நமது செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாறு பாரம்பரியத்தின்படி
நமது சமுதாயத்தின் தலைமை தலைவர்: மகா நாட்டின் ஆண்டவர் (காஞ்சிபுரம் மகா நாட்டு நாட்டாண்மைகாரர்)
இவருக்கு கீழே 72 நாடுகள்(அதாவது நான்கு திசை நாடுகள் உள்ளன, ஒவ்வொரு திசை நாட்டிலும் 17 கிளை நாடுகள், ஒவ்வொரு கிளை நாடுகளின் கீழ் 10 முதல் 50 கிராமங்கள்)
கிளை நாட்டு/கிராமங்கள் நிர்வாகத்தில் கீழே உள்ள பதவிகள்
தலைவர் என்பவர் நாட்டாண்மைக்காரர் அல்லது அம்பலம்/நாட்டார் என்று அழைக்கப்படுவார்
செயலாளர் என்பவர் பட்டக்காரர் என்று அழைக்கப்படுவார்
பொருளாளர் என்பவர் பெருதனக்காரர் என்று அழைக்கப்படுவார்
செயற்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் காரியக்காரர்கள் அல்லது கிராமணிஎன்று அழைக்கப்படுவார்
பொதுவாக ஒவ்வொரு கிளை நாட்டிலும் ஒரு நாட்டாண்மைகாரர், ஒரு பட்டக்காரர் ஒரு பெருதனக்காரர் மற்றும் 9 காரியக்காரர்கள் மற்றும் ஒரு சங்கோதி இருக்க வேண்டும்.
சில நாடுகளின் கீழ் இருக்கும் கிராமங்களை பொறுத்தவரை ஒரு கிராமத்தில் ஒரு நாட்டாண்மைக்காரர் மற்றும் ஒன்பது காரியக்காரர்கள் மற்றும் ஒரு சங்கோதி இருக்க வேண்டும்.
செங்குந்தர் நாட்டாண்மை சபை உருவான வரலாறு
"கடல்நாகை நள்ளாறு காராயல் கோளறியூர் மடனாக முத்தீனும் வான்மியூர் மரைக்கான முடனாகுந் தலமாறில் ஓறாறு வடிவு கொண்ட படனாக மதிவேணிப் பரஞ்சுடரை அமர்வித்தான்”
இங்ஙனம் அமர்வித்த விடங்கப் பெருமானுக்கு பிரம உற்சவம் முதலான பஞ்ச பர்வமும் நித்தியாராதனையுப் செய் வித்து சிலகாலம் செங்கோலோச்சி வாழ்ந்திருந்த பின்னர் முதன்மை பெற்ற வீரவாகு தேவர் முசுகுந்தச் சக்ரவர்த்தியை விளித்து வேந்தே எனது சண்முகக் கடவுள் அனுக்ரகித்த படியே ஓராயிர வருடமாக நாங்கள அனைவரும் தங்களிடம் இருந்தோம். இனி அக்காலம் முடிந்தபடியால் ஆறுமுகக் கடவுளை நோக்கி அருந்தவம் செய்து, கந்தவேள் வீற்றிருக்கும் கந்த மாஞ்சிலம் பிற்கேக வேண்டும் ஆதலால் விடையளிப்பீர் என்று வினவினர்.
(கந்தவிரத விலாசம்)
"மாயிருஞாலச் சக்ரவர்த்தியே கேளாய் இந்த ஞாயிரு குலத்தில்வந்து நாள்பல வரசுசெய்தோம் ஆயிரவருட காலமானதால் அனல்கண் ஆதி சேய்அறுமுகன் பொற்பாதம் சேர்ந்திட வேண்டும் இன்றோ”
என்று இவ்வாறு கூறிய வார்த்தையைக் கேட்ட முசுகுந்த மன்னர் வீரவாகு தேவர் ஆதியரை நோக்கி, மனுகுலம் தழைக்க வந்த மணி அனைய மாதவர்களே உங்களால் இது வரையில் யான் பெற்ற பேருதவிக்கு யான் என்ன பிரதி உப காரஞ் செய்வேன். ஆனதால் எனது குமாரன் அங்கிவன்ம னுக்குத் தங்கள் அருமைத் திருக்கரத்தால் திருமுடி சூட்டிக் களிக்க வேண்டும் என்ற விருப்பமுளதால் நீவிர்கள் திருவருள் சுரந்து அதனை முடித்து அருளல் வேண்டும் என்று இறைஞ்ச, வீரவாகு தேவர் தம் இளவலர்களோடு இதனை ஆராய்ந்து நன்றெனக் கொண்டு அங்கிவன்மனுக்கு அட்டமங்கலம் முழங்க ஆகம விதிப்படி அரசு முடிபுனைந்து மற்ற தம் புத்திர பவுத்திராதிகளுக்கு ஐம்பத்தாறு தேயங்களையும் எழுபத்தி ரண்டு நாடுகளாகப் பிரித்து அந்நாடுகளாகிய தாமரைக் கமலத் திற்குப் பொகுட்டுப் போன்ற காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு இளவரசாக அனகமூர்த்திக்கு பட்டாபிஷேகம் செய்து சிங்கா தனத்தில் எழுந்தருளச் செய்து முன்னொருக்கால் அத் தலத்திலும் மாதேவியர் பரமசிவனைக் குறித்து தவமியற்ற வந்த போது அப்பதியை நான்கு எல்லையாக வகுத்து கீழ்புறத் தெல்லையாகிய சிவபுரத்தில் நந்தி தேவரையும், தென்புறத் தெல்லையாகிய தொந்தி புரத்தில் கணபதியையும், மேற்புரத் தெல்லையாகிய விரிஞ்சீபுரத்தில் கந்த நாதரையும் வடபுரத் தெல்லையாகிய சோளிங்கபுரத்தில் வயிரவரையும் காவலாக வைத் திருந்த காரணம் கருதி நமது மாதா