறியபடி ஓடிவந்த வள்ளியம்மை தன்னைச் சுடு ... தைரியமிருந்தால்... நிமிர்ந்து நின்றாள் வள்ளியம்மை.

அதைக் கண்டதும் செய்வதறியாது திகைத்த வெள்ளையன் காந்தியை
சுடாமல் வெறுமனே நின்றான்.

ஆம்.. தென் ஆப்ரிக்காவில் காந்தியின் உயிரைக் காப்பாற்றிய பெண்மணி வள்ளியம்மை ஆவார்.

1934ல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி வள்ளியம்மையை தொடர்ந்து நினைவு படுத்தி கூட்டங்களில் பேசினார். தில்லையாடி கிராமத்திற்குச் சென்று அந்த மண்ணை வணங்கினார்.

வள்ளியம்மை மட்டுமல்ல, அவரது பெற்றோர்களும் சிறையில் இருந்து தியாகம் செய்தார்கள்.

16.06.1913ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் இருந்த தனது நண்பர் ஜே.பி. பெடிட் என்பவருக்கு காந்தி ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் படி 'வள்ளியம்மா மண்டபம்' என்கிற பெயரில் ஒரு மண்டபம் கட்டி, வள்ளியம்மைநினைவாக ஒரு கல்விக் கூடம் அமைக்க வேண்டும் என்று காந்தி தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.

ஆனால், அப்படி ஒரு கல்விச் சாலை அங்கே ஏற்படுத்த முடியவில்லை.

தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்தவர் வள்ளியம்மை. அவரது நினைவைப் போற்றும் வகையில் 22.10, 1969ல் தமிழ் நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தில்லையாடி கிராமத்தை மாதிர கிராமமாக ஆக்கும் பணியைத் தொடங்கிவைத்தார்

அதே போல் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் தனது 600 வது விற்பன தீலையத்திற்கு 'தில்லையாடி வள்ளியம்மை மாளிகை எனப் பெயர் சூட்டியது. இம் மாளிகை சென்னை எழும்பூர் பகுதியில் உள்ளது.

கோ-ஆப் டெக்ஸ் திறுவனத்தின் இடமாகவும் இம் மாளிகை திகழ்கிறது


ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்துக்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்லறையின் ஒரு மூலையில் வள்ளியம்மையின் கல்லறை உள்ளது சாக்வீக எதிர்ப்பாளராக மாரிட்ஸ்பர்க் சிறைக்குச் சென்று 22.02.1914ல் நோயுற்று இறந்த வள்ளியம்மை என்கிறசகோதரியின் அன்பான நினைவுக்கு' என்கிற வாசகங்கள்
அக்கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அக்கல்லறை, தென்னாப்பிரிக்கவின் மிகப் பெரிய தலைவரான நெல்சன்மண்மண்டேலா அவர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது.

20.04.1997 அதற்கென ஒரு விழா எடுக்கப்பட்ட து. தென்னாப்பிரிக்காவின் அமைச்சர்களும், இந்திய வம்சாவளி மக்களும் பெருமளவில் அவ்விழாவில் கலந்து கொண்டு வள்ளியம்மைக்கு மரியாதை செலுத்தினர்.

இக் கட்டுரையைப் படிக்கும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாய மக்கள் அல்லது தமிழர்களாகிய நாம் வள்ளியம்மையின் தியாக உணர்வை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுப்போம் 

தென்னாப்பிரிக்கா செல்லும் தொழிலதிபர்கள், சுற்றுலா வாசிகள் வள்ளியம்மையின் கல்லறைக்கும் சென்று வணங்கி விட்டு வாருங்கள். அதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதை என்பதை
நினைவில் நிறுத்துங்கள்.




காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை




தில்லையாடி காந்தி நினைவுத் தூண்

கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை. அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

மறைவு:
பெப்ரவரி 22, 1914 இவ்வுலகை விட்டு மறைந்தார்

நினைவு மண்டபம்




தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்





தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் 'தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்' கட்டப்பட்டுள்ளது.
இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

நூற்றாண்டு நினைவுகள்:
தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்குச் செல்வதற்காக காந்தி தம் மனைவி கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடி வந்தடைந்தார். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரகவாதிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.
மே 1ஆம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார் காந்தி.
தில்லையாடி பகுதியை சேர்ந்த பலரும் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தில்லையாடியில் காந்தி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது.
தில்லையாடியில் 'காந்தி நினைவுத் தூண்' அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.








Post a Comment

0Comments
Post a Comment (0)