செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத் தோன்றல்⚜️
ஈரோடு கல்விதந்தை, கொங்கு மண்டலத்தில் பெண்கள் கல்விக்காக பாடப்பட்டவர், ஈரோடு முன்னாள் நகர்மன்ற தலைவர், சுதந்திர போராட்ட வீரர். OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர்
ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் அல்லது ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தரனார் என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். ஈரோடு வட்டாரத்தில் பெண்களின் கல்விக்காக பாடப்பட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "ஐயா" என்று அன்போடு அழைத்தனர்.
வாழ்க்கைக் குறிப்பு
மீனாட்சிசுந்தர முதலியார் 1898 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் செங்குந்த கைக்கோளர் மரபு, வடுவன் கோத்திரம் பங்காளிகள் சீரங்க முதலியார் - செல்லம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் இளங்கலை இலக்கியம் வரை படித்தார்.
1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.
பெண்கள் கல்வி வளர்ச்சியில்தான் சமூகத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை உணர்ந்த இவர், தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையம் என்ற மகளிர் பள்ளியைத் துவக்கி லட்சக்கணக்கான பெண்கள் கல்வியில் உயர்நிலை பெற காரணமானார்.
ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1972 ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகள் கல்வி நிலையம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவர் உருவாக்கிய கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.
வரலாற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஈரோட்டில் கலைமகள் பள்ளி வளாகத்தில் "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்" என்ற பெயரிலான அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.
சுதந்திர போராட்டம்
சுதந்திர போராட்டக் களத்தில் ஆங்கிலேயரின் அடக்குமுறையில் இந்தியா கட்டுண்டு கிடந்தபோது, ஈரோட்டில், கதர் இயக்கம், கல்லுக் கடை மறியல், அந்நியத் துணி எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்திய ஈ.வெ.ரா. சிறை சென்ற போது, அந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தியவர் மீனாட்சி சுந்தரனார். சுதந்திர போராட்டக் களத்தில் திருச்செங்கோடு வந்திருந்த மகாத்மா காந்தியடிகளுக்கு ஈரோட்டில் சென்று அவருக்குப் பணிவிடை செய்து அவரின் சீரிய தொண்டரானார்.
1921ல் மகாகவி பாரதியார் ஈரோடு வந்த காலத்தில் கருங்கல் பாளையம் நூலகத்தில் நேரில் சந்தித்து, அவரை நெருங்கிய நண்பரானார்.
கல்விப் பணியில்...... 'கடமையைச் செய் பலனை கலைமகள் கல்வி நிலையத்தை வாசகத்துக்கு சான்றாகக் கல்வியையும், பொது வாழ்வையும் தம் கண்களாகக் வாழ்ந்து கல்வி தருமொழி ஐயா எதிர்பாராதே!' என்ற நிர்வகித்து வந்தார். உண்மையான சமுதாய முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி மறைந்த தந்தை எஸ்.மீனாட்சிசுந்தரனாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஈரோடு பொது மக்கள் சார்பாக வேண்டிக்கொண்டதற்கு இணங்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு பிரப் சாலைக்கு மீனாட்சி சுந்தரனார் சாலை என பெயர் மாறுதல் செய்து அறிவித்துள்ளதற்கு ஈரோடு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என இருமொழி களிலும் "புலமை பெற்று இரு மொழிச் சொற் கொண்டலாக விளங்கிய மீனாட்சி சுந்தரனார் பி.ஏ. எல்.டி படித்துள்ளார். 1928 முதல் 1931 வரை சிவகங்கை அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், 1931 ல் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 1944ல் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியை நிறுவி, உயர்நிலைப் 1945ல் ஈரோடு, துவக்கி, பாரதியின் கனவாய் நனவாக்கியவர் , ஆதரவற்றவர்களுக்கு புகலிடம் அளிக்கும் அனாதை இல்லத்தையும் துவக்கினார். கல்வி மற்றும் சமூகப் பணிகள் மாணவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக சரண இயக்கம் வளர்ச்சி பெறவும் முக்கிய காரணமாகவும் இருந்தார். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்கள் போல மக்களுக்கு தேவையான கருத்துகளை போதிக்க 'நகர மித்திரன்' என்ற வார இதழை நடத்தினார். சமூகசேவையில்... முதலில் 9ம் வட்ட நகர் மன்ற உறுப்பினராக சேவையாற்றிய ஐயா, 1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சி தலைவராக அவர் ஆற்றிய பணிகள் இன்றும் அவர் பெயரைச் சொல்லி நிற்கின்றன.
ஈரோடு கோட்டை, கைக்கோளன் தோட்டம், பட்டக்காரர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து குழாய்களை அமைத்தார். 1955 ஆம் ஆண்டு 1000 புதிய குடிநீர் இணைப்பு வழங்கியதோடு, இறைப்பு நிலையத்தின் கருவிகளை புதுப்பித்து நாள்தோறும் வழங்கும் நீரின் அளவை 7 லட்சம் காலன் (3.78 லட்சம் லிட்டர்) ஆக உயர்த்தி சாதனை படைத்தார். கர்ப்பிணி பெண்களின் துயர் துடைக்க பிரசவ விடுதியும், நகராட்சி ஊழியர்களின் குடியிருப்பையும், 30 தெருக்களை சீரமைக்க செய்தார்.
திருநகர் குடியிருப்பின் தலைவராக இருந்த 7 ஆண்டுகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குழந்தைகள் விளையாடுமிடம், சாலையோரம் மரங்கள் உட்பட பல செயல்களால் நகரை செழிக்க செய்தார். ஈரோடு சுழற்குழு தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் உறுப்பினராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்து தொண்டாற்றினார். SPCA தலைவராகவும், கூட்டுறவு அர்பன் வங்கியின் 1 தலைவராகவும், பென்ச் கோர்ட் தலைவராகவும் பல அரிய சேவைகளை செய்துள்ளார்.
கல்வியையும், பொதுவாழ்வையும் இரு கண்களாக போற்றிய மீனாட்சி சுந்தரனார்.
அங்கீகாரங்கள்
சுதந்திர போராட்ட வீரராகவும், கல்வி ஆசானாகவும், ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கும் பல அரிய சேவைகளை ஆற்றிய மீனாட்சி சுந்தரனாரின் 'நினைவை போற்றும் வகையில், ஈரோடு மாநகரின் முக்கிய சாலையான பிரப் ரோட்டிற்கு மீனாட்சி சுந்தரனார் சாலை என்ற பெயர் மாறியது.
ஈரோடு செங்குந்தர் கல்விக்கழகம் இவரின் நினைவாக, மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை நடத்தி வருகிறது. பள்ளி வளாகத்தில் இவருக்கு வைக்கப்பட்ட சிலை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரால் வைக்கப்பட்டது. எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார், துணையோடு ஈரோட்டில் உள்ள எல்லா ஆசிரியர்களையும் இணைத்து "ஆசிரியர் ஐக்கிய சங்கம்" தொடங்கினார்.
25 வயதில் நமது ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் முன்னாள் தலைவர் 1934 ஆம் ஆண்டு செங்குந்தர் வாலிபர் மாநாட்டு தலைவராக பணியாற்றிய போது. |
❤️🙏
ReplyDelete