சிதம்பரம் ஆதீனம் - வீரசைவ செங்குந்தர் மரபு மௌனசுவாமி தேசிகர் மடம்

0

கடலூர் மாவட்டம் தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்திலிருந்து செங்குந்தர் குல மௌன குரு சுவாமிகள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட மடம் மௌன சுவாமிகள் மடம் ஆகும்.

சிதம்பரம் செங்குந்தர் காணி தெற்கு வீதியிலிருந்து சீகாழிக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்குச் சபாநாயகர் தெரு என்று பெயர். சபாநாயகர் தெருவில் 39-ஆம் எண்ணுள்ள வளாகத்தில் மெளனசுவாமிகள் ஆதீனத்தின் மடம் அமைந்துள்ளது. ஸ்ரீ மௌன சுவாமிகள் ஆதீனம், 39, சபாநாயகர் தெரு, சிதம்பரம் என்பது முகவரி, மௌன சுவாமிகள் மடம் இன்னும் சுருக்கமாக மௌனமடம் என்றும் வழங்கப்பெறும்.

மடத்தின் பரம்பரை சிஷ்யர்கள்: வீரசைவம் மதம் பின்பற்றும் சேர சோழ பாண்டிய மண்டலத்து செங்குந்த கைக்கோள முதலியார்கள் 



மௌன தேசிகர் ஆதீனத்தின் குருமரபு

மௌனமடத்தின் நிறுவனர் குருமுதல்வர் மௌன சுவாமிகள். அவர் பெயராலேயே இம்மடம் மௌனசுவாமிகள் மடம் என்றும் மௌன மடம் என்றும் வழங்கப்பெற்று வருகிறது. மௌனசுவாமிகளுக்குப்பின் அறுவர் ஒருவர்பின் ஒருவராக மடாதிபதியாக விளங்கியுள்ளனர். இப்போது மடாதிபதியாக விளங்கு பவர் ஒன்பதாவது பட்டம் சுவாமிகள்.

* பாலசித்தர் சிஷ்ய பரம்பரை

1. மௌன சுவாமிகள்

2. ஸ்ரீலஸ்ரீ மௌன செல்லப்ப சுவாமிகள்

3. ஸ்ரீலஸ்ரீ மௌன பொன்னம்பல சுவாமிகள்

4. ஸ்ரீலஸ்ரீ மௌன வசுவலிங்க சுவாமிகள்

5. ஸ்ரீலஸ்ரீ மௌன ஆறுமுக சுவாமிகள்

6. (இரண்டாம்) ஸ்ரீலஸ்ரீ மௌன செல்லப்ப சுவாமிகள்

7. ஸ்ரீலஸ்ரீ மௌனசபாபதி சுவாமிகள்

8. ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (இப்போது மடாதிபதியாக உள்ளவர்கள்).

9. ஸ்ரீலஸ்ரீ மௌன குமார சுவாமிகள் (9- வது சன்னிதானம்)

இது மௌன மடத்தின் குருமரபு. முதல்வர் மௌனசுவாமிகள் மௌனமாகவே இருந்ததால் இம்மரபில் வரும் அனை வருக்குமே பெயருக்கு முன்னால் “மௌனம்” என்ற அடை மொழி சார்த்தி வழங்குதல் வழக்கமாயிற்று. அதன்படி இப்போது மடாதிபதியாக விளங்குபவர்களின் பெயர் ஸ்ரீலஸ்ரீ மௌன குமார சுவாமிகள் என்பதாம்.


குருமுதல்வர் மௌன சுவாமிகள் (முதல் சன்னிதானம்)

நவவீரர் மரபு செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்த மௌன சுவாமிகள் மயிலத்திற்கு அருகில் உள்ளது திண்டிவனம். திண்டிவனத் திற்கு அருகில் உள்ளது பெருமுக்கல் மலை. பெருமுக்கல் என்றால் பெரிய மூன்று கற்கள். அவை பெருமுக்கல் பழமுக்கல் நன்முக்கல். பெருமுக்கல் மலைச்சாரலில் ஒரு குகையில் மௌனசுவாமிகள் தவஞ்செய்து கொண்டிருந்தார். கடுந்தவசி. படத்தைப் பார்த்தாலே தெரியும். படம் காண்க. எந்நேரமும் மௌனமாக இருப்பார்.

வாய் பேசாமல் இருப்பது மட்டுமே மௌனம் என்று பலரும் எண்ணுவர். பேசாதிருப்பது மட்டும் மௌனமன்று. உண்மையில் மனம் அடங்கிய நிலையே மௌனம். மனோ மௌனம், வாக்கு மௌனம், காய மௌனம் (காஷ்ட மௌனம்) என்று மூன்று மௌன நிலைகள் உண்டு. 


மனம் அடங்கிய நிலை மனமௌனம், மனோமௌனம். வாய்ப் பேச்சு அடங்கிய நிலை வாக்குமௌனம். உடம்பு அசையாது ஆடாது ஒரே நிலையில் நிற்கும் நிலை காயமௌனம், காஷ்ட மௌளனம். "மோனம் என்பது ஞானவரம்பு" என்பது மௌனத்தைக் கடைப்பிடித்துள்ளனர். தாயுமானவரின் குரு ஒளவையார் வாக்கு (கொன்றைவேந்தன்). ஞானிகள் பலர் மெளனகுரு. 

