#சாவாங்கோயில்/முத்துக்குமார சாமி கோவில் என்ற பெயரில் செங்குந்தர் கைக்கோளர் சமூக மக்கள் வணங்கப்படும் - அவர்களின் முன்னோர் நவகண்ட நடுகற்கள்.
சாவான்* என்ற தமிழ் வார்த்தைக்கு, *மரியான், அமரன்* என்ற வேறு பதங்களும் உண்டு. அதாவது *சாவான் (சாகாதவன்)* என்ற பதத்தின் பொருள்.
முத்துக்குமாரசாமி என்பது முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான செங்குந்த சமூகத்தை சேர்ந்த நவவீரர்களான வீரபாகு செங்குந்தர்/வீரமகேஸ்வரர் செங்குந்தர் ஆகிய இருவருக்கும் மற்றொரு பெயர் தான் முத்துக்குமாரசாமி செங்குந்தர்.
அதாவது ஒவ்வொரு ஊர் சாவான் சிலை ஒவ்வொரு தனித்தனி முன்னோர்கள் ஆகும். ஒவ்வொரு சாவான் சிலைக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. இருப்பினும் அனைவரையும் பொதுவாக சாவான் கோவில் அல்லது முத்துக்குமாரசுவாமி கோவில் என்று வழங்கப்படுகிறது.
நவகண்டம் என்றால் என்ன?
செங்குந்த கைக்கோளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வீர சோழர்களின் போர் வெற்றிக்காகவும்/ தான் எடுத்து இருக்கும் சபதம் நிறைவேறுவதற்காகவும்/ கோயிலின் இறைவற்கு வேண்டி கொண்டதற்காகவோ அன்றி அரசனின் உயிர்க் காப்புக்காகவோ ஒரு செங்குந்த கைக்கோளர் இன வீரன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தன் உடலை ஒன்பது பகுதிகளில் அரிந்து வைக்கும் ஒரு செயலைத் தொல்லியல் நவகண்டம் என்னும் சொல்லால் குறிக்கிறது. உடலின் ஒன்பது இடங்களில் அரிந்துகொள்வதைச் சிற்பமாக வடித்துக் காண்பிக்க இயலாததால், பொதுவாகத் தலையை அரிந்துகொள்ளும் செயலைக் காட்டும் வகையிலேயே நவகண்டச் சிற்பங்களை அமைத்தார்கள் எனலாம். நவகண்டம் கொடுக்கும் வீரன், உடம்பின் எட்டு இடங்களை வாளால் அரிந்துகொண்ட பின்னர் இறுதியாகத் தலையை அரிந்துகொள்கிறான் என்னும் கருத்து ஏற்புடையது. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். கழுத்து, தலைக்கு ஆகுபெயராய் இங்கு அமைந்தது எனலாம். எனவே, நவகண்டச் சிற்பம், தலைப்பலி என்றும் அழைக்கப்பட்டது. பலி என்பது ஒன்றைப் படைப்பதைக் குறிப்பது.
சோழர் படைகளில் செங்குந்த கைக்கோளர் படை
சோழர் படைகளில், கைக்கோளர் படை என்னும் ஒரு படைப்பிரிவு இருந்துள்ளது. அரசர்க்கு அணுக்கமாக இருந்து அரசர், அரசு இரு பாலார்க்கும் நேரும் பேரிடரிலிருந்து காப்பதாகப் ”பூட்கை” (உறுதி) பூண்டு காக்கும் வீரர்கள் கொண்ட படை கைக்கோளர் படை. பூட்கை என்னும் கொள்கையை இவ்வீரர்கள் கைக்கொண்டதால் இவர்கள். சங்க இலக்கியங்களிலும், தொறுப்பூசல் நடுகல் கல்வெட்டுகளிலும் ”ஆகோள்” என்னும் சொல் ஆளப்பெற்று வருவதை இங்கு நினைவு கூரலாம். இக் கைக்கோளப்படையினர் தம் காவல் பணியில் இணையும்போது பூணுகின்ற ஓர் உறுதி மொழி பற்றித் திருவரங்கத்துக் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இக்கல்வெட்டு, கோயிலின் நான்காம் சுற்றாலையில் (பிரகாரம்) உடையவர் திருமுற்றத்துக்கு (சந்நிதி) எதிரில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் 1930-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இக்கல்வெட்டு கைக்கோளர் படை முதலி ஒருவன் பூட்கைக் கடப்பாடாக ஏற்கும் உறுதிமொழியைப் பதிவு செய்கிறது என்று குறிப்பிடுகிறது. கல்வெட்டுப் பாடம் கீழே:
மத்திய தொல்லியல்துறை கல்வெட்டுப் பாடம்;
1 ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
2 ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
3 ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில் எந்
4 மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்களம்மைக்கு நானே
5 …………….
