திருவிரிஞ்சிபுரம் தர்மப் பட்டையம்
கு.பாபு, புதுச்சேரி
இடம்: புதுச்சேரி பிரெஞ்சு இந்திய கழகத்தின் ஓலைச்சுவடிக் காப்பகம்.
காலம்: சுபானு வருஷம், சகம் 1407; பொ.ஆ.1485
RE 43731 என சாசானம் என்ற பெயரில் செய்தி: தான எண்ணிடப்பட்டுள்ள சுவடிக் கட்டில் உள்ள மூன்றில் முதல் பட்டயம். வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மார்க்கபந்தீஸ்வரர் என்ற வழித்துணை நாதர் கோயிலில் வடகிழக்கு (ருத்ர திசை பகுதியில் அமைந்த கந்தப்பர் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டுக்கு அப்பகுதி சுமார் 40 ஊர்களைச் சேர்ந்த செங்குந்தர்கள் எழுதிக் கொடுத்த தர்மசாதனம் பட்டையம். தறி, மூக்கு குத்தின, நெய்யக்காரன், பாவோடு பிள்ளை, பணிக்கன், கலியாணம் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பணம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் கோயிலிருந்து அனுப்பப்படும் தாம்பூலம், பாக்கு, மர்யாதைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டியளவைகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த தர்மத்துக்கு விகாதம் பண்ணினவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் சொல்லப்பட்டுள்ளன. அன்றைய செங்குந்தர் சமூகத்தை அறிந்து கொள்ள நல்லதொரு ஆவணமாக இச்சுவடி விளங்குகிறது.
முன்பக்கம்
1.[குரு] நன்றாக உ
2. சொஷ்தஸ்ரீமன் மகா மண்டலேச்சபர மேதினி வெள்ளி மால்வரைக் காவல் கயிலா...
3.காவல் வீர வைகுந்தங் காவல் வேதமானகர் காவல் வீரரவர் வுலகு காவலறானவர்...
4. சன் மதுரை சிங்காதனம் துரை சிங்காதனம் சிரச் சிங்காதனம் படைத்தறான மாவடி சேவடி....
5. பாவடி படைத்துவறான கந்தன் சகோதரன் கடப்பமாலை அணிந்தவரான மென் மீசை படைவறா...
6. லானை வென்று வல்லான் தன் தேவிக்கு மங்கீலிய பீஷஷை யீய்ந்த வரான தேவே...
பின்பக்கம்
7. யை சிறை விடுவித்தவரான அலகுமாலை அருகுதி பீட்டி गए...
8. த்தவரான பஞ்சவறண விருது பஞ்சவற்ண்ணத் தாரை யிவை படைத்தவரான பசுவ சங்கர
9.க்கொடி சிம்மக்கொடி கெருடக்கொடி மயில்கொடி கோழிக்கொடி யிவைபடித்த...
10.ண்டியன் சிம்மாசனத்துக்கு யெதிர் சிம்மாசனம் யிட்டவரான காளியை கையிபிடித்தவரான ...
11. தேவிபாதச் சிலம்பில் களிக்கவே வந்தவறான அரிபூசை குருபூசை மறவாதவரான [க்ஷ]ரந்திக் குடுத்த...
ஏடு-2
முன்பக்கம்
(எண் 2 குறிக்கப்பட்டுள்ளது)
12. க்கு பாகத்தில் ஸ்ரீமன் அகிலாண்டகோடி பிறமாண்ட நாயகறான ஸ்ரீ மன் மாற்க சகாயர்...
13. ணிதிக்கு ருத்திர திக்கு பாகாத்தில் ஸ்ரீமன் கந்தப்பரர் சுப்பிறமணிய சுவாமியாருக்கு செங்குந்தர்...
14. கால பூசை நெவெத் தியத்துக்கு தற்ம்ம சாதனம் னாங்கள் யெழிதி குடுத்தது திரிவிரிஞ்சிபுரம் னா...
15. மேல்முகம் பேருர் நல்லூர் கீழ்முகம் பேருர் திருப்பாகடல் வடக்கு மையீ மண்டல துற்கம் தெற்கு கலவையி
16. க்கு சேந்த பலவூர்கள் னாங்கள் எழிதி குடுத்தது சாலிவாகன சகாப்பதம் 1404க்கு மேல் செ
பின்பக்கம்
17. ல்லா நின்ற சுபானு வரு மேஷ நாயத்து பூர்வ பக்ஷத்து திசமியும் சோமவாரமும் [மக]
18. நக்ஷத்திரமும் அமுற்த யோகமும் பாலவாகரணமும்பெத்த யிப்படி கொத்த சுபதினத்தில் னா
19. ட்டுக்கு சேந்த மேலமுகம் கிழமுகம் பலவூர் னாங்கள் அனவரும் யெழி திகுடுத்த தற்ம சாதனம் கிரஹாமும்
20.விரிஞ்சிபுரம் னாட்டுக்கு சேர்ந்த காமாக்ஷயம்மன் பேட்டை தரணப்பன் பேட்டை பூதுப்பேட் 21. அமுற்தப் பேட்டை பூதுவூர் செரிவெட்டு வாணம் பேட்டை பள்ளி கொண்டை பசுமாத்தூர் கவுசம்பட்..'
