தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு போர்படைத் தளபதிகளாக இருந்த வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களின் வம்சத்தில் வந்தவர்கள் செங்குந்தர் கைக்கோள முதலியார் என்பதால் பொதுவாக முருகன் கோவிலில் இவர்களுக்கு அதிக மரியாதை இருக்கும்.
பழனி முருகன் கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்துக்கு உள்ள உரிமைகள் 👇
1. சூரசம்ஹாரம்:- முன் வழக்கம்போல் உள்ளூர் செங்குந்தர் உறவின் முறையார்கள் முருகனுக்கு சீர்பாதம் சேவை செய்து சூரசம்ஹாரம் செய்வது. செங்குந்தர் நிர்வாக காரியஸ்தர் மடத்து பண்டாரம் இவர்களுக்கும் பரிவட்டங்கள் வழங்குவது.
2. தைப்பூசக் கொடியேற்றம்:- வழக்கம்போல் இடும்பன்பாளையம் பட்டக்காரர் முத்துக்காளி தரகன் முதலியார் வகையறாக்கள் தலைமையில் கொடிசேலை செய்து யானைமீது வந்து கோவில் நிர்வாகத்திடம் கொடிசீலை கொடுப்பது மற்றும் தைப்பூச முதல் நாள் அன்று செங்குந்தர் தலைமையேற்று கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கிவைப்பது. உள்ளூர் (பழனி) செங்குந்தர் பெரியதனம், செங்குந்தர் தர்ம பரிபாலன சபை நிர்வாகிகளுக்கு கோவில் சார்பாக பரிவட்டங்கள் வழங்குவது.
3. பங்குனி உத்திரம் (கொடிகட்டும் உற்சவம்)!- நீண்டநாளாய் கொடியேற்றம் நின்றுவிட்டதால் இந்து- மத பரிபாலன போர்டுக்கு அப்பீல்செய்து மாமூல் வழக்கங்களை மீண்டும் கொண்டுவர முயற்சித்தல் செய்ய வேண்டும்.
4. பங்குனி உத்திரன் நான்காம் மண்டகப்படி பழனி செங்குந்தர் தர்ம பரிபாலன சபை சார்பாக நடைபெறுதல்.
5.பங்குனி உத்திரம் 7ஆம் நாம் மண்டகப்படி V.V.C.R. முருகேச முதலியார் குடும்பம் மண்டகப்படி.
6.. பங்குனி உத்திரம் தண்ணீர் பந்தல் தர்மம்:- இந்த தர்மம் தொன்றுதொட்டு ஆயக்குடி செங்குந்தர் உறவின் முறையார்களால் பழனி அடிவாரம் 16-வது வார்டு, 73,74.& 75-நிர் தண்ணீர் பந்தல் மடத்தில் நடத் தப்பட்டு வருகிறது. உற்சவம் முடிந்ததும் ஷயார்- களால் அன்னதானமும் நடைபெறும்.
பழனியில் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்துக்கு சொந்தமான கட்டிடங்கள்:
1. செங்குந்தர் முத்துக்குமாரசாமி மண்டபம்:- பழனி அடிவாரம் சன்- னத்தித் தெரு, வார்டு 15. D-196 / S No. 940 திர். உள்ள கட்டிடம், கடைகள் வகையரு.
2. செங்குந்தர் தண்ணீர் பந்தல் மடம்:- பழனி அடிவாரம், சன்ன தித்தெரு, வார்டு நிர்-16, டோர் நிர் 73, 74 & 75/S No. 897 மூன்று நம்பர்களடங்கிய சுடைகள் கட்டிடம் வகையரு
3. செங்குந்தர் மேலத் தெரு மடம்:- பழனிடவுனில் வார்டு நிர்-1 டோர் நிர்-7 உள்ள "பழைய' மடமும் காலியிடமும்.
4. கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோவில் சன்னதி:- பழனிமலையின் மத்திய பாகத்தில் உள்ள கற்பக்கிரஹமும், முன்கல் மண்டபமும் நம் சமூகத்துக்கு சொந்தமானது.
5. பழனி மலையின் மேலுள்ள அறைக்கோவில் நவவீர வீரபாகு சன்னிதானம்:- சூரசம்ஹாரத்தன்று செங்குந்தர் குல வீரபாகு தேவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும் செங்குந்தர் கல்மண்டபம்.
6. திருவாவினன்குடி கோயில் கொடிமரம்:- துவஜாரோகணக் கொடிமரமும், யாகசாலையும்.
7. பெரியநாயகி அம்மன் கொடிகட்டுமண்டம்:- பழனிடவுன் வார்டு நிர்-1 ரத வீதியில் பெரிய நாயகி அமமன்கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ளது கொடி- மரமும். கல்மண்டபமும்.
அதேபோல் பழனி முருகன் கோயில் சுவாமி தொன்று தொட்டு சுமக்கும் சீர்பாதம் சேவை பாரம்பரியமாக செங்குந்தர் மரபினர்கள் செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் தர்மகர்த்தா அறங்காவலர்களாக இருந்த செங்குந்த முதலியார்களின் பட்டியல்:
1. பழனி A. சேதுராம முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர்.
2. பழனி S. முத்துசாமி முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர்(1934 - 1947களில்).
3. கோவை M. சம்பந்த முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்(1920 களில்).