பெருமுக்கல் மலைக்குகையில் மௌனமாகத் தவஞ் செய்து கொண்டிருந்த மௌன சுவாமிகள் பேச்சு அடங்கிய நிலையில் இருந்ததோடு சில சமயங்களில் மூச்சு அடங்கிய நிலையிலும் இருப்பார். இடையில் ஆடை அணியார் கோவணம் மட்டுமே அணிந்திருப்பார். அவரது வாய் மட்டும் மௌனமன்று. வயிறும் மௌனம். குடல் ஈரங்காயாதிருக்க எப்போதாவது ஒருமுறை குகையைவிட்டு வெளியே வந்து கொடிக்கள்ளிப் பாலையும் இலைக்கள்ளி (சப்பாத்திக்கள்ளிப பழத்தையும் அருந்துவார். இதைக்கண்ட மக்கள் குகையை நாடி வரத்தொடங்கினர். சுவாமிகளைக் கண்ணாற் கண்டாலேயே சுவாமிகளின் கண்பார்வை பட்டாலேயே எண்ணிய காரியம் கைகூடுகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே பரவிற்று. மயிலம் பாலசித்தரே வந்துவிட்டதாக மக்கள் கருதின குகைவாயிலில் கூட்டம் பெருகியது. சுவாமிகள் இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


சுவாமிகள் சிதம்பரத்தை நோக்கிப் புறப்பட்டானர். தில்லைத் திருக்கோயிலின் மேலைக் கோபுரத்து மாடத்தில் அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார். கோயில் வாயிலாதலின் இங்கும் கூட்டம் பெருகிற்று. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சுவாமிகளைத் தரிசித்துக் குழந்தைப் பேறு பெற்றனர் திருமணம் ஆகத் தாமதமாதல் தடைப்படுதல் போன் குறையுடையவர்கள் சுவாமிகளைத் தரிசித்து எளிதிலு விரைவிலும் திருமணமாகப் பெற்றார்கள். தீராத நோயு யவர்கள் சுவாமிகளைத் தரிசித்து நோய் நீங்கப் பெற்றார்கள் தரிசிக்கவரும் மக்கள் கூட்டத்திற்குக் கேட்கவேண்டும சுவாமிகள் கோயில் வாசலில், கோபுர வாசலில் தங்கியிருப்படி கோயில் வழிபாட்டுக்கு இடையூறாக இருந்தது. சுவாமிகள் இடமாற்றஞ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


ஒருநாள் நள்ளிரவில் சுவாமிகள் தெற்குநோக்கிப் புறப்பட்டார். இன்று மௌனமடம் அமைந்துள்ள இடத்திற்கு வத்தார் ஆயிகுளக்கரையில் செங்குந்தர் காணியில் ஒரு சிறு மடம் அமைத்து அங்கு சென்றார். அதன் திண்ணையில் அமர்ந்தார். வைகறையில் குடிசையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த செல்லப்பசுவாமிகள் திண்ணையில் அமர்ந்திருந்த மௌன சுவாமிகளைக் கண்டு, வியந்து போற்றி வணங்கித் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று அமர்த்தி வழிபட்டார். சுவாமிகள் அங்கேயே தங்கினார். இங்கும் மக்கள்கூட்டம் பெருகிற்று. செல்லப்பசுவாமிகளின் சிறு குடிலே மௌன சுவாமிகள் மடமாக வளர்ந்தது. சுவாமிகளது புகழ் பல இடங்களுக்கும் பரவிற்று. தூரத்து ஊர்களிலிருந்தும் அன்பர்கள் வந்து தரிசித்துக் குறைநீங்கப் பெற்றனர். நீண்டகாலம் அன்பர் பலருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருந்த சுவாமிகள் ஒருநாள் ஜீவசமாதியடைந்தார்கள். சுவாமிகளின் சமாதிக் கோயிலே இப்போது மடத்துக் கோயிலாக உள்ள கங்காதரேஸ்வரர்கோயில். சிதம்பரம் மௌனசுவாமிகளும் பேரூர் சாந்தலிங்க சுவாமிகளும் ஒருசமயம் சந்திக்க நேர்ந்ததென்றும் அப்போது சாந்தலிங்க சுவாமிகளுடன் உடனுண்பதற்காக மௌன சுவாமிகள் வீரசைவக் கோலங்கொள்ள நேர்ந்ததென்றும் ஒரு வரலாறு கூறப்பெறுகிறது.



ஸ்ரீலஸ்ரீ மௌன செல்லப்ப சுவாமிகள் (2- வது சன்னிதானம்)


மெளன சுவாமிகளுக்குப்பிறகு செல்லப்பசுவாமிகள் மடாதிபதியாக ஆனார். இவர் காலத்தில் மடம் மேலும் வளர்ச்சியடைந்தது.


ஸ்ரீலஸ்ரீ மௌன பொன்னம்பல சுவாமிகள் (3- வது சன்னிதானம்)


இவர் மௌன சுவாமிகள் காலத்திலும் செல்லப்ப சுவாமிகள் காலத்திலும் உடனிருந்தவரே. செல்லப்பசுவாமிகளுக்கு பிறகு இவர் மடாதிபதியானார். இவர் காலத்தில் மடத்தில் அன்னம்பாலிப்புஅறம் பெருகிற்று.


ஸ்ரீலஸ்ரீ மௌன வசுவலிங்க சுவாமிகள் (4- வது சன்னிதானம்)

இவர்களது ஆட்சிக் காலத்தில் மடம் பெருவிளக்கம் பெற்றது. ஆதிகுருமூர்த்திகளின் சமாதிக்கோயில் கற்கோயிலயை கட்டப்பெற்றது. மகப்பேறுபெற அருளல் நோய்நீங்க அரும் ஆகிய இருபெரும் ஆற்றல்களும் இவர்களிடம் சிறந்து விளங்கின.


