செங்குந்தர்கைக்கோள முதலியார் வரலாறு

Flag of SenguntharKaikola Mudaliyar
given by Chola Emperors.


பெயர்க்காரணம்:

கைக்கோளர் என்றால் வலிமையான கைகளை உடையவர் என்று,  கையில் கோள்களை வைத்துள்ளார் என்றும் பொருள். கோசர் என்ற வார்த்தை மருவி  கோளர் > கைக்கோளர் என்றானது.

செங்குந்தர்செங்குந்தம் என்றால் இரத்தத்தால்(செம்மை) சிவந்த ஈட்டியை (குந்தம்) வைத்து போர் புரிபவர் என்று பொருள். செங்குந்தர் என்பது கைக்கோளர் என்ற குடி மட்டும் பயன்படுத்தும் தொழில் பட்டமாகும்.

முதலியார் -  'முதலி' என்றால் "முதன்மையானவர்" எனும் பொருள் படும். முதன்மைக்கடவுள் சிவன் உருவாக்கிய நவவீரர்கள் வம்சத்தில் வந்ததால் முதலியார் என்ற பட்டம் பெற்றனர் என்று ஈட்டி எழுபது நூல் கூறுகிறது. போர்ப்படை மற்றும் நெசவில் சிறந்து விளங்கியதால் முதலியார் பட்டம் பெற்றனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.



நமது தோற்றம்:

சூரபாதப்போரில் முருகனுக்கு உதவ முருப்பெருமானின் தாயான பார்வதி தேவியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து ஒன்பது வீரர்களை(நவவீரர்கள்) சிவபெருமான் உருவாக்கினார். அதாவது 
1.வீரபாகு, 2.வீரகேசரி, 3.வீரமகேந்திரர், 4.வீரமகேஸ்வரர், 5.வீரபுராந்தரர், 6.வீரராக்கதர், 7.வீரமார்த்தாண்தர், 8.வீரரந்தகர் மற்றும் 9.வீரதீரர்.

முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த முதலில் ரத்தம் படிந்த குந்தத்தை ஏய்ந்தி போருக்கு தலைமை ஏற்றனர் இந்த நவவீரர்கள். அரக்கனைக் கொன்ற பிறகு, போர்வீரர்கள் சிவனிடம் ஒரு தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறினர், இது எந்தவொரு உயிரினத்தையும் அழிக்கவோ அல்லது காயப்படுத்தவோ சம்பந்தப்படாது, நெசவு அத்தகைய தொழிலாக இருப்பதால், அவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.  மேற்கண்ட தளபதிகளில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்திர  வள்ளியை மன்னர் முசுகுந்த சோழன் மணந்தார்.  இந்த நவவீரர்கள்(ஒன்பது வீரர்கள்) மற்றும் முசுகுந்த சோழனின் சந்ததியரே செங்குந்தர்கைக்கோள முதலியாரின் முதல் தலைமுறை ஆகும்.

வரலாறு:

⚜️ கி.பி ஆறாம் நூற்றாண்டில் சமண மதத்தை சேர்ந்த சேந்தன் திவாகர முனிவர் எழுதிய எழுதிய "ஆதி திவாகரம்" அல்லது "சேந்தன்திவாகரம் " என்ற தமிழ் அகராதியில் 
"செங்குந்தப்படையர்   சேனைத் தலைவர்  தந்துவாயர்  காருகர் கைக்கோளர்"
இன்று இவர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது.
இதற்கு அர்த்தம் அர்த்தம் 👇
1.செங்குந்தர்( ரத்தம் படிந்த ஈட்டி ஏந்திய வீரன்), 2.சேனைத்தலைவர்( படை தளபதி), 3.தந்துவாயர் (நெசவாளர்),  4.காருகர் (நெசவாளர்)  என இந்த நான்கு பெயர்களும் கைக்கோளர் என்ற சாதி குடி குறிக்கும் தொழில் பட்ட பெயர்கள் ஆகும் என அறிய முடிகிறது. 
மேலும் இவர்கள் குறிஞ்சி நில வேந்தர்கள் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் நாம் பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நில மக்களாவர் .