விதித்த வண்ணமே அரசாங்கம் விதிக்கத் தக்கது என நினைத்து அக்கமலத்திற்கு அகவிதழ் போன்ற மேற்றிசை, தென்றிசை, வடதிசை, கீழ்த் திசையாக நான்கு எல்லைகளுக்கும் முறையே சனகன், கௌமாரன், கஜகோளர், சிவசங்கரர் இவர்களுக்கு முடிசூட்டி இவ்விதமாக எழுபத்திரண்டு நாடுகளுக்கும் நாட்டாதிகாரம் கொடுத்து இதுவே உங்களுக்கு சத்திரியத் தொழிலாகும். ஆனால், காஞ்சிபுரம் மகாநாட்டில் ஆயிரத்து தொளாயிரவர் என்று சொல்லும் ஆண்டவர்களுக்கு இவ்வெழுபக்திரண்டு நாட்டிலும் உள்ள நம்மவர்கள் சாதி ஆச்சார அனுஷ்டானங்
களுக்குக் கட்டுப் பட்டு நடந்து கொள்ள வேண்டியது என்றும் நமது செங்குந்த ஜாதியில் வரும் வழக்குகளை நமது நாட்டினும் அல்லது திசை நாட்டினும் அல்லது நாடு எழுபத்திரண்டுக்கும் மகாநாடான காஞ்சீபுரம் மகாநாடு ஆண்டவர் இடத்திலும் சொல்லித் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது என்றும் கூறி, இவ்வுலகில் ஆகம விதிப்படியுள்ள பூத்தொடுத்தல், தைத்தல், ஓதுவித்தல், எழுதல், நெய்தல் ஆய ஐந்து வித சிறந்த தொழிலில் சிரேஷ்டமான நெய்தல் தொழிலையே சீவனாதார மாகக் கைக்கொண்டு நமது தமையரும் நம்குல தெய்வமும் ஆகிய சுப்பிரமண்யக் கடவுளைச் சதா சிந்தித்துக் கொலை களவுகள் காமம் பொய் முதலிய பஞ்சமா பாதகங்களை அறக் கடிந்து நீங்கள் யாவரும் சிவ சொரூபமாகிய திருவெண்ணீறு, உருத்திராக்கம். செபதபம், பஞ்சாட்சரம் முதலிய ஆச்சாரங் களை வழுவில்லாமல் அனுஷ்டித்து வரக்கடவீர் என்று திருவாய் மலர்ந்து ஸ்ரீ சிவபெருமான் கொடுத்த வீரவாள், பார்வதியார் கொடுத்த செங்குந்தம், வெற்றிச் சங்கம், கொன்றைமாலை, வில், அம்பு, அம்பராத் தூணி, கத்தி, கேடயம், டங்கா, வெங்கலக் கொம்பு, நகார் காகளம், பஞ்சவர்ணத் தாரை, லவண்டை, செயபேரிகை சண்முகதேவர் கொடுத்த புலிக் கொடி, கோழிக்கொடி, கமலைக்கேள்வன் கொடுத்த கருடக் கொடி, பிரமதேவன் கொடுத்த அன்னக்கொடி, முசுகுந்தச் சக்ரவர்த்தி கொடுத்த முத்துக்குடை, வெள்ளைக்குடை, மகுட தோரணம்,சாம்ராணிக் கலசம், பகல் தீவத்தீ, ஆறுகால் பீடம், தேவேந்திரன் கொடுத்த வாடாத மாலை, தேவ சிம்மா சனம் முதலான பல விருதுகளைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்து, 'குழந்தைகாள்! யாங்கள் கந்தமாதனம் செல்கின் றோம்' என்று கூறின வசனத்தைக் கேட்ட சிறார்கள் கலக்கம் எய்தி, ‘தந்தையீர்! யாங்கள் செய்யும் இளவரசைக் கண்டு, களிக்காமல் சண்முகக் கடவுள் அருட் பிரகாசத்தை விரும்பி கைலாயத்திற்குச் செல்லும் தங்கள் அடியிணையை இனி என்று காணப் போகிறோம் என்று ஏங்கின ஆயிரத்து தொளாயிர மக்களையும் பார்த்து வீரவாகு தேவர் சொல்லுவார். "என் கண்மணி அனைய மக்களே! கேளுங்கள், உலகத்திலுள்ள குகாலயங்கள் தோறும் சூரசம்மார உச்சவம் என்னும் மகோச் சவத்தை சிவாலயங்கள் தோறும் ஸ்ரீ கந்தநாதனுடன் நமது குலப்பிள்ளைகளில் ஒன்பது பேரை வீரவாகு தேவராக நியமித்து துலாமாசப் பூர்வ பட்சப் பிரதமை முதல் சஷ்டி வரையில் ஸ்தனான செபதப கங்கணத்துடன் சண்முகக் கடவு ளுடன் பிரதட்சணம் வரச்செய்து அவர்களை யாங்களாகப் பாவித்துத் துதிப்பிரேல், யாங்கள் அவர்கள் முகத்திலிருந்து நாங்கள் உங்களுக்கு காட்சி தருவோம். நாம் சூரபதுமனிடத் தில் தூது போன காலத்தில் சூரன் மகன் வச்சிர வாகுவைக் கொன்று அவன் முதுகுத் தண்டெலும்பை வீரமகேந்திரக் கோபுரத்தில் நாட்டி விளையாடினேன். அவ்வண்ணம் மகா ஸ்தலங்களிலுள்ள கோபுரத்தின் மேல் நமது நாடு 72 என்னும் கணக்குப்படி 72 அடியுள்ள ஒரு வேணுவினால் தம்பம் கொண்டு நாட்டி, நமது குலப்பிள்ளைகளில் ஒருவனைக் கொண்டு வந்து சோடச உபசாரப்படி அவனைப் பூசை செய்து யானாகப் பாவித்து அத்தம்பத்தில் ஏற்றி விளையாடக் கண்டு வணங்கி வாழக் கடவீர் என்று கட்டளை இட்டனர்.
