தொன்று தொட்டு நாட்டாமை சபைகள் மூலம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் வாழும் பகுதிகளை 72 ஆக(நாடு/District) பிரித்து உள்ளனர்.
அந்த 72 நாட்டின் ஒன்றனா திருமழிசை நாடு (தற்போது உள்ள சென்னை மாவட்டம்) செங்குந்தர் நாட்டாமை சபையின் கீழ் உள்ள 18 பாவடி ஊர்கள் கீழே காண்க. இதன் மூலம் சென்னை மண்ணின் பூர்வ குடிகளில் ஒன்றானது இந்த முதலியார் சமூகம் என்பது உறுதியாகிறது. சென்னை மாவட்டத்தின் உண்மையான பூர்வ குடிகள் செங்குந்த முதலியார், வன்னியர், வேளாளர் மற்றும் பறையர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பிற ஊர்களில் இருந்து பிரிட்டிஷ்/இந்திய குடியரசு காலத்தில் குடியேறியவர்கள்.
1. திருமழிசை
2. வடதிருநாகேஸ்வரம்
3. திருமயிலாப்பூர்
4. திருக்காரணி
5. மாம்பலம்பேட்டை
6.தோப்பேட்டை
7. திருவல்லிக்கேண
8. சென்னைப்பட்டினம்
9. சிந்தாதிரிப்பேட்டை
10. எழும்பூர்
11. புதுப்பேட்டை
12. ஆலந்தூர்
13. அனகாபுத்தூர்
14. திருநீர்மலை
15. மூன்றாங்கட்டளை
17. பம்மல்
16. மேப்பூர்
18. காரணீஸ்வரன்பேட்டை
திருமழிசை நாடு செங்குந்த முதலியார் சமுதாயத்துக்கு சொந்தமான கோவில்கள் கீழே உள்ள பட்டியலில் காண்க
நமது கோயில்கள்
1.நம் செங்குந்தப் பெருமக்களால் பரிபாலிக்கப்பட்டு வரும் நம் மாவட்ட சங்கத்தின் எல்லைக்குள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கள்
(a) திருமழிசை அருள் மிகு ஒத்தாண்டேசுவரர் திருக்கோயில்
மக்கள் தம் அன்பைக் கொட்டு வதற்கும் துன்பத்தைப் போக்கிக் கொள் வதற்கும், இன்னலைக் குறைத்துக் கொள்வதற்கும், தங்கள் துன்பச்சுமையை இறக்குவதற்கும் உரிய இடம்தான் திருக் கோயில்கள்.
மக்களின் ஒற்றுமையின், ஒருமைப் பாட்டின் சின்னமாகத் திகழ்வதுதான் திருக்கோயில்கள்.
அத்தகைய திருக்கோவில்களில் ஒன்று தான் திருமழிசை திருக்கோயிலாகும். ஒத்தாண்டேசுவரர்
அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருப்பெயர் ஒத்தாண்ட ஈச் சுரர்; இறைவி திருப்பெயர் குளிர்ந்த நாயகி அம்மன் என்பர்.
மனோனுகூலேசுவரர் என்றும் சீத னாம்பிகை என்றும் வட மொழியில் அத்தெய்வங்களை இப்பெயர் இட்டு அழைப்பர்.
இத்திருக்கோவில் சோழர் காலக் கோவில் என்பதற்கு இதன்கண் உள்ள கல்வெட்டும் தலபுராணமும் சான்றாகும்.
சோழர்காலக் கோவில் என்பதற்கு இத்தலத்தில் இறைவன் காட்சி தந்து வெட்டுண்ட கையை மீண்டும் அவன் அருளால் பெற்றவன் சோழன் கரிபெரு வளவன் என்பர். கரிகால் பெருவளத் தான் என்றும் கரிகாற் சோழன் என்றும் அழைப்பது காவிரிக்கு, கல்லணை சுட்டி யவன் பெயரேயாகும். அவன் பெய ரைத் தலப் பெருமை நினைவு படுத்து வதால் இது சோழர் காலக்கோயில் என்க.