- A.R. 267- 1930
கல்வெட்டின் அர்த்தம்: அகளங்க நாடாள்வான் என்னும் ஒரு தலைவனுக்கு வேளைக்காரனாகப் பணிசெய்யும் அழகிய மணவாள மாராயன் என்பான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்பான்மையைக் கல்வெட்டு கூறுகிறது. கைக்கொண்ட கடமையிலிருந்து வழுவினால் கடும் பழியை எதிர்கொள்வேனாக என்று தன்னையே கடுமையாகத் தண்டித்துக்கொள்ளும் செங்குந்த கைக்கோளரை இங்கு காண்கிறோம். கல்வெட்டில், ”இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில்” என்னும் தொடரால், கைக்கோளன், அவனது தலைவனுக்கு ஊறு நேர்ந்து தலைவன் இறந்த பின்னர் தான் உயிர் வாழமாட்டான் என்னும் உட்பொருள் சுட்டப்படுவதை அறியலாம். ஒரு வேளை, சாவாது இருந்தால் மேற்சுட்டிய பழி தன்னைப் பற்றட்டும் என்பதாக அவன் கூற்று அமைகிறது. (அரசர் அன்றி உயர்நிலைத் தலைவன் ஒருவனுக்கும் கைக்கோளர் படை இருந்தது என்று இக்கல்வெட்டால் அறிகிறோம்.)
மேற்குறித்த கல்வெட்டை அடுத்து வரும் இன்னொரு ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டில் வேளைக்காரப்படையைச் சேர்ந்த செங்குந்த கைக்கோளன், தலைவன் இறந்துபடும் அதே வேளையில் உடன் சாவேனாகுக என்பதை அழுத்தமாகச் சொல்கிறான். தலைவன் இறக்கும் அதே வேளையில் உடன் சாவதால் இவ்வீரர்கள் “வேளைக்காரர்” என்னும் பெயர் பெறுகிறார்கள் என்பது பெறப்படும். இக்கல்வெட்டின் பாடம் வருமாறு:
(குறிப்பு வேலைக்காரன் இல்லை. வேளைக்கார படை என்பது சோழர்களின் ஒரு படையாகும். வேலைக்கார❌ வேளைக்கார✅)
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ வீற்றி[ரு]ந்தா[ந்] சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
2 கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரையனேந் இவற்கு உட
3 ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
4 தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
5 நே மிணாளநாவேந்
- A.R. 268- 1930
#செங்குந்தர்கள் எனப்படும் இந்த கைக்கோளர்களை பற்றி ஒரு சிறு வரலாற்றைப் பார்ப்போம். செங்குந்தம் செம்மை+குந்தம். குந்தம் என்பது ஈட்டியை போன்ற வேலை (வேல்) குறிக்கும் சொல்லாகும். செம்மையான உடலுடன் வேலை கையில் ஏந்தியவர்கள் என்ற பெயர் சோழர் காலத்தில் பராந்தகச் சோழன், கரிகாலன் சோழன்,கண்டராதித்த சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், போன்ற மன்னர்களின் காலாட்படையில் கைக்கோளப்படை சிறந்து விளங்குகிறது. இவர்களுக்கு சோழமன்னர்கள் பல விருதுகளையும்,பட்டங்களையும் வழங்கியுள்ளனர். இன்று இவர்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் தன்னிகரற்று திகழ்கின்றனர்.
