சித்தாந்த சிகாமணி திரு.க.வஜ்ஜிரவேல் முதலியார்

0




சித்தாந்த சிகாமணி திரு.க.வச்சிரவேலு முதலியார் - அவர்கள் வாழ்வியல் சிறப்பு !*                     ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

செங்குந்தர் குல தலைநாடாகிய காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ,

திரு.ஆ.கச்சபாலைய முதலியார் ,

திருமதி.க.அம்மா கண்ணு அம்மாள் தம்பதியருக்கு ,24-04-1906  அன்று திரு.வச்சிரவேலு முதலியார் அவர்கள் பிறந்தார்.                             காஞ்சிபுரம் பச்சையப்பன் (ஆண்கள் ) உயர்நிலைப் பள்ளியில்  படித்தார்.சென்னை  பச்சையப்பன் கல்லூரியில் 1929 - ஆண்டு B.A.படித்து,

சைதாப்பேட்டையில்    ,

1932 -ல் L.T. முடித்து ,B.A.L.T  -பட்டம் பெற்றார்.


திருமதி.அழகம்மையை மணம் புரிந்து ,

திரு.வேலரசு -வை பெற்றார்.

1930ம் ஆண்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்,உதவி ஆசிரியர் பணி ஏற்றார்.திருமதி.

அழகம்மை இறைவனடி சேர்ந்தமையால் - மறுமணம் மேற்கொண்டார்.1944-ஆண்டு திருமதி. ஞானாம்பாள் அவர்களை திருமணம் புரிந்தார்.

தம்பதியருக்கு முறையே -திருமதி.அபையாம்பாள் , திரு.V.திருஞானசம்பந்தன் , திருமதி.அல்லி ( எ) செந்தாமரை , திருமதி.சிவகாமி , திருமதி.சண்பகவல்லி ,திருமதி.ராஜகுமாரி ,திரு.V.நம்பிஆருரான் , திருமதி.சுந்தரி - ஆகியோர்கள் பிறந்தனர்.அனைவரையும் நலமுடன் , வளமுடன் வளர்த்து , வாழ வைத்தார்.


தருமபுரி ஆதினத்துக்குரிய மெய்கண்டார் தமிழ் கல்லூரியில் 1944 முதல் 1946 வரை முதல்வர் பணியாற்றினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்  1960- வரை உதவி ஆசிரியராக பணியாற்றி , பிறகு 6- ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1966- ஆண்டு பணி நிறைவு பெற்றார்.1965-ல் சிறந்த ஆசிரியருக்குரிய தேசிய விருதினை , (முன்னாள் )குடியரசு தலைவர். Dr.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பெற்றார்.

H.R.&C.E.- ஆல் தொடங்கப் பட்ட "சைவ சித்தாந்த பயிற்சி "நிறுவனத்தில் -1966 - அக்டோபர் 2- முதல் மார்ச் 31- வரை ஆசிரியர் பணி புரிந்தார்.

திருவாவடுதுறை ஆதின வித்தூவானாக -4-4-1969 முதல் 20-9-1975 வரை பணி புரிந்தார். 21.9.1975 முதல் 31.12.1981 வரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தானந்த துறையில் தனி அலுவலராக ( Special Officer ) பணி நிர்வகித்தார்.


காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேசுவரர் சுந்தராம்பிகை - சமேத ஆலயத்தில் தர்மகர்த்தா பணி புரிந்தார்.                              வடக்கில் காசி ,அலகாபாத் முதல் தெற்கில் திருநெல்வேலி மட்டும் அல்லாது கடல் கடந்தும் இலங்கை , யாழ்ப்பாணம் , ஆகிய இடங்களில் " சைவ சித்தாந்த செம்பொருள்" விளக்கிச் சொற்பொழிவும் , நூல் வெளியீட்டுப் பணியும் நிகழ்த்தியவர்.


திருக்குறள் பொதுமறை என்பதை ஏற்று, மெய்நெறி ,ஒழுக்க நெறி அமைந்துள்ள கருத்தை" திருக்குறள் உட்கிளை சைவ சித்தாந்தம் "- என்னும் தலைப்பில் -1951  ஆண்டு -சீர்காழி பதியில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சொற்பொழிவு வடிவில் வெளியிட்டார்.


மதுரை ஆதின கர்த்தராக சிறந்து விளங்கிய சீர்வளர் சீர் சோமசுந்தர தேசிகர் அவர்கள் " திருக்குறளின் உட்கிடை  சைவ சித்தாந்தம் " என்னும் தலைப்பில் நூலை ,1953-ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிட்டார்.