சங்க காலம்:


முற்காலச் சோழர் காலம்:

  • முற்கால சோழ மன்னர்களில் ஒருவரான முசுகுந்த சோழன் என்ற மன்னன் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி முருகக் கடவுளை சஷ்டிவிரதம் முறைப்படி செய்தார்.
  • முருகக் கடவுள் முசுகுந்தனின் முருக பக்தியை மெச்சித் தம் நவவீரர்களோடு  வந்து காட்சி தந்து "உனக்கு வேண்டியவற்றை கூறுவாய்" என்றருள முசுகுந்த சோழன் முருகக் கடவுள் திருவடிகளைப் பணிந்து "நான் என் முன்னோர்களை போல் சக்கரவர்த்தி பதவியைப் பெற்று பூமியிலேயே சிறப்புடன் வாழ இந்த நவவீர செங்குந்தர் வம்சத்தினரை எனக்கு உறவினராகவும், படைத்தவர்களாகவும் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
  • முருக கடவுள் முசுகுந்த சோழன் விண்ணப்பத்தை கேட்டு அவர் நவவீரர்களை  பார்த்து "நவவீர செங்குந்தர்  ஆகிய நீங்கள் முசுகுந்த சோழனுடன் மண்ணுலகம் சென்று அவனுக்கு உறவினர்களாலும் படைத் துணைவர்களாகவும் இருங்கள்" என்று  கூறினார்.
  • நவவீரர் செங்குந்தர்கள் முருகக்கடவுள் கூறியபடி முசுகுந்த சோழன் உடன் மண்ணுலகம் வந்தனர்.
  • மண்ணுலகம் வந்தபின் நவ வீரர்களில்  மூத்தவரான வீரவாகு முதலியாரின் மகளான சித்திரவள்ளியை முசுகுந்த சோழன் மணந்தார்.
👆
இதன் பிறகுதான் செங்குந்த கைக்கோளர்கள் சோழர்களுக்கு படை வீரர்களாக மாறினர்.

இடைக்கால சோழர்: (கி.பி. 8 - 13 நூற்றாண்டு)

  • இடைக்காலத்தில் செங்குந்தகைக்கோளர்கள்  அதிக அளவில் சோழ இராணுவத்தில் பணியாற்றினார்.
  • சோழர் போர்படையில் 70% செங்குந்தகைக்கோளர்களே நிரப்பினர்.
  • அவர்களில்  சிலர் பிரம்மதராயர்,  பிரம்மமாராய என்ற பட்டத்தை வைத்திருந்தனர். இது பொதுவாக சோழ அரசாங்கத்தில் மிக உயர் பதவியில் இருந்த அரச குடும்ப அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
  • பலசெங்குந்தர்கள் சேனாதிபதிகளாகவும் (சேனை)படைத்தளபதிகளாகவும் (தளம்)  அணிபதிகளாகவும் (அணி)                    படைத்தலைவர்களாகவும்(படை)சோழர்களின் அரசில் இருந்திருக்கின்றனர். 
  • செங்குந்த கைக்கோள  சேனாதிபதிகள்   "சமந்த சேனாபதிகள்" அல்லது "சேனைத்தலைவர்"என்று அழைக்கப்பட்டனர்.
  • செங்குந்தகைக்கோள வீரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள், போர் திறன் மிக்கவர்கள் என்பதால் சோழ மன்னர்கள் இவர்களை தெரிந்த கைக்கோளர் படை என்று அழைத்தனர். பின்னர் அந்த பெயரிலேயே பல போர் படை பிரிவுகள் உருவாக்கப்பட்டது.