கல்வெட்டு வரலாறு ரீதியாக கைக்கோளர் என்பதே சாதி பெயர். மேலே கூறியுள்ள செங்குந்தம் ஆயுதத்தை பயன்படுத்தி போர் செய்ததால் செங்குந்தர் என்று மற்றொரு பெயர் வந்தது. முதலியார் என்பது பதவி பெயர், சாதி பெயர் இல்லை. சோழர் போர்களில் செங்குந்தம் ஏந்திய கைக்கோளர்கள் முதன்மையானவர்கள் என்பதால் முதலியார் பட்டம் பெற்றனர். இது பெயருக்கு பின்னால் போட்டு பயன்படுத்தும் பதவி பட்டம் பெயர் மட்டுமே. முதலியார் என்பது சாதிப்பெயர் கிடையாது.
*****************************
சாவான்கல் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் பூஜைகள்:
செங்குந்த கைக்கோளர் மக்கள் அக்காலத்தில் #சாவாங்கோயில் எனப்படும் நடுகல் கோவிலுக்கு கும்பப்படையில் இடாமல் நெசவுத் தொழிலை தொடங்கும் நபர்களிடமிருந்து ஊர் சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.
![]() |
திருவண்ணாமலை - திருமால்பூர் ஊர் வரலாற்று புத்தகத்தில் செங்குந்தர் நவகண்ட செய்தி |
![]() |
martial races of India புத்தகத்தில் செங்குந்தர் நவகண்ட சாவாங்கல் சிற்பம் பற்றிய செய்தி |
![]() |
திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு திருவத்திபுரம் செங்குந்தர் காங்கி அம்மன் கோவிலில் உள்ள சோழர் கால கைக்கோளர் வீரன் நவகண்ட சாவான் கல் சிற்பம் |
![]() |
செங்கல்பட்டு மாவட்டம் |
![]() |
சேலம் மாவட்டம் |
![]() |
சென்னை மாவட்டம் |
![]() |
ஈரோடு மாவட்டம் |
வாணிக செட்டியார் சமூக பங்காளிகள் 1928ஆம் ஆண்டு வெளியிட்ட தென்னூர் பொண்ணாச்சியம்மன் தோத்திர பாமாலை என்னும் நூலில் சாந்தியப்பர் வரலாறு சொல்லும் செய்யுள்கள் கீழே காண்க
************************
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் #திருமால் பேரு என்கிற திருமால்பூர் கிராமத்தில் ஐந்து நடுக்கற்கள். மற்றும் பள்ளூர் கிராமத்தில் ஒரு நவகண்ட சிற்பம்.
#திருமால்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் நான்கு செங்குந்தர் நவகண்ட சிற்பங்களும் அதில் ஒரு நடுகல்லின் பின்புறம் தமிழ்எழுத்துகளில் கல்வெட்டு வாசகம் இடம் பெற்றது.மற்றொன்று ஊரின் கிராம தேவதை அருள்மிகு #பொன்னியம்மன் ஆலயத்தின் வாயிலின் வலதுபுறம் ஒரு அரிகண்ட சிற்பமும் காணமுடிந்தது.
#திருமால்பூர் அருகே உள்ள #பள்ளூர் என்ற கிராமத்தில் அருள்மிகு மந்திரி காளியம்மன் ஆலயத்தின் எதிரே ஒரு #நவகண்ட சிற்பம் என ஒரே நாளில் ஆறு நடுக்கல் சிலைகளை இன்றைய வரலாற்று தேடலில் கண்டறிந்தேன். திருமால்புரியில் உள்ள நடுகல்கோயிலில் தை மாதம் பொங்கல் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு இக்கோயிலுக்கு நாள் குறித்து ஊர் மக்களால் மிகப்பெரிய #கும்படையால் போடப்படுகிறது அதில் ஆடு,கோழி கருவாட்டு குழம்பு மற்றும் வடை ,கொழுக்கட்டைகள் போன்ற அசைவ வகைகளையே படையலிடுகின்றனர். செங்குந்த மரபினர்கள் இக் கோயிலில் படையில் போட்ட பின்புதான் அந்த ஆண்டு நெசவு பணியை தொடங்குகின்றனர்.
![]() |
மரக்காணம் சிவன் கோவிலில் செங்குந்தர் வீரனின் சாவான் கல் |
![]() |
வேலநத்தம் செங்குந்தர் வீரனின் சாவான் கல் |
![]() |
கே.ஆர். தோப்பூர் செங்குந்தர் வீரனின் சாவான் கல் |
![]() |
குருசாமிபாளையம் செங்குந்தர் வீரனின் சாவான் கல் |