உகந்தலிங்க சுவாமிகள் பற்றி காஞ்சி நாகலிங்க முனிவர் எழுதிய குறிப்பு:
சிக்கல் பொருள் வைத்தசேரி உகந்தலிங்க சுவாமிகள்-நாகப்பட்டினத்தை யடுத்த பொருள்வைத்த சேரியென்னும் ஊரிலுள்ள உகந்தலிங்க ஞான தேசிகர் ஆதீனத்திற்குச் சென்ற போது அங்குச் சில குறிப்புக் கள் கிடைத்தன. தென்னாட்டில் வழங்கும் கேவலாத்துவித மெனப்படும் வே தாந்தக் கொள்கையினரை பிராமண வேதாந்திகள் தமிழ் வேதாந்தி கள் என இருவகையாகப் பிரிக்க லாம். பிராமண வேதாந்திகட் குரிய தலைமை நிலையங்கள் சிருங் கேரி மடமும் காஞ்சி காமகோடி பீட பீடமாகிய கும்பகோண மடமும் ஆம்.
இவை சங்கராச்சாரியார் மடங்களாம். இங்கு உபதேசம் பெறுந் தகுதி பிராமணர்க்கே யுரியதாகும். தமிழ் வேதாந்தி களுக்குரிய மடங்களாகத் திரு வண்ணாமலையிலும், கோயிலூரி அம் சிதம்பாத்திலும், பொருள் வைத்த சேரியிலும், இவ்வாறே பல தலங்களிலும் பல திருமடங் கள் உள்ளன. இம் மடங்கள் யாவும் தமிழர்களாகிய எல்லா உபதேசம் வினத்தவர்க்கும் செய்துவைக்கு மியல்புடையன யான திட்டங்களுடன் முதன்மை வாம் இம் மடங்களில் உறுதி யான பெற்று விளங்குவது கோயி லூர் மடமாகும். இதனை நிறு விய நகரத்தார் மர மரபினராகிய முத்துராமலிங்க ஞான தேசிக சுவாமிகளின் ஞானாசாரியர் - சிக் கல் பொருள் வைத்த சேரி உகந்தலிங்க சுவாமிகள் ஆதீ னத்து முதல் மூர்த்தியாக விளங் கிய உகந்தலிங்க ஞான தேசிக சுவாமிகளாவார். இவர் பொருள் வைத்த சேரியிற் செங்குந்த மரபிற் தோன்றியவர். பலநூல்களை யும் வேதாந்த சாத்திரங்களையும் எளிதிற் கற்று அநுபூதி நிலை யடைந்து பல மாணாக்கர்களுக்கு வேதாந்த பாடஞ்சொல்லியும் பக்குவிகளுக்கு ஞானோபதேசஞ் செய்தும் திகழ்ந்தவர். சீவன் முத்தராகிய இச் சுவாமிகள் கடைசிவரை இல்லறத்திலேயே யிருந்து தமது குலத்தொழி லையே செய்து வாழ்க்கை நடத்தி
வந்தார்கள். இவர்களைப் பற் றிய வியப்புடைய நிகழ்ச்சிகள் பல பொருள்வைத்த சேரியில் இன்றும் வழங்குகின்றன. இச் சுவாமிகள் பரிபூரணமடைந்த போது தாம் வசித்து வந்த வீட் டிலேயே அடக்கஞ் செய்யப்பட் டார். இப்போது இவரது சமா தியைச் சூழ்ந்துள்ள கட்டிடங் கள் இவர்தம் மாணாக்கரும் கோயிலூர் மடத்து முதல் சுவா 1 மிகளுமாகிய முத்துராமலிங்க ஞான தேசிக சுவாமிகளாலும் அவர்தம் வழியினராலும் கட்டப் பட்டனவாகும். உகந்தலிங்க சுவாமிகளுக்குப் பின்னர் வந்த வீரபத்திர சுவாமிகள், சிங்கார வேலு சுவாமிகள், சட்டையப்ப சுவாமிகள், முத்தைய சுவாமி கள் ஆகிய நால்வரும் செங்குந்த மரபினரே.