ஆதிகுருமூர்த்திகளாகிய மௌனசுவாமிகளின் சமாதிக் கோயிலைக் கற்கோயிலாகக் கட்டினார். திருமடத்து திருப்பணியைத் தொடங்கி இன்றுள்ள நிலையில் பெரும் கட்டிடமாகக் கட்டினார். மடத்திற்கு நன்செய் நிலங்களை வாங்கி வைத்தார்.


ஸ்ரீலஸ்ரீ மௌன ஆறுமுக சுவாமிகள் (5- வது சன்னிதானம்)

இளமைப் பருவத்திலேயே மடத்திற்குவந்து தங்கி கல்விகற்றுத் துறவுபெற்றுத் தொண்டு செய்து வந்த இ வசுவலிங்கசுவாமிகளுக்குப் பின் ஐந்தாவது பட்டம் மடாதிதி யானார், மடத்தின் பின்புறம் தோட்டத்தில் குருமூர்த்தங்களை ஒட்டியுள்ள அரைஏக்கர் நன்செய் நிலங்களை 25 ரூபாய் பேசி வாங்கினார். 15 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு மிதி 10 ரூபாய்க்குப் பிராமிசரி நோட்டு எழுதிக்கொடுத்தார். பளை ஒலையில் எழுதிக்கொடுத்த அந்தப் புரோநோட்டு இன்ற மடத்திலேயே உள்ளது, பாதுகாப்பாகப் பேணி வருகிறாங்கம்.



ஸ்ரீலஸ்ரீ மௌன இரண்டாம் செல்லப்ப சுவாமிகள் (6- வது சன்னிதானம்)

இரண்டாவது செல்லப்ப சுவாமிகள் எனக் குறிப்பிடப் பெறும் இவர்கள் சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகளிடம் பாடம் கேட்டவர்கள். சிறந்த தமிழ்ப்புலமை யுடையவர்கள். யாழ்ப்பாணம் வேலாயுத சுவாமிகள் என்பவரைக் ஆண்டுகள் தொடர்ந்து கொண்டு திருமடத்தில் பல இலக்கணப்பாடம் நடத்தச் செய்தார்கள். வீரையசுவாமிகள் என்பவரை வாரந்தோறும் திருவாசக விரிவுரை செய்யச் செய்தார்கள். கந்தபுராணச்‌ சுருக்கம்‌ முதலிய நால்சகளைப்‌ பிழையறப்‌ பரிசோதித்‌துத்‌ திருத்தமான படிப்பாக வெளிப்படுத்தியுள்ளார்‌. செய்யுள்‌ செய்வதிலும்‌ திறமைமிக்க இவர்‌ திருவாரூர்ச்‌ வொகந்த சுவாமிகள்‌ இயற்றிய சாகாசீவவாதக்‌ கட்டளை வியாக்கியானம்‌ முதலிய நூல்‌ களுக்குச்‌ சிறப்புப்பாயிரம்‌ பாடியுள்ளார்‌. 

காப்புடைக்‌ கடவன்‌ மாப்பெருத்‌ தேவி

ஓப்பியைம்‌ புலனும்‌ ஒருங்கிய மனத்தே

டாணுவி னமர்த்தே அற.ந்தலை நின்று

நூணர வார்த்த பொதியிருட்‌ களத்து

தாதனைத்‌ தெய்வ நாயகன்‌ தன்னை

வாதனை தீரிய வழிபடப்‌ பெற்ற

காரண முறுதலிற்‌ கமலா லயமென

ஆரண மொழிதரு மமலமே வியதாய்‌

திகிலமும்‌ புரக்கும்‌ நிணெமி யாதிய

அகிலமும்‌ புரக்கும்‌ அரசர்கள்‌ தெளிவான்‌

என்பது நாகாசவவாதக்‌ கட்டளை வியாக்யொனச்‌ இறப்புப்‌பாயிரத்தின்‌ ஒரு பகுதி. இவர்‌ தென்னாற்காடு மாவட்டத்தில்‌கு குறிஞ்சிப்பாடியில்‌ செங்குந்த மரபில்‌ 1879 ஆம்‌ ஆண்டில்‌தோன்‌ இவர்‌ இளமையில்‌ ஆறுமுக நாவலர்‌ சைவப்பிரகாச விதீதியாசாலையில்‌ கல்வி பயின்ருர்‌. பிறகு ஈசானிய மடம்‌ இராமலிங்க அடிகளிடம்‌ கல்வி கற்றார்‌. இராமலிங்க அடிகள்‌ அடிக்குறிப்புகளுடன்‌ பல நூல்கள்‌ வெளியிட்டுள்ளார்‌. அவ்வடி-க்‌குறிப்புகள்‌ இவரால்‌ எழுதப்‌பட்டவையென்பர்‌. கோயிலூர்ப்‌பொன்னம்பல அடிகளிடம்‌ வேதாந்த நூல்களையும்‌ ஓதியுணர்ம்‌தார்‌. பாடல்களை மிக விரைவாக இயம்றுர்‌ திறமை பெழ்‌.றவர்‌. ஏழை எளியவர்களிடத்தில்‌ அருள்‌ மிக்கவர்‌. தம்முடைய ஆதினத்தில்‌ உணவு வழங்கும்‌ அறத்தை மேற்கொண்டு தளராதுஞற்‌ அவ்வறம்‌ இன்றும்‌ சிறப்பாக ஈடர்துகொண்டிருக்கிறது. இப்‌ பெரியார்‌ 1923 ஆம்‌ ஆண்டில்‌ இஹழறைவன்‌ திருவடி. நிழலை எய்‌ தினார்‌.


