உலகின் நான்காவது பெரிய தேராக போற்றப்படும் அர்த்தநாரீஸ்வரர் தேருக்கு
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் இவர் அறங்காவலர் குழு தலைவராக இவர் பொறுப்பு வகித்தபொழுது 1999 ஆம் ஆண்டு இதே வைகாசி மாதத்தில் திருத்தேருக்கு
திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து இரும்புச் சக்கரங்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்தவர்...
365 வருடங்களாக கும்பாபிஷேகம் காணாமல் இருந்த ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு 08.11.2000 புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற பொழுது...
அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பில் இருந்து திருப்பணிகளைச் செய்தவர் ...
நெல் அரிசி வர்த்தகர் சங்கம் என்ற பெயரில் மிகச் சிறப்பானதொரு சங்கத்தை 17 ஆண்டுகள் வழிநடத்திய சிறப்பிற்குரியவர்.
திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பில் நீண்ட காலம் பதவி வகித்து பள்ளிக்கு பல கட்டிடங்களை உருவாக்கித் தந்தவர்.
திருச்செங்கோடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டுகள் பொருளாளர் ஆக இருந்து அந்த சங்கத்தை திறம்பட வழி நடத்தியவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர செயலாளராக பதவி வகித்தவர்.
1986 ஆம் ஆண்டு அன்றைக்கு திருச்செங்கோடு நகராட்சி 24 வருடங்களாக பிரிக்கப்பட்டிருந்தபொழுது ஆறுமுகத்தான் குட்டை பகுதியில் 14 வது வார்டு நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பகுதிக்கு முதன்முதலாக கான்கிரீட் சாலைகளை அமைத்துக் கொடுத்தவர்.
யாருக்கும் வளைந்து கொடுக்காத , நேர்மை மிகுந்த தன்மானமிக்க ஒரு அரசியல்வாதியாக திருச்செங்கோட்டில் திகழ்ந்தவர்.
இவரது உடன் பிறந்த மூத்த சகோதரர் அன்னை சைசிங் டி சி செங்கோட முதலியார் அவர்கள் அறங்காவலர் குழு பொறுப்பில் இருந்த பொழுது தான் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள் மூலமாக அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேருக்கு இரும்பு அச்சு செய்து கொடுக்கப்பட்டது.
டி சி அண்ணாமலை முதலியார் அவர்கள் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்த பொழுது திருத்தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டது.
இவர் காலத்தில் பொருத்தப்பட்ட அதே இரும்புச் சக்கரங்கள் தான் இப்பொழுதும் புதிய அர்த்தநாரீஸ்வரர் திருத்தேருக்கு வலிமை சேர்த்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மரியாதைக்குரிய முன்னாள் நகர மன்ற தலைவர் பாசமிகு அண்ணன் நடேசன் அவர்கள் சேர்மேனாக பதவி வகித்த சமயத்தில் நகராட்சி சுதந்திர தின விழா குடியரசு தின விழா போன்ற தினங்களில் (திருநாவுக்கரசு ) நான் எழுச்சியுடன் உரையாற்றி விட்டு கைத்தட்டல்களுடன் எனது இருக்கையில் வந்து அமருகிற நேரத்தில் என் முதுகை தட்டி சிறப்பாக பேசினாய் தம்பி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று என்னை அப்பொழுது ஊக்கப்படுத்தியவர்.
திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் கல்வி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் இடம் தனிப்பட்ட முறையில் சிறந்த நட்பு கொண்டவர்.
திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி பி ஆறுமுக முதலியார் அவர்களுடன் நிறைவு காலம் வரை நட்புடன் பயணித்தவர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இவரது பிள்ளைகளுக்கு கூட
சுந்தர வடிவேலு பொற்செல்வி அன்புக்கனி அர்த்தநாரீஸ்வரன் என தமிழில் மீதும் இறைவன் மீதும் கொண்ட பற்றுதலால் பெயர் வைத்தவர்.
இவரது தந்தை யார் சின்னப்ப முதலியார் இடத்தில் தான் அந்தப் பகுதியில் பலரது வீட்டு திருமணங்கள் நடைபெற்று இருக்கிறது என்பது வயதில் பெரியவர்கள் நினைவு கூறும் மகிழ்ச்சியான செய்தி.
செங்குந்த கைக்கோளர் குலத்தில் வீரவேல் கோத்திரத்தில் புள்ளிகாரர் வகையறா சித்தநாத முதலியார் குடும்பத்தில் பிறந்து நெல் அரிசி வியாபாரத்தில் சிறந்து விளங்கி அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனி முத்திரை பதித்த
பெருமதிப்பிற்குரிய
T.C. அண்ணாமலை முதலியார் அவர்கள் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் 13-ஆம் திருவிழா அன்று
03.06.2026. புதன்கிழமை மாலை இவரது வீட்டு வாசல் வழியாக அம்மையப்பர் பவனி வருகிற சமயத்தில் தனது புனித உயிரை அம்மையப்பன் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார் ...
உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் ...
மங்காத புகழ் டி சி அண்ணாமலை முதலியார் அவர்களