குமாரசுவாமி ஐயர், ஈழத்தில் 19 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆளுமைகளில் தனித்துவமானவர். ஆரையம்பதி செங்குந்தர் மரபிலே உதித்து. சுவாமி விபுலானந்தருக்கு வடமொழியை கற்றுத்தந்து சுவாமிகளின் பெருமதிப்புக்குரிய குமாசுவாமி ஐயர் அவர்கள்
சுதேச வைத்தியத்தில் ஆற்றிய பங்களிப்பையும் அவரின் ஆற்றல் பற்றிய ஆய்வுகளையும் ”சுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ்நுால்கள்“ எனும் நுாலில் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டு எழுதிய பக்கங்களை இங்கு இணைத்துள்ளோம்.
மட்டக்களப்பில் வாழ்ந்த சித்தவைத்திய நிபுணர் சி.குமாரசாமி ஐயர்(1979-1947) பற்றிய செய்திக்குறிப்பில் கீழ்வரும் விபரங்கள் அறியமுடிகின்றன.
அரசடி ஆசிரியர் பயிற்சி கல்லுாரி அதிபர் மலேரியாக் காட்டுச் சுரத்தைப் பற்றிய பாடல்கள் கொண்ட நுாலென்றினை ஆக்கித்தரும்படி ஐயரிடங் கேட்டுக் கொண்டமைக்கமைய வெண்பா, கும்மி, நொண்டிச்சிந்து, ஆனந்தக் களிப்பு, குறம், கவிவெண்பா என்பவற்றாலான 51 செய்யுட்களைப் பாடி, மேல்நாட்டு வைத்திய முறைக்கேற்ற அணுகு முறையில் பாடப்பட்ட செய்யுள்களைப் பாடி “மலேரியா என்னும் காட்டுச்சுரம்“ என்ற பெயரில் ஒரு சிறு நுாலாக கொடுத்தார். அந்நுாலானது அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 1931 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்ட அந்நுாலின் செய்யுட்கள் யாவும் தமிழ்ச்சுவை மிக்கன வென்பதனை அறிய முடிகின்றது.
“சித்த வைத்தியமும் வித்தகத் தமிழும்“ என்னும் உபதலைப்பில் க. செபரத்தினம் தரும் விவரங்கள் மட்டக்களப்பிலே நிலவும் நடைமுறை மருத்துவப் பயன்பாட்டை அறியச் சான்றாகின்றன. இன்னும் மலேரியாச் சுரமும் அதனோடொட்டிய சிகிச்சை முறைமையும் சுதேச பாரம்பரியமாகவே பெரிதும் நடைபெற்று வருகின்றன என்பதும் கவனித்தற்குரியது.
நாடி பார்க்கும் ஆற்றலில் ஐயர் மிகுந்த திறமை பெற்றிருந்தார். நாடி பார்க்கும் ஆற்றலில் ஐயர் பெற்றிருந்த திறமை மட்டக்களப்பு பிரதேசம் முழுவதிலும் அறியப்பட்டிருந்தது. இத்திறமையினாலேயே மேலைநாட்டு வைத்தியமுறை செல்வாக்குப் பெற்றிருந்த அக்காலத்திலும் அவரால் பெரும் புகழுடன் வாழ முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலே மேலைநாட்டு வைத்தியத்துறையினை மேற்கொண்டிருந்த வைத்தியர்கள் பலர் ஐயரின் திறமையை மதித்தவர்களாய் அவரோடு நட்புப் புண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐயரியற்றிய “ஆயுள்வேதக் கருவுலம்“ எனும் நுாலானது அவரது வைத்தியத்துறை தொடர்பான முதிர்ச்சியைக் காட்டுவதோடு அவரது தமிழ்ப்புலமைக்கும் சான்று தருகின்றது. வெண்பா, கலித்துறை, கலிவெண்பா, விருத்தம் என்னும் பாவகைகளையும் பாவினங்களையும் இலாவகமாக் கையாண்டு பாடப்பட்ட 800 பாக்களைக் கொண்ட அந்நுாலானது சங்கமருவிய் காலத் கீழ்கணக்கு நுால்களுன் ஒன்றான திருகடுகத்தை நினைவுபடுத்துகின்றது. அந்நுாலிலுள்ன செய்யுட்களைனைத்தும் தமிழ்சுவை பயன்பானவாயமைந்துள்ளன.
“ஈச்சங்கொழுந்து நொச்சியிலை
இசங்கு மணித்தக் காளியிலை
காய்ச்சுஞ் சங்கம் குப்பியிலை
கரிய சீரம் பீநாறி
மூச்சை யழிக்கும் செஞ்சந்தம்
முதிய குப்பை வெங்காயம்
பாய்ச்சிக் கசாயம் பருகிவிட்டால்
பறப்கும் கரப்பன் பாலருக்கே“
என்னும் பாடலானது. சிறுவர்க்கு ஏற்படும் சொறி, சிரங்கு, கரப்பன் முதலிய நோய்களைப் போக்குவதற்காக குடிநீரை பற்றி கூறுகின்றது.
“போமேன்ற கனமாந்தக் குளிகை யொன்று
புகழுகின்றேன் திரிகடுக கரிய சீரம்
ஆமொன்ற வசம் புள்ளி யநம தாகம்
அப்பனே வகையென்று வராகனொன்று
நாமென்ற கல்வத்தில் மருந்தை வைத்து
நாட்டக் கேள் பிரண்டையொடு மாவிலங்கை
தாமென்ற வேளை நெச்சி வேம்புசுஞ்
சங்குடனே பேய்மருட்டி சங்கந்தப்பி“
எனும் செய்யுளானது. சமிபாட்டுக்குறைவைக் குறிக்கும் மாந்தம் நோயைக் போக்குவதற்கேற்ற கணமாந்தக் குளிகையைப் பற்றி கூறுகின்றது. பல செய்யுட்களுக்கு ஒரு வினை கொண்டு முடிகின்ற குளகச் செய்யுள்களுள் ஒன்றான மேறபடி செய்யுள்ளும், முன்னர் குறிப்பிட்ட ஆயுள் வேதக்கருவுலச் செய்யுளும் ஐயரின் தமிழ்ப்புலமையினைப் புலப்படுத்துவதற்குக் காட்ட படும் உதாரணங்களாகும். மேற்படி செய்யுட்களிற் பயின்று வரும் சொற்சுவை, பொருட்களை என்பன படிப்போர்க்கு இன்பந்தர வல்லன.
சுதேச வைத்திய இலக்கிங்களின் வழியிலே இன்றும் பெரிதும் கூறப்படுவது. “ உருத்திரளக்க மகிமையாகும். “ அக்கமணி“, நேத்திரம்“ எனவும் இது அழைக்கப்படுகின்றது. “ சிவனது ஆனந்தக் கண்ணீர்“ என்று கருதப்பட்டு வருவது உருத்திராக்கம். இது சிவ சின்னங்களுளொன்று. உருத்திராக்கத்தின் மகிமையும், சிவதத்துவத்தின் நுண்பொருளையும் விளக்கும் நோக்கத்துடன் உருத்திராக்க மான்மியம் எனும் செய்யுள் நுாலையும் சி.குமாரசாமி ஐயர் ஆக்கியுள்ளார். ஆசிரியப்பா, ஆசிரியவிருத்தம், வெண்பா என்பன கலந்து ஆக்கப்பட்ட மேற்படி நுாலானது ஒப்பற்ற சமயதத்துவம் நிறைந்த நுாலாகவும் அமைந்திருக்கின்றது. பாரராசசேகரம் செப்பும் “உருத்திராக்கம்“ பற்றிய தகவல் ஐந்தாம் இயலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ், சமயம், வைத்தியம் தொடர்பாக ஐயரால் எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழ் இதழ்களிலும் சித்த வைத்திய இதழ்களிலும். செங்குந்த மித்திரன் முதலான வெளியீடுகளிலும் வெளிவந்தன. வடமொழி, தென்மொழி இரண்டினையும் நாவலர் காவிய பாடசாலையிற் கற்றுப்பெற்றுக்கொண்ட வரன்முறைப் புலமையோடு ஆயுள் வேதம், சித்தவைத்தியம் ஆகிய இரு துறைகளிலும் பாண்டிதெ்தியம் பெற்ற அறிஞராய் விளங்கிள குமாரசுவாமி ஐயர் தாம் அறிந்த வடமொழி தென்மொழிப் புலமையினனையும், வைத்திய நுணுக்கங்களாற் பிற்சந்ததியினரும் அறிந்து அவற்றைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் நிலையான தொண்டு செய்தார்.
தமிழ் மருத்துவம், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் என்பனவற்றின் கலப்புநிலை பற்றி சிந்திப்போர் தமிழ்முறைமை, சித்தமுறைமை, ஆயுள் வேத முறைமை எனும் மரபுகளின் தொடக்கம், சங்கமம் என்பன குறித்து சிந்திப்பதுடன் விசனம் தெரிவிப்பதுண்டு. அதாவது. துாய்மையும் பக்குவமும் நிரம்பிய பாரம்பரிய வைத்திய முறைமைகள் கலப்பும், சிதையும். கைந்நெகிழவும் அடைந்துள்ள மாற்றங்களைக் குறித்து கொண்டுள்ள நிலைப்பாடுகள் கூர்ந்து நோக்குதற்குரியன.
இலங்கையின் தமிழ்பிரதேசங்களில் தற்போது நிலவும் மருத்துவ நடைமுறைகள் பெருமளவிலே ஆங்கில மருத்துவமாயினும், கிராமங்களிலும், ஆங்கில மருத்துவ சிகிச்சைகளினால் மாற்றமுடியாத நோய்களுக்கும் சுதேசவைத்திய முறைமைகளுமே பெரிதும் பலனளிக்கவல்லனவாயள்ளன. நாட்பட்ட நோய்களுக்கும் தமிழ், ஆயுர்வேத வைத்திய முறைமைகளும் மூலிகைசிகிச்சைகளுமே பலனளிப்பனவாயுள்ளன. இவ்வியலிலே எடுத்து கூறப்பட்டுள்ள கருத்துக்களினினடிப்படையில் இன்றைய நோக்கிலும் பாரம்பரிய வைத்தியமுறைமையின் பயன்பாடு தமிழர் பிரதேசங்களில் கணிசமானளவு மக்
களாளே மதிக்கப்பட்டக் கைக்கொள்ளப்படுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.