யானை படுத்திருப்பது போன்று யானை முதுகு போன்று மூலத்தான அடிபீடம் அமைய மேல் கோபுரம் அமைந்
துள்ளதால் இதை கஜப் பிரஷ்டம் என் றும் களிற்று நிலை என்றும் கூறுவர். இத்தகைய அமைப்பு சோழர் கால அமைப்பாகும் என்பதால் இது சோழர் காலத்தது என்க. இது போன்ற அமைப் புடையதே. திருவேற்காடு வேதபுரீசுவரர், திருமுல்லைவாயில் மாசிலாமணி ஈசுவரர் திருக்கோயில்களாகும்.
கோயில் தலபுராணம்
கரிபெருவளவன் சிவதரிசனத்தின் பொருட்டு யானையின் மீதமர்ந்து, திரு மழிசை என்னும் புவிசாரம் நிறைந்த சிவதலத்தில் வருங்கால், இறைவன் அவ் வரசனை ஆட்கொள்ள வேண்டி யானை அடிசிக்கிய ஊனாங் கொடியின் கீழ், அரசனது உடைவாள் வெட்டுப்பட்டு தான் தோன்றியாய் வெளிப்பட்டவர். இத்தலம் அறுபத்து நான்கு சுயம்புலிங்க மூர்த்தங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
ஊனாங் கொடியை வெட்டிய உடை வாள் அரு உருவ வடிவாகிய லிங்கத்தின் மீதுபட இரத்தம் கசிய, அதைக் கண்ட சோழன் தன் கையை வெட்டிக் கொள்ள, அன்பின் மிகுதியைக் கண்ட ஈசன் ஒத்து ஆட்கொள்ள, கை தந்து காட்சி தந்தார். அதனால் இத்தலத்தில் ஈசன் ஒத்து ஆண்டவர் என்று அழைப்பர். பெயர் ஒத்தாண்டேசுவரர்
கீழ்வரும் பாடல்கள் இத்தலத்தின் பெருமையை உணர்த்துவதைக் காண்மின்.
"காண்பார்க்குங் காணலாந் தன்மை யனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற்- காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற வரன்”
2. திருநாகேசுவரம் (குன்றத்தூர்) அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக் கோயில்
தமிழகத்தின் தலைநகரான சென் னைக்கு 16 கல் தொலைவில் குன்றத்தூர் (திருநாகேசுவரம்) அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப் பெயர் நாகேசுவரர் என்பதாகும். இங்கு அமைந்திருக்கும் ஆலயம் இறைவன் திருவுருவம் அமைந்து அதைச்சுற்றி எழுப் பப்பட்டதாகும். அமைத்தவரோ பெரு மைக்குரிய மகான் மட்டுமல்லர். பெரும் புலவரும், இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவருமான சேக்கிழார் பெருமான் ஆவார்.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய இத் திருக்கோயில் ஊரின் மத்தியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ளது. திருக்குளமும் பூந்தோட்டமும் இதன்கண் அமைந்துள்ளன. திருக்கோயில் 300 × 300 சதுர அடிகள் கொண்டதாக விளங்கு கிறது.
திருக்குளத்தின் பெயர் சூரிய புட் கரணி, தலவிருட்சம் சண்பகமரம். நாகத் தின் கீழ் லிங்கவடிவமாகத் திருநாகேசு வரர் அமர்ந்திருக்கிறார். அருகில் போக சக்தி அம்மன் நின்ற நிலையில் வரம் கொடுக்கும் வடிவில் அமைந்திருக்கிறார். காமாட்சியம்மன் தனியிடம் பெற்று நின்று பிரசித்தி பெற்றிருக்கிறார்.
மற்றும், விநாயகர், வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர், சண்டீசு வரர், வீரபாகு ஆகிய மூர்த்திகளோடு சேக்கிழார், சமயகுரவர் நால்வரின் திரு வுருவங்களும் ஆலயத்தில் அமைந்துள்ளன.
மேற்கண்ட மூலவ மூர்த்திகளுக்கான உற்சவ மூர்த்திகளும் அமைந்துள்ளன. அத்துடன் சிவபெருமான் உற்சவமூர்த்தி யாக வரும்போது சோமாஸ்கந்தராகவும் சந்திரசேகரராகவும், நடராஜராகவும், பிட் சாடனராகவும் தனித்தனி வடிவம் பெறு கிறார்.
②店馬店 திருக்கோயிலில் இதன் பழமையையும் சிறப்பையும் தெளிவாக விளக்கும் வகையில் 45 கல்வெட்டுகள் 2. जी ना दया. மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1218) மூன்றாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1246-1271) முதலிய பல மன்னர்களின் ஐந்து நூற் றாண்டுகால கல்வெட்டுகள் இதில் காணப் படுகின்றன.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத் திருக்கோயிலின் மூலவரை நா கேசுவர என்ற பெயரில் சேக்கிழார் பெருமாள் ஏன் அமைத்தார் என்பது சுவை மிகுந்த வரலாறாகும்.
சேக்கிழார் தொண்டைநாட்டின் இரு பத்து நான்கு கோட்டங்களில் புலியூர் கோட்டமென வழங்கிய நம் குன்றத் தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் பிறந்தவர்.
சோழப் பேரரசை ஆண்டுவந்த இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரை தனது அரசவையின் முதலமைச்சராக்கி னான். சேக்கிழார் பெருமான் தாம் அமைச்சராகப் பணிபுரிந்த நேரத்தில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநா கேசுவரத்திற்குச் சென்று நாகேசுவரப் அங்கிருந்த பெருமானை வழிபட்டு வந்தார். நாக அரசன் ஆதிசேடன் பூசித் ததால் அத்தலத்தின் இறைவன் 'நாகேசு வரர்' என்று பெயர் பெற்றார்.
அங்குள்ள குளத்தில் சூரியன் மூழ்கித் தனது சாபம் நீங்கப் பெற்றதால் குளத் திற்குச் "சூரிய புட்கரணி' என்று பெயர் ஏற்பட்டது.
அர்த்த நாரீசுவர வடிவம் வேண்டி அன்னை பார்வதி அங்கு சண்பக மரத் தின் கீழிருந்து தவம் புரிந்ததால் "சண் பக மரம்" தல விருட்சமாயிற்று. அத் தலம் அவரது ஆன்மார்த்த தலமாக விளங்கியதோடு அவருக்கு இறைவரது திருவடி ஞானமும் கிடைக்கப்பெற்ற தல மாகும். அதனால் சேக்கிழார் தமது குன்றத்தூரிலும் தாம் வழிபடும் தெய்வ மான நாகேசுவரரைத் தொடர்ந்து வழி பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை "நாகேசுவரர்" என்று செய்து பெயரிட்டார்.
சூரியன் வழிபட்டதை நினைவு கூர்ந்து இங்குள்ள திருக்குளத்திற்கு அங் குள்ளதேபோல் சூரிய புட்கரணி என்று பெயரிட்டார். அன்னைக்கு நிழல்தந்த சண்பக மரத்தையே இங்கு தலவிருட்ச மாக அமைத்தார்.
இவ்விதம் சேக்கிழார் பெருமான் திருக்கோயில் அமைத்து, அதற்கு வட திருநாகேசுவரம் என்று பெயரிட்டு, அங்கு பூசைகள் வித்தார். நடக்க ஏற்பாடுகள் குந்தம் ருக்கோயில் பரிபாலனத்தைச் செங் மானித்து, தொண்டை நாட்டில் செங் குந்தர் எந்தெந்த ஊரில் வசிக்கின்றனர் என ஆராய்ந்து அவர்களுள் சைவத் தொண்டிலும், கல்வியிலும் சிறந்த சான் றோரை வரவழைத்து வீதிகளமைத்து வீடுகளமைத்துக் குடியமர்த்தி நிர்வா கத்தை ஒப்படைத்தார்.
செவிவழிச் செய்தி
மூலவ மூர்த்தியான நாகேசுவரப் பெருமான் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.
ஒருமுறை சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் சிறிது உடைபட்டுப் போயி ருந்தது. அதைக் கண்ணுற்ற பெரிய வர்கள் பலர் மூளியாகிவிட்ட மூர்த்தியை மூலஸ்தானத்தில் வைப்பது முறையல்ல என்று சொல்ல, அன்றைய ஆலயப் பொறுப்பாளர்கள் மூலவ மூர்த்தியை அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளா னார்கள்.