ஸ்ரீலஸ்ரீ மௌன செல்லப்ப ஞானதேசிகர்



ஸ்ரீலஸ்ரீ மௌன சபாபதி சுவாமிகள்  (7- வது சன்னிதானம்)

இத்தலைமுறையில் ஆன்மீக அறிவு உள்ள எல்லாராலும் அறியப்பெற்றவர்கள். 1923-இல் பட்டத்திற்கு வந்தார்கள். சித்தாந்தம், வேதாந்தம், வீரசைவம் ஆகிய மூன்றிலும் வித்தகராக விளங்கினார்கள். "மணிவாசகர் மன்றம்" என்ற ஓர் அமைப்பை மடாலயத்திலே ஏற்படுத்தி அதன்மூலம் தமிழ்ப்பணியும் சைவப்பணியும் ஆற்றினார்கள். மணிவாசகர் மன்றம் குருவாரத்தோறும் திருவாசக வகுப்பு முதலியன நடந்திற்று. "குமரன் செந்தமிழ் நூற்பதிப்புக் கழகம்" என்றொரு அமைப்பை மடாலயத்திலேயே ஏற்படுத்தி நால்வர் நான்மணிமாலை விருத்தியுரை, முருகேசர் முதுநெறி வெண்பா ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டார்கள்.


நால்வர் நான்மணிமாலை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்தது. அதற்குச் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் விருத்தியுரை செய்தார். மூலமும் அவ்விருத்தியுரையும் இவர்களே (சபாபதி சுவாமிகள்) எழுதிய குறிப்புரையுடன் குமரன் செந்தமிழ் நூற்பதிப்புக் கழகம் வெளியீடாக வெளியிடப்பெற்றது. முதற்பதிப்பு 1962; இரண்டாம் பதிப்பு 1970. கு.செ.நூ. கழக வெளியீடு எண் 12 என்ற குறிப்பு இதில் உள்ளது. இதனால் இன்னும் பல மல்களும் வெளியிடப் பெற்றதென்பது தெரிகிறது. நால்வர் நான்மணிமாலைக்கு இது ஒரு நல்லபதிப்பு. ஈசானியமடம்


இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கமும் படமும் இதில் உள்ளன. அந்நாளில் தமிழ்வித்துவான் படிப்பிற்கு இந்நூலைப் பாடப்புத்தகமாகச் சென்னை, அண்ணாமலை தமிழ் மாணவரின் நலத்தைக் கருதி இந்நூலைச் சபாபதி ஆகிய இரு பல்கலைக்கழகத்தாருமே வைத்திருந்தார்கள் சுவாமிகள் வெளியிட்டார்கள். "தமிழ்க் கல்லூரியிற் பயிலும் மாணவர்கட்கு இந்நூல் பாதிவிலைக்குத் தரப்பெறும். மாணவர்கள் கல்லூரிமுதல்வரின் கடிதத்துடன் விண்ணப்பித்துக்கு விலையில் பெறுவார்களாக" என்ற குறைந்த - பாதி அறிவிப்பு ஒன்றும் இந்நூலில் உள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு 1962-இல் வெளியானவுடன் அதன் ஒரு படியை இங்கிலாந்தில் எம்.எஸ். ஹெச். தாம்ப்சன் என்ற அறிஞருக்கு அனுப்பிவைத்தார், நூல்வந்து சேர்ந்ததாகத் தாம்சன் எழுதிய (01.07.1963) பாராட்டுக் கடிதம் இரண்டாம் பதிப்பில் (1970) சேர்க்கப்பெற்றுள்ளது. பாடப்புத்தகமாக வைக்கப்பெற்றதால் நால்வர் நான்மணிமாலையை வேறு சில பதிப்பகத்தாரும் அக்காலத்தில் வெளியிடலாயினர். ஆதலின் மடத்து வெளியீடு அதிகம் விற்பனையாகாது தேங்கிவிட்டது. விற்பனையாகாமல் எஞ்சிவிட்ட படிகள் அவ்வப்போது மடத்திற்கு வரும் அன்பர்களில் கல்வியார்வமுள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றன. இன்றும் அவ்வாறு வழங்கப்பெற்று வருகிறது.


ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளே இயற்றியது. குறட்ட முருகேசர் முதுநெறிவெண்பா என்ற நூல் சிதம்பரம் ஒன்றினுக்கு ஏற்ற ஒரு வரலாற்றை முன்னிரண்டு அடிகளில் அமைத்து, பின்இரண்டு அடிகளில் அதற்குரிய குறட்பாளை அப்படியே அமைத்து வெண்பாவாக, 133 அதிகாரத்திற்கும் வெண்பாவில் நூல் செய்கின்ற ஒருமுறை தோன்றி வளர்ந்தது அதிகாரத்திற்கு ஒரு குறளாக எடுத்துக்கொண்டு 130 சென்னமல்லையர் செய்த சிவசிவவெண்பா, சிவஞான முனிவர் இயற்றிய சோமேசர் முதுமொழிவெண்பா, இன்னும் இரங்கேசவெண்பா என்பவை அப்படிப்பட்டவை, ஈசானி மடம் இராமலிங்கசுவாமிகள் பாடிய முருகேசர் முதுநெறி


வெண்பாவும் அப்படிப்பட்டதே. அதை அச்சுவாமிகளின் களுள் ஒருவரான சோ. குமாரவீரையர் செய்த லவுடன் குமரன் செந்தமிழ் நூற்பதிப்புக்கழக வழியாகச் திசுவாமிகள் வெளியிட்டார்கள். (1965).

இவ்விரு நூல்களிலுமே குமரன் செந்தமிழ் நூற்பதிப்புக் முகத்தின் முகவரி 39. சபாநாயகர் தெரு, சிதம்பரம் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இது மடத்தின் முகவரியே. இப்போதும் மாறவில்லை. 39 சபாநாயகர் தெரு, சிதம்பரம் என்பதே இப்போதும் மடத்தின் முகவரி மாறவில்லை

சித்தாந்தம் போன்ற சிறந்த இதழ்களில் அக்காலத்தில் தி சுவாமிகள் கட்டுரைகள் எழுதியுள்ளார். சித்தாந்தம் 8 மார்ச் இதழில் (மலர் 33, இதழ் 3) சபாபதி சுவாமிகள் எழுதியுள்ள "மக்கீச்சுரம்" என்ற கட்டுரை ஓர் அருமையான கட்டுரை. அரபிய நாட்டு மெக்கா மசூதி ஒரு காலத்தில் மக்களிச்சுரம் என்ற பெயருடன் சிவன்கோயிலாக இருந்த தென்பதை இக்கட்டுரை கூறுகிறது.

இவ்வாறு பல்லாற்றாலும் சிறப்பாகப் பணியாற்றிய பதி சுவாமிகள் 1981 மே 25-ஆம் நாளில் இறைவன் திருவடிநீழலை அடைந்தார்கள்.






ஸ்ரீலஸ்ரீ மௌன சபாபதி சுவாமி (7-வது சன்னிதானம்)

1970 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட செங்குந்தர் மாநாடு மலர் புத்தகம்








7-வது சன்னிதானம் சபாபதி தேசிகர், 1972 ஆம் ஆண்டு சிதம்பரம் கோவில் குடமுழுக்கு விழா மலரில் எழுதிய கட்டுரை





ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (8-வது சன்னிதானம்)

இவர்கள் பிறந்த ஊர் குறிஞ்சிப்பாடி, பெற்றோர் : சிவலிங்க முதலியார், சாரதாம்பாள் அம்மாள் அம்மையார். சுவாமிகள் பிறந்தநாள் 20.08.1948, குறிஞ்சிப்பாடியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மடாதிபதிகளாக  வருவது அண்மைக்கால மரபாக உள்ளது. "மடத்தார் வீடு என்றே குறிஞ்சிப்பாடியில் அக்குடும்பத்தார்க்குப் பெயர்.





கல்வி

குறிஞ்சிப்பாடியில் முன்னையஞ் செட்டியார் சத்திரத்தில் இன்றளவும் நடந்துவரும் தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரையும், அதன்பின் சிதம்பரம் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில்* 11-ஆம் வகுப்புவரையிலும் சுவாமிகள் படித்தார்கள். 1966 மார்ச் மாதத்தில் பள்ளியிறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சிபெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்ந்து படித்துப் 1971-இல் (Pulavar 8 C Tamil Alone - Faculty of Indian Languages இந்திய மொழிப்புலம் April 197| Examination). பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலேயே பயின்று ஆசிரியப்பயிற்சிப் பட்டயமும் (Diploma in Teaching) பெற்றார்கள், 1972-73. பின்பு சென்னையில் பணியாற்றிய காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட். (தமிழ்) எம்.ஏ., பட்டங்களும் பெற்றார்கள்.


சென்னையில் ஆசிரியப்பணி

சென்னை தம்புசெட்டி தெருவிலுள்ள முத்தியாலு மேனிலைப்பள்ளியில் 07.06.1973 முதல் 06.06.1981 வரை எட்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்கள்.


மடாதிபதியாகப் பொறுப்பேற்றல்

மடாதிபதியாக வருவதற்குரிய குடும்பத்திலேயே பிறந்த சுவாமிகள் இளமையில் சிதம்பரத்தில் பச்சையப்பன் பள்ளி பல்கலைக்கழகத்திலும் படிக்கும் யிலும் அண்ணாமலைப் ப போது மௌனமடத்தில் தங்கிக்கொண்டே படித்தார்கள். படிப்புபோக ஓய்ந்த நேரங்களில் முந்திய சுவாமிகளுக்குப் பணிவிடை செய்தும், பூசைப்பணிகளில் உதவியும், மடத்தின் பல்வேறு பணிகளில் உதவியாகப் பணியாற்றியும் போதுமான பயிற்சியைப் பெற்றிருந்தார்கள்.

சபாபதி சுவாமிகள் இறைவன் திருவடிநீழலை அடைந்த பின் அவர்களுக்கு அடுத்துப் பட்டத்திற்கு வருவதற்கு இவர் தகுந்தவர்கள் என்று அன்பர்கள் எண்ணி இவர்களைச் நன்வையிலிருந்து அழைத்துவந்து மடாதிபதிப் பொறுப்பை செய்தனர். சுவாமிகளும் சென்னையில் தாம் செய்து ஆசிரியப்பணியை விடுத்துச் சிதம்பரத்திற்கு வந்து அன்பர் வைவரின் விருப்பப்படி மடாதிபதிப் பொறுப்பை ஏற்றார்கள்.


பொறுப்பேற்றதுமே மடத்தின் சொத்துகளையும் வரவு செலவுகளையும் பணிகளையும் நன்கு ஆராய்ந்து எல்லா மற்றையும் ஒழுங்குபடுத்தினார்கள். சிதம்பரம் கோயிலுக்குச் யகரின் (நடராசப் பெருமானின்) அபிடேகத்திற்குப் ல் அனுப்பி வைப்பதும், பாண்டியநாயகம் கோயிலுக்குப் பூசைக்குப் பூ அனுப்பி வைப்பதும் மடாலயத்தின் முக்கிய பணிகளாக இருந்தன. சுவாமிகள் இவற்றைச் செம்மைப் படுத்தினார்கள். நன்செய் நிலங்களிலிருந்து வந்த வருமானமே மடத்தின் முக்கிய வருமானமாக இருந்தது. இப்போதும் அப்படியே இருக்கிறது. நிலத்தில் வேளாண்மை செய்வதை மடத்தின் நேரடிப் பொறுப்பில் வைத்துக்கொண்டு, தாமே தேவில் வயல்களுக்குச் சென்று காலநேரம் பாராமல் பாடுபட்டு விவசாய வருமானத்தைப் பெருக்கினார்கள்.


திருக்களாஞ்சேரித் திருப்பணி

சந்தானகுரவர் நால்வரில் மறைஞான சம்பந்தரும் உமாபதிசிவமும் சிதம்பரத்தில் வசித்தார்கள். மறைஞான சம்பந்தர் வசித்த மடமும், மறைஞானசம்பந்தரின் சமாதிக் கோயிலும், மறைஞானசம்பந்தர் வழிபட்ட பழைமையான பிரமபுரீசர்கோயில் என்னும் திருக்களாஞ்செடியுடைய மகா தேவர் கோயிலும், சிதம்பரத்தில் தில்லைப் பெருங்கோயிலுக்கு வடமேற்கில் சிங்காரத்தோப்பு என வழங்கும் திருக்களாஞ் சேரியில் உள்ளன. மூன்றும் அருகருகே உள்ளன. மறைஞான சம்பந்தர் மடமும் சமாதிக்கோயிலும் திருவாவடுதுறை ஆதீன பொது, நீண்ட காலமாகப் பராமரிப்பின்றிப் பாழடைந்து நிர்வாகம். திருக்களாஞ் செடியுடைய மகாதேவர் கோயில் இடத்த அதற்குத் திருப்பணி செய்யத் துணிவார் யாருமில்லை


எட்டாம் பட்டம் மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் அதற்குத் திருப்பணி செய்ய முன்வந்தார். முழுமையாக திருப்பணி செய்து குடநீராட்டு விழாவையும் நடத்திலை (1982-83). பழைய அம்மன்கோயில் பெரியநாயகி கோயில் அழிந்தே போய் விட்டது. இப்போதுள்ள புதிய அம்மன் கோயில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புதிதாகக் கட்டியது மலேசியாவிலிருந்த அன்பர் சிவநேசன் என்பவர் கனவில் இறைவன் தோன்றி இக்கோயில் திருப்பணியில் பங்கு கொள்ளக் கட்டளையிட்டார். அன்பர் சிவநேசன் சிதம்பர திற்கு வந்து தரிசித்து ரூபாய் பன்னிரண்டாயிரம் திருப்பணிக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அக்காலத்தில் சிவநேசர் வடலூருக்கும் வந்தார். எமது பணிகளுக்கு ஐநூறு ரூபாய் காணிக்கை செலுத்தினார். திருமுருக கிருபானந்தவாரியார் திருக்களாஞ்சேரித் திருப்பணிக்கு முப்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தார். மொத்தம் இரண்டரைலட்சம் ரூபாய் செலவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்களாஞ்சேரித் திருப்பணியை நிறைவேற்றினார்கள். வசூலானதும் தானே வந்ததும் போக ஏறத்தாழ இரண்டுலட்சம் ரூபாய் சுவாமி களின் செலவுதான்.


இளம்வயதில் புதிதாகப் பட்டத்திற்கு வந்த நிலையில் போதுமான பொருளாதார வசதி இல்லாத மடத்திற்கு அதிபதியாக இருந்துகொண்டு இவ்வளவு பெரிய திருப்பணியைச் சுவாமிகள் செய்து நிறைவேற்றியது ஒரு பெரிய அற்புத சாதனைதான். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


களஆய்வாக 24.04.2002-இல் நாம் சிதம்பரத்திற்குச் சென்று திருக்களாஞ்சேரியுடைய மகாதேவர் கோயிலையும் மறைஞானசம்பந்தர் மடத்தையும் சமாதிக் கோயிலையும் பார்வையிட்டோம்.* மடத்தையும் சமாதிக்கோயிலையும் நெருங்கவே முடியவில்லை. முட்புதர்கள் மண்டிப் பாழடைந்த 

நிலையிலுள்ளதைக் காணும்போது கண்ணீர் வந்தது. திருக்களாஞ்சேரியுடைய மகாதேவர் கோயில் ஓரளவு நன்னிலையில் உள்ளதென்றே சொல்லவேண்டும். மக்கள் வந்து வழிபடுகின்றனர். மடாதிபதி மௌனம் சுந்தரமூர்த்தி சவாமிகள் கைங்கரியம்.