48-3
முன்பக்கம்
தன் 3 குறிக்கப்பட்டுள்ளது)
22வழுத்துனாங்குப்பம் மூட்டு ரகானம்யபட்டு மாளியப்பட்டு மனமடங்கி செஞ்சி சீத்தப்பாரை ..
25. தேரி யரும்பாக்கம் சாப்பறாப்பேட்டை செதுவாலை வல்லண்டறாம் சூரசையிதாப் பேட்டை கீழ்முகத்துக்கு
சேந்த பெருர் திருப்பாகடல் யிதற்கு சேந்த பலவூர் சாத்தம் பாக்கம் மல்லூர் கலவை தி (மிரி) விளாபாக்கம்
25. ஆனைமல்லூர் ஆயலம் வன்னிவெடு பூட்டுத்தாக்கு திருவலம் லாலாப்பேட்டை மையீமண்டல
26. துறகம்சுகுகெரி காங்கநல்லூர் சத்துவாச்சேரி யின்னம் யிருக்கபட்ட சில்லரை கிறாமமங்கள் நாங்கள்
பின்பக்கம்
27. அனவரும் தேவதாசீகள் முதலாகபட்ட பேர்களும் நெய்யக்காரரும் பணிக்கன் பாவோடும்
28.பிள்ளைகள் நாங்கள் அனைவரும் எழிதி குடுத்த கந்தப்பார் சுவாமியார் அவர்களுக்கு எழிதி குடுத்த
29. தற்மம் சாதனம் தறி ஒன்றுக்கு ருவ (5 %) ம் மூக்குகுத்தின (5%) ம் நெய்யக் காறனுக்கு 51/8ம் பாவோ
30.ரும் பிள்ளை ஒண்றுக்குதூணி 3 பணிக்கனுக்கு5 மா காணி ம் கலியாணத்துக்கு னாட்டுக்கு பாக்கு அனுப்பினால் முதல் தாம்
31. பூலமும் கலியாணத்துக்கு பத்து மரக்கால் அரிசிக்கு மரக்கால் அரிசியும் கலியாணத்து தெக்ஷனைம் முத்து காண.... (பணம் 4ம்)
0-4
முன்பக்கம்
எண் & குறிக்கப்பட்டுள்ளது)
32. ரெட்டைப்படி தாம்முலமும் சங்கறாந்தி பொங்கல் பானைக்கு அரிசி சேர %ம் துலாம் % -யிந்தப்படிக்
33. குநாங்கள் அனவரும் தற்மசாதனப் படிக்கு வருஷ வறுஷந்தோறும் நடபிச்சு கொண்டு வருகுறோம்
34. யிதுக்குயாதமொருவன் வீகாதம் பண்ணினானேயானால்
நிறுத்தி சுவாமி யினுடைய
35. முத்தரை போட்டு ஆனையிட்டு திருத்தவும் யிதுக்குகே விட்டால்னா...பெரு...
36. வாங்கி குடுக்கிறது மடத்தில் கூட்டம் கூடினம் நம்முடைய குல குரு கந்தாப்பாசுவாமியை பூசை பண்ணு
37. குற குருசுவாமி வந்து பிறகு யெப்பேசும் பேசுகுறது பேச்சே நேரஞ் சுமந்த கட்டு காணிக்கையும் பச்சவட
பின்பக்கம்
38. மும் கந்தப்பர் சுவாமிக்கு சேத்து உச்சவம் நடப்பிக்குறது. உள்ளுர் நாட்டிலே பொங்கல் சீ
39. பத்துக்கு தெக்ஷனை 5 % ம் கொண்டுவந்து கந்தப் பாருக்கு தெக்ஷனை வைச்சு நமஸ்காரம் பண்
40. ணி சிலவு வாங்கி கொண்டு போறது பொ(யொ)?ண்ணை யலங்கெத்துபடிக்கு
41. அபிக்ஷெம் பண்ணி சுவாமிக்கு தெக்ஷனைம் முத்து காண பணம் -3 (மூன்று) யிந்தபடிக்கு குடுத்து சுவாமி சன்னதிக்
42. கு போயி வலங் கெத்துபுடி பண்ணுகுறது செங்குந்தர் குலத்தில் ஆதாமொருவர் ஆவது ஸ்ரீம
43. ன் அகிலாண்டகோடி பிறமாண்ட னாயகறாகறாகி மார்க்க சகாய யீசுவர சுவாமியாருக்கு ஒரு ருப்பா
ஏடு-5
முன்பக்கம்
(எண் 5 குறிக்கப்பட்டுள்ளது)
44. யீக்கு அபிஷெகம் பண்ணினால் ஸ்ரீமன் கந்தப்பா சுவாமியாருக்கு பண்ணிவிக்கு ( (54) குடுத்து அபிஷெகம்
45. றது யிந்தபடிக்கு நாங்கள் அனவரும் தற்ம சாதனம் யெழிகி குடுத்தோம் யிதுக்கு யாதாமொருவன் விகாதம் பண்
46, ணினாயாமாகில் குரு துறோகம் பிரம்ம துறோக மாகும் துறோகம் பிதுற் துறொகம் சிவத் துறோகம் காசியின்
47. கெங்கைக் கரையிலே காரம் பசுவை கொண்ண தோஷத்தில் போறோம் யெழிதின நன்மைக்கு