ஆகவே ஆலயத்தின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த அருணா சலேசுவரரைக் கொண்டுவந்து மூலஸ் தானத்தில் வைத்துவிட்டு அங்கிருந்த சுவாமியை சூரிய புட்கரணி திருக் குளத்தில் போட்டுவிட்டனர்.
அன்றைய தினமே அவர்கள் யாவ ரும் அதிர்ச்சியடையத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தெளிந்திருந்த திருக் குளத்தின் தண்ணீர் சிறிதுசிறிதாகச் செந் நிறமடையத் தொடங்கியது. வெகு விரைவில் திருக்குளம் முழுவதும் ரத்தச் சிவப்பாகியது. அதைக்கண்ட யாவரும் வேதனையடைந்தனர். இதன் விளைவு என்னவாகுமோ எனநடுங்கினர்.
அன்றைய இரவு ஆலயப் பணிகளில் ஈடுபாடு கொண்டு அங்கேயே வாழ்ந்
திருந்த சிவனடியார் ஒருவரின் கனவில் உணர்த்தியபடி மூலவ மூர்த்தியைப் பக்தியோடு எடுத்துச் சென்று பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். திருக் குளமும் தெளிந்த நீராகியது.
அத்தோடு நீண்டகாலமாக நா கேசு வரப் பெருமானை நாகங்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்வதாகச் சொல்லப் படுகிறது. மாசி மாதத்தில் 18, 19, 20 21, 22 ஆகிய நாட்களில் சூரிய ஒளிக் சுதிர்கள், முன்னர் சூரியன் நாகேசுவரரை வழிபட்டு திருக்குளத்தில் மூழ்கி சாப நிவர்த்தி பெற்றதற்கு அடையாளமாக மூலவர் மீது தவழ்கின்றன என்பது இத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.
திருவிழாக்கள்
சித்திரை மாதத்தில் சித்திரைப் பௌர்ணமியின் போது சுவாமிக்கும் அம்மனுக்கும் திருமணம் நடத்தும் பத் தாவது நாளாகக் கொண்டு, பத்து நாட் கள் பிரமோற்சவம் நாகேசுவரருக்கு நடத்தப்படுகிறது. வைகாசி மாதத்தில் திருக்கோயில் மூலவரைப் பிரதிஷ்டை செய்த சேக்கிழார் பெருமானுடைய பூச நட்சத்திர விழா வெகு விமரிசை யாசுக் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் ஸ்ரீநடராஜப் பெரு மானுக்குத் திருமஞ்சன விழா நடை பெறுகிறது. ஆடிமாதம் திருக்கோயி லுக்குச் சொந்தமான ஸ்ரீ வேம்புலியம் மனுக்குப் பத்துநாள் உற்சவம் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.
அத்துடன் இத் திருக்கோயிலுக்குச் சொந்தமான பொன்னியம்மனுக்குப் பன் னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோயில் திருப்பணி செய்து, கும்பாபி ஷேகம் நடத்தி மூன்று நாட்கள் வை போகமான திருவிழா மாமாங்க உற்சவ மாக நடைபெற்று வருகிறது.
3 .திருமயிலை அருள்மிகு வெள்ளீசுவரர் ஆலயம்
அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயம் மயிலாப்பூர் தெற்கு மாடவீதியின் நடுப் பகுதியில் தெற்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ளது.
பிரதான மூர்த்தியான அருள்மிகு வெள்ளீசுவரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் லிங்கத் திருவுருவில் அமர்ந்துள்ளார், திரு லயத்தில் அணையும் தருவாயிலிருந்த விளக்
கின் திரியினைத் தூண்டியதன் பலனாக ஒரு எலி மாவலி மன்னனாகப் பிறந்தது. அவ்விளக்கிலிருந்த எண்ணெயைப் பருகு வதற்காகவே அவ்வெலி வந்தது. எனினும் சிவகைங்கர்யம் அறியாது செய்ததால் எலி பெரும் பயன் அடைந்தது.
