சிதம்பர ரகசியமும் செங்குந்தர் கைக்கோளர் மரபினரும்

0
கடலூர் மாவட்டத்தில் உள்ள 
சிதம்பரமும் செங்குந்தர் பெருமையும் 
63 நாயன்மார்களில் ஒருவரான போரிலே தோற்காத மாமன்னன் கூற்றுவ நாயனார் சோழர் அல்லாதலால் அவருக்கு முடிசூடமறுத்தவர்கள் தில்லை அந்தணர்கள். தில்லை அந்தணர்கள் சோழ வம்சத்தவரை தவிர்த்து வேறு யாருக்கும் முடிசூடுவதோ நடராஜ பஞ்சாட்ச்சர படியில் அமர்த்தி சங்காபிஷேகம் செய்வித்து பட்டாபிஷேகம் செய்வதோ கிடையாது என்பது தமிழறிந்த வரலாற்று அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். முதலில் இதை காலம் காலமாக காத்துவரும் தில்லை அந்தணர்களுக்கு இருகரம் கூப்பி வணக்கத்தையும் மற்றும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிதம்பரம் தெற்கு தெரு பரம்பரை நாட்டாண்மை தலைவர் 
திரு. தில்லை கோவிந்தமுதலியாரின் திருமகனார் திருமிகு. நடராஜ முதலியாரின் பட்டாபிஷேக வாழ்த்து இதழ் 22-11-1982 இல் தில்லை வாழ் அந்தணர்கள் திருமிகு.நடராஜ முதலியாரை சிதம்பரம் சபாநாயகர் பொன்னம்பலம் பஞ்சாக்ஷர படியில் அமர்த்தி சங்காபிஷேகம் செய்வித்து சிதம்பரம் செங்குந்தர் நாட்டாண்மை சபைக்கு  இளவரசராக பட்டாபிஷேகம் செய்வித்தனர்.
இது பரம்பரை பரம்பரையாக வாழையடிவாழையாக சிதம்பரம் தெற்கு தெருவில் உள்ள செங்குந்தர் நாட்டாண்மை தலைமைக்கு உரிய இந்த குடும்பத்திற்கு செய்துவைக்கப்படும் வைபவம் ஆகும். 
செங்குந்தர் குல கொடியில் இருக்கும் சோழரின் சின்னமான புலி இடம்பெற்றிருப்பது செங்குந்தர் சோழ வம்சத்தின் ஒரு கிளை என்பததாகும். இதற்கு வாழும் சான்றாக சோழ மன்னனை போலவே முடிசூடும் பெருமையுடைய இந்த செங்குந்தர் குடும்பம் திகழ்கிறது கந்த புராணத்தில் வரும் முருகபெருமானின் போர்ப்படை தளபதியான வீரபாகு செங்குந்தர் மகள் சித்திரவள்ளிதேவி மற்றும் திருவாரூர் முசுகுந்த சோழ தம்பதியின் மகனான அங்கினிவர்மா சோழரின் வழித்தோன்றல்களே தொண்டை நாடு முதல் பல நாடு செங்குந்த நாட்டாண்மை தலைவர்களாக உள்ளனர் என்பது கந்த புராண விலாசம் கூறும் செய்தி அதற்கும் சான்று இந்த குடும்பம்.





தில்லை ஸ்தல புராணம் என்னும் சிதம்பர க்ஷேத்திர மகிமை நூல்-1959 (அருள்சோதி ஆசிரமம் வெளியீடு பாவாமுதலி தெரு, சிதம்பரம்)



அனைத்து தமிழ் கோவில்களின் தலைமைப்பீடம் சிதம்பரம் நடராஜர் சபாநாயகர் கோவில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் வம்சத்திரான செங்குந்தர் மரபினரின் 
ஆனி திருமஞ்சன கொடியேற்றம் உற்சவம்.









அனைத்து தமிழ் கோவில்களின் தலைமைப்பீடம் சிதம்பரம் நடராஜர் சபாநாயகர் கோவில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான  #வீரபாகு #நவவீரர்களின் வம்சமான #செங்குந்தர் கந்த சஷ்டி #சூரசம்ஹார விழா மண்டகப்படி.
சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் வீற்றிருக்கும் அம்பாளிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்று 
வெல்லபிறந்தான் முதலியார் (தெற்கு தெரு) சூரசம்ஹாரம் விழா மாலை 8  மணிக்கு மேல் நடைபெறும்.




சோழர் குடும்பத்தின் குலதெய்வம் தில்லை நடராஜர் கோவிலில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக மார்கழி ஆருத்ரா கொடியேற்றம் உற்சவம்.





