ஒத்தவாடை தெரு விளக்கம் - செங்குந்தர் வாழ்வியல்

0




வட தமிழகம் தொண்டைமண்டலத்தில் செங்குந்த கைக்கோள முதலியார்கள் வாழும் பல தெருக்கள் ஒத்தவாடைத் தெரு என்று அழைக்கப்படும்.

மற்ற தெருக்களில் மேலவாடை, கீழவாடை என இருபுறமும் வீடுகள் இருக்கும். ஒத்தவாடை (ஒற்றை+வாடை) தெருவில் ஒரு பக்கம் பார்த்தே வீடுகள் இருக்கும். அவற்றுக்குப் பின்னால் கழனிதான் இருக்கும். அதாவது வாடை என்றால் வீடுகளின் வரிசை. மற்றொருபக்கம் செங்குந்த கைக்கோள முதலியார்கள் துணி நெசவு செய்ய பாவு/வண்ணம்/கஞ்சி sizing தயார் செய்ய பாவடி அமைப்பு மற்றொரு பக்கம் இருக்கும்.

 கட்டிடங்களின் வரிசை என்று வாடை என்ற சொல்லுக்குப் பொருளுண்டாம்.

நமது அமெரிக்கன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா விளக்க வடிவு தந்திருந்த மதுரைக்காஞ்சி நூலை சில வாரங்களுக்கு முன்பு படித்தபோது 18வது வரியில் உயர்பூரிம விழுத்தெரு என்ற தொடர் வந்தது. அதற்கு உயர்ந்த வரிசை ஒழுங்குடைய சிறந்த தெரு என்று விளக்கம் தந்திருந்தார். அன்றிலிருந்து பூரிமம் என்ற சொல் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது வாடை என்ற சொல்லுக்கும் அதே பொருள் உண்டென்று கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.

 ‘சே, பெருவாரியாக இன்னும் புழக்கத்தில் உள்ள ஒரு எளிய சொல்லுக்குப் பொருள் தெரியாமல் இருந்திருக்கிறோமே!’ என்று கொஞ்சம் வெட்கம்.

 தமிழுக்கும் அகராதி, நிகண்டு எல்லாம் பயன்படுத்துங்கள் என்று பெரியவர்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். நாம் எங்கே செய்கிறோம்?

Post a Comment

0Comments
Post a Comment (0)