திருமால் வாமனராக வந்து மாவலி மன்னனை மூன்றடி மண் கேட்க அதற் கிணங்கி மாவலி மன்னன் வா மனருக்கு
தானம் கொடுக்க முன் வந்த போது சுக்கி ரனாகிய அசுர குரு அவனைத் தடுத்தார். அப்படியிருந்தும் மாவலி மன்னன் தாரை வார்த்துக் கொடுக்க முயன்றபோது, தாரை வார்க்கும் கெண்டியின் துவாரத்திற் குள் சுக்கிரன் வண்டாக மாறி அடைத்துக் கொண்டான். வாமனர் ஒரு தருப்பை யால் கெண்டியின் துவாரத்தைக் குத்த சுக்கிரன் கண் இழந்தான். இழந்த கண் பார்வையினை மீண்டும் பெற சுக்கிராச் சாரியார் இத்தலத்துக்கு வந்தார். சிவ பெருமானைக் குருந்த மரத்தடியில் பூசனைசெய்து மீண்டும் சுண்ணொளி யினைப் பெற்றார். 'வெள்ளி' எனப் படும் சுக்கிரன் வழிபட்டதால் வெள்ளீசு வரர் எனத் திருநாமம் பெற்றார். வெளிப் பிரகாரத்தின் வட கிழக்குப் பகுதியில் லிங்கத் திருவுருவை வழிபட்ட கோலத் தில் சுக்கிரன் காட்சி தருகிறார். இது தலபுராண வரலாறு.
அமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றிய திருமயிலைத் தலபுராணத்தில் "சுக் கிரன் பூசித்த சருக்கம்" நாதமுனி முதலியார் இயற்றிய திருமயிலைத் தல புராணத்தில் "வெள்ளீசர் படலம்" ஆகியவற்றில் சுக்கிரன் வழிபட்ட வர லாறு விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.
சித்திபுத்தியுடன் விநாயகரும், முத் துக்குமார சுவாமி என்ற பெயருடன் முருக னும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். அம்பி கையின் திரு நாமம் 'காமாட்சியம்பிகை' என்பதாகும் நால்வர், சேக்கிழார், அருண கிரிநாதர், வீரபாகு தேவர், பைரவர், சூரியன். அண்ணாமலையார் காசிவிசுவ நாதர், ஆகியமூர்த்தங்கள் சுற்றுப் பிரகாரங் களில் இடம் பெற்றிருக்கின்றன. வெளிப்பிர காரத்தின் கிழக்குப் பகுதியில் நவக்கிரக சந்நிதியும் சனி பகவானின் தனி சந்நிதியும் இடம் பெறுகின்றன. சனீச்வரனுக்கு எதிர் புறமுள்ள தூணில் ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். ஆறுமுகன் எழுந்தருளியிருக் கும் மண்டபத்தில் மற்ற உற்சவ மூர்த்தி களும் இடம் பெற்றுள்ளனர்.
1982 ஆம் ஆண்டு வெள்ளீசுவரர் அர்த்தஜாமப் பள்ளியறை கண்ணாடி மரம்.
மாளிகையாக மாற்றப்பட்டிருக்கிறது. அலங்கார விளக்குகளுடன் அங்கு இறை வன் ஆயிரக்கணக்கில் பிரதிபலித்துக் சுண்கொள்ளாக் காட்சி தருகிறார். இது அனைவரும் அவசியம் காண அரிய காட்சி ஆகும். வேண்டிய
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 'பிரம்மோற்சவம்' சிறப்பாக நடைபெறு கிறது. அதிகார நந்தி, ரிஷபவாகனம், திருத்தேர், பிட்சாடனர், திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. எட்டம் திருநாள் சுக்கி ரனுக்கு கண்ணளிக்கும் விழாவாக அமை கிறது. அன்று ஈசன். பிரம்ம விஷ்ணுக் களுடன் வீதி புறப்பாட்டில் காட்சி தரு கிறார். பிரமனுடனும், கருட வாகனத் தில் திருமாலுடனும், சிவபெருமான் மும் மூர்த்திகளாகக் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.