செங்குந்தர் குல திலகம்,
சைவ திருவாளர்
உயர்திரு.சிவசிதம்பரம் என்றழைக்கப்படும் 
வெல்லபிறந்தான் முதலியார் 
வரலாறு


தினமும் சிதம்பரம் நடராஜர் கோவில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் அதிகாலை முதல் பூஜை                        (கால சந்தி கட்டளை பூஜை) மற்றும் ஆனி உத்திரம்,மார்கழி திருவாதிரை திருவிழாவின் போது நடக்கும் சிதம்பரம் இரகசியம் என்றழைக்கப்படும்                      சிதம்பர இரகசிய பட்டு திரை கொடுக்கும் மரபு தென்னாட்டிலுள்ள செங்குந்தர் மக்களால் சிதம்பரம் உள்ள செங்குந்தர் குல சைவதிருவாளர்.சிவசிதம்பரம் என்றழைக்கபடும் வெல்லபிறந்தான் முதலியார் குடும்பம் சார்பாக நடைபெறுகிறது.

 1930 வருட வரலாறு நூல்

👇




செங்குந்தர் குல வெல்லபிறந்தான் முதலியார் வழிவந்த சைவ திருவாளர் தில்லை நாயக முதலியார் வரலாறு

👆🏻👆🏻(சென்னை செங்கை மாவட்ட செங்குந்தர் சங்கம் பதினைந்தாம் வருட நிறைவு விழா மலர்-1988)




செங்குந்தர் குல வெல்லபிறந்தான் முதலியார் வம்சத்தில் பிறந்த சைவ திருவாளர் திரு.வெ.தில்லை நாயக முதலியார் எழுதிய சிதம்பரம் குமரவேள் மும்மணிக்கோவை அரிய நூல்.





செங்குந்தர் குல வெல்லபிறந்தான் முதலியார் வம்சத்தில் பிறந்த சைவ திருவாளர் திரு.வெ.தில்லை நாயக முதலியார் சீகாழி புராணம் நூலுக்கு வாழ்த்துரை எழுதி உள்ளார்.




👆🏻👆🏻செங்குந்தர் குல வெல்லபிறந்தான் முதலியார் வழிவந்த ஹிந்துமத பரிபாலன போர்டின் கமிஷனரான காலஞ்சென்ற பு.வே.நடராஜமுதலியார்
(தில்லை ஸ்தல புராணம் என்னும் சிதம்பர க்ஷேத்திர மகிமை நூல்-1959 (அருள்சோதி ஆசிரமம் வெளியீடு பாவாமுதலி தெரு, சிதம்பரம்) 







ஆனி திருமஞ்சனம்,மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றம் உற்சவம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி விடுகிறது.
திருவிழா தொடங்குவதற்கு முன்பு

முதல் நாள்- மிருத்சங்கரணம்,வாஸ்து சாந்தி நிகழும்
இன்னொரு நாள்- காலை-விக்னேஸ்வர பூஜை, நடராஜர் அனுஞ்ஞையும் நடைபெறுகிறது.
இரவு- சண்டிகேஸ்வரர் வீதியுலா வலம் வந்து அருள்வார்.

திருவிழா தொடக்கம்
 
முதல் நாள்-கொடியேற்றம் 
இரண்டாம் நாள் - காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழும்  என திருவிழா தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கும்,பிறகு இரண்டு நாட்கள் என நான்கு நாட்கள் செங்குந்தர் மரபினர் சார்பாக வாழையடி வாழையாக பூஜைகள்,மண்டகப்படி மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.



கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழா முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வழித்தோன்றல் தில்லை செங்குந்தர் மரபினர் சார்பாக 7 நாட்கள் மிகச்சிறப்பாக விழா நடைபெறுகிறது.



சிதம்பரம் நடராஜர் தென்திசை நோக்கி உலக மக்களுக்கு பரிபாலிக்கும் வகையில் இருப்பதை குறிக்கும் வகையில் தெற்கு கோபுரம் இருபக்கம் ஏற்றப்படும் #தருமக்கொடி பராமரித்து கொடியேற்றும் உற்சவம் செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களுக்கு உள்ளது
.


சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் மிகப் பழங்காலம்முதலே நடராஜர் சபை முன்பு கம்ப விளக்கு ஏற்றும் உற்சவம் மற்றும் கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை தினத்தன்று நடராஜர் சபை முன்பு திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் மண்டகப்படி மற்றும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் மேற்கு கோபுரம் குமரக்கோட்டம் அருள்பாலிக்கும் அருள்மிகு வள்ளி சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி சன்னதியில் கூம்பு வடிவில் சொக்கர் பனையை சுடர் விட்டு பிரகாசிக்க செய்யும்   உற்சவத்தை செங்குந்தர் மரபினர் மிகப்பழங்காலமாக செய்து வருகின்றனர்.
முருக பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பெற்ற அவல் பொரி விநியோகம் செய்யப்படும். அமரர்.ராசுவேலு செங்குந்தர் குமாரர்கள் செங்குந்தர் மரபினர் சார்பாக கோயில் பணிகளை ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்து வருகின்றனர்.


