கணிதமேதை இராமானுஜம் பச்சயப்பன் கல்லூரியில் படித்தார். அப்போது அந்தக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர் என் மாமனார் காலஞ் சென்ற திரு. எஸ்.பி. ஸ்ரீராம் அவர்களுடைய பெரிய தகப்பனார் திரு. சிங்காரவேலு முதலி யார் அவர்கள் ஆவார்கள். அப்போது ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர் திரு. ஜே.ஆர். கன்னிங்ஹாம் என்ற ஆங்கிலேயர். இரா மானுஜம் அவர்கள் கணிதத்தைத் தவிர்த்து, தத்துவப் பாடத்தில் 100 க்கு 10 மதிப்பெண்களும், கிரீக், ரோமானிய சரித்திரப் பா டங்களில் 15 முதல் 20 வரை மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 25 மதிப் பெண்களும் பெற்றதனைப் பார்த்த ஆங்கிலப் பேராசியர் இராமானுஜத்தைப் பார்த்து, "நீ சற்று முன்னேற்றமடைய முடியாதா? (Cant you improve) என்று கணிதப் பேராசி சிரியர் சிங்காரவேலு முதலியார் அவர்கள் முன்னிலையில் கேட்க, இராமானுஜத்தின் அறிவுக் கூர்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட கணிதப் பேராசிரியர், இராமானுஜத் தைப் பார்த்து, "உனக்கு இங்கு பாராட்டுக் கிடைக்காது, நீ நேரடியாக கேம்பிரிட்ஜுடன் தொடர்பு கொள், "என்று சொல்ல அதே போல் இராமானுஜம் கேம்பிரிட்ஜுடன் நேரடி யாகத் தொடர்பு கொண்டு, அவருடைய மேதாவிலாசம் கேம்பிரிட்ஜில் மதிக்கப் பெற்று, இப்போதும் அவர் மனைவிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உதவித் தோகையாகப் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து வருகிறது. இதைப் பற்றி இந்துப் பத்திரிகை 1987 டிசம்பர் மாதத்தில் ஒரு கட்டுரை எழுதித் தலையங்கத்திலும் குறிப்பிட்டிருக்கிறது.
எஸ்.பி. அய்யாச்சாமி முதலியார் அவர்களின் பெருந் தன்மையையும், நேர்மையையும் பாராட்டிக் காலஞ் சென்ற சக்கரவர்த்தி திரு.ராஜகோ பா லாச்சாரியார் அவர்கள், அவர் சேலத்தில் பணிபுரியும் போது, எஞ்ஜினியர் அய்யாச்சாமி முதலியார் அவர்களை அவருடன் ஒரு 'மெசானிக்' மெம்பராகச் சேர்த்துக் கொண்டார். னியர் அய்யாச்சாமி முதலியார் அவர்கள் பழுத்த தேசியவாதி. சென்னையில் தேசிய வாதிகளுக்கு இடமில்லை என்றால், பைகிராப்ஃட்ஸ் ரோடில் உள்ள எஞ்சினியர் அய்யாச் சாமி அவர்கள் வீட்டில்தான் கூட்டம் நடக்கும். அப்படி ஒரு கூட்டத்தை இந்தியக் குடியரசின் முதல் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் அவர்கள் நடத்தியிருக்கிறார். பிறகு பட்டாபி சீத்தாராமையாவுக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் இந்திய தேசியக் காங்கிரசின் தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட "பட்டாபி சீத்தாராமையா தோல்வி யுற்றது தன்னுடைய தோல்வி" என மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள். இது இன உணர்ச்சி காரணமாகச் சொல்லப்பட்டது என்று அறிந்த அய்யாச்சாமி அவர்கள், காங்கிரசில் இருந்து பிரிந்து சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த "ஃபார்வேர்டு பிளாக்" என்ற கட்சியில் சேர்ந்தார்.
இதற்கிடையில் 1937 ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது, முதல் அமைச்சரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு ஒரு நிகழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் எனக் கருதி அவரை அழைத்து வந்து தன்னுடைய வீட்டுக்கு 'காந்தி பீக்' என்ற பெயர் வைக்கும்படி அய்யாச்சாமி முதலியார் அவர்கள் ஏற்பாடு செய்தார். பிறகு ஃபார்வேர்டு பிளாக்கில் சுபாஷுடன் இணைந்த பிற்பாடு, போஸ் இந்தியாவை விட்டுப் புறப்படும் முன்பு சென்னைக்கு வந்து 'காந்தி பீக்' கில் ஒருவார காலம் தங்கியிருந்து, ஒருநாள் மாலை மெரினா கடற்கரையில் இட்லர் இரண் டாவது உலக யுத்தத்தை ஆரம்பித்து விட்டார் என்று சென்னை நகர மக்களுக்குச் சொல்லி விட்டு மறைந்துவிட்டார். திரு. அய்யாச்சாமி முதலியார் தனக்குப் பணி புரிந்த தொண்டனுக்கு தன் சொத்தில் ஒரு பங்கு கொடுத்து தன் மக்களுக்குச் சமமாக நடத்தி இருக்கின்றார் என்பதை நோக்கினால் அவருடைய பெருந்தன்மை தெரியவரும்.
அதுவுமல்லாமல், எனது மாமனாரின் மாமனார் திரு டி.பி. கிருஷ்ணசாமி முதலி யார் அவர்கள் ஆங்கிலத்திலும் இன்னும் பதினொரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந் தார். 1937 க்கு முன்பு 'வேல்ஸ் இளவரசர்' சென்னை வந்த போது அவருக்கு இலத்தீன் மொழியில் கவிதை இயற்றி வரவேற்பளித்தார். அவருடைய கல்வியின் தரத்தை எடுத்துக் கூற, நம்மிடம் இருக்கும் உயர்திரு பெருமாள் முதலியார் போன்றவர்களால் தான் இயலும். கிருஷ்ணசாமி முதலியார் ஆரம்பத்தில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ) யாக இருந்து பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து, அதன் பிறகு அனந்தப்பூர் கல்லூரியின் பிரின்சிபாலாக இருந்தார். அப்போது ஆங்கிலத்தில் வல்லுநர்கள் அவரைப் போற்றி மதிப்படைந்தார்கள், அவர் ஆத்திச்சூடி கொன்றை வேந்தன், நாலடியார் முதலிய தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.
"Ramanujan told him: “If I die, please hand them over to Singaravelu Mudaliar or to the British Professor – Edward B. Ross – of the Madras Christian College ."