(கந்த விரத விவாசம்)
"சூரனது சம்மாரம் தன்னை ஈசன் தூய தலத்தெல்லாம் நங்குகனாய் ஒப்பான் வீரர்களாய் இருந்தவரை யாங்கள் என்ன விழவாற்றிப் போற்றுங்கள் வருடந்தோறும் கோர வச்ரவாகு எலும்பைச் சூரன் ஊரில் கோபுரத்தில் நாட்டி விளையாடினேன் அக் காரணத்தால் அவ்வண்ணம் ஆற்றிப் போற்றிக் கண்மணிகாள் கண்டிருக்கக் கடவர்தாமே"
இவ்வாறு வீரவாகு தேவர் பிள்ளைசளுக்குச் சில நீதியைப் போதித்தனர். முசுகுந்தச் சக்ரவர்த்தியும் தனது குமாரனான அங்கிவன்மனுக்கு அரசுரிமை அளித்து சண்முகப் பெருமான் அருளால் கைலாயமடைந்தனர். பின்னர், வீரவாகு தேவரும்
இலட்டத்தெண்மரும் கந்தவேளை நோக்கித் தவம் செய்து மானவதனுவை நீக்கி தேவ தேகம் பெற்று கந்தமாதன பர்வத மடைந்து வேலாயுதத்தைத் திருக்கரத்தில் கொண்ட சண்முக தேவர் திருவடியில் வீற்றிருந்தனர்.
(கந்தவிரதப் படலம் 12 வது கவி )
துங்கமிகு முசுகுந்தன் தொல்கையிலை அடைந்த பின்னர் எங்கள்விறன் மொய்ம்பினனும் இலக்கருடன் எண்மர் களும்
தங்கள் சிறார் தமை விளித்து தத்தமது சிறப்பு நல்கி அங்கிவன்மன் பால்இறுத்தி அரியதவம் ஆற்றினரே"
(126வது கவி)
"மாதவம் எண்ணில் இயற்றி மானுடத் தன்மையை நீக்கி ஆதிதனில் அடல்எய்திய அருள்முறையால் அனைவர் களும்
மேதகுசீர் கந்தகிரி விரைந்தேகி வேல்கடவுள் பாதமலர் பணிந்தேத்திப் பத்திமை செய்து உற்றனரே"
இவ்வாறு வீரவாகு தேவர் முதலானவர்கள் கந்தமாதனம் அடைந்த பின்னர் அவர்கள் பிள்ளைகளான அனகன் முதல் ஆயிரத்து தொளாயிரவரும் காஞ்சீபுரம் மகாநாடு முதல் எழுபத்திரண்டு கிளை நாடுகளிலும் பிதா வாக்கிய பரிபாலன ராய் மனு நூல் வழாது அரசு செய்வதோடு செங்குந்த சாதி ஆச்சார கிர்த்தியங்கள் வழுவாது சுத்த ஆச்சார அனுஷ்டான நித்திநியதி தவறாராய்ப் பரமசிவன் முகத்துதித்த ஆதிசைவப் பிராமணர் போல் வாழ்ந்திருந்தார்கள்.
(கந்தவிரதப் படலம். 127வது கவி.)
“நூற்றொழி யீராயிரரில் நுவலும் இவர் சிறார் மறையோன் ஆறெழுமுன் மூவருண்ணரரு தொழிலேற்று அறநூலில் கூறுநெறி பிறழாக் கைக்கோளர் எனச் சிறந்தனரால் ஈறில் சிவன் முகத்துதித்த இருங்குரவரவர் ஈட்டம்போல்”
தில்லையில் அந்தணர் மூவாயிரவர் என்றபடி காஞ்சீபுரம் மகாநாட்டில் செங்குந்தர் ஓர் ஆயிரத்து தொள்ளாயிரவர் என்று இரட்டைப் புலவர் முதலிய பெரியோர்களால் புகலப் பெரும் பிரபாவத்துடன் தங்கள் தங்கள் மனைவியரோடு கூடி வாழும் நாளில் சிலகாலம் சென்ற பின்னர் அச்செங்குந்தர்கள் மனைப்புத்திராதிய சிற்றின்பத்தாலும் அன்னிய சாதிகுருத்துவத் தாலும் அவர்கள் வஞ்சகமாய்ப் போதிக்கும் உபதேசத்தாலும் பிறவிக்கேதுவாய் மாயையின் வசத்தராய் மயங்குவதை உணர்ந்த குகக் பெருமான், ஆதியில் வீரவாகு தேவர் முதலிய இளவலர்க்கு மானவ சரீரம் கொடுத்து மாநிலம் முழுதாள வேண்டித் தவஞ்செய்த முசுகுந்தச் சக்ரவர்த்திக்குத் துணைவ ராய் அனுப்பிய போது மற்றவர்கள் புத்திரர்களையும் மாயா வசத்தராகாமல் தாமே தடுத் தாட் கொள்வதாய் கட்டளையிட்ட படியே அவர்கள் புத்திர பவுத்திரர்களான ஆயிரத்தி தொளா யிரவர்-ளுக்குத் தாமே குருமூர்த்தமாகச் சென்று ஞானோப தேசம் செய்து மாயையிற் புகாமல் தடுத்தாட் கொள்ளவும் திருமேற்றளியாலத்தில் சாரூப பதத்தை வேண்டித் தவஞ் செய்யும் கமலைக்கேள்வர்க்கு அப்பதம் அருளவும் புத்தர் முதலிய புறச்சமயப் பூடுகளைக் களையவும் சைவப் பயிர் தழைத் தோங்கவுங் நினைத்து சீர்காழி யம்பதியில் திருஞான சம்பந்த ராகத் திருவவதாரம் செய்து சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகம் ஓதி சிவதரிசனம் செய்து புறச்சமயர்களான புத்தர்களை வென்று உலகமெங்கும் புகழ் பெற்றோங்கும் காமாட்சியம்மையார் தவம் புரிந்த பிரிதிவுத்தலமான மகா நாடென்னும் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தனர். அவர் வரவை அறிந்த அந்நகர வாசிகளான ஆயிரத்தி தொளாயிரவர் என்னும் உபசுப்ரமண்யர் புத்திரரான செங்குந்தர்களும் மற்று முள்ள ஏனையரும் வந்து எதிர்கொண்டு பணிந்து உபசரித் தார்கள். திருஞான சம்பந்த சுவாமிகள் அனேக அடியார் கூட்டங்களுடன் செங்குந்தரும் புடைசூழ திருமேற்றளி என்னும் சிவாலயத்தை அடைந்து சிவபெருமான் பேரில் தேவாரப் பதிகம் ஓதி, சங்காழியற்கு சாரூப பதமருளி அத்தலத் தருகில் அச்செங்குத்தர்கள் தமக்கு வகுத்த ஆலயத்தில் வீற்றிருந்து அச்செங்குந்தர் ஆயிரத்தி தொளாயிரவருக்கும் ஞானோபதேசம் செய்து புனிதராக்கிப் பக்குவம் வந்த சிலருக்கு ஆச்சாரிய அபிடேகம் செய்து அதுமுதல் இனி வரும் குலத்தின ருக்கு இனக்குருவான அவர்களையே உபதேசம் செய்துவரப் போதித்து அவ்வாதீனத்திற்கு 'ஆளவந்த வள்ளலார் ஆதினம்' என்று பெயர் கொடுத்து அச் சிவகுமாரர்களான செங்குந்தர் வசிக்கும் இடத்திற்கு தமது பெயர் விளங்க 'பிள்ளையார் பாளையம்' என்று வழிங்கவும் வீற்றிருக்கின்றனர்.