சுவாமிகளின் அன்றாடப் பணிகள்

மடாலயத்தின் வழிபாடுகள் செவ்வனே முறையாக நடைபெறுகின்றன. சுவாமிகள் வழிபாட்டுப்பிரியர். நீண்ட நேரம் வழிபாடு நிகழ்த்துவார். மடாலயத்தின் பசுமடத்தி லிருந்து நடராசர் அபிடேகத்திற்குப் பால் கொண்டுபோய்க் கொடுக்கப் பெறுகிறது. வரும் அன்பர்களுக்கு மடத்தில் அன்னம் பாலிக்கப் பெறுகிறது. அன்பர்கள் பலர்வந்து தரிசிக்கின்றனர். தீராத நோய்கள் தீரவும், திருமணத் தடங்கல்கள் நீங்கவும், குழந்தைப்பேறு வாய்க்கவும் மடத் திற்கு வந்து பிரார்த்தித்துச் சுவாமிகளிடம் ஆசிபெறும் வழக்கம் இப்போதும் உள்ளது.


ஆதீனகர்த்தர்கள் அனைவரிடமும் சுவாமிகள் தொடர்பும் பழக்கமும் வைத்திருக்கிறார்கள். தருமபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களும் திருப்பனந்தாள் காசிமடமும் அருகில் உள்ளதால் தொடர்பு மிகுதி. மயிலம் பேரூர் ஆதீனங்களின் தொடர்பும் மிகுதிதான். பழனி சாதுசுவாமிகள் மடம் தற்போதிய மடாதிபதி தவத்திரு சண்முக அடிகளாருடன் நெருக்கம் - நட்பு - மிகுதி.


கிருபானந்தவாரியார் சுவாமிகளின் காலத்தில் சிதம்பரம் பகுதியில் அவர் ஆற்றும் சொற்பொழிவுகளில் சுவாமிகள் தலைமையும் முன்னிலையும் வழக்கமானதாக இருந்தன. சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் 80 ஆண்டு முத்துவிழா சிதம்பரத்தில் 1986-இல் நிகழ்ந்தபோது இளைஞர் மாநாட்டுக்குச் சிவாமிகள் தலைமை வகித்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம் பகுதியிலுள்ள உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் விழாக்களுக்கு அழைக்கப் பெற்றுக் கலந்துகொள்கிறார்கள்.


நேரிட்ட காலங்களில் அவ்வப்போது ஏதேனும் தோத்திர சாத்திர வகுப்புகளை நடத்தச்செய்வது சுவாமிகளுக்கு வழக்கம். ஒருசமயம் மகாவித்துவான் அருணை வடியே நடத்தச் செய்தார்கள். வகுப்பு விரிவாக நடந்தது. கவம் களே பாடங்கேட்பது போன்று அது அமைந்தது. சி போதத்திற்கு ஒரு தெளிவுரை எழுதுமாறு சுவாமிகள் கேட்டும் கொண்டார்கள். பேராசிரியர் வித்துவான். க. வெள் வாரணனாரும் உரைஎழுதத் தூண்டினார்கள். அருணைவடிே எழுதிய உரை நீண்டகாலம் அச்சிடப்பெறாமல் மடத்தி இருந்தது. பின்னாளில் அது பேரூராதீனத்தில் கொடுக்கம் பெற்று 1992-இல் நூலாக வெளிவந்தது. வெளியீடு பேரூராதீனம் என்றும், பதிப்பு : மௌன சுவாமிகள் மடம் சிதம்பரம் என்றும் அதன் முகப்பேட்டில் இருப்பதைச் காணலாம்.


மடாலயத் திருப்பணி

மடத்தின் கட்டிடங்கள் அனைத்தும் பழைமைய யாதலின் மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளன. இருப்பளை செப்பனிடுவதைவிட இடித்துக் கட்டவேண்டிய பெரும்பொருட் செலவில் திருப்பணி செய்யவேண் நிலை, மடத்தின் முன்பகுதி முகப்புத்திருப அண்மையில் தொடங்கியுள்ளார்கள். வேலைகள் தடை வருகின்றன. அருட்செல்வர் திரு. நா. மகாலிங்கம் வன் ஒருலட்சம் ரூபாய் நன்கொடையளித்துள்ளார் நன்கொடைகள் சேர்ந்து திருப்பணிகள் இனிதுதிை இறைவன் திருவருளை இறைஞ்சுகிறோம்.


நமக்கும் சுவாமிகளுக்கும் பல ஆண்டு நல்ல தொடர்புண்டு. கருங்குழியில் வள்ளற்பெருமான் வதிந்த இல்லத்தை (தண்ணீர் விளக்கெரித்தல் நாம் திருப்பணி செய்து குடநீராட்டுவிழா நடத்தியde சுவாமிகளையும் அழைத்திருந்தோம் (1987) சிறப்பித்தார்கள், தைப்பூசந்தோறும் சுவாமிகள்


மந்து ஜோதி தரிசனம் செய்யும் வழக்கமுடையவர்கள். பெரும்பாலும் எம்மைச் சந்தித்தே மீள்வார்கள். மடத்து வளாகத்தில் போதுமான இடம் உள்ளது. படித்துப் பட்டம்பெற்று ஆசிரியப்பணியும் ஆற்றிய வ இடத்து வளாகத்தினுள்ளேயே மடத்தை விட்டுச் சிறிது கள்ளி, அல்லது மடத்திற்கு அருகிலேயே உள்ள இடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் ஒரு திருமண மண்டபமும் கட்டவேண்டும் என்பது எம் ஆலோசனை. விவசாய வருமானத்தையே எதிர்பார்த்திருத்தல் இனிப்போதாது. கல்லாதவர்களெல்லாம் கல்வியைக் காசாக்கும் இந்நாவில் கற்றறிந்த சுவாமிகள் கல்லிப்பணியை உடனே தொடங்க வேண்டும் என்பது எம் விருப்பம். திருமணங்கூடி வரவும் குழந்தைப் பேறு வாய்க்கவும் ஆசி வழங்கும் மரபையுடைய திருமடம் ஒரு திருமண மண்டபத்தை அமைத்துக் கொள்வது மடத்திற்கும் பொது மக்களுக்கும் உபயோகமான தாகும்.

