செங்குந்தர் கைக்கோள முதலியார்களைப் பற்றிய வரலாற்று புத்தகங்கள் & ஆவணங்கள்

2
தி வாரியார் மெர்சன்ட்ஸ்:
பிரபல ஆங்கில எழுத்தாளர் "மேட்டிசன் மைன்ஸ்" என்பவர் ஈரோடு, சேலம், திருப்பூரில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் பாரம்பரியம், தொழில், வரலாற்றைப் பற்றி தகவல் சேகரித்து எழுதிய புத்தகம். இது 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள "கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தால்" வெளியிடப்பட்டது. Download link (Click)


சோழர் பூர்வ  பட்டயம்:
ஆதி காலத்தில் குறைந்த மக்கள் தொகை மற்றும் காடாக கிடந்த கொங்கு மண்டலத்தை கரிகால சோழன் ஒரு முனிவர் சொன்ன அறிவுரைப்படி செங்குந்தர் கைக்கோள முதலியார், வெள்ளாளர், வைசிய செட்டியார் என மூன்று சமூகங்களை குடியமர்த்தி புதிய நகரங்களை உருவாக்கி, 36 சிவாலையத்தை கட்டினார். இந்த வரலாற்றை கூறுவது தான் சோழர் பூர்வ பட்டயம் என்னும் மிகப் பழைமையான செப்பேடு ஆவணம் ஆகும்.
இந்த பட்டையத்தில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சம்பந்தம் உள்ள பகுதிகளை மட்டும் புலவர் செ. இராசு தொகுத்ததை கீழே காண்க
Download link: (Click) 12mb
Ebook: 


ஈட்டியெழுபது:

செங்குந்தர் கைக்கோள முதலியார்களைப் பற்றிய முக்கிய இலக்கியப் படைப்பு. இரண்டாம் இராஜராஜ சோழரின் ஆட்சியில்  கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அமைச்சரவை புலவர் ,ராஜ குரு மற்றும் ஆஸ்தான புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் எழுதப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் ஒன்று கூடி தங்கள் வரலாற்றை நூலாக எழுதி தருமாறு ஒட்டக்கூத்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் ஒட்டக்கூத்தர் மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒட்டக்கூத்தரிடம் இவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கடைசியாக ஒட்டக்கூத்தர் 1008 செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் தங்களின் தலையை அறுத்து எனக்கு காணிக்கையாக கொடுத்தால் உங்கள் வரலாற்றை எழுதுகிறேன் என்று சொன்னார். இதற்கு சிறிதும் தயங்காமல் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் 1008 பேர் தலையை வெட்டி ஒட்டக்கூத்தரிடம் கொடுத்து இந்த ஈட்டி எழுபது நூலை எழுதி வாங்கினார்கள்.
Download link: (Click) 20mb
Ebook:





களிப்பொருபது:

எழுப்பெழுபது என்னும் நூலை பாடியதால் தலையை வெட்டி கொடுத்த 1008 செங்குந்த கைக்கோளர்கள் உடலில் உயிர்பெற்று எழுந்த அதிசயத்தினைக் கண்டவர் வியந்து பலரால் பாடப்பெற்ற பத்துப்பாடல்களின் தொகுப்பு இக் களிப்பொருபது ஆகும். இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது. இந்நூல் செங்குந்தர் பிரபந்த திரட்டு தொகுப்பு நூலில் ஒரு பகுதியாகவும் உள்ளது.
Website: (Click)

 

எழுப்பெழுபது:

இது ஒட்டக்கூத்தர் எழுதிய ஈட்டி எழுபது இயற்ற 1008 தலைகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டது. இந்த 1008 செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் தலைகளை அந்தந்த உடல்களுக்கு மீண்டும் இணைக்குமாறு சரஸ்வதி தெய்வத்தை வணங்கி 1008 தலைகளை உடலில் ஒட்ட வைத்தார். இது 12ஆம் நூற்றாண்டில் இயற்றியது. 70 - பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இந்நூலில் உள்ள வெறும் பன்னிரெண்டு பாடல்கள் மட்டுமே தற்போது கிடைத்திருக்கின்றது. இந்நூல் செங்குந்தர் பிரபந்த திரட்டு தொகுப்பு நூலில் ஒரு பகுதியாகவும் உள்ளது.
Ebook: (click)

 

திருக்கை வழக்கம்:

12 ஆம் நூற்றாண்டில் புகழேந்திப் புலவரால் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினரைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். திருக்கை என்பது அழகிய கை எனவும், தெய்வத் தன்மை பொருந்திய கை எனவும் பொருள்படும். முருகப் பெருமானுக்குத் துணையாக நின்ற போர்ப்படை தளபதி நவவீரர்களாகிய வீரவாகு முதலி உள்ளிட்ட நவவீரர்கள் வழிவந்தவர்கள் செங்குந்தர் கைக்கோள முதலியார் குலப் பெருமக்கள் என்பதால் அவர்கள் கை, திருக்கை எனப்பட்டது. அவர்களுடைய இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் புகழ்ந்து கூறுகிறது இந்நூல். இந்நூல் செங்குந்தர் பிரபந்த திரட்டு தொகுப்பு நூலில் ஒரு பகுதியாகவும் உள்ளது.
Ebook: (click)



செங்குந்தர் பிரபந்தத் திரட்டு:

செங்குந்தர் கைக்கோள முதலியார்களை  பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் எழுதிய ஈட்டி எழுபது, திருக்கை வழக்கம், பிள்ளைத்தமிழ் போன்ற 15 நுல்களை தொகுத்து "செங்குந்தர் பிரபந்தத் திரட்டு" என்று 1926-ம் ஆண்டு ஒரே நூலாக காஞ்சி. நாகலிங்க முனிவரால் பதிக்கப்பெற்றுள்ளது.பின்னர் 1993-ம் ஆண்டு சைவ நன்மணி, கேதாரச்செல்வர் புலவர்.சரவண சதாசிவம்.எம்.ஏ.,எம்.எட் அவர்களால் நூலுக்கு விளக்க உரை எழுதப்பட்டு காஞ்சிபுரம் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மன்றத்தால் புத்தகம் வெளியிடப்பட்டது.
Download link: (Click) 36mb
Ebook: (Click)


செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்: 

செங்குந்தர் கைக்கோள முதலியார்களை பற்றி உள்ள 210 கல்வெட்டு மற்றும் 10 செப்பேடு, 4 ஓலை ஆவணங்களை "தொகுத்து செங்குந்தர் வரலாற்று" ஆவணங்கள் என்று 2009-ம் ஆண்டு நூலாக பதிக்கப்பெற்றுள்ளது.
 நூலாசிரியர் ஈரோடு புலவர் Dr. செ. இராசு.
Download link: (Click) 54mb
Ebook:





செங்குந்தர் துகில்விடு தூது:

16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூலில் செங்குந்தர்கைக்கோள முதலியார்களின் குல மரபினருடைய பிறப்பு, தொழில், கடவுள் பற்று, குணங்கள், பழக்கவழக்கங்கள், ஊராளும் நாட்டாண்மை சபை மற்றும் அதன் இயல்புகள் முதலியனவற்றை குறிப்பாகவும், தெளிவுபடவும் இந்நூல் விளக்ககிறது.
பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர்.
Download, Ebook link: (Click)
Amazon Kindle:
https://www.amazon.in/kindle Sengunthar Thukilvidu thuuthu



செங்குந்தர் பிள்ளைத் தமிழ்:

இது ஞானப்பிரகாச சுவாமிகள், திருசிபுரம் கோவிந்த பிள்ளை மற்றும் இலக்குமணசாமி ஆகியோரால் எழுதப்பட்டது. பனை-இலை கையெழுத்துப் பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்ட செங்குந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு. பின்பு 1891 ஆம் ஆண்டில் 
அ. ரத்னசபாபதி முதலியாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
Download, Ebooklink: (Click) 3mb


எங்கள் திருமண முறைகள்:
மேற்கு தமிழகத்தில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் திருமண முறை, சடங்குகளைப் பற்றி மா. சுப்பிரமணியன் எழுதிய புத்தகம்.
Download link: (Click) 10mb
Ebook:



முருகன் துணைவர் வரலாற்றுத் தடங்கள்:
தமிழ்க்கடவுள் முருகனுக்கு துணைவராக இருந்து, முருகனுக்கு படைவீரர்களாக இருந்த செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் வரலாற்றை இலக்கை(Sri Lanka), யாழ்ப்பாணத்ததை சேர்ந்த அறிஞர் சி. தியாகராசா எழுதிய புத்தகம்.
Download link: (Click) 3mb
Ebook:



செங்குந்தரும் கொடிசேலை கொடுக்கும் வரலாறு:
இலங்கை நல்லூரில் உள்ள முக்கிய கோவில்களில் செங்குந்தர் கைக்கோள முதலியார்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் மண்டக கட்டளைகள் பற்றி இலங்கையில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் தொகுத்தது.
Download link: (Click) 1.8mb
Ebook:




வீரவாகு தேவர் பதிகம்:
செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த கந்தபுராண வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் வரலாற்றை பற்றி பஞ்சநாத ஐயர் எழுதிய புத்தகம்.

https://archive.
Download link: (Click) 8mb
Ebook:




Post a Comment

2Comments
  1. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
Post a Comment