பாவடி தோப்பு என்பது பழம்பெரும் தமிழ் சமூகமான செங்குந்தர் கைக்கோளர் சமூகம் நெசவு செய்வதற்கு தேவையான பாவு நூல்களை சாயம் போடுவதற்கும், அளவு செய்வதற்கும் மற்றும் நெசவு நூல் உருவாக்குவதற்கும் பயன்படும் இடமே பாவடி நிலம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த பாவடி நிலங்களை அரசாங்கமோ (அ) ஒரு சமூகமோ அபகரித்தால் அதை சட்ட ரீதியாக எப்படி சந்திப்பது என்ற முறைகள் கீழே உள்ளது.
1. நம் சமுதாயத்திற்கு சொந்தமான பாவடி தோப்பு என்று நிரூபிக்க நம்மிடம் ஏதேனும் பத்திரம், பட்டா ஆதாரம் இருந்தால் அதை வைத்து தீர்ப்பு வாங்கலாம். சில ஊர்களில் உள்ள பாவாடி பத்திரங்களில் நம் சமுதாயப் பெயர் இல்லாமல் அந்தந்த ஊர் நம் சமுதாய நாட்டாண்மை காரர்கள் பெரிய தனக்காரர் பட்டக்காரர் போன்ற செங்குந்தர் சமூகத் தலைவர்கள் பெயருடன் செங்குந்தர் பாவடி (அ) பாவடி/தோப்பு என்று கூட இருக்கலாம்.
2. பாவடி தொடர்பான பத்திரங்கள் தொலைந்து போனாலும் அதை அக்காலத்தில் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அந்த ஆவணத்தை நகல் எடுத்துக்கொண்டு அதை வைத்து வாதாடி தீர்ப்பு வாங்கலாம்.
செங்குந்தர் பாவாடி தொடர்பான பாத்திரங்களும் இல்லை அதை பத்திரபதிவு அலுவலகத்திலும் பதிவு செய்யவில்லை என்றால் மற்றொரு வழி இருக்கின்றது அது என்னவென்றால்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எந்த இடத்திற்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று ஒரு பட்டியலை தயாரித்தனர். அந்தப் பட்டியலில் எந்தெந்த இடம் யார் பெயரில் வரி செலுத்துகிறது என்று அந்த வரிசையில் பார்க்கும் பொழுது செங்குந்தர் நெசவாளர்கள் பயன்படுத்திய சாவடிக்கு வரி கட்டும் போது அக்காலத்தில் நம் சமூக மக்கள் செங்குந்தர் பாவடி (அ) தோப்பு என்ற பெயரில் வரி கட்டி இருக்கிறார்கள். இது பாவடியை மீட்க ஒரு பெரிய ஆதாரமாகும்.
செங்குந்தர் பாவாடிக்கு வரி கட்டியுள்ளார் என்று ஆங்கிலேய கால ஆவணத்தை ஆதாரமாக வைத்து இது செங்குந்தருக்கு சொந்தமான பாவாடி தோப்பு என்பதை நிரூபிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று 1945 -1968 ஆண்டுக்கான "ஆ"ரெகிஸ்டர் "ஏ" பதிவுப் புத்தகத்தில் பாவாடி தோப்பு அமைந்துள்ள ஊர், சர்வே எண், தாலுகா ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் பாவடி தோப்புக்கு எந்தப் பெயரில் வரி கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதில் செங்குந்தர் பாவடி என்று இருந்தால் இதை ஆதாரமாக வைத்து அந்த பாவடி தோப்பு/ பாவடி ஆனாது செங்குந்தர் சமூகத்திற்கு சொந்தமானது என்று இதை ஆதாரமாகக் காட்டி தீர்ப்பு பெறலாம்.
இதுவரை எங்களுக்கு கிடைத்த 4 செங்குந்தர் சமூக பாவடி நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு நகல் கீழே உள்ள link இல் உள்ளது
👇🏻👇🏻
https://drive.google.com/folderview?id=15pmHaweGqsT0EJiN9OAZui33AlljTzb1
https://drive.google.com/file/d/14JFJv9wi9t4tm9bKjHl748aiYyQAm3g2/view?usp=drivesdk
ஈரோடு பவானி செங்குந்தர் பாவடி நிலம் தீர்ப்பு நகல்
பல்வேறு பாவடி நிலம் மற்றும் செங்குந்தர் சமூக வழக்கு தொடர்பான தீர்ப்புகள் கீழே உள்ள லிங்கில் காணலாம்.
https://www.casemine.com/search/in/Pavadi
இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த பாவடி நிலம் தொடர்பான தீர்ப்பின் நகல் ஏதேனும் தங்களிடம் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு எண்ணுக்கு அனுப்பவும் +91 78269 80901