4. சைவபெருவள்ளல் V.V.C.R. முருகேச முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் தலைவர்.
5. V.V.C.R.M. கந்தசாமி முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர், மதுரை மீனாட்சி அம்மனுக்கு இராக்கால பல்லக்கு வெள்ளியால் செய்து கொடுத்துள்ளார்கள்.
6. சபாபதி முதலியர் - பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்(1923 களில்).
7. A. சிவசுப்பிரமணிய முதலியார் - பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்(1930 களில்).
8. சிவகுருநாத முதலியார்- பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்(1863 களில்).
மேலே கூறப்பட்டுள்ள உரிமைகள்/கட்டளைகள் பற்றிய விரிவான வரலாறுகள்
கொடிபட்டம் வழங்கும் உரிமை - பழனி மன்னர் வையாபுரி நாட்டு பட்டக்காரார் முத்துக்காளி தரகன் முதலியார் வம்சம்.
பழனி முருகன் கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த பழனியை ஆண்ட மன்னர் முத்துக்காளி தரகன் முதலியார் குடும்பத்துக்கு முதல் மரியாதை உள்ளது.
செங்குந்தர் குல முத்துகாளி தரகனாருக்கு பழனி மலையில் ஒரு சிலை உள்ளது ,
திருப்பூர் இடுவம்பாளையம் சின்ன காளியம்மன் கோவிலிலும் ஒரு சிலை உள்ளது.
இந்த விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தங்கமயில் தங்கத்துரை வெள்ளி யானை வெள்ளி ஆட்டுக்கிடா வெள்ளி காமதேனு அந்தப்புரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிவார்கள்.
திருப்பூர் இடுவம்பாளையதிலுள்ள முத்துகாளி தரகன் முதலியார் சிலை |
பழனி மலை பாதையில் உள்ள செங்குந்தர் குல வையாபுரிநாட்டு பட்டகாரர் சுவாமி முத்துகாளி தரகன் முதலியார் சிலை |
![]() |
முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் படம் மற்றும் பழனி செங்குந்தர் செப்பு பட்டயம் படத்துடன் பழனி தைப்பூச கொடியேற்ற மண்டகப்படி பத்திரிக்கை |
![]() |
கோவில் நிர்வாகம் பத்திரிக்கை |
![]() |
பழனி வரலாற்று ஆவணங்கள் நூலிலுள்ள குறிப்புகள் |
செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தின் பழனி சூரசம்ஹாரம் மண்டகப்படி உரிமை
செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தின் பழனி பங்குனி உத்திரம் விழா.
![]() |
கோவில் பத்திரிக்கை - 4ஆம் திருநாளில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை கட்டிய முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை சார்பில் மண்டகப்படி நடைபெறும். |
![]() |
கோவில் பத்திரிக்கை - |
![]() |
செங்குந்தர் குல சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் கணபதி ராமலிங்கம் நிலையம் 7-ம் திருநாள் மண்டகப்படி |
பழனி கோவிலில் சைவப்பெருவள்ளல் V.V.C.R. முருகேச முதலியார் அவர்களின் செய்த சமைய பணிகள்:
30 ஆண்டுகள் பழனி முருகன் கோவிலுக்கு அறங்காவலராக இருந்துள்ளார். மேலும் பழனி கோவிலில் முதன் முதலில் தனி நபராக சொந்த பணத்தில் தங்கதேர், வைரவேல், தங்கமயில் போன்றவையும் இவர் கொடுத்த நன்கொடையே!!!
தமிழகத்தில் இந்து சமய கோவில்களில் பயன்படுத்தப்பட முதல் தங்க தேர் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது..
முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க பழநி அடிவாரத்தில் பொது திருமடம் ஒன்றையும் அமைத்துத் தந்தார்.
![]() |
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் V.V.C.R. முருகேச முதலியார் |
![]() |
பழனி முருகன் கோவிலுக்கு 1948 ஆம் ஆண்டு 300 கிலோ எடை கொண்ட தங்க தேர் செங்குந்தர் குல சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் என்பவர் நன்கொடையாக வழங்கினார். |
பழனி செங்குந்தர் தர்ம பரிபாலன சபையின் கட்டிடங்கள்
![]() |
செங்குந்தர் முத்துக்குமார சாமி திருமண மண்டபம் அமரருக்கும் தங்கும் விடுதி |
![]() |
செங்குந்தர் தர்ம பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி மண்டபம், பழனி அடிவாரம் |
![]() |
செங்குந்தர் தர்ம பரிபாலனசபைக்கு பாத்தியப்பட்ட தண்ணீர் பந்தல் மடம் |
VVCR.முருகேச முதலியார் அவர்கள் தாய் தந்தை நினைவாக பழனியில் கட்டப்பட்ட கணபதி இராமலிங்க நிலையம் |
பழனி கணபதி - இராமலிங்க நிலையத்தில் உள்ள சைவப்பெருவள்ளல் VVCR.முருகேச முதலியார் சிலை |
![]() |
ஸ்ரீ சண்முக விலாஸ் மண்டபம் |
![]() |
1960 ஆண்டு கும்பாபிஷேகம் அறங்காவலர்கள் குழுவில் சைவப்பெருவள்ளல் VVCR.முருகேசமுதலியார்-டிரஸ்டி |