ஆச்சாரிய அபிடேகம் பெற்ற பிள்ளையார் பாளையம் ஆளவந்த வள்ளலார் ஆதீனம் கச்சபேசுர தசிகர் சதாசிவ தேசிகர் முதலான இனக் குருக்களிடத்தே அச்செங்குந்தர் உபதேசம் பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மகாநாட்டி லுள்ள அச்செங்குந்தர் ஆயிரத்து தொள்ளாயிரவரும் தங்கள் நாட்டில் வருவிவகாரங்களை தங்கள் குலதெய்வமும் குலக்குருவு மான திருஞானசம்பந்தர் சன்னிதியில் சபை சேர்ந்து பேசி முடித்து தீர்மானித்து வருகிறார்கள். இன்னம் இவர்கள் குலத் தில் வந்தவதரித்து வல்லானை வென்ற வீரன் நாராயணன் முதலிய துவாதச வீரரின் பெருமையை வல்லான் காவியத்தால் அறியவும்.
நமது சமுதாயத்தில் இந்த நாட்டாமை ஆட்சி முறை சட்டதிட்ட வரலாறு கீழே காணவும்
தமிழகத்தில் சேர, சோழ பாண்டியமன்னர் களிடம் படைவீரர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் வாழ்ந்த நம் செங்குந்த முதலியார் முன்னோர்கள் பின்னர் நெசவுத் தொழிலை மேற்கொண்டனர். விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் செங்குந்தர்கள் தங்கள் ஒற்றுமை குறையாவண்ணம் அவர்கள் குடியேறிய எழுபத்திரண்டு நாடு களையும் நான்கு திசை நாடுகளாக வகுத்து அவற்றின் நடுவில் அமைந்த காஞ்சிபுரத்தைத் தலைமை நாடாகக் கொண்டு கிராமம், கிளைநாடு, திசைநாடு, காஞ்சிபுரம் மகாநாடு என்று அமைத்துக்கொண்டு நாகரீகத்துடனும், ஈடுப்பாட்டுடனும் கல்வி, இறையன்பு முதலிய வற்றில் சிறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
இந்த முறை உருவான முக்கிய காரணம் நமக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை பிற ஆட்சியாளர்களும் சென்று தீர்வு காண்பதற்கு பதிலாக நம் தலைவரே நமக்கு தீர்ப்பு சொல்வது மேலும் பிறரால் நமக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த அமைப்பின் மூலம் மன்னர்களிடம் முறையிடுவதற்கு மேலும் நம் சமுதாயம் சார்ந்த கல்வி ஆன்மீகம் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இந்த நாட்டாண்மை அமைப்பு விஜயநகர பேரரசு அதாவது 600 ஆண்டுக்கு முன்பு காலத்தில் நம் சமுதாய முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.
உலகில் மனிதன் ஒற்றுமையாக வாழ நீதி நெறியும் முறையான தென்று அமைய வேண்டுவது இன்றியமையாத ஒன்றாகும். செங்குந்தரின் மேம்பாடுகளுக்கு அவர்களின் நீதி முறை செம்மையான தொன்றாக இருந்ததும் ஒரு காரணமாகும்.
செங்குந்தர்களின் குலத்தொழில் ஆதிகாலந் தொட்டு நெசவுத் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த செங்குந்தர் களுக்கு அவர்களின் பொது இடமாக அமைந்தது பாவடியாகும். பாவடி என்பது பாவு செய்யும் பரவலான இடம். தினசரி காலை பாவு செய்ய க்ஷை இடம் பயன்படும். பிறகு ஒவ்வொரு பொது நிகழ்ச்சிகளையும் அங்கு செய்து வருவர். பாவடியே செங்குந்தரின் வாழ்க்கைக்கு உயிர்நாடி. அத்தகைய பாவடியில் அமர்ந்து பொது மக்கள் அனைவரும் சேர்ந்து கலந்து பேசி முறையான ஒரு முடிவையே ஒவ்வொரு சிறு தகராறு களிலும் பெருவழக்குகளிலும் முடிவு செய்வர். செங்குந்தர்கள் தங்களுக் குள்ளேயே அவ்வாறான வழக்குகளைத்
தீர்த்துக் கொள்வதற்கு ஒரு நெறி முறையையே வகுத்திருந்தனர். தற் போதுள்ளது போல் அவர்களும் நீதியை முறையாகக் கையாண்டனர். அத்தகைய நீதிமுறையைக் காண்போம்.
செங்குந்தர் நீதிமுறைக்குத் தக்க படியும் வாழ்க்கை முறைக்குத் தக்க படியும் ஊர், மேலூர் கிராமம், கீலூர் கிராமம், நாடு கிளை நாடு என்று ஐந்து பிரிவாகக் கொண்டிருந்தனர்.
அது தாங்கள் வாழும் கிராம ஊரில் சொல்லப்பட்ட தீர்ப்பில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் உங்கள் கிராமத்திற்கு கிழக்கே உள்ள கீழூர் செங்குந்தர் கிராமம் நாட்டாமையிடம் சென்று தீர்ப்பு பெறலாம் அதுவும் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் கிளை நாடு தலைமை நாட்டாமை சபைக்கு சென்று முறையிடலாம் அதிலும் நமக்கு உடன்பாடு எட்டா விட்டால் கடைசி ஆக காஞ்சிபுரம் மாநாடு ஆண்டவர் நாட்டாமை சென்று முறையிட வேண்டும் (இது தற்போது உள்ள டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு )போன்ற ஆகும்.
ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்காரியங்களைக் கவனிக்கவும் நீதி செலுத்து வதற்கும் குடிமகன், நாட்டாண்மைக்காரர்,பெருதனக்காரர், காரியக்காரர் என்போர் உள்ளர்.
