V. ரத்தின முதலியார் (TNPSC முன்னாள் தலைவர்)

0



உயர்திருவாளர் வி. இரத்தினமுதலியார்., பி.ஏ.பி.எல் அவர்கள் தஞ்சை ஜில்லாவில் மயிலாடுதுறை மாவட்டம் (மாயவரம்) உள்ள கூறைநாடு ஊரில் பரம்பரையாக கல்வி, ஒழுக்கம், செல்வம், தருமம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் பிரபல செங்குந்த கைக்கோளர் குடும்பத்தில் சோபகிருது கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர் உயர்திரு. சி. த. அ. வீரப்ப முதலி யார், இக்குடும்பத்திற்கு மிராசும், ஜவுளி வியாபாரமும் பண்டைக்காலக்தொட்டு இருந்து வருகிறது. ஜாதி முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் வெகு சில குடும்பங்களுள் இக் குடும்பமும் ஒன்று. திரு.இரத்தின முதலியார் அவர்கள் பாட்டனாரும், பிறகு தந்தையாரும், அதன்பிறகு தமையனாரும் மாயவரம் முனிபாலிட்டியில் கவுன்சிலராக இருந்து வருகின்றனர்.

நமது திரு, ரத்தினமுதலியார் அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு வகுப்பிலும் தங்கு தடையின்றித் தேர்ச்சி பெற்று பல தடவைகளில் முதன்மை பெற்று பரிசுகளும் பெற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் தேர்வில் தேர்ச்சி பெற்று சங்க நற்சான்று பத்திரமும் (சான்றிதழ்) பெற்றுள்ளார். இதனால் இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் நல்ல பயிற்சியுள்ளவரென்று தெரிகின்றது. மாயவரம் முனிசிபெல் ஹைஸ்கூலில் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரை வாசித்தது 1921- பரீக்ஷையில் தேரிப் பிறகு திருச்சிராப்பள்ளி சென்ட் ஜோசப்ஸ் கல்லூரி (செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி) சேர்ந்து, சரித்திர ஆராய்ச்சியில் மிகுந்த ஊக்கமுடையவராயிருப்பினும் தாய் மொழி மீது வைத்திருக்கும் அபிமானத்தால் தமிழ் மொழியை பிரத்தியேக பாட (விருப்பப் பாடம்) மாகக் கொண்டு 1928- இண்டர்மீடியேட் தேர்வில் திறமையுடன் தேறியவுடன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ. வகுப்பில் சேர்த்து 1925. பரீக்ஷையில் தயக்கமின்றித் தேறி பி. ஏ. பட்டம் பெற்றார். பரீக்ஷை முடிந்த பிறகு அரசாங்க உத்தியோகத்தையோ, வேறெந்த  பதவியையோ சிறிதும் விரும்பாது சென்னைச் சட்ட கல்லூரி சேர்ந்து படித்து சட்ட நுணுக்கங்களை பெற்றுப் பரீபைடியிலும் தேறி பி. எல் பட் டம் பெற்றார். திரு. முதலியார் அவர்கள் சிறு வயது முதல், அட்டத்தில் தேர்ச்சியடைவது ஒரு பெரிய வக்கீல் ஆக வேண்டுமென்றால் ஒரே எண்ணத் தை யுடையவராக இருந்தபடியால் தாம் மத்தி யில் எந்த உத்தியோகத்திற்கும் முயற்சி செய்யவில்லை.


'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்"


என்ற நாயனார் திருவாக்கின்படி இவர் சிறுவயதில் இருந்த எண்ணத்தை கைவிடாது வைராக்கியத்தோடு உழைத்த படியால் நிறைவேற்றினார். இவரது அடிச் சுவட்டினை ஏய்த்து செங்குந்தச் சிறுவர்களும் பின்பற்றுவது சாலச் சிறப்புடையாகும்.