கார்த்திகை மாத சோம வாரங்களில் வெள்ளீசுவரப் பெருமானுக்கு நூற்றெட்டு சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. விசா கந்தோறும் ஆறுமுகனுக்கு சிறப்பு வழி பாடுகள் உண்டு. அவ்வாறே திருவாதிரை நட்சத்திரம் தோறும் நடராஜருக்கு தமிழில் 'போற்றி அர்ச்சனை' வழிபாடு நடைபெறுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு வைர நெக்லஸ் அணிவிப்பதைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் துர்க் கைக்கு இராகுகால அர்ச்சனை செய்வதற் கும். மாதம் இருமுறை வரும் பிரதோஷ விழாவிற்கும் பக்தர்கள் திரளாக வரு கின்றார்கள்.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் ஆவணித் திங்களில் சிறப்பான விழா இவ்வாலயத் தில் மட்டுமே கொண்டாடப்படும் விழா வாகும். இவ்விழா 1969 இல் தொடங்கப் பட்டது.
இக்கோயிலின் தல விருட்சம் குருந்தை
4. அருள்மிகு திருக்காரணீச்சுவரர் திருக்கோயில்
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தது திருக்காரணி என்னும் பகுதி. அதில் அருள்மிகு சொர்ணாம்பிகை என் னும் பொற்கொடியம்மை உடனுறை திருக் காரணீச்சுவரப் பெருமான் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சைதாப் பேட்டை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது.
இக்கோயில் ஆதொண்டர் சக்கர வர்த்தியால் கட்டப்பட்டு செங்குந்த மரபினரின் பராமரிப்பில் இருந்து வரு கிறது. அஃது ஏறத்தாழ ஐநூறு ஆண்டுப் பழமை உடையதாகத் தெரிகிறது.
திருக்காரணிப் பகுதியில் திருக் காரணிச்சுவரர் திருக்கோயிலைச் சார்ந்த சுற்றுக் கோயில்களாகவும் செங்குந்த மர பினர்களின் தனிக் கோயில்களாகவும் திருக் காரணீச்சுவரர் கோயில் தெருவில் தேரடிக் கருகில் உள்ள ஞானவிநாயகர், வாத்தி யார் சுப்பராய முதலி தெருவில் உள்ள செல்வகோவிநாயகர், கூத்தாடும் பிள்ளை யார் கோயில் தெரு கூத்தாடும் விநாயகர். காரணித் தோட்டம் விநாயகர் கோயில் கள் உள்ளன.
200 ஆண்டுகளுக்கு முன் குருலிங்க சாமி என்னும் வீர சைவ மகான் இக் கோயிலை வழிபட்டுப் பேரருளாளராக விளங்கியிருக்கிறார். அவருடைய சமாதிக் கோயில் தேரடிக்கருகில் இருக்கிறது.
தல வரலாறு
இந்திரன் தன்னிடமிருந்த தெய்வப் பசுவாகிய காமதேனுவை ஒரு மண்டல காலம் வதிஷ்டர்பின் அனுப்பி வைத்தார். இப்பசு வதிஷ்ட முனிவர் பூஜைக்கு இடை யூறு செய்ததால் முனிவர் கோபம்கொண்டு காட்டுப் பசுவாகப் போகக் கடவாய் என்று சபித்தார் இதை அறிந்த இந்திரன் தன் வாகனமாகிய கார் என்னும் மேகங்களை அழைத்து மயிலை நகருக்கும் திருவான் மியூருக்கும் நடு மத்தியில் மேற்கே சில சுடிகை தூரத்தில் மழை பெய்து குளிர்ச்சி செய்யும்படி கட்டளையிட்டார். அவ் விடத்தில் குறுஞ்சோலைகள் ஓங்கிவளர்ந்து செழித்து வந்தன. இச்சோலைக்குள் இந் திரன் தங்கி ஒரு சிவலிங்கத்தை நிறுவி அதற்கு மேற்புறத்தில் தடாகம் ஒன்று உண்டாக்கி நாடோரும் காலம் தவறாது பூசித்து வந்தான். சில நாள் சென்றபின் சிவபிரான் கருணை கூர்ந்து இந்திரன் முன் பிரசன்னமாகி காட்டுப் பசுவின் சாபத்தை நீக்கி தெய்வப் பசுவாக மாற்றி இந்திரனிடம் ஒப்படைத்தார். பிறகு இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க கரிய மேகங்களால் சூழப்பட்டு கார் வரிஷித்து குளிர்ச்சி அடையச் செய்த இந்தப் பகு திக்கு காரணி என வழங்கவும் அங்கு கோயில் கொண்டெழுந்தருளிய சிவனுக்கு காரணீச்சுவரர் என வழங்கவும் மேற்கு புறத்தில் நிர்மாணித்த தீர்த்தத்திற்கு கோபதி சரஸ் என வழங்கவும் சிவனருள் கிடைத்தது.
