A. ஜெகந்நாதன் director

0

 தமிழ் திரைப்படதுறையின் பழம்பெரும் புகழ்பெற்ற இயக்குனர் ஏ.ஜெகந்நாதன் அவர்களின்


நினைவு தின பதிவு


புகழ் வணக்கம்




ஏ. ஜெகந்நாதன்


பிறப்பு


26 நவம்பர் 1935


திருப்பூர், தமிழ் நாடு, இந்தியா


இறப்பு


7 அக்டோபர் 2012 (அகவை 76)


கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா


பணி


திரைப்பட இயக்குநர்


செயற்பாட்டுக்


காலம்


1973-2012


வாழ்க்கைத்


துணை


ராஜாமணி


பிள்ளைகள்


உஷா தேவி


பவித்ரா தேவி


அருண் குமார்




குடும்பம்


திருப்பூரில் நெசவு பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் ஆறுமுகம்முதலியார்- ராமாத்தாள் தம்பதியர் மகனாகப் பிறந்தார். மறைந்த இயக்குநர் ஜெகந்நாதனின் வாழ்க்கைத் துணைவி ராஜாமணி. இந்த இரட்டையருக்கு இரு மகள்களும் (உஷா தேவி, பவித்ரா) ஒரு மகனும் (அருண் குமார்) உள்ளனர்.




தொழில்


இவர் தினத்தந்தி நாளிதழின் உதவி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கினார். பின்னர் திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பயல் தமிழ்த் திரைப்படமாகும். முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோரை வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 7 தொலைக்காட்சித் தொடர்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட தமிழ்த் தாத்தா சிறந்த தொடரென்ற பாராட்டைப் பெற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)