ஊர் நியாயத்தில் கலந்துக் கொண்டு தன் கருத்தைத் தெரிவிக்க ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் உரிமையுண்டு.
குடிமக்களில் திருமணமானவர்கள் காரியக்காரராகத் தேர்ந்தெடுக்கப் படத் தக்க தகுதி படைத்தவர்கள் குழந்தைகள் பெற்று பொறுப்புள்ளவர்கள் பெருதனக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்க தகுதி படைத்த வர்கள். ஊருக்குத் தக்கபடி ஒரு ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ ஊர்ப்பொதுக் கூட்டத்தில் பெரும் பாலானவர்கள் கூடி நாட்டாண் மைக்காரர்,பெருதனக்காரர், காரியக்காரர்களையும் ஆகியவர்களையும் தேர்ந் தெடுத்து வெற்றிலை பாக்கு கொடுத்து நியமிப்பார்கள், அவ்வாரக நியமிக்கப் பட்ட காரியக்காரர்களும் பெரியதனக் காரர்களும் நாட்டாண்மைக்காரர்களும் அடங்கிய ஊர்ப் பொது மக்களின் கூட்டத்தில் ஒருவர் வழக்குமுறை யிட்டால், ஊராரால் நியமிக்கப்பட்ட சங்கோதி என்றழைக்கப்படும் பொது ஊழியர் எதிர் தரப்பார்.- பிரதிவாதி யிடம் சென்று இன்னார் அவர் பேரில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்று அறிவித்து மேலும் குறிப்பிட்ட காலத் தில் அந்த வழக்கு குறித்து நியாயம் பேரி முடிவு செய்ய ஊர்க் கூட்டம் கூட இருப்பது பற்றியும் அறிவித்து ஊரிலும் பாவடிகளிலும் கூவி பறை சாற்றி விடுவார். குறித்த தேதியில் ஊர்க் கூட்டம் கூடிய பின் அக் கூட்டத்தில் பெரியதனக்காரர்கள், காரியக்காரர்கள், குடிமக்கள் சங்கோதி ஆகியவர்கள் முன்னிலையில் வாதி யும் பிரதிவாதியும் அவரவர் வழக்கு விவரத்தை முறையிடலாம். பின்னர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்யப் பட்டுத் தீர்ப்பு கூறப்படும். தீர்ப்பில் வாதி பிரதிவாதிகள் பேரில் கூறப்படும் அபராதமோ அல்லது தண்டனையோ கடுமையானதாக தென்பட்டால் அவர் தன் மார் பொது மக்கள் முன்பு டி தண்டனை என்னால் தாங்க முடியாது. சற்று குறையுங்கள் என்று மிகவும் வணக்கத்துடன் கேட்டுக் கொண்டால் அவர்கள் மீண்டும் கலந்து ஆலோசித்து தண்டனையையோ, தண்டணை காலத்தை குறைத்து மறுதீர்ப்பு வழங்வதும் உண்டு. அப்படி குறைக்கும்படி கொள்ளுவதற்குச் சபையைக் கொள்ளுதல் என்று பெயர்.
அந்தப்படி கூறப்படும் தீர் பேரில் அப்பீல் செய்துகொள்ள தீர் பினால் பாதிக்கப் பட்டவருக்கு உரிமைம் யுண்டு. அவர் அப்பீல் செய்துக்கொள் ரும் உரிமையை அப்போதே மிகவும் சொன்ன அப்போதே) தெரிவித்து கொள்ளுதல் மேவுதல் என்றழைக்க படும்.
சிறிது சிக்கலான வழக்காக இரும் பின் மேலூர்க்காரர்களையும் முறை படி அழைத்து மேலூர்காரியக்காரர் பெரியதனக்காரர்கள், அனுபவ மிக்க குடிமக்கள் ஆகவர்களையும் வைத்துக் கொண்டு நியாயம் பேசி முடி வெடு தலும் (தீர்ப்பு கூறுதல்) உண்டு.
க்ஷை தீர்ப்பின் பேரில் குறிப்பிட்ட காலாவதிக்குள் அந்த ஊர் எந்த நாட்டின்கீழ் உள்ளதோ அந்த நாட்டில் சங்கோதி, காரியக்காரர். பெரியதனகாரர், நாட்டாண்மைக்காரர் ஆகிய வர்களிடம் முறையிட்டு அப்பீல் விசாரிக்கச் செய்ய வேண்டியது பிறகு நாட்டிலிருந்து அப்பீல் பிரதி வாதிக்கும் தீர்ப்பு கூறிய ஊருக்கும் சங்கோதி மூலம் அறிவிப்பு கொடுக்க படும். அதன் பிறகு சம்மந்தப் பட்ட ஊர். மேலூர் முதலியவைகளின் பிரதிநிதிகளையும், மற்றும் நாட்டின் கீழ் உள்ள ஊர் பிரதிநிதி களையும் அழைத்து குறித்த தினத்தில் நாடு கூடும். அந்த அப்பீலுக்குச் சம்மந்தப் பட்ட தீர்ப்பின் நாட்டில்
வழக்கு பற்றி ஆதிமுதல் கேட்கப்பட்டு விசாரித்து நாட்டில் தீர்ப்பு கூறப்படும்.
நாட்டின் தீர்ப்பில் ஏற்பட்ட முடிவு படி அந்த நாட்டின் கீழுள்ள அனைத்து கிராமங்களிலும் அதே போன்ற வழக்கு களில் அதே போன்ற அமுலுக்கு வரும். முடிவு
நாட்டின் தீர்ப்பை முடிவானதாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் காஞ்சிபுரம் மகா நாட்டுக்கு அப்பில் செய்ய பாதிக்கப் பட்டவருக்கும், நாட்டுத் தீர்ப்பு ஊர்த் தீர்ப்பை மாற்றியிருந்தால் முதல் தீர்ப்பு வழங்கிய ஊருக்கும் உரிமை யுண்டு.
நாட்டில் நியாயம் பேசுவதானால் சிக்கலான வழக்குகள் மேல் நாடுகளையும். மற்ற சக நாடுகளையும் கலந்தோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளையும் அழைத்தோ நியாயம் பேசி முடிவு செய்து தீர்ப்பு கூறுவதும் உண்டு.
