பொதட்டூர்பேட்டை
ஏகிரி. சஞ்சீவி முதலியார்
(05.05.1887) - (10-10-1943)
அன்றைய சித்தூர் ஜில்லா நகரிமண்டலம் பொதட்டூர்பேட்டையில் 05.05.1887-ல் பிரபல நூல் மற்றும் ஜவுளி வியாபாரியும், தனவந்தருமாகிய திரு.முத்தையா அவர்களுக்கு திரு.ஏ.மு.சஞ்சீவி முதலியார் அவர்கள் மகனாகப் பிறந்தார். அவருடைய 81-வது நினைவு தினம் இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இவருக்கு ஏ.மு.முருகேச முதலியார் என்ற ஒரு இளைய சகோதரரும், ஒரு இளைய சகோதரியும் இருந்தனர்
சித்தூர், இராணிப்பேட்டை, வட ஆற்காடு முதற்கொண்டு புத்தூர் வரை பெரிய ஜில்லாவாக அன்றைய பிரிட்டிஷ் காலத்தில் ஒரே மாவட்டமாக சித்தூர் ஜில்லா விளங்கியது. அந்த காலகட்டத்தில் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அதிகாரமும் ஜில்லா போர்டு அமைப்பிற்கே இருந்தது. 1937-ல் நடைபெற்ற தேர்தலில் மொத்த மாவட்டத்தையும் ஜில்லா போர்டு என்ற அமைப்பே நிர்வகித்து வந்தது.
கல்விப்பணி, சுகாதாரப்பணி, வரி செலுத்துதல், உள்ளாட்சி, கால்நடை பராமரிப்பு, வரிவிதிப்பு மற்றும் வரிவசூல் போன்ற அனைத்து அரசு சம்மந்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டிலிருந்தது.
இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சற்றும் குறையாமல் ஜில்லா போர்டு பதவி விளங்கி வந்தது. அந்த ஜில்லாபோர்டின் உறுப்பினர் பதவிக்கு 1937-60 நடைபெற்ற தேர்தலில் ஏகிரி.
மிகுந்த பிடிப்பு உடையவராகவும், அதை அன்பைப் பெற்றார். சீர்திருத்த கொள்கையில் செயல்படுத்துபவராகவும் விளங்கினார்.
ஆவணி மாதத்தில் நடைபெறும் ஜாத்திரை திருவிழாக்களில், சுற்று வட்டார கிராமங்களில் அவரவர் வீட்டு தெரு வாசல்களிலேயே 'உயிர்பலி' கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் ஏகிரி. சஞ்சீவி முதலியார் தலைமையில் ஸ்ரீமத் சுவாமி அருணகிரி நாதர் மற்றும் சுவாமி கிருஷ்ணானந்தர் போன்றோர் துணையுடன் ஜீவகாருண்ய பரப்புரைகளை பல ஊர்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதன் விளைவும் தாக்கமும் பல ஊர்களில் எதிரொலித்தது. தெய்வத்தின் பெயரால் கொலை செய்யக் கூடாது என்ற சீரிய கொள்கை வெற்றிபெற்று, ஆயிரக்கணக்கான ஜீவன்களின் கொலை தவிர்க்கடிப்பட்டது.
இதன் தொடர்பாக அன்றைய செங்குந்த மித்ரன் இதழ் உட்பட பல இதழ்களில் இந்தச் செய்திகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டன.
1930 களில் அன்றைய பிரிட்டிஷ் காலத்திலேயே பொதட்டூர்பேட்டை, பேரூராட்சியாக விளங்கியது.
16.04.1937 தேதியில் நடைபெற்ற பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட் தேர்தலில் சஞ்சீவி முதலியார் அவர்கள் பஞ்சாயத்து போர்டு தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதட்டூர்பேட்டை போன்ற பகுதியிலிருந்து சென்னைக்கு செல்வதென்றால் நகரி வழியாகத்தான் செல்ல வேண்டும். பொதட்டூர்பேட்டை, கேசவராஜகுப்பம் சாலை நடைபாதையாக இருந்து வந்தது. இந்த சாலை ஜில்லா போர்டு மெம்பராக விளங்கிய சஞ்சீவி முதலியார் அவர்களின் சீரிய பணியால் வண்டிப்பாதையாக அகலப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததை நன்றியோடு அந்த மக்கள் நினைவு கூர்கிறார்கள்.
இதை சீரமைத்து போக்குவரத்துக்கு வகையில் செம்மைப்படுத்திய பெருமை சஞ்சீவி முதலியாரையே சாரும் என்று அந்த பகுதியில் உள்ள மூத்தகுடிமக்கள் இன்றைக்கும் பெருமையாக குறிப்பிட்டு பேசுகிறார்கள்.
