தெலுங்கு மொழியில் உள்ள கைபீது (mackensie manuscript no:91 , பள்ளி குலத்தவரும் கைக்கோளறும் வல்லானை வென்று விருது பெற்ற நிகழ்வை கூறுகிறது , இந்த கைபீத்தின் சுருக்கமான ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றுமே இணையத்தில் உள்ளது , இந்த கைபீதின் முழு தெலுகு பிரதி கிடைத்தால் ஆந்திராவில் ஏன் செங்குந்தர் கரிகால பக்தலு என்று அழைக்க படுகிறார்கள் மற்றும் ,செங்குந்தர் , வன்னியர் படைகள் பற்றி இன்று நமக்கு தெரிய வராத பல தகவல்கள் தெரியக்கூடும். கிடைக்கப்பெற்ற சுருக்கமான ஆங்கில விளக்கத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:-
”ஒரு காலத்தில் விரவீர விக்ரம சோழன் என்று ஒரு மன்னன் இருந்தான்
விக்ரமபுரத்தை ஆண்ட முடிகொண்ட சோழனின் குடும்பம். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். முற்பிறவியில் காளஹஸ்தி கடவுளுக்கு சேவை செய்யும் யானையாக இருந்தத, கரிகாலன் என்று பெயர் பெற்றவர். கரிகாலன்
வயதுக்கு வந்ததும் மலையாளாவின் மகளான புண்யவதியை மணந்தார்
அரசன் அவனை அரியணையில் அமர்த்தினான், விக்ரமசோழனும் அவனுடைய ராணியும்
காட்டிற்கு ஓய்வு பெற்றார். கரிகாலன் மேரு மலை வரை நாடு முழுவதையும் கைப்பற்றினான். அவர்
காவேரியின் குறுக்கே அணை கட்டும் பணியை மேற்கொண்டார். இப்பணியில் தனக்கு உதவியாக தன்னைச் சார்ந்த அரசர்கள் அனைவரையும் வரவழைத்தார்.
அப்போது கடலுக்கு நடுவே இருந்த வல்லாளன் மறுத்து விடவே , பள்ளி,கைக்கோளர் ,மற்றும் இன்னொரு சமூகம் குறிக்கப்படுகிறார்கள் , வல்லானை வென்று அவன் சிரசை கொண்டு வருகிறார்கள் .அதனால் அவர்களுக்கு சோழகுமாரர்கள் என்ற அந்தஸ்தும் பல்லக்கு சங்கு போன்ற சிற்றரசற்கு உரிய சிறப்புகளையும் கரிகாலன் வழங்கினான் .மேலும் cholarajyasthabaneraya,bhallanarayanisirahkhandana,dhanukulagotrapavitra etc போன்ற பல விருதுகள் கரிகால சோழனால் வழங்க பெற்றன .”
வல்லான் என்பது சாளுக்கிய , இராஷ்டிரகூட போன்ற வடுக மன்னர்களை குறிக்கும் பொது பெயர்.
செங்குந்த முதலியார் பல செப்பேடு, கல்வெட்டு, விருத்தம் பாடல்களில் இவர்கள் வல்லானை வென்றது பற்றிய செய்திகளை இன்றும் காணலாம்