நாட்டின் தீர்ப்பின் பேரில் அப்பீல் செய்து கொள்வதென்றால் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மேவுதல் கேட்டுப்பெற வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் மகாநாட்டுக்கு அப்பீல் செய்து விடவேண்டும்.
மகாநாட்டுக்கு ஒவ்வொரு ஊரிலிருத்தும் நாட்டிலிருந்து பிரதிநிதிகள் உண்டு. மகாநாட்டுக்கும் நாட்டாண்மைக்காரர்கள், பெரியதனக்காரர்கள், காரியக்காரர்கள் உண்டு.
மகாநாட்டில் நியாயம் கொடுத்து விட்டால் இரு பார்ட்டிகளுக்கும் தீர்ப்புக்குச் சம்மந்தப்பட்ட ஊருக்கும். நாட்டுக்கும் முறைப்படி தெரிவித்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் மற்ற ஊர் பிரதிநிதிகளும் நாட்டுப்பிரதிநிதிகளும் அடங்கிய மகாநாட்டுக் கூட்டத்தில் மீண்டும் ஓடி வழக்கும், ஊர்த்தீர்ப்பும் நாட்டுத் தீர்ப்பும் விவாதிக்கப் பட்டு ஆராயப்பட்டு தீர்ப்பளிப்பார்கள். அத் தகைய மகா நாட்டுக் கூட்டத்திற்கு மற்ற மகா நாட்டுப் பிரதிநிதிகளும் அழைக்கப் படலாம்.
மகா நாட்டின் தீர்ப்புகளும், அனு சரிக்கப்பட்ட முறைகளும் அதன் கீழுள்ள நாடுகள். ஊர்கள் ஆகிய அனைத்திலும் பின்பற்றப்படும்.
இவ்வாராக செங்குந்தர்கள் தங்களுக்குள் ஏற்பட்டு வந்த சிறு பூசல் களையும் தகாறுகளையும் மற்றெல்லா வித சச்சாவுகளையும் தீர்த்து வந்திருக்கின்றனர் என்பது இப்போதும் சில ஊர்களிலும் நாடுகளிலும் மகாநாடு களிலும் கையாளும்முறைகளிலிருந்தும் தெரிய வருகிறது. மேற்கண்ட முறை களை நாம் பின்பற்றினால் நீதி மன்றங் களுக்குச் சென்று பல வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய தில்லை என்பதும்
நம்முள் ஒற்றுமை வளரும் என்பதும் திண்ணம்.
பொதுவாக நாட்டாண்மை, பட்டக்காரர் பெருதனக்காரர் போன்ற பதவிகள் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் மற்றும் காரியக்காரர்கள் பதவி மட்டும் சுழற்சி முறையில் அனைத்து குடும்பத்தை சேர்ந்த செங்குந்தர்களுக்கும் வரும்.
சரியாக செயல்படாத மற்றும் மக்களிடம் ஒற்றுமை குறைக்கும் பெருதனக்காரர், காரியக்காரர் மகாநாடு முறையிட்டு குடிமக்கள் மாற்றியும் உள்ளனர்.
சடங்குகள்: திருமண நிகழ்வுகளின் பொழுது அந்தப் பகுதியில் உள்ள நாட்டாமைக்காரர் அல்லது பெறியதன காரர்களின் ஒப்புதல் பெற்ற பின்பே திருமணம் நிச்சயம் செய்கிறார்கள்.சுப விசேஷங்களின் போது பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இந்த நாட்டார்மை காரர்கள் முன்னிலையில் தங்கள் மகன் அல்லது மகளை குறிப்பிட்ட வரனுக்கு மணமுடித்து வைக்க ஒப்புக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவர்களின் ஒப்புதல் பெறுகிறார்கள்.
துக்க நிகழ்வுகளின் பொழுதும் அந்தப் பகுதியில் உள்ள நாட்டாமைக்காரர் அல்லது பெரிய தனக்காரர் முன்னிலையில் ஈம சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். மேலும் உடல் நல்லடக்கம் முடியும் வரை அவர்கள் உடன் இருப்பார்கள்.
72 செங்குந்தர் நாடுகளின் பட்டியல்இலக்ஷ்ணக் குறவஞ்சி இன்றைய இலக்கியத்தில் செய்யுள் வடிவில் இருந்ததை decode செய்யப்பட்ட பெயர்கள் கீழே
செங்குந்தர் தலைநகர்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் & திருக்கச்சிமேற்றளி கோவில்
முதலாவது கிழக்கே சிவபுர நாட்டின் கிளை நாடுகள் 17
1 மேல் படப்பை கீழ்படப்பை. ஆத்தஞ்சேரி
2. மானாம்பதி, செம்பாக்கம், அகரம், மூணத்தொன்று
3. முன்னூர், பரமேச்சுர மங்கலம், மதுராந்தகம்
4. திண்டிவனம்
5. அக்கரைப்பத்து, மைலம்
6. திருவக்கரை, புதுச்சேரி, ஒழுகரை, கதிர்காமம்
7. திரிபுவனம், நல்லாத்தூர்
8. திருவதிகை, பாலூர்
9 இடையாற்றூர், திருவெண்ணெய்நல்லூர்
10 பனமலை, அனந்தபுரம்
11 வழுதலைப்பட்டு
12 மாப்பறை,ஆரூர்
13 பட்டினம், கருங்குழி
14 காட்டு மன்னார் கோயில்
15 பாளையம்
16 குப்பாக்கம். திருக்கண்டேச் சரம்
17 ஜம்பை, திருவரங்கம்
2ஆவது தெற்கே தொந்திபுர நாட்டின் கிளை நாடுகள் 17
1 முருகமங்கலம்
2 திருவாமாத்தூர்
3 திருவண்ணாமலை
4 வரத்தூர், செங்குறிச்சி
5 கச்சித்திடல்
6 விருத்தாசலம்
7 திட்டைக்குடி
8 திருமலைப்பாடி
9 திருக்கோவல்
10 திருநாகேச்சுரம் கும்பகோணம்
11 திருச்செம்பொன்பள்ளி
12 கோயில், சீர்காழி
13 மாப்பிள்ளைகுப்பம்
14 திருமருகல்(இதன் கீழே 18 கிராமங்கள் உள்ளன)
15 தேவூர், காட்டூர்
16 நல்லாச்சேரி, போலகம்