அதோடுமட்டுமல்லாமல் மாட்டுவண்டியில் அண்டா, அண்டாவாக உணவு பொருட்களை கட்டிக்கொண்டு நாள்முழுக்க உணவு வழங்குவதை பழக்கமாக கொண்டிருந்தார். இவரை பசி, பஞ்சத்தால் வாடிய மக்கள் மனதார வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
விசேஷ நாட்களில் ஏழை எளிய மக்கள் இவர் வீட்டில் நகையை இரவலாக வாங்கி செல்வதும், நன்கொடையாக பெருமளவு பொருளுதவி பெற்றுச் செல்வதும் மிகவும் பிரபலமான ஒன்று.
சினிமா வானொலி போன்ற பொழுதுபோக்குச் சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் நாடகக்கலை தனக்கே உரிய முக்கியத்துவத்தைப் பெற்று இருந்தது. மின்சாரம் இல்லாத காலம் அது.
லாந்தர், பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் சஞ்சீவி முதலியார் நடத்திய நாடகங்கள் ஏராளம். அவர் வேஷமிட்டு நடிப்பதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஏகாம்பரகுப்பம், நகரி, சத்ரவாடா, புண்ணியம், புத்தூர் போன்ற பகுதியிலிருக்கும் மக்கள் அவருடன் வேஷமிட்டு நடிப்பதை பாக்கியமாகக் கருதினார்.
பள்ளிப்பட்டுக்கு மேற்கே உள்ள ஆந்திர கிராமங்களில் சஞ்சீவி முதலியார் வருகை திருவிழாவாக பார்க்கப்பட்டது. இவர் மாட்டுவண்டியில் சென்றால் நூற்றுக்கணக்கானோர் உடன் சென்று மகிழ்வர். மரிப்பள்ளி, உப்பரப்பள்ளி போன்ற கிராமங்கள் இவற்றுக்குள் அடக்கம்.
அந்தக் காலத்தில் ஊரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே கிராம முனிசிப்பாக இருப்பார்கள் (தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள்) அத்தகைய தன்வந்தர்கள் இவரை தங்களுடைய குடும்ப தலைவராக பாவித்து தங்களுடைய குடும்ப நிகழ்வுகளில் தலைமையேற்க செய்து மகிழ்வார்கள்.
இவருடைய மாமனார் ஊர் சோளிங்கருக்கு அருகாமையிலுள்ள பரவத்தூர். பராம்பரியமான குடும்பத்தை சேர்ந்த குப்பம்மாள் என்ற பெண்மணியை தன்னுடைய சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவி, குப்பம்மாள் தம்பதியினருக்கு 1909 -ம் ஆண்டு சௌமிய வருடம் இ.எஸ்.சுப்ரமணியம் அவர்கள் ஏகமகனாகப் பிறந்தார்.
பிறகு பதினைந்து வருடங்கள் மகப்பேறே இல்லாமல் இருந்த சஞ்சீவி முதலியார் அவர்கள் தன் மனைவியின் சொந்த சகோதரர் மகளை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டார்.
குடியாத்தம் பகுதியில் நூற்பாலை தோன்றுவதற்காக ஏகிரி.சஞ்சீவி முதலியார் குடும்பம் முக்கிய பங்கு வகித்தது.
மூத்த மகனான இ.எஸ்.சுப்பிரமணியம் சீர்திருத்த கொள்கையில் பிடிப்பு உடையவராக விளங்கினார். பெண்கள் மேம்பாட்டிலும், சமுதாய தீண்டாமையிலும் ஜாதி மத வேறுபாடற்ற சமூக நிலையை உருவாக்கினார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களோடும் அறிஞர் அண்ணாவோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
சீர்திருத்த கொள்கையை பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆந்திர ஊர்களில் பரப்பிய பெருமை அவருக்கு உண்டு. மக்கள் தமிழ்மொழியை பயில்வதற்காக 1951-ம் ஆண்டு ஏ.ச.சுப்பிரமணியம் தமிழாசிரியர் பயிற்சி பள்ளியை பொதட்டூர்பேட்டையில் நிறுவினார்.
சஞ்சீவி முதலியார் கோவிந்தம்மாள் இணையருக்கு இ.எஸ்.தியாகராசன் இ.எஸ். கஜராஜன், ஜானகி அம்மாள், விசாலாட்சி அம்மாள், சாரதா அம்மாள், இராணி அம்மாள் ஆகிய மகவுகள் பிறந்தனர்.
இதில் இ.எஸ்.தியாகராசன் 1928-60 அவர்களில் மூத்தவராகப் பிறந்தார். திரு. தியாகராசன் தன் மிகச் சிறிய வயதிலேயே கைத்தறி துறையில் பல பதவிகள் வகித்தார். பிறகு தி.மு.க ஆட்சிக்காலத்தில் திருத்தணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்கினார். ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் தன் தந்தையைப் போலவே பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தலைவராக பதவி வகித்தார்
மிகவும் பெரிய நூல் வியாபாரியாகவும் நிலக்கிழாராகவும், தனவந்தருமாக விளங்கிய சஞ்சீவி முதலியார் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். 10-10-1943 அன்று இப்பூவுலகைவிட்டு மறைந்தார்.