மறைவு: 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி காலமானார்.

சமயங்களில் வந்து வடலூரில் வள்ளற் எங்கள் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூரிலிருந்து சிதம்பர வழிபாட்டுக்கு வரும் சிலசமயம் மௌனமடத்திற்கு திண்ணையில் சிறிதுநேரம் அமர்ந்திருப்பதுண்டு என்று ஒரு செய்தி சொல்லப்பெறுகிறது. இதே செய்தி சிதம்பரம் ஈசானிய மடத்திற்கும் சொல்லப்பெறுகிறது. பெருமான் சன்மார்க்க நிறுவனங்களான சத்தியதருமச் சாலையையும் சத்திய ஞானசபையையும் நிறுவுவதற்கு முற்பட்ட காலத்தில் சிதம்பரப்பற்று மிகுதியும் உடையவராக இருந்தார்கள். வள்ளற்பெருமானது அருள்வாழ்வின் இடைக் காலத்தில் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் (1858-1967) சிதம்பர வழிபாட்டுக் காலமாகவே இருந்திருக்கிறது. அக்காலத்தில் கருங்குழியிலிருந்து சிதம்பரம் கோயிலுக்கு வள்ளற் பெருமான் வழிபாட்டுக்கு வந்த சமயங்களில் சிதம்பரம் மௌனமடத் இற்கும் ஈசான்யமடத்திற்கும் விஜயம் செய்திருக்கலாம் என்பது உண்மையே.



சிதம்பரம் செங்குந்தர் செல்லியம்மன் கோவில் குடமுழுக்கு

       



ஈரோடு கோட்டை செங்குந்தர் சின்னபாவடி அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு சிதம்பரம் மௌன மடாலயம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
1991 ஆம் ஆண்டு செங்குந்தர் மாநாட்டுக்கு வாழ்த்து வெளியிட்ட மௌன தேசிகர் ஆதினம்




ஸ்ரீலஸ்ரீ மௌன குமார சுவாமிகள் (9- வது சன்னிதானம்)



    











 


















மௌன தேசிகர் ஆதீன சன்னிதானங்கள் எழுதிய புத்தகங்களில் சில PDF link 
1. சபாபதி தேசிகர் இயற்றிய சிதம்பரம் சிவாலய தரிசனம் நூலின் link 

2. சபாபதி தேசிகர் எழுதிய காசி யாத்திரை விளக்கம் என்ற நூலில் மீன் வடிவம்👇

https://archive.org/details/tva-bok-0000566

3. செல்லப்ப தேசிகர் பரிசோதனை திருதன் செய்த கந்தபுராணச்சுருக்கம் 

https://rmrl.in/en/dl/books/ebook?id=17910

4. திருக்கைலாயபரம்பரை மேலைச்சிதம்பரம் மௌனசுவாமிகள் இயற்றியருளிய கொலைமறுத்தல் 

https://rmrl.in/en/dl/books/ebook?id=3990

  

ஈசானிய ஞானதேசிகர் எழுதியது

சிதம்பரம் மௌனகுரு ஞான தேசிகர் தோத்திரக் கொத்து 👇

https://archive.org/details/chidambaram-mounadesigar-aadhinam

1972 ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேக மலரில் மௌன தேசிகர் எழுதிய சிவ சக்தி வழிபாடு வள்ளுவ நாயனார் என்ற கட்டுரையின் இணைப்பு 👇

https://archive.org/details/tva-prl-0006960/page/n103/mode/1up


வேளாளர் குலத்தை சேர்ந்த கந்தப்ப தேசிகர் என்பவர் மௌன தேசிகர் ஆதீனத்தின் மீது கீழ்க்கண்ட நூல்களை எழுதியுள்ளார்:
1.மௌனகுருதேசிகர் சிகாமணிப்பதிகம்
2.மௌனகுருஞான தேகிகர் பஞ்சரத்தினம்



மௌன தேசிகர் ஆதீனம் பற்றிய பிற செய்திகள்

தமிழ் புலவர் வரிசை புத்தகங்கள் இராமசாமி புலவர் எழுதும்போது சிதம்பரம் மௌன தேசிகர் ஆதின னுள்ளகத்தில் நிறைய நூல்களை பயன்படுத்தி உலர்



1978 நகரத்தார்கள் கோவிலூர் ஆதீனம் கோவிலூர் திருக்குட நீராட்டு மலர்



மௌன மடத்தின் ஒரு பகுத்து வாசல்




1991 ஆம் ஆண்டி வெளிநாட்டவர் ஆய்வில் மௌன தேசிகர் ஆதீனத்தில் 200 ஊளை சுவடிகள், ௨௫௦ அறிய நூல்கள் இருப்பது கண்டுகுடிக்கப்பட்டது



**முற்றும்**











k

Post a Comment

0Comments
Post a Comment (0)