சிதம்பரம் தில்லைநாயக முதலியார்

0

 

சிதம்பரம் என வழங்கும் தில்லை நகரை அறியாத தமிழர் ஒருவரும் இல்லை. சைவர்களுக்கு முதன்மையான தலம் தில்லையேயாகும். அங்கு ஐந்தொழிற் கூத்தாடியருளும் நடராசப் பெருமானுக்கு அன்றாடம் நடக்கும் ஆறுகால பூசைகளில் முதன்மையாகக் கருதப்படும் காலை சந்திப்பூசை தென்னாட்டிலுள்ள செங்குந் தப் பெருமக்களால் சிதம்பரம் வெல்லப் பிறந்தான் முதலியார் குடும்பத்தவர் மூலமாகத் தொன்று தொட்டுச் செய்யப் பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகட்கு முன்னரே இக்காலை சந்திப் பூசையைச் செங்குந்தர்கள் ஏற்றுக் கொண்டு ஆண்டு தோறும் தலைக்கட்டுக்கு இவ்வளவு பொருள் தர வேண்டுமென்று கட்டுப் பாடான ஏற்பாடுகள் செய்து அக்காலத் தில் தில்லையில் செங்குந்த மரபில் தக் கோராய் விளங்கிய வெல்லப் பிறந்தான் முதலியாரும் அவர் வழிவருவோரும் மேற்படி ஏற்பாட்டின் படி பொருள் தண்டி இப்பூசையை நடத்தி வரவேண் டும் எனத் திட்டம் வகுத்து வைத்தார் கள் இப்பொறுப்புள்ள பெருஞ் சிவத் தொண்டை ஏற்றுக் கொண்ட பெரியார் குடும்பத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன் தில்லைநாயக முதலியார் ர் என்னும் பெரி யார் ஒருவர் தோன்றினார். இவர் இப் போது மேற்படி காள காலை நடத்தி வரும் ளையை முதலியாரது பெ சந்திக் கட்ட சிதம்பரநாத தந்தையாராவார். சிதம்பரம் ஈசானிய மடம் இராம லிங்க சுவாமிகளின் மாணவராய இவர் தமிழ்த்தாய்க்கும் சைவத்திற்கும் இளமை யிலிருந்தே தொண்டாற்றி வந்தார். பல சைவ சித்தாந்தக் கூட்டங்களிலும் அரிய சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவர் தமிழறிஞர் பலராலும் பாராட்டப்பெற் சிதம்பரத்தில் செந்தமிழ்ச் சங்கம் என்னும் ஒரு தமிழ்க் கழகம் நிறுவி அதன் துணைத் தலைவராகவிருந்து, பல மாணவர்கட்குப் பாடஞ் சொல்லி வந்ததோடு சென்னை அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழகராதிக் குழுவின் கெளரவ உறுப்பினராகவும் இருந்து வந்தார். மேலும் நாவலர் சைவப் பிர காச வித்தியாசாலையில் பண்டித வகுப் பில் நாடோறும் ஒன்றிரண்டு மணி நேரம் ஊதியமின்றிப் பாடஞ் சொல்லி வந்தார். தில்லைநாயக முதலியார் சிதம்பரம் குமரவேள் மும்மணிக் கோவை யென் னும் அரிய சித்தாந்தக் கருத்துக்களடங் கிய நூலொன்று இயற்றியுள்ளார். இந் நூல் திருவாங்கூர் பொன்னம்பலம்பிள்ளை, தில்லைத் தீட்சிதர்கள், மகாமகோபாத்தி யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி கள் ஆகிய ஆகிய பெரியோர்களாற் பாராட்டப் பெற்றிருக்கிறது. திருநாரையூர் முத்துக் குமரப்பிள்ளை, வேலூர் ஊரீஸ் கல்லு கல்லூரித் தமிழாசிரியர் சி.எஸ். இராஜாப்பிள்ளை, காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலை பள்ளி தமிழாசிரி யர் ஏகாம்பர ஐயர் என்னும் வீரசைவர் நாவலர் கலாசாலை யா சிரியர்களான வேங்கடாசலம்பிள்ளை, கிருட்டினமூர்த்தி ஐயர் முதலிய பலர் நமது முதலியாரு டைய மாணாக்கர்களாவர். ாவர். தமது குடும் பத்து முன்னோர்களைப் போலவே தில்லை நாயக முதலியாரும் அடியார்களையும் புலவர்களையும் அன்போடு போற்றி யும் ஆதரித்தும் வந்தார். காஞ்சி நாகலிங்க முனிவர் முத்து விழா மலரிலிருந்து எடுக்கப் பெற்றது.







Post a Comment

0Comments
Post a Comment (0)