செங்குந்தர் குல தமிழ் அறிஞர்கள்/புலவர்கள்/திருப்பணி செம்மல்கள்

0

தமிழ் புலவர்கள்/ தமிழ் அறிஞர்கள்/ தமிழர் மத தலைவர்கள்:

செங்குந்தர் குல அருணகிரிநாதர் சுவாமிகள்: பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகப்பெருமானின் மீது உள்ள தீவிர பக்தியால் திருப்புகழ் உள்ளிட்ட பல்வேறு அருளிய சைவசமய ஆன்மீகவாதி.


சிதம்பர சுவாமிகள்: தொண்டைமண்டலத்தின் திருப்போரூர் ஆதீனத்தை மடத்தைச் சேர்ந்த சைவமத அறிஞர்.

 

தமிழ் இலக்கியம் ஒட்டக்கூத்தர் முதலியார்: கவிச்சக்கரவர்த்தி,கவிராட்சசன் என புகழப்படும் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அம்பலா கூத்தனாகப் பிறந்தார், நீதிமன்றக் கவிஞராகவும், சோழ சாம்ராஜ்ய அமைச்சராகவும் இருந்தார்.  

 

காங்கேயர் முதலியார் : தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் உரிச்சொல் நிகண்டு எழுதியவர் (14 ஆம் நூற்றாண்டு படைப்பு), தமிழ் மொழியின் பழமையான அகராதிகளில் ஒன்று.


பொய்யாமொழிப் புலவர்: தொண்டைமண்டலத்தின் உரையூரைச் சேர்ந்த கவிஞர். தஞ்சைவாணன் கோவை படைப்பை உருவாக்கியவர்

இரட்டைப் புலவர் : (மதுசூரியார் முதலியார் மற்றும் இளஞ்சூரியார் முதலியார்), ஏகம்பரநாதர் உலாவை எழுதிய கவிதை-இரட்டையர் (ஒருவர் காது கேளாதோர் மற்றொருவர் நொண்டி). 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

கோனேரியப்பர்: (பிறப்பு பெயர் கோனேரியப்ப முதலியார்) 15 ஆம் நூற்றாண்டில் பிரபல கவிஞர்.

பாடிக்காசு புலவர்: தொண்டை மண்டலத்தில் பொன்விலைந்த கலதூரைச் சேர்ந்த கவிஞர். வேந்தாந்தங்களை விரிவுரை செய்வதில் திறமையான அறிஞர் தொண்டமண்டல சதகம் எழுதியுள்ளார் .

 

பகழி கூத்தர்: திருச்செந்தூர் முருகன் பிள்ளை தமிழ் நூலை எழுதிய ராம்நாட்டின் சன்யாசி கிராமத்தைச் சேர்ந்தவர்.


மனோன்மணி அம்மையார்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சித்த மருத்துவர் மற்றும் பல மருத்துவ இலக்கிய நூல்களை எழுதியவர்.


காஞ்சி நாகலிங்க முனிவர்: பல தமிழ் நூல்களை எழுதியவர் செங்குந்தமித்திரன் நிறுவனர்.


திருத்தணிகை கச்சியப்ப முனிவர்: இவர் விநாயக புராணம், தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், பூவாளூர்ப் புராணம் முதலியவற்றை இயற்றியவர். இவரே கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, அந்தாதிகள், பதிகங்கள் இயற்றியிருக்கிறார்.


பாவேந்தர் பாரதிதாசன் : (பிறப்பு பெயர் கனகசுப்புரத்தினம் முதலியார்) பாவேந்தர், புரட்சி கவிஞர், தமிழ் கவிஞர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என அறியப்படுகிறார். புதுவை காசுக்கடை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

 

வெள்ளைவாரணனார்: திருவாரூரைச் சேர்ந்த மூத்த தமிழ் அறிஞர், தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றார். தொல்காப்பியம் பற்றி நிறைய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞர் ஆவார்.

 

ஈரோடு தமிழன்பன்: அவர் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர். 2004 ல், அவரது கவிதை தொகுப்பு தமிழ் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

 

கு. மு. அண்ணல் தங்கோ: ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் அறிஞர். 

 

ஞானசம்பந்தன்: ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பேராசிரியர், சொற்பொழிவாளர்

 

சுந்தர சண்முகனார் : தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நபர்.

 

சாலமன் பாப்பையா: பிரபல தமிழாசிரியர் மற்றும் பட்டிமன்ற நடுவர்.பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்.


சண்முகசுந்தரனார்: வட்டார மொழி வழக்கத்தில் நூல் எழுதுவதில் புகழ் பற்றவர்.


சி. பாலசுப்பிரமணியன்: தமிழறிஞர், பிரபல தமிழ் பேராசிரியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.