சோழர்கள் சந்திர சார்ந்தவர்கள். வமிசத்தைச் இவ்வமிசத்தில் உதித்த ஆதித்த சோழன் தன் மகன் குலோத்துங்க சோழனை இளவரசனாக்கினான். குலோத்
துங்கன். ஒரு நாள் வேட்டைக்கேகிய வனத்தில் ஒரு ரிஷி கன்னிகையைக் கண்டு மோகம் கொண்டு அக்கன்னிகைக்கு ஆதொண்டை பூமாலை சூட்டி காந்தர்வ விவாகம் செய்து கொண்டான். இவர் களுக்குப் பிறந்தவர்தான் ஆதொண்ட சக்கரவர்த்தி. இவர் சோழ இராஜ்யத் தின் வட பாகத்தை ஆண்டு கொண்டிருந்த போது பல தெய்வத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தார். இவர் சைதை எனும் ஊரில் சையீந்நிஸ்வரரை தெரிசித்து வரும் வழியில் ஸ்ரீ சிவசைதன்னிய முனிவரைத் தரிசிக்க நேர்ந்தது. ஆதொண்டர் முனி வரை வணங்கி இவ்வடியேனுக்குப் புண் ணியம் நிறைந்த சிவமூர்த்தங்கள் எங் குளதோ அவைகளைச் சொல்வீரானால் யான் அங்கு சென்று ஆன்ம கோடிகள் உய் யும் பொருட்டு திருப்பணிகள் முடிப்பேன் என்றார். முனிவர் இந்திரன் முன்னொரு காலத்தில் காரணியில் லிங்கப் பிரதிஷ்டை செய்த இடத்தைக் காட்டி, அங்கு தெய் வத் திருப்பணிகள் செய்வாய் என்று ஆசி கூறினார். அதன்படியே ஆதொண்டர் அச்சிவபிரானுக்கு விதிப்படிக்குக் கர்ப்பக் கிரகம், அந்தராளம் அர்த்த மண்டபம். மகா மண்டபங்களும் கட்டி வைத்தும் சுற்று மதில்களும் எழுப்பி மற்ற திருப் பணிகளும் செய்து வைத்தார். அவ் வெல்லைக்குள் உத்தம பக்த ஜனங்களைக் குடியேற்றியும் அவர்களுக்கு வேண்டிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தியும் தானும் கிரமப்படி காரணீசுவரரை நித்தம் தரி சித்து வந்தார். இது புராண வரலாறு.
திருவிழாக்கள்:
பிரதிவருடம் சித்திரை மாதம் சுக் கிலபக்ஷம் பஞ்சமி திதியும் மிருக சீரிடம் நட் சத்திரத்தில் பிரம்மோற்சவம் ஆரம்பித்து சதுர்த்தசி திதியில் பூர்த்தியாகிறது. பிரம்மோற்சவம் 10 நாட்கள் வெகு விமரி சையாக நடக்கிறது. ஐந்தாம் நாள் இரவு வெள்ளி ரிஷபோத்ஸவ தரிசனமும் எட் டாம் நாள் பகல் அறுபத்து மூன்று நாயன் மார்களோடு பஞ்ச மூர்த்திகள் தரிசனமும் கிடைத்தற்கரிய அரிய பேராகும்.
நூல்:
இம் மூர்த்திகளைப் பற்றி ஸ்ரீ கார ணீஸ்வரர் இரட்டை மணிமாலை என்ற நூலில் 20 பாடல்களும் ஸ்ரீ காரணி சொர் ணாம்பாள் நவமணிமாலை என்ற நூலில் ஒன்பது பாடல்களும் ஒரு வாழ்த்துப் பாவும் உள்ளன.
.
![]() |
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் இருந்து ஆட்சி செய்து வந்த நாட்டாமை சாம்பசிவ முதலியார் |