புஞ்சைபுளியம்பட்டி பி.ஏ. சாமிநாதன் முதலியார் exMP

0

 செங்குந்தர் கைக்கோள முதலியார் 

     ⚜️குலத்தோன்றல்⚜️
மக்கள்சேவகர், ஒன்றுபட்ட கோயம்புத்தூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்து அறிஞர் அண்ணா அவர்களின் தளபதியாக செயல்பட்டு கொங்கு மண்டலத்தில் திமுக கட்சியை வளர்த்தவர். இரண்டுமுறை திருப்பூர் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர், திமுக கட்சிக்கு கரை வேட்டி துண்டு அறிமுகப்படுத்தியவர்.
பெரியவர் பி ஏ எஸ் (எ)
பி.ஏ. சாமிநாதன் முதலியார். exMP



                     (15.01.1932 - 21.01.2012)

பிறப்பு:

தற்போது உள்ள திருப்பூர் மாவட்டத்தில் புன்செய் புளியம்பட்டி (எ) புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமத்தில் செங்குந்தர் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள ராஜா முதலியார் தெருவில்  செங்குந்த கைக்கோளர் சமூகம் பூசன் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த மா. ஆறுமுக முதலியார் - அரங்காத்தாள் தம்பதியருக்கு 15.01.1932 அன்று பிறந்தார். 

சிறு வயதிலேயே தாயை இழந்த சாமிநாதன் தனது அத்தை பார்வதியம்மாள் வளர்ப்பில் வளர்ந்தார். புளியம்பட்டி இடிகரை பள்ளியில் படித்தார், பின்பு கோவை சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பை கோவை செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்றார்.

 



வாழ்க்கை:

கோவை கல்லூரியில் இவர் படிக்கும்போது அறிஞர் அண்ணாவின் பேச்சுக்களைக் கேட்டு தமிழ் மொழி மீது தீவிர பற்றும் உணர்வும் உருவாகி கல்லூரிப் படிப்பை விட்டு திமுக கட்சி பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.

28- 11-1960 அண்டு சம்பூர்ணம் அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 

இவரின் மகன் பின்னாளில் P A S அன்பு. புஞ்சைபுளியம்பட்டி நகர்மன்றத் தலைவராக இரண்டு முறை பணியாற்றினார். கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரியின் போர்டு மெம்பராக (BOARD MEMBER) தமிழக அரசால் நியமிக்கப்பட்டு ஐந்து வருடம் பணியாற்றினார்.

சாமிநாத முதலியார் அவர்களின் சகலை TR ராமசாமி I A S.  தமிழக அரசு முதலமைச்சரின் தனிப்பட்ட செயலளராக (CM Personal Secretary) இரண்டு முறை சிறப்பாக பணியாற்றியவர். 

1950-களில் தனது குல தொழிலான ஜவுளித் தொழில் தொடர்பாக கோ-ஆப்டெக்ஸில் வேலை செய்து வந்தார் அப்போது இவர் திமுக கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் கட்சிப் பணிகள் கருவி மூன்று மாதங்கள் தனது தொழில் வேலையை விட்டுவிட்டார்.

1952ஆம் ஆண்டு திமுக நற்பணி மன்றம் அமைத்து எளியவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வந்தார் கட்சி கொள்கையையும் பரப்பி வந்தார்.

1953இல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில் திமுக கட்சி கொடி கரை கைத்தறி வேட்டி துண்டுகளை இவரே உருவாக்கி தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக கட்சிக் கொடியை சார்ந்த வேட்டி துண்டுகள் அறிமுகப்படுத்தி வைத்தார். திமுக கட்சியில் முதல் முதல் திமுக கொடி சிவப்பு கருப்பு நிறங்களில் கரை வேட்டி துண்டுகளை அறிமுகப்படுத்தியவர் இவரே. அவரை அந்தக் கட்சி பின்பற்று வருகிறது.

1958இல் மாவட்ட கழக திமுக தேர்தலில் வெற்றி பெற்றார் அதே ஆண்டில் புஞ்சைபுளியம்பட்டி நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்றார்.

1955 இல் நடைபெற்ற மிகப்பெரிய வேளாண் போராட்டத்தில் இருதரப்பினரையும் களத்திலேயே சந்தித்து போராட்ட வன்முறையை அமைதி ஆக்கினார்.

இன்றைய கோவை திருப்பூர் ஈரோடு கரூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தின் திமுக கட்சி செயலாளராக பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி அந்த கட்சியை கொங்கு மண்டலத்தில் வலுப்பெற செய்தார்.

இவர் செயலாளராக இருக்கும் வரை கொங்கு மண்டலம் திமுக கட்சியின் கோட்டையாக இருந்தது. 

இவருக்கு பின் நிலைமை மாறி கட்சி இந்த பகுதியில் சரிந்தது.