வை.இரத்தினசபாபதி முதலியார்: ‌‌ தலைசிறந்த தமிழறிஞர் மற்றும் சைவசித்தாந்த அறிஞர், தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றார், சென்னை தமிழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர், பேராசிரியர் ஆவார்.தமிழ்,சைவ சித்தாந்தம் பற்றி பல்வேறு நூல்களை எழுதியும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார்.

மா.இளஞ்செழியன்: சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

மன்னர் மன்னன் முதலியார்: ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன்.


ச.செல்வராஜ் முதலியார்: "தமிழ் தொல்லியல் ஆராய்ச்சிக்காக தமிழர் மரபு காவலர் விருது பெற்றவர்.

காஞ்சிச் சரவணப்பத்தர்: இவர் மத்தூர் சாமிநாத முதலியாரின் மூன்றாவது பாட்டனார். ஞானநூல்கள் செய்தவர். 

தமிழறிஞர் சோ. ந. கந்தசாமி முதலியார்: இந்திய குடியரசு தலைவரிடம் தொல்காப்பியர் விருது பெற்றவர்.தமிழ் ,ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பலமொழிகளில் புலமை பெற்றவர்.


கச்சி கச்சாலை தேசிகர் : காஞ்சி பராணம் நூலை இயற்றியவர், திருக்கச்சியாள வந்த வள்ளலார் செங்குந்தர் ஆதீனம் முன்னாள் மடாதிபதி.


கச்சபாலய தேவர்: பழனி வெண்பாமாலை வீரன நாராயணர் விஜயம் போன்ற நூல்களை மொழிபெயர்த்தவர்.


கோவை வேலப்ப வாத்தியார் சுப்பிரமணிய முதலியார்: அருணாசல புராணம் நூலை இயற்றியவர் 


பூசை நமச்சிவாயப் புலவர்: இவர் காஞ்சிபுரம்‌ பிள்ளையார்‌பாளையம்‌ மண்டபத்‌ தெருவில்‌ வாழ்ந்த செங்குந்தப்‌ புலவராவார்‌. வெஞான முனிவர்‌ மாணவர்‌ பரம்பரையிற்‌ கல்விபயின்‌ புலவர்‌ பெருமக்களுள்‌ முதன்மையானவர்‌ இவரே.


பிறசை அருணாசல சுவாமிகள்


இராமநாதபுரம் சோமசுந்தர முதலியார்.


காஞ்சிச் சிதம்பரநாத முனிவர்,


காஞ்சி முத்துக்குமார தேசிகர்,


சங்கரநயினார்கோயில் முத்தையா முதலியார்: சங்கர நயினார் கோயில் அலங்காரச்சிந்து நூலை இயற்றியவர்.


புதுச்சேரி சிவானந்த மூர்த்தி (பொன்னையா முதலியார்): 19ஆம் நூற்றாண்டு தமிழ் சமஸ்கிருத மொழி வல்லுனர். வல்லம் தலபுராணம், விநாயக இருப்புகழ், முருகர் மும்மணிக் கோவை போன்ற பல நூல்களை எழுதியவர்.


வீரமார்த்தாண்ட தேவர்: 19 நூற்றாண்டு புகழ் பெற்ற தமிழ் நூலான பஞ்சதந்திரம் நூலை எழுதியவர்.


மருத்துவர் வாலசுப்பிரமணிய முதலியார்: தேவகோட்டை முருகானந்த வைத்தியசாலை நிறுவனர். 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.


அறிவானந்த அடிகள்: காட்டுமன்னார்குடியில் சேர்ந்த தமிழறிஞர்.


வண்டிப்பாளையம் வை. கந்தசாமி முதலியார்  


புதுவண்டிப்பாளையம் ஆ.சிவலிங்கனார் செங்குந்தர்: உலகத் தமிழாராய்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர்.


குறிஞ்சி வேலன் (எ) செல்வராஜ்: அவர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்,பன்மொழிப்புலவர். 2004 ல், அவருக்கு விஷக்கன்னி என்ற மலையாள நாவல் தொகுப்பை தமிழ் மொழிபெயர்ப்பு செய்தமைக்கு சிறந்த மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 


சித்தாந்த சிகாமணி காஞ்சி வஜ்ஜிரவேல் முதலியார்.பி.ஏ.பில்: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய பேரறிஞர் ஒருவர்.தமிழக அரசு திருக்கோயில், தமிழ் ஆதீனங்கள் சைவ சித்தாந்த பத்திரிகை ஆசிரியராகவும், சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார்.பல்வேறு தமிழ் ஆதீனம் புலவராகவும், பல்கலைக்கழகங்கள் சைவ சித்தாந்த துறை பணி ஆற்றி உள்ளார். சிறந்த ஆசிரியருக்காக இந்திய அரசால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்,இவர் தமிழ், ஆங்கிலம்,வட மொழியில் புலமை பெற்று சைவ சித்தாந்தம் தொடர்பாக பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.