  • சோழர்படையில் "தெரிஞ்ச கைக்கோளப்படை", எனும்  படைப்பிரிவுகள் இருந்தது,  கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.   
  •             1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை
                2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை         
                3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை
                4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை               
                5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை         
                6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை       
                7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை         
                8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை                                                        9.வீரசோழ தெரிஞ்ச
    கைக்கோளப்படை       
                10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை .                 
    அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என   அழைக்கப்பட்டது


  • 11 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளின் படி, சோழ வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் செங்குந்த கைக்கோளர் நெசவுத் தொழில்நுட்பம்(ஜவுளி) மற்றும் வர்த்தகத்தில் தனது ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டனர்.  அத்துடன் அந்த நலன்களைப் பாதுகாக்க அவசியமான இராணுவ விஷயங்களில் ஒரு பங்கைக்கொண்டிருந்தனர் .  
  • அவர்கள் சோழர் காலத்தில் "அய்யவோல் 500" வர்த்தகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். மேலும் 8 ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் படைகள் அதிகளவில் இருந்ததாகவும், சோழ பேரரசர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக செயல்பட சில குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப் பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன
  • இத்தகைய வரலாற்று  பதிவுகள் அவர்களின் இராணுவ செயல்பாட்டை வலியுறுத்துகின்றன.
  • வல்லான் காவியம், வீர விஜயநாராயணம், ஈட்டி எழுபது போன்ற இலக்கியங்களில் செங்குந்தர் இன சிற்றரசர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

  • இடை சோழர்கால செங்குந்தர் சிற்றரசர்கள், 👇


    1. பழுவூர் வீரன் - பழுவூரை ஆட்சி செய்தார்
    2. பளுவை நாராயணன் - பழுவூரை ஆட்சி செய்தார்
    3. கச்சிதளியன் - காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார்
    4. ஒற்றியூரான்  - திருவெற்றியூரை ஆட்சி செய்தார்.
    5. களந்தையரசன் - களத்தூறை ஆட்ச செய்தார் 
    6. புற்றிடங்கொண்டான் - கலிங்கத்தை(ஒடிசா) ஆட்ச செய்தார் 
    7. கோளாந்தகன் - கொடுங்குண்றத்தை ஆட்ச செய்தார் 
    8. புலியூர்ப் பள்ளிகொண்டான் - சிதம்பர்த்தை ஆட்ச செய்தார் 
    9. பிணவன் - கடம்பூரை ஆட்ச செய்தார் 
    10. கண்டியூரான் -திருக்கண்டியூரைஆட்ச செய்தார் 
    11. முதுகுன்ற மணியன் - விருதாசலத்தை ஆட்ச செய்தார
    12. தஞ்சை வேம்பன் - தஞ்சாவூரை ஆட்ச செய்தார் 
    13. காங்கேயன் - காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார், புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன்.  
    சோழ சமுதாயத்திலும் சோழ  இராணுவத்திலும் செங்குந்த கைக்கோளரின் தாக்கம் மிகவும்  குறிப்பிடத்தகுந்ததாகும்

    விஜயநகர பேரரசு காலம்(கி.பி.13 - 17 நூற்றாண்டு)

    • பிற்காலச் சோழமன்னர்களின் நிர்வாக திறன் மிகவும் வலிமை இழந்து இருந்ததால் சோழ ராஜ்யம் அழிந்து போனது அதன் பிறகு தென்னிந்தியாவில் விஜயநகர பேரரசு உருவானது
    • அதனால் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இவர்கள் முழுமையாக ஜவுளி(நெசவு) சார்ந்த தொழிலுக்கு மாறினர். 
    • ஜவுளி தொழிலோடு, நிலக்கிழார்களாகவும்,விவாசாயிகளாம், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.
    ⚜️செங்குந்த கைக்கோள நெசவாளர்கள் பெரும்பாலும் "குடி" (குடிமை)த்திறனைக் கொண்டுள்ளனர், அதாவது குத்தகைதாரர்கள்-விவசாயிகள் மற்றும் கனியாச்சியை வைத்திருப்பவர்கள், இது நிலத்தின் பரம்பரை உடைமை.
    • விஜயநகர சாம்ராஜ்யத்தின் சதாசிவ ராயாவின் காலத்தில், பிரம்மபுரிஸ்வரர் கோயிலின் ஸ்தானாதர் அவர்கள் செங்குந்த கைகோளர் படைப்பிரிவின் சில நிலங்களை பயிரிடுவதாக ஒரு ஒப்பந்தம் செய்தனர்.
    • 1418 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை  கோயிலில், செங்குந்த கைகோளர்களுக்கு சங்கு ஊதுவதற்கும், பல்லக்கு பல்லக்குகள் மற்றும் யானைகளை சவாரி செய்வதற்கும், கோயிலை பாதுகாப்பதற்க்க்கும் உரிமை வழங்கப்பட்டது.
    • இவர்கள் நிர்வாகத் திறனால் திருப்பதி, திருவரங்கம் போன்ற முக்கிய வைணவ ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
    • திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.