முனைவர்.தமிழறிஞர் .தமிழண்ணல் அவர்களால் சில மாற்றங்களுடன் 4-1-1979 அன்று வெளியிடப் பட்டது.

திருமந்திரம் -9-ஆம் தந்திரத்துக்கு விளக்க உரை திருவாவடுதுறை மடத்தின் ஆதினத்தால் வெளியிடப் பட்டது.

சைவம் சார்ந்த "குற்றால தல புராண உரை"- நூல் பழனி தேவஸ்தான வெளியீடாகியது.                 "திருக்குறள் துலக்கும் ஒழுக்க நெறி" - சென்னை பல்கலைக்கழக வெளியீடாகியது.              "சிவஞான மாபாடியம்"(ஆங்கில மொழி பெயர்ப்பு ) 1985 - ஆம் ஆண்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டது.


"சித்தாந்த சிகாமணி " எனும் பட்டம் 1942- ஆம் ஆண்டு , தருமபுரம் ஆதினம் வழங்கியது.சைவ சித்தாந்த கலைச்செல்வர் , சித்தாந்த ஞானபானு - என்னும் பட்டங்கள் சைவ நெறி வழிபாட்டு மன்றங்களில் வழங்கப் பட்டது.                                 காஞ்சி பீடாதிபதி. ஜகத்குரு.சங்கராச்சாரியார் சுவாமிகளால், இவரின் , திருமறை உரை எழுதிய விழுமிய தொண்டினைப் பாராட்டி ,காஞ்சி காமாட்சி அம்பாள் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்த 9-9-1984 - நாளில் “திருமுறை உரைமணி”என்ற பட்டம் வழங்கப் பட்டது.        பல்கலைக்கழகங்களில் பணியாற்றி , சைவ சித்தாந்த பேராசிரியராகவும் திகழ்ந்தார்.


தன்னை நாடி வந்து , ஞான தானம் பெற விரும்பியவர்களுக்கு வற்றாத , ஊற்று நீர் போல் , சித்தாந்த ஞான போதம் வழங்கினார்.சைவ நெறி மன்ற நிகழ்ச்சி அழைப்புகளையும் , திருக்கோயில் அழைப்புகளையும் ஏற்று ,சொற்பொழிவு , தனது இறுதி நாள் வரை வழங்கி வாழ்ந்தார்.

பரம்பொருளாம் சிவம் அருளால் - சைவ நெறி சைவ சித்தாந்தம் , உலகம் உய்ய பரவல் தந்தவர் -83 - வது அகவையில் ,10-3-1989 -ல்  மாசி மாத சதுர்த்தி அன்று சிவனார்  திருவடிகளை அடைந்தார்.                           சித்தாந்த சிகாமணி - திரு.க.வஜ்ஜிரவேலு முதலியார் - ஆத்மா - சைவ சித்தாந்தத்தில் ஒன்றி கலந்து - ஞானப்பேரொளியாக திகழ்கிறது ! அன்னாரின் திருவடிகளைப் போற்றி வாழ்வோம் ! நலமே- விளைக !                                                         ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தகவல் :-

“சித்தாந்த சிகாமணி "- திரு.க.வஜ்ஜிரவேலு முதலியார் - குடும்பத்தினர்.


சித்தாந்த சிகாமணி 

க. வச்சிர வேல் முதலியார் 


சிறப்பு பெயர்-சித்தாந்த ஞானபானு என்கிற இப்பெயர்-

யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் சங்கம் வழங்கியதாகவும் மதுரை திருஞானசம்பந்தர் திருமடம் வழங்கியதாகவும் கூறப்படுகின்ற இரண்டு தகவல் உள்ளது.  

அவர் நல்ல ஆங்கில புலமை  கொண்டவர் 

“சிவஞானமாபாடியம் “நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

பல ஆங்கில கட்டுரைகள் எழுதியுள்ளார்கள் . சித்தா என்ற வார்த்தையினை விளக்க  ஆங்கில சொற்களை பயன்படுத்துவது அவரின் பழக்கம். பல ஆய்வாளர்கள்  அந்த “சிவஞான மாபாடியம்”நூலை புகழ்ந்துள்ளனர். நுட்பமான விளக்கம் மிக உயர்ந்த  ஆங்கில நடை  என்கிறார்கள் 


கிரந்தம் எழுதவும்  படிக்க தெரிந்தவர்   என்றும் கூறப்படுகிறது . 

பல வடமொழி பாடலுக்கு தமிழில் விளக்கம் தந்துள்ளார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)