விஜயதசமி அன்று குமரக்கோட்டம் இருந்து அருள்மிகு செல்வ முத்துக்குமாரசுவாமி சுவாமி வீதியுலா  மற்றும்
அம்பு உற்சவம் செங்குந்தர் மரபினர் சார்பாக நடைபெறுகிறது  


சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் உள்ள நான்கு கோபுரங்கள் தீபம் ஏற்றும் உரிமை மற்றும் மின்விளக்கு போடும் உரிமை செங்குந்தர் குல தில்லை முதலியார் வம்சத்தினர் உரியது‌.  குறிஞ்சிப்பாடி நடுவீரப்பட்டு ஊரில் அமைந்துள்ள தில்லை வீதியில் தில்லை முதலியார் வம்சத்தினர் உள்ளனர். சிதம்பரம் இருந்து குறிஞ்சிப்பாடி நடுவீரப்பட்டு சென்ற வள்ளல் தில்லை முதலியார் பெயரே அந்த வீதிக்கு வைக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுக்கு முன்பே இந்த அறப்பணிக்கு  நிலையான  வைப்பு தொகை செலுத்தி  உள்ளார்.

சிதம்பரம் செங்குந்தர் குலத்தோன்றல் மாணிக்கவேல் முதலியார் அறக்கட்டளை குடும்பம் சார்பாக தான் சோழர் குல தெய்வம் அருள்மிகு #தில்லை காளி அம்மன்  திருக்கோவிலுக்கு தொன்றுதொட்டு காலசந்தி உச்சி கால பூஜை தினம்தோறும் நடைபெற்று வருகிறது.


63 நாயன்மார்களில் ஒருவரான செங்குந்தர் குல கணம்புல்லர் நாயனார் முக்தி அடைந்த ஊராகும்.


சிதம்பரம் மௌனசுவாமி ஆதீனம்:  (வீரசைவம்) சபாநாயகர் தெருவில் சீர்காழி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது.தமிழுக்கும்,சைவ சமயத்திற்கும் இந்த ஆதீனம் பெரும் தொண்டாற்றி உள்ளது.கடலூர் குறிஞ்சிப்பாடி பூர்வீகமாக கொண்ட செங்குந்தர் மரபினர் மடாதிபதியாக வருகின்றனர். 







🖕🏻🖕🏻செங்குந்தர் சமூக குல குருவாக இருந்த சிறுத்தொண்டர் நாயனார் திருஅமுது படையல் விழா செங்குந்தர் குல அழகானந்தம் சி.கனகசபை முதலியார் சத்திரம் சிதம்பரம் செங்குந்தர் மரபினரால் நடத்தப்படுகிறது.




👆🏻👆🏻சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் திருக்குடமுழக்கு விழா- 1972 குழுவில் செங்குந்தர் குல சைவதிருவாளர் திரு.பழனி முதலியார்,வாணி பார்மஸி 




சிவ மதத்தின் தலைமைப் பீடம் #சிதம்பரம் ஊரில் உள்ள  அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் கல்வெட்டு


https://youtu.be/ncL2xuzzE9E

👆🏻செங்குந்தர் சமுதாய குலத் தெய்வமாக வழிபடும் சோழர்களின் போர் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் வரலாறு


அனைத்து சிவன் கோவில்களின் தலைமைப்பீடம் சிதம்பரம் நடராஜர் சபாநாயகர் திருக்கோவில் மேற்கு கோபுரம் வளாகத்தில் உள்ள குமரக்கோட்டம் அருள்மிகு வள்ளி சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி ஆலயம் திருப்பணி சிதம்பரம் செங்குந்தர் தெற்கு தெரு நாட்டாண்மை தலைவர் டாக்டர்.தில்லை ராஜ் நடராஜன்செங்குந்தர் மற்றும் சிதம்பரம் செங்குந்த முதலியார் மரபினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் விழா மலர்
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து பயன்படுத்தவும்.


சோழநாடான சிதம்பரம் பல்வேறு  அறப்பணிகளையும் மற்றும் ஆன்மீக பணியையும் பழங்காலம் தொட்டே பாரம்பரியமாக செய்து வரும் செங்குந்தர் மரபினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


சிதம்பரம் பற்றி பல்வேறு அரிய தகவல்கள் தொகுத்தும் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் சைவதிருவாளர்  திரு.பொன்னம்பலம் அய்யா மற்றும் சிதம்பரம் செங்குந்தர் இளைஞர் சங்கம் செங்குந்தர் வரலாறு மீட்பு  
குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்




மேலும் சிதம்பரம் சார்ந்த செங்குந்தர் பற்றிய வரலாற்று தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 7826980901 அனுப்புங்கள்


Post a Comment

0Comments
Post a Comment (0)