ஸ்ரீமான் சாந்தா. ரா. தங்கவேல் முதலியாரவர்கள் பல்லாற்றானுஞ் சிறந்த காஞ்சியம்பதியின் மேற்றிசையில் ஒன்பது மைல் உள்ள பனைப்பாக்கத்தில் இருநூற்றெண்பது ஆண்டுகட்கு முன்னிருந்து புகழும் மேம்பாடும் படைத்தொளிரும் தொன்மை கலஞ் செறிந்த ஒரு செங்குந்த குலக் குடியின் வழிவந்த தோன்றலார் ஆவர். இவர் தையார் திரு. சாந்தா. ராமலிங்க முதலியாரவர்களின் பெயர் மிகப் பிரசித்தி பெற்றதாகும். இவருக் குச் சௌகார் என்ற அரசாங்கப் பட்டமும் உண்டு, இவர்தம் குடியானது தொன்றுதொட்டு வரும். செல்வ வளப்பம் உடையதாகும். தமிழ் வித்வான் களை ஆதரித்துத் தமிழையும் சையத்தையும் வளர்த் தல் இவர் குடும்பத்திற்கு இயல்பாகும். இவர்கள் முன்னோர்களால் செய்குக்தர்களுக் கெனத் திருத் தணியில் கட்டப்பட்ட மடம் இன்றும் நம்மவர்கட் குப் பெரிதும் வசதியளித்து நிற்கின்றது. திரு.ராம லிங்க முதலியாரவர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு(இன்றைய மதிப்பிற்கு 20 கோடி ரூபாய்) மேற் பட்ட தமது சொந்த திரவியத்தில் தம்மூரில் ஒரு பெரிய காளத்தீஸ்வரர் சிவாலயம் எடுப்பித்தனர். அவ்வாலயத் திற்கு இன்றும் சித்திய கைமித்திக, விசேஷ பூசை களும் திருவிழாக்களும், இவர்கள் குடும்ப திரவி யத்திலிருந்து நடத்தப்பட்டு வருவதொன்றே இவர் கள் குடி சைவத்தை வளர்க்கும் இயல்புடையதென் பதை என்கு விளக்கும். இவர் தந்
திரு. தங்கவேல் முதலியாரவர்கள் காஞ்சிபுரத் தில் ஒரு பிரபல பிரபல வியாபாரியாவார்கள். இவர் ஐர் தாண்டுகளாகக் காஞ்சிபுரத்தில் சிவாலயங்களுள் தலை சிறந்ததாகிய ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலய தர்மகர்த்தராக இருந்து சமயத் திருப்பணி ஆற்றி வருகிறார். பல ஆண்டுகளாக ஜில்லா போச்டு தாலூகா போர்டுகளில் அங்கத்தினராக இருந்து பொதுால சேலை லை செய்து வருகிறார். இவர் மிகு ந்த பொறுமையும் கற்குணமும் வாய்ந்தவர். இவர் செல்வத்தால் மிகவும் உயர்த்தவராயினும் யாவ ரும் எளிதில் கண்டு பேசுதற்குரிய நிலையில் இருப் பவர். இவர்களாலே கம் சங்கமும் செங்குந்த சமூக மும் மேனியை யடையுமென்பதில் ஐயமில்லை.
காஞ்சிபுரம் தங்கவேல் முதலியார் என்ற நிலக்கிழார், செல்வந்தர் குடும்பம் இருந்தது. அவர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே பல உதவிகளை செய்தவர். பலமுறை தனது சொந்த காரில் சென்னைக்கு அண்ணா அவர்களை அழைத்து சென்றவர் என்ற தகவல். சிறு காவேரிப்பாக்கம் என்ற கிராமத்தில் தங்கவேல் முதலியார் அவர்களுக்கு சிலை கூட இருந்தது. ஆனால் பணபாக்கம் தங்கவேல் முதலியார் என்பவரும் காஞ்சிபுரம் தங்கவேல் முதலியார் என்பவரும் ஒருவரா அல்லது வேறு வேறு நபர்களாக என்பது தெரியவில்லை.
அவரது மகன்திரு S.R.T சம்பந்த முதலியார் (பெரியப்பா)அறிஞர் அண்ணாவுடன் காஞ்சிபுரத்தில் படித்தவர். திருS .T.ராமலிங்க முதலியார் (பெரியப்பா)சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி. அவரது மகன் டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி திரு.சுதாகர் (தம்பி)மணிப்பூர் தலைமை நீதிபதி.
கூட்டம் பெயர்: கண்டி கோத்திரம்
குலதெய்வம்: பனப்பாக்கம் எல்லையம்மன், திருத்தணி முருகன், காளஹஸ்தி ஈஸ்வரர்