செந்தமிழ் சைவமணி புலவரேறு ந.ரா.முருகவேள்.M.A.M.O.L: சிறந்த தமிழறிஞர் மற்றும் சைவ சமய பேரறிஞர்.மறைமலை அடிகளார் அன்பு மாணவர்,இந்து அறநிலையத்துறை திருக்கோயில் பத்திரிகை மற்றும் தமிழ் ஆதீன இதழ்கள் மற்றும் சைவ சித்தாந்த இதழ்கள் ஆசிரியர் பணியாற்றி உள்ளார், பல்வேறு சைவ சமய மாநாடுகள் சொற்பொழிவு ஆற்றியும், பல்வேறு தமிழ் மன்றங்கள், ஆதீனங்கள் சிறப்பு விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.தமிழ் சைவ சித்தாந்தம் தொடர்பாக பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


திருப்பத்தூர்‌ ஆ. ௧ . குமாரசாமி முதலியார்‌: சில ௫௫கங்கள்‌, முசுகுந்த விலாசம்‌, செங்‌குந்த புராணம்‌, தசாரண்ய மான்‌மியம்‌ என்னும்‌ திருப்பத்தூர்ப்‌ புராணம்‌, குடியேற்றத்‌ தல பமாணம, பனசை தல. புராணம்‌ முதலிய பால்கள்‌ இவராலியற்‌றப்பெற்றன.


ஐயன்பேட்டை சூரப்ப முதலியார்: கந்தபுராணச் சங்கிரகம்.


ஐயன்பேட்டை சிவப்பிரகாச ஐயர்:


வாத்தியார் சுவாமிகள் (எ) அம்மாசையப்பர்:


சேவூர் சித்தர் முத்துக்குமாரசுவாமி நயினார்: பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற சைவசமய சித்தர் காளியை வேண்டி நவகண்டம் செய்து கொண்டு சாவான் சமாதி அடைந்தவர்.


துறவி சடையம்மா: இலங்கை நல்லூரை சேர்ந்த சிவசாமி சித்தர் பல ஊர்களில் மடம் எழுப்பியவர்.


ஞானியார் அடிகள்: தமிழ் வளர்த்த சைவத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு துறவி.


திருப்போரூர் பொன்னம்பல சுவாமிகள்: சைவ சமயத் துறவி

ஏகானந்த சுவாமிகள்: திருப்பூர் பெரமியம் ஊரில் மடம் அமைத்து சைவ மதத்தை வளர்த்தவர் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகில் செங்குந்தர் மடத்தை புதுப்பித்தவர்.

வேதாத்திரி மகரிஷி:   உலக அமைதியை ஊக்குவிக்கும் அமைப்பான உலக சமூக சேவை மையத்தின் நிறுவனர். பொள்ளாச்சி ஆழியாறு அணை பக்கத்தில் மனவளக்கலை மன்றத்தை நிறுவியவர்.

திருமழிசை முத்துசாமி முதலியார்: பல செங்குந்தர் புலவர்கள் இயற்றிய நூல்களை புத்தகமாக பதிப்பு செய்தவர்.

திருமழிசை வடிவேலு முதலியார்: வீரசைவ வினாவிடை என்னும் நூலை இயற்றியவர்.


திருமலைராயன் பட்டினம் அருணாசல முதலியார்:(நூ.20)


பனைப்பாக்கம் எல்லப்ப முதலியார்:(நூ.20) தந்தை பெயர் கண்டி முதலியார்.


அம்பை இரா. சங்கரனார்:



கோவில் திருப்பணி செம்மல்கல்:

திருமுருக கிருபானந்த வாரியார்: சைவ சமய ஆன்மீக சொற்பொழிவாளர், முருகனின் தீவிர பக்தர், தமிழ் இலக்கியங்களை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்ந்தவர். பல ஆன்மிக பணி,மக்கள் பணிகளை செய்தவர். அவர் 64 வது நாயன்மார் என அழைக்கப்படுகிறார்.


பாக்கியலிங்க தம்பிரான்: சென்னை வடபழனி முருகன் கோவிலை கட்டியவர்.


சன்னியாசி கருப்பண்ணசுவாமி: சேலம் குமரகிரி முருகன் கோவிலை கட்டியவர்


Sv.Rm.A. நடராஜ முதலியர்: அம்பாசமுத்திரம் முன்னாள் நடர்மன்ற தலைவர். திருச்செந்தூர் முருகன் கோவில் அறங்காவலர் தலைவர்.


சங்கரன்கோவில் சங்கரநாரயணசுவாமி கோவில் அறங்காவலராக C.S.M.சண்முக முதலியார் இருந்துள்ளார.


S. முத்துசாமி முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர்(1930s களில்).

கோவை M. சம்பந்த முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அரங்கேவலர்(1920 களில்).


V.V.C.R. முருகேச முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் (1952 - 1962)

Post a Comment

0Comments
Post a Comment (0)