17 இராமேச்சுரம், குமரி
3ஆவது மேற்கே விரிஞ்சிபுர நாட்டின் கிளை நாடுகள் 17
1 ஆமூர், குடியேற்றம்
2 வாணியம்பாடி
3 கொறட்டை
4 தருமபுரி
5 பவானி
6 பூவேழ்நாடு (தாரமங்கலம்)
7 எழுகரை நாடு (திருச்செங்கோடு)
8 புகழாரை
9 பூரத்திரை
10 சேலம்
11 வையாபுரி நாடு,பழநி
12 அவிநாசி
13 நஞ்சுண்ட குடி
14 காவல்பாளையம்
15 கரூர், நத்தம்
16 கருகூர் காங்கேயம் சிவன்மலை, சென்னிமலை(தட்டயனாடு)
17 நாமக்கல்
4ஆவது வடக்கே சோழசிங்கபுர நாட்டின்(சோளிங்கர் எச்சான் கூட்டம் பங்காளிகள் பரம்பரை நாட்டாமை) கிளை நாடுகள் 17
1 திருத்தணி
2 கெளிநாடு
3 நெறிநாடு
4 திருவடி நாடு
5 திருமேழிசை
6 கொந்தம்பாக்கம்
7 திருக்காளத்தி, காளஹஸ்தி
8 தொண்டைமாநாடு
9 வரை நாடு
10 வேங்கடகிரி
11 திருப்பதி திருவேங்கடம்
12 ஜெகந்நாதம்
13 சீட்டம்பள்ளி
14 செம்புரம்
15 வரதபுரி
16 சந்திரகிரி
17 காசி, கயா, அயோத்தி, இமய நாடு
இலக்ஷ்ணக் குறவஞ்சி என்னும் தமிழ் நூலில் எழுதித்தரண்டு செங்குந்தர் நாடுகளின் பெயர்கள் உள்ளன. அந்த கீழே காணவும்:
![]() |
குடியாத்தம் மேல் திசை நாடு நாட்டாமை மகுடம் சூட்டும் விழா - 2016 |
அழிந்துபோன காஞ்சிபுரம் மகாநாடு நடவடிக்கை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கடைசியாக இருந்த பரம்பரை ஆண்டவர்வ்நாட்டமை பெயர் கள் கீலே உள்ளவை
1. திண்டுசார்ந்தான் திருநாத முதலியார் - செங்குந்தர் ஆண்டவர் நாட்டாமை 1800 - 1850 A.D
2.திருவேங்கட முதலியார் - செங்குந்தர் ஆண்டவர் நாட்டாமை 1850 - 1900
3.குமாரசாமி முதலியார் - செங்குந்தர் ஆண்டவர் நாட்டாமை- 1905
செங்குந்த முதலியார்கள் வாழும் பகுதிகளை 72 கிளை(District) நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு கிளை நாட்டிலும் இவர்கள் வாழ்ந்து வந்த சில கிராமங்கள் அடங்கும். 72 பிரிவுகளும் நான்கு திசை நாடுகளாகப் பகுக்கப்பட்டன. அவற்றிற்கிடையே ஏறக்குறைய மத்திய ஸ்தானத்தில் தலைநகர் அல்லது மகாநாடு காஞ்சிபுரமாக ஏற்படுத்தப்பட்டது. பல கிராமங்களிலும் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும், சமூகச் சட்டங்களை உண்டாக்குவ தற்கும் காலாகாலங்களில் கூட்டப்படும் எல்லாச் சமூகக் கூட்டங்களிலும் தலைமை வகிக்கும் பெருமை பெற்றிருந்ததோடு, எவ் விவகாரத்திலும் முடிவான அபிப்பிராயம் கூறும் அதிகாரத்தையும் 'மகாநாடு' உடையதாயிருந்தது.
அத்தகைய மக்கள் 72 பிரிவுகளிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அடங்கியதாகும். 4 பெரும் பிரிவுகளிலும், 72 சிறு பிரிவுகளிலும் ஒவ்வொன்றிற்கும் தத்தமக்குரிய இடங்களில் ஏற்படும் விவகாரங்களில் தீர்ப்பளிக்கும் பொருட்டுப் பிரதிநிதிக் கூட்டங்கள் கூடும் சுதந்திரமும் உண்டு. இச் சமூக ஆட்சியின் அங்கங்கள் கிராமங்களாகும். ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமப் பெரியதனக்காரர் தலைமை வகிப்பார். சுருக்கமாகக் கூறின், இந்த ஏற்பாடு முழுதும் பிரதிநிதிக் கூட்டங்கள் படிப்படியாக அமைந்த ஒரு பெரும் குடியாசின் தன்மையதாகும்.
கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக நூற்றாண்டுகளாக மிகவும் ஒழுங்கும், சிறப்பும் அமைந்த சுதந்திரச் சபைகளைக் கொண்டு அவற்றிற்குப் பழக்கப்பட்ட சமூகம் தென்னிந்தியாவில் செங்குந்த சமூகம் ஒன்றே இந்த ஆட்சி முறையின் அம்சங்கள் தற்காலத்திய தேசீய அலையினால் புறம்பே தள்ளப்படுகின்றன. ஆயினும், அவைகள் செங்குந்தர் கிராமங்களில் இன்னும் வழக்கத்திலேயே இருக்கின்றன.
செங்குந்தர் சமூக அமைப்பில் ஒரு கிராமத்தில் செங்குந்தர்களுக்குள்ளும் அவர்களுடன் சிறுபான் மையாக ஒத்து வாழும் இதர சமூகத்தவர்களுக்கும் ஏற்படும் குடும்ப சச்சரவுகள், பாகப் பிரிவினைகள், விவாகரத்து, கிரிமினல் வழக்குகள் எல்லாம் அந்தந்தக் கிராமங்களில் வசிக்கும் செங்குந்தர் குல கிராம மணியக்காரர்கள் அல்லது பெரிய தனக்காரர்களாலேயே பைசல் செய்து வைக்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் செங்குந்தர்களுக்குச் சொந்தமான கோயில், பொதுச் சொத்துக்கள் உண்டு. கோயில்களின் செலவு இனவரி மூலமும், பொதுச் சொத்துக்களின் வருமானத்திலிருந்தும் செய்யப்படும் இக்காலத்திலும் செங்குந்தர்கள் வசிக்கும் பல கிராமங்களில் மேற்சொன்ன திட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன.
கிராத்தினருக்கும் ஏற்படும் சமூகச் சண்டைகள் திசை நாட்டுத் தலைவராலும், ஒரு திசை நாட்டுக்கும் மற்றொரு திசை நாட்டுக்கும் ஏற்படும் சச்சரவுகள் காஞ்சி மகாநாட்டுத் தலைவராலும் தீர்க்கப்படும். சமூகச் சண்டைகளைத் தீர்ப்பதற்குத்தி திசை நாட்டுத் தலைவர்களும், காஞ்சி மகாநாட்டுத் தலைவர்களும் சச்சரவு உள்ள கிராமங்களுக்குச் செல்வர், ஒரு கிராமத்தினருக்கும் மற்றொரு
திசை நாட்டுத் தலைவருக்கும், மகாநாட்டுத் தலைவருக்கும் தனித்தனியே குறிப்பிட்ட விருதுகளும் மரியாதைகளும் உண்டு, 1905-ம் ஆண்டில் சமூகச் சண்டையைத் தவிர்ப்பதற்காகக் காஞ்சிபுரம் மகாநாட்டுத் தலைவர் குடியேற்றம் சென்றபோது நடைபெற்ற குதூகலமான வரவேற்பு ஒன்று அம்மகாநாட்டு நடவடிக்கைப் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீகாஞ்சிபுரம் மகாநாட்டாருடன் திசை நாட்டார்களும் நாயன்மார்களும் காட்டு மாணிக்கத் தாள் சகிதமாக புறப்பட்டுத் திரிவிரிஞ்சிபுரம் நாட்டைச் சேர்ந்த குடியேற்றம் ரயில்வே ஸ்டோடினில் இறங்கியதும் மேற்படி ஊரில் மயில முனிகந்தப்ப முதலியார் வகையறாக்கள் அளேக அதிர்வேட்டுகள் முழக்கி எதிர்வந்து அழைத்துக் கொண்டு ஸ்ரீ காஞ்சிபுரம் மகாநாடு ஆண்டவர் ஸ்ரீ திண்டுசார்ந்தான் திருநாத முதலியார் குமாரர் ஸ்ரீதிரு வேங்கட முதலியாரை முத்துப்பல்லக்கிலேற்றி நாட்டு மாணிக்கத்தாள்கள் இருபுறமும் இரட்டைச் சாமரம் போடப் பகல் தீவட்டி பிடிக்க பதினெண் கொடி பறக்க நாயன்மார்கள் கட்டியங்கூற நடனப் பெண்கள் திருத்தமாட பாண்டுவாத்தியம் ஒலிக்க அனேக மேள தாள சங்கீதவாத்தியங்கள் தாம் தாமென்று முழங்க மகா ஆடம்பரத்துடனே அலங்கரித்த வீதிகளின் வழியாய்ப் போய் மகா விநோத சிங்காரத்துடன் அலங்கரித்து இருந்த ஸ்ரீ கருப்புலீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் சகலரும் கொலுவமர்ந்தார்கள். அந்தக்காலத்தில் அனேசு கிளை நாட்டார்களும் கிளைக் கிராமத்தார்களும் ஆயிரக்கணக்காய் கூடியிருந்து மரியாதை செய்தார்கள் "
மேற்கண்ட மகாநாட்டுத் தலைவருக்குப் பிறகு அவரது புத்திரர் குமாரசாமி முதலியாருக்கு 1914-ம் ஆண்டில் காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேசர் ஆலயத்தில் வெகு விமரிசையாக மகாநாட்டுத் தலைவர் பட்டம் சூட்டப் பெற்றது. இவ்விழாவிற்கு 72- நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். குமாரசாமி முதலியார் குடும்பத்திற்கு ஆண்டவர் குடும்பம் என்று பெயர். இவர் காஞ்சிபுரம் காலஞ்சென்ற ம. சாமிநாத முதலியாருக்கு நெருங்கிய உறவினர், அதனாலும் காஞ்சிபுரத்தில் நிறைந்த செல்வாக்குடன் அதன் நகர சபைத் தலைவராகவும் மற்றும் அரசியல் உலகில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டு முக்கியப் பிரமுகராக இருந்தமையாலும் திருவேங்கட முதலியார். தமது அலுவல் முழுவதையும் கவனிக்கும்படி சாமிநாத முதலியாரையே கேட்டுக் கொண்டார்.
பெரும்பாலும் மகாநாட்டுக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கவும் சண்டை சச்சரவுகளைத் தீர்க்கவும் சாமிநாத முதலியார் தமது 18-ம் வயது முதல் செல்ல ஆரம்பித்தார்.
மகா நாட்டுத் தலைவருக்குரிய விருதுகளும், மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன.
குமாரசாமி முதலியார் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவர் தமது உறவினர் சாமிநாத முதலியாரே என்று கருதி, அவர் சமூக விஷயங்களில் சம்பந்தப்படாமல் இருந்து வருகின்றார்.
செங்குந்தர் சமூகத்திற்கே காஞ்சிபுரம் தலைநாடாகையாலும், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தொடங்கப்படும் முன்னர் சாமிநாத முதலியார் சமூகத் தலைவராகக் கருதப்பட்டு வந்ததனாலும் ஈரோட்டில் நடந்த முதல் மாநாட்டுக கொடியை ஏற்றுவிக்குமாறு அவரைத் தலைமைச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டார்கள்
அதுமட்டுமின்றி 1912-ல் தலைமைச் சங்கத்திற்கு ஏற்பட்ட காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலயக் கூட்டத் திலும் பிறகு, அவ்வப்போது செய்த முயற்சிகளிலும் பெரிதும் பங்கு எடுத்துக் கொண்டதனால் அவரை முதல்வராக வைத்து ஈரோட்டில் தமது முதல் மகாநாடு தற்கால முறைக்கேற்ப துவக்கப்பட்டது.
செங்குந்தர் புராணம் படி செங்குந்தர் நாட்டாண்மை சபை உருவான வரலாறு
![]() |
சேலம் நாடு பாவடி செங்குந்தர் |
![]() |
திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த முதலியார் நாட்டாமை |