ராவ்சாகிபு உயர்திரு வி. வி. சி. வி. நடேச முதலியார் 6-4-1899-ல் சேலம் ஜில்லா திருச்செங்கோட்டில் செங்குந்த குலத்தில் புள்ளிக்காரர் கூட்டம் பங்காளிகள் குடும்பத்தில் உயர்திரு வி. வி. ஸி. விஸ்வநாத முதலியாரின் மூத்த குமாரராகப் பிறந்தார். ஈரோடு லண்டன் மிஷன் உயர்தர பாடசாலையில் கல்வி பயின்று தந்தையாரின் மறைவு காரணமாக மேல் படிப்பை நிறுத்தி வர்த்தகத் துறையில் ஈடுபட்டார். நாணய மும், அறிவும், திறமையும் இருந்த காரணத்தால் வாணிபத்தில் நன்மதிப்பும் பெரும் பொருளும் ஈட்டினார். பொருளை வளர்த்தல் அருளை வளர்க்கவே என்னும் கருத்தை ஏற்று, மருத்துவ உதவிக்கும், கல்விக்கும், ஏழைகளின் வாழ்விற்கும் தாராளமாகச் செல்வத்தைக் கொடுத்து உதவியதால் அரசாங்கத்தார் அவருக்கு ராவ்சாகிபு என்ற கௌரவப் பட்டத்தை 1935 ஆண்டில் வழங்கினார்கள்.
•தம் வாழ்க்கையில் பல துறைகளில் பொதுநலத் தொண்டு புரிவதில் ஈடுபட்டிருந்தார். ஜில்லா போர்டு அங்கத்தினராகவும், தாலூகா போர்டு தலைவராகவும், பதினோரு ஆண்டுகள் பெஞ்சி கோர்ட்டு பிரசிடெண்டாகவும் பணியாற்றி வந்தார். 52 வயது நிறம்பிய உயர்திரு முதலியார் அவர்கள் இந்த மாதம் முதல் தேதி யன்று சேலத்திலுள்ள தமது இல்லத்திலேயே 1952 ஆம் ஆண்டில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார். திரு முதலியாரின் அவரது ஒரே புதல்வரான திரு டி. வி. என். விஸ்வநாதன் முதலியார் அவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
1929 யி நடைபெற்ற ஈரோடு முதல் செங்குந்த முதலியார் மாநாடு நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
பிரிட்டிஷ் கால தாலுக்கா போர்ட் தலைவர் பதவி என்பது தற்போதைய MLA பதவிக்கு சமமானது.
உயர்திரு VVCV. நடேச முதலியார் மற்றும் அவரது சகோதரர் VVCV.பெரியசாமி முதலியார் ஆவார்.
இவர் தமது உறவினர்களுக்கு நூல் வியாபார சம்பந்தப்பட்ட வகையில் பல உதவிகள் செய்துள்ளார்கள்.அவ்வாறு ஆரம்பித்த நூல் மில் பெருந்துறை ரோட்டில் இருந்த நடேசர் ஸ்பின்னிங் மில் ஆகும். அன்றைய சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஸ்பின்னிங் நூல் ஆகும். இன்று மில் இல்லையென்றாலும் அந்த இடத்தினை நடேச மில் காம்பௌன்ட் என்றே வழக்கத்தில் உள்ளது.
Tiruchengode vvc family pathi innum neraiya research panna information neraiya kedaikkum enga paati solluvanga 1900s la Tiruchengode la Ambani family maari iruppanga nu konguvellalar community zamins Vida ivanga rich family
ReplyDelete