    விஜயநகரபேரரசு கால செங்குந்த சிற்றரசர்கள்:
    1.கோட்டையண்ணன் முதலியார்
         
    •  கோட்டையண்ணன் முதலியார் என்பவர் கிபி 14ஆம் நூற்றாண்டில் மத்திய கொங்கு நாட்டை ஆண்ட சிற்றரசன்.
    • இவர் பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சிவகிரி, கொடுமுடி பகுதிகளை உள்ளடக்கிய மத்திய கொங்கு நாட்டின் சிற்றரசராக வாழ்ந்தவர்.
    • சோழர்கால "தெரிஞ்ச கைக்கோளப்படையினரில்  (கானாசாரி கோத்திரம்) வம்சாவளியில் வந்தவர் கோட்டையண்ணன் முதலியார் என்று அறியப்படுகிறது. 
    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி என்ற ஊரில் 200 ஏக்கர் பரப்பளவில் இவர் மண் கோட்டை கட்டினார்
    • இன்னமும் இவர் கட்டிய மண் கோட்டை நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் 200ஏக்கர் பரப்பளவில் சிதைந்த நிலையில் உள்ளது. 
    • 14 ஆம் நூற்றாண்டில் அன்னிய முஸ்லிகள்(கில்ஜி, துக்ளக் வம்சம்) தென் இந்தியா மீீது படையெடுத்தனர். இந்த முஸ்லிம படை நாமக்கல் பகுதிக்கு வரும்போது அவர்கலை எதிர்த்து பேரிட்டு நம் நாட்டு மக்களைை காத்தவர் இந்த  கோட்டையண்ணன் முதலியார்.
    • நம் நாட்டு மக்களை அன்னியர்களிடம் இருந்து காத்தார். அதனால் இன்றுவரை இவரை காவல்தெய்வமாக  பல சமூகத்தவர் வணங்குகிறார்கள்.
    • படையெடுப்பை எல்லாம் எதிர்கொண்டு வென்றபேது காலச் சுழற்சியில் அவர் ஒரு போரில் வீர மரணம் எய்தினார். 
    • அவர் நினைவாக நடுகல் ஒன்றும் பரமத்தி ஊர் கோட்டைக்கோயில் பகுதியில் சுமார் 1 கி.மீ.தொலைவில் வடபுறத்தில் உள்ளது. இதைத் தொல்லியல் துறையினர் அகழ்வு ஆய்வு செய்தால் ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்.
    • இவர் வழந்த காலத்தில் இவர் மற்றும் இவர் பங்காளிகள் பரமத்தி அங்காளம்மனை குலதெய்வமாக வணங்கி னார்கள்.
    • கோட்டையண்ணனின் சந்ததியர் மற்றும் இவரின் பங்காளிகளை இன்று  "கானாசாரி கோட்டையண்ணன் கோத்திரம்/கூட்டம் பங்காளிகள்" என்று அழைக்கப்பட்டுகிறார்கள். 

    கெட்டி முதலியார் வம்சம்

           

    ⚜️ இவர்கள் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் வடக்கு கொங்கு (மேட்டூர் முதல் தலைவாசல் வரை) ஆண்டனர். இவர்களின் தலைநகரம் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் மற்றும் அமரகுந்தி ஆகும்
















    1.மும்முடி கெட்டி முதலியார்
    2.சிலாய கெட்டி முதலியார்
    3.இம்முடி கட்டி முதலியார்
    4வணங்காமுடி முதலியார்.

    ⚜️ கெட்டி முதலியார் வம்சத்தைச் சேர்ந்த நான்கு இந்த தலைமுறை மன்னர்கள் விஜயநகர பேரரசுடன் பீஜாப்பூர் சுல்தான் படையெடுப்பை எதிர்த்தனர்.
    ⚜️ தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பவானி சங்கமேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்கள் கெட்டி முதலியார் குடும்பத்தால் முழுமையான கட்டிமுடிக்கப்பட்டது. ஆத்தூர் கோட்டையும் இவர்களால் கட்டப்பட்டது.
    ⚜️ வடக்கு கொங்கு  மண்டலமான சேலம் வட்டாரத்தில் ஜவுளி சார்ந்த தொழில்கள் இவர்கள் ஆட்சியில் தான் அதிக வளர்ச்சி அடைந்தது துணி உற்பத்தியில் நெசவாளர்கள் அதிகாலையில் தேவைப்பட்டதால் மைசூரிலிருந்து தேவாங்கர் சமூகத்தவர் சேலம் வட்டாரத்தில் இவர்களால் குடியமர்த்தப்பட்டனர்.
    ⚜️ காலப்போக்கில் பாலக்காடு வழியாக பீஜப்பூர் சுல்தான் முஸ்லிம்கள் கெட்டி முதலியார் அரசின் மீது படையெடுத்து கெட்டி முதலியார் வம்சத்தை அழித்துவிட்டார்கள்.அக்காலத்தில் இவர்கள் ஜவுளித்துறையில் அதிகம் கவனம் செலுத்தியதால் தான் இன்றுவரை சேலம் வட்டாரத்தில் ஜவுளித் தொழிலை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.



    கேரள, பாலக்காடு - கொடும்பு செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில்:

    கொடும்பு செங்குந்தர் சுப்பிரமணியார் கோவில்

    • செங்குந்த முதலியார் குடும்பத்தினர் பலர், 10ஆம் நூற்றாண்டில்  காஞ்சிபுரத்தில் இருந்து பாலக்காடு அருகிலுள்ள கொடும்பு என்ற இடத்திற்குச் சென்று நெசவுத் தொழிலைச் செய்து வந்தனர். 
    • அவர்கள், நெசவு செய்த துணிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள அவினாசியில் விற்றுவிட்டு, அங்கிருந்து நெசவுக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.
    • ஒரு முறை அவர்கள் அவினாசி வந்து விட்டு ஊர் திரும்பிய போது, கோழிமாம்பட்டி என்ற இடத்திற்கு அருகில், திடீரென்று “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டுக் கீழே இறங்கிய அவர்கள், சுற்றிலும் பார்த்தனர். 
    • அங்கு ஒருவரையும் காணவில்லை. பின்னர், அவர்கள் மீண்டும் வண்டியில் ஏறிப் புறப்படத் தயாரானார்கள்.
    • ஆனால், அந்த மாட்டு வண்டி அங்கிருந்து முன்னோக்கிச் செல்லாமல் நின்றது. அவர்கள், எவ்வளவோ முயற்சித்தும், மாடு முன்னோக்கிச் செல்ல மறுத்தது.
    • அப்போது மீண்டும், “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்ற குரல் தெளிவாகக் கேட்டது. அவர்கள் குரல் வந்த திசையில் சென்று பார்த்தனர். அங்கேயிருந்த புதரில் கல் ஒன்று மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
    • ஒளிமயமான அந்தக் கல்லைக் கண்டு திகைத்த அவர்கள், அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வந்து, தங்களுடைய நூல் மூட்டை ஒன்றில் பாதுகாப்பாக வைத்தனர். அடுத்த நிமிடம், அந்த மாடு முன்னோக்கி நகரத் தொடங்கியது.
    • கொடும்பு திரும்பிய அவர்கள், அங்கிருந்த சிவன் கோவிலில் தனிச்சன்னிதி ஒன்று அமைத்து, அந்தக் கல்லை வைத்து, அதனுடன் ஒரு வேலையும் நிறுவி, சுப்பிரமணிய சுவாமியாக வழிபடத் தொடங்கினர்.
    • அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் பூஜைப் பணிகளைச் செய்து வந்த குரூர் மனை அச்சுதன் நம்பூதிரி என்பவர், சிவபெருமானுக்குச் செய்து வரும் கேரள முறையிலான பூஜையைப் போன்றே, சுப்பிரமணிய சுவாமிக்கும் தானே பூஜை செய்வதாகச் சொன்னார்.
    • ஆனால், அதைச் செங்குந்த முதலியார் குடும்பத்தினர் ஏற்கவில்லை, தமிழ்நாட்டில் இருந்து வந்த முருகப்பெருமானுக்குத் தமிழ் முறையிலான பூஜையே செய்ய வேண்டும் என்றனர். அதற்கு நம்பூதிரி ஒப்புக் கொள்ளவில்லை. அந்த நம்பூதிரி, பாலக்காடு அரசரிடம் சென்று முறையீடு செய்தார்.
    • பாலக்காடு அரசர் அவ்விடத்திற்கு வந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பார்த்தார். இருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ‘கோவிலின் வடக்கு வாசலில் இரண்டு பிரிவினரும் கும்பங்களை வைக்க வேண்டும். அந்தக் கும்பத்தை யார் எடுக்கிறார்களோ, அவர்கள் முறைப்படியே முருகப்பெருமானுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று மன்னன் உத்தரவிட்டார்.
    • செங்குந்த முதலியார் சார்பில் மதுரையில் இருந்து மாணிக்கவாசகர் வரவழைக்கப்பட்டார். அவர் தமிழில் பாடி ஒரு கும்பத்தை வைத்தார். நம்பூதிரி சில மந்திரங்களைச் சொல்லி ஒரு கும்பத்தை வைத்தார். மாணிக்கவாசகர் வைத்த கும்பத்தை நம்பூதிரியால் எடுக்க முடியவில்லை. ஆனால், நம்பூதிரி வைத்த கும்பத்தை மாணிக்கவாசகர் எடுத்து விட்டார். அதனைக் கண்ட அரசர், கோவிலில் தமிழ் முறைப்படியே பூஜை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.
    • தோல்வியடைந்த நம்பூதிரி தனது நிலத்தின் ஒரு பகுதியை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தானமாக எழுதிக் கொடுத்தார். அவர் அளித்த தானத்திற்கு ஈடாக, தைப்பூசம், சூரசம்ஹாரம், கோவிலில் முருகப்பெருமான் நிறுவப்பட்ட நாள் மற்றும் நவராத்திரி என்று ஆண்டுக்கு நான்கு முறை சுப்பிர மணிய சுவாமியின் திருமஞ்சனக் கலசம் அச்சுதன் நம்பூதிரியின் குரூர் மனையைச் சுற்றி வருவதற்குச் செங்குந்த முதலியார்கள் ஒப்புதல் அளித்தனர். இவ்வாறு ஆலயம் அமைந்த தல வரலாறும், அதன் வழிபாட்டு முறைக்கான வரலாறும் சொல்லப்படுகின்றன.
    • இன்று வரை தமிழ் முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.




    இலங்கை செங்குந்தகைக்கோளர்  பரம்பரையும்  கொடிச்சீலை விழாவும் 
    இலங்கை - நல்லூர் கந்தசாமி கோவில்

    ⚜️ இலங்கை, யாழ்ப்பாணம்- நல்லூர்க் கந்தசுவாமி ஆலயக்  கொடியேற்றத்தின் போது கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் நடைமுறையில் இன்றளவும் மரபு வழியான முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றது . 