சட்டக் கல்லூரி மாணவர்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு சட்டக் கல்லூரி மாணவர் பிரதிநித்துவ சபை (The Law College Students' Representative Council) என்ற சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. . இச் சபை முக்கியமான அதிகாரங்களை உடையது. இவர் இரண்டு வருஷங்கள் இச் சபையின் அங்கத்தினராகத் தேர்க்கப்பெற்று அதில் ஒரு முக்கிய மெம்பராக இருந்ததன்றி, இவர் காலத்தில் தான் இவருடைய முயற்சியால் தான் லா காலேஜ் மேகஸின்' (Law College Magazine) என்ற பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. அப் பத்திரிகைக்கு இவர் கூட்டுப் பத்திரிக்கை ஆசிரியராக இருந்து அதை முக்கியமான பத்திரிகைகளுன் ஒன்றாக ஆக்க அரும்பாடுபட்டு வந்தார். 1926, 1927-வருஷங்களில் முறையே எப்.எல்., பி. எல். (F. Ln, B. In) பரீக்ஷைகளில் தேர்ச்சி பெற்று, மாஜி மந்திரி திரு.எஸ். முத்தையா முதலியார் அவர்களிடம் அப்ரெண்டிசாக இருந்து, 1928- வருஷ முதல் ஹைகோர்ட்டு வக்கீலாக இருந்து வருகிறார். இவர் தேசப்பயிற்சியிலும் மிகுந்த தேர்ச்சியுடையவர்.


இயற்கையாக உள்ள சமூக உணர்ச்சியோடு, தேசிய உணர்ச்சியும் இவருக்கு அதிகம் உண்டு, சென்னையில் தலைச் சங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னரே பல ஜில்லாக்களிலுள்ள செங்குந்த கைக்கோளர்களை ஆங்காங்குக் கூட்டி ஐக்கிய பாலம் செய்ய முயன்றவர்களுள் இவர் ஒருவர், சுமார் 6 வருஷங்களுக்கு முன் தஞ்சை ஜில்லாவில் கூடிய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்தான் செங்குந்த மித்திரன் தோன்றியதற்கு முதற்கரண மென்று சொல்லலாம் அவ்வுணர்ச்சியைச் சிறிது சிறிதாக மற்றவர்களுக்கும் பரவச் செய்தவர்களில் இவரும் ஒருவராவார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் நிர்வாக சபையின் அங்கத்தின ராக இருந்துவரும் நமது திரு. முதலியார் அவர்களுக்கு இடை இடையே 'நம்மவர் வாழும் இடங்களுக் ருச் சென்று பிரச்சாரமும் செய்து வருகிறார். செங்குந்தர் கல்வி நிதிச் சீட்டுக் கமிட்டியின் காரியதரிசியாக இருந்து இப்போதுள்ள செங்குந்தர் கல்வி நிதிக்குப் பொருட்காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவையின்றி, சென்னை வாலிப சங்கம் (தி மெட்ராஸ் யூத் லீக்) போஷராகவும், திருமயிலாப்பூர் ஐக்கிய சாணய சங்கத்தில் ஒரு டைரக்டராகவும் இருந்து வருகிறார்.



1928- மாயவரம் தாலூக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததன்றி, ஒரு வருஷம் மகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினராக இருந்து தஞ்சை ஜில்லா பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1928- சென்னையில் அகில இந்திய காங்கிரசுக்குச் சென்றிருந்தார். ராடு ஹைஸ்டல் கட்டடக் கமிட்டியின் நிர்வாக அங்கத்தினரில் ஒருவராகிய இவரது முயற்சி யினால்தான் உரைகாட்டில் ஒரு ஹைஸ்கூல் சாஸ் வதமாக்கப்பட்டது.


பல ஜில்லாக்களிலுள்ள செங்குந்தர்கள் இவரை நன்கறிவார்கள். வெளியிலிருந்து வரும் நமக்குப் போதிய வசதியும் கூடுமான வரையில் உபகாரமும் செய்து வருகிறார்.


அதேபோல் செங்குந்தர் மாணவ மாணவிகள் மத்திய மாநில அரசு பணிகளுக்கு செல்வ வேண்டும் என்று பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார். இவரால் நமது சமூகம் பலபேர் பயன் அடைந்தனர்





Post a Comment

0Comments
Post a Comment (0)