முதலாம் குலோத்துங்க சோழன்(1070) காலத்தில் இருந்த என்ற அபிமான பூஷண தெரிந்த கைக்கோள படையின் தாண்ட நாயகன் அதாவது சேனாதிபதி,அரயன் பூங்கழலன் என்ற குலோத்துங்க சோழ பல்லவரையன், சோழர்கள் பலமாக இருந்த முதலாம் குலோத்துங்க காலத்தில் கைக்கோளற்கு பல்லவரையன் என்ற பட்டம் வருவதால், இந்த கல்வெட்டு சிறப்பு வாய்ந்தது.
கல்வெட்டு summary:
கங்கைகொண்டசோழ வளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூரைச் சேர்ந்த அபிமான பூஷணத் தெரிந்த கைக்கோளர் படையின் தண்டநாயகம் அரயன் பூமாங்கழல் என்கிற குலோத்துங்க சோழப் பல்லவரையன் என்பவன் இவ்வூர் அழகிய தேவர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 11 காசுகளைத் திருவுண்ணாழிகைச் சபையாரிடம் அளித்துள்ளான். திருவுண்ணாழிகைச் சபையார் காகளைப் பெற்றுக்கொண்டு 96 ஆடுகளை வாங்கி விளக்கெரிக்கத் தேவையான நெய்யினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
Reference: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 20 விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 2
https://udhayam.in/inscription/tnarch/1590090?location=Viluppuram-Viluppuram-ThiruvamaAttur