    ⚜️ முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட செங்குந்தகைக்கோளர மரபினைச் சேர்ந்தவர்களே கொடிக்கயிறையும் , கொடிச்சீலையையும் பரம்பரை பரம்பரையாக வழங்கி வருகின்றனர் . 

    ⚜️ ஏன் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது என ஆராய்ந்தால் சந்தான பாக்கியம் வேண்டி முருகனிடம் நேர்த்தி வைக்கப்பட்டதாகவும் , நேர்த்திக் கடனைத் தீர்க்கும் பொருட்டு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலையை வழங்கும் மரபு உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது .

    ⚜️ தற்போது நல்லூர்க் கந்தனுக்கு கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் செங்குந்தர் சந்ததியினர் , அம்மரபு தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட்டனர் . ஒவ்வொரு வருடமும் 24 முழம் நீளம் கொண்ட புதுக் கொடிச்சீலையில் வேலும் , மயிலும் வரையப்பட்டு தயார் செய்யப்படுகின்றது . அதேபோன்று கொடிக்கயிறும் 24 முழம் நீளத்தில் தயார் செய்யப்படுகின்றது . 

    ⚜️ செங்குந்தர் பரம்பரையினரின் முக்கிய தொழிலாக நெசவுத் தொழில் காணப்படுவதால் , அவர்களே கொடிச்சீலையை நெய்து நல்லூர்க் கந்தனுக்கு வழங்கி வருகின்றனர் . எனினும் தற்போது நெசவுத் தொழில் கைவிடப்பட்ட நிலையில் , புத்தம் புதிய துணியில் வேலும் , மயிலும் வரையப்பட்டு வழங்கப்படும் வழக்கம் நிலவுகின்றது. 

    ⚜️ செங்குந்தர் பரம்பரையினர் கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்குவது குறித்து ஓர் ஐதீகக் கதையும் உண்டு . தில்லையில் நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யும் பேறு பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் . உச்சிக்காலப் பூசையின் பின்னர் அவர் நண்பகல் 12 மணிக்கே வீடு திரும்புவார் . வெயிலில் அவர் செல்வதை அவதானித்த மன்னர் , அவருக்கு சிவிகையை வழங்கினார். 

    ⚜️ சிவிகையில் சென்று வந்த உமாபதி சிவாச்சாரியாரை அவதானித்த பெண்ணாடகம் மறைஞான சம்பந்தர் , பட்டகட்டையில் பகல் குருடன் போகின்றான் என அவரது சீடர்களிடம் விளித்துள்ளார். அதனைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் அவரே தமது குருநாதர் என்பதனை உணர்ந்து அவரை வணங்க விரும்பி , சிவிகையில் இருந்து இறங்கினார் . சிவாச்சாரியார் தமக்கு ஊறு விளைவிக்கப் போகின்றார் என தவறாக நினைத்த மறைஞான சம்பந்தர் அங்கிருந்து ஓடினார் . 

    ⚜️ அவரைத் தொடர்ந்து சிவாச்சாரியாரும் ஓட ஆரம்பித்தார் . இருவரும் ஓடிக் களைப்படைந்ததால் செங்குந்தர் தெருவில் இளைப்பாறியதுடன் , குடிப்பதற்கு ஏதாவது தருமாறு மறைஞான சம்பந்தர் கேட்டுள்ளார் . செங்குந்தர் கூழை வழங்க , அதனை மறைஞான சம்பந்தர் வாங்கி அருந்தினார் . அதன் போது அவரது வாயிலிருந்து வழிந்த கூழை உமாபதி சிவாச்சாரியார் ஏந்தி அருந்தினார் . 

    ⚜️ இதனை அறிந்த தில்லை வாழ் அந்தணர்கள் மன்னனிடம் முறையிட உமாபதியார் தில்லையில் பூசை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது . தில்லையில் கொடியேற்ற தினத்தன்று தில்லை வாழ் அந்தணர்கள் கொடியேற்றிய போது அது அரைக்கம்பத்தில் அறுந்து வீழ்ந்தது . தொடர்ந்து செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்றுவதே எனக்கு விருப்பம் என அசரீரி ஒலித்தது . இறைவனின் விருப்பத்திற்கு இணங்க செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்ற , அது வழுவாமல் ஏறியது . அன்றிலிருந்து கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிற்றை செங்குந்தர் பரம்பரையினர் வழங்கி வருவதாக ஒரு ஐதீகக் கதையும் உண்டு.

    ⚜️ நல்லூர்க் கந்தனுக்கு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் பேறு பெற்ற செங்குந்தர்கள் யாரென்று ஆராய்ந்தால் , சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழும் மிகப்பெரிய சமுக்குகம் ஆகும்



    ந்திர காலாஹஸ்தி கோவில் 

                  சிவன்- பார்வதி திருக்கல்யாணமும்"செங்குந்தர்கைக்கோள முதலியார்".   சமூகத்துக்கும் உள்ள வரலாறு:




    ஆந்திரா காலாஹஸ்தி
    சிவன கோவில்
    ⚜️ உலகத்திலேயே வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி சிவன் கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர் இராசேந்திர சோழனால் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. 

    ⚜️ சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 
    சிவன் பார்வதி திருக்கல்யாண பத்திரிக்கை


    ⚜️ இக்கோவிலில் உள்ள மூலவர்: ஞானப்பூங்கோதை (எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி) உடனுறை காளகத்தீசுவரர்(சிவன்)

    ⚜️ பல ஆயிரம் ஆண்டுகளுகு முன்பு நம் செங்குந்தர்கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள
    வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் மனித ரூபத்தில் பிறந்து, பின்பு கடவுளாக மாறியவர் "ஞானப்பூங்கோதை(எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி)" ஆகும்.

    ⚜️ கடவுள் காளத்தீஸ்வரர்(சிவன்) சுவாமிக்கும்
    (பார்வதி)ஞானபிரசுனாம்பிகை தேவி அம்மனுக்கும் 
    காளாஹஸ்தி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    ⚜️ இதனால் வருடம் தேறும் சிவராத்திரி நாளன்று திருகல்யாணத் திருவிழா நம் சமூகத்தார் சார்பில் நடைபெறும்.

    ⚜️ ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில்  சிவராத்திரி நாளன்று ஞானபூங்கோதை அம்மனுக்கு வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில், செங்குந்தர் சமூக வெள்ளாத்தூர் கோத்திர பங்காளிகளின்  சார்பில் பெண் வீட்டு சீதனம்( மலர்மாலை, ஆடை மாங்கல்யம், சீர்வரிசை) ஆகியவை காலாஹஸ்தி சிவன் கோவிலுக்கு(புகுந்த வீடு) கொண்டு சென்று சமர்ப்பிப்பது வழக்கம். 


    🔱 இதன் மூலம்
    சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம்
    செங்குந்தர்கைக்கோள முதலியார் வம்சம் என்று தெரிகிறது.

       





      Special thanks for
    Kavin Mudaliyar 
            Sivagiri.




    நமக்கு வழங்கும் வேறு பெயர்கள்
               1.சிலப்பதிகாரத்தில் நம்மை காருகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    காருகர் என்றால் நெசவு செய்பவர் என்று பொருள.
               2.சில கல்வெட்டுகளில் சேனைத்தலைவர்,  தத்துவாயர் எனறு நம்மை குறிப்பிடப்பட்டுள்ளது.
    "சேனைத்தலைவர்"என்றால் 
    படைத்தலபதி என்று பொருள். "தத்துவாயர்" என்றால் நெசவாளர் என்று பொருள்.
               3.தெற்கு ஆந்திராவில் நம்மை கரிகாலபக்தலூ, கைக்காள செங்குந்தம் என்று அழைப்பார்கள் "கரிகாலபக்தலூ" என்றால் கரிகால சோழனின் பக்தர்கள் என்று பொருள்.
               4. கேரளாவில் நம்மை "கேரளமுதலி" அல்லது "கைக்கோள முதலி" என்று அழைப்பார்கள்.