1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சியின் பல பின்பும் இவர் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் திமுக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார்.

இவர் திமுக கட்சியின் நீண்ட கால பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை கழக சட்டத்தை திருத்த குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

1975 திசம்பர் 25, 26, 27, 28-இல் ஒருங்கிணைந்த திமுக 5-ஆம் மாநில மாநாடு - வரவேற்புக்குழுத் தலைவர் +
வரவேற்புரையாற்றியது.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி என்று பெயர் மாற்றப்பட்ட கோபி நாடாளுமன்றத் தொகுதியில் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் கவுண்டரை அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு அதிக வாக்கு வெற்றி பெற்றார் சாமிநாாத முதலியார்.

1971 இந்திய மக்களவைத் தேர்தலில் பெரியாரின் பங்காளி ஈ.வி.கே. சம்பத் அவர்களை மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சாமிநாதன் முதலியார் வெற்றி பெற்றார்.

புளியம்பட்டிக் குடிநீர்த் திட்டம் அண்ணாவால் அறிவிக்கப் பெறல்.
குடிநீர்த் திட்டம் : 15-09-1970-இல் தொடங்கி 04-09-1973-இல் குடிநீர் வழங்கும் விழா.

இரண்டாவது குடிநீர்த் திட்டம்  கலைஞர் அவர்களால் அறிவிக்கப் பெற்று செயல்படுத்தியது. 

பவானி சாகர் அணை தண்ணீரை திருப்பூர் கோயம்புத்தூர் ஈரோடு மாவட்ட கிராமங்களுக்கு கொண்டு வந்து மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்தார்.

1995 உள்ளாட்சித் தேர்தலின் பொழுது அக்பரின் வெற்றிக்காக வீடுவீடாய்ச் சென்று வாக்குத் திரட்டும் பொழுது குழியில் இடறிவிழுந்து கால்
எலும்பு முறிவு ஏற்படல். சென்னை
மருத்துவமனையில் விஜயா ஹெல்த்
சென்டரில் டாக்டர். மோகனதாஸ் அறுவை மூலம் ஓரளவு சீராகி மக்கள் பணியினைத் தொடர்தல்.

இவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் :

1) 1955-இல் தமிழர்களை அறிவற்றவர்கள் என்றதை எதிர்த்து அண்ணாவின் ஆணையை ஏற்று நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டுதல்.

2) விலைவாசி உயர்வுப் போராட்டம், ஒன்றுபட்ட கோயம்புத்தூர் மாவட்டம் .

3) மும்முனைப் போராட்டம், ஒன்றுபட்ட கோயம்புத்தூர் மாவட்டம் .

4) ஒன்றுபட்ட கோயம்புத்தூர் மாவட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

5) இரயில் நிறுத்தப் போராட்டம்.

6) கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்கள், மறியல்கள், சட்ட நகல் எரிப்பு.

7) 1975-இல் மிசா சட்டத்தில் கோவைச் சிறையில் ஓராண்டு இருத்தல்.

8) ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டம்.

9) கைத்தறி நெசவாளர் ஆதரவுப் போராட்டம். என பல போராட்டங்கள் இவர் தலைமையில் நடைபெற்றது


மறைவு

22-01-2011-ஆம் நாளில் பகல் 1-00 மணிக்கு தன் இன்னுயிர் நீத்தார். மறைவுச் செய்தி கேட்ட ஊர்மக்கள் எல்லாரும் கட்சி வேறுபாடின்றி  தம் இல்லத்தில் நேர்ந்த மறைவாகவே கருதி பி.ஏ.எஸ். இல்லம் அடைந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தன்று எல்லாக் கடைகளும் அடைத்து வீடு முதல் காடுவரை சென்ற கூட்டம், அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நினைவு சூட்டியது.

ஏற்கனவே தாம் கருதியபடி தம் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பெற்ற இடத்தில் ரூ.18 இலட்சம் மதிப்பில் மணிமண்டபம் நிறைவு பெற்றுள்ளது.



அறிஞர் அண்ணா அவர்களுடன் சாமிநாதன் முதலியார்

பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் சாமிநாதன் முதலியார் குடும்பத்தினர்



திமுக முதற்கட்ட தலைவர்களின் ஒருவரான சாமிநாத முதலியார்

மு க ஸ்டாலின் உடன் சாமிநாதன் முதலியார்







இவரின் 
கூட்டம் பெயர்: பூசன் கோத்திரம்
குலதெய்வம்:  பழனி முருகன் மற்றும் மூலனுர் வஞ்சியம்மன்.


ஐயாவின் நினைவு மலர் புத்தகம்👇

Download link: (Click) 40mb

Ebook:⬇️

 

 

 




                     

Post a Comment

0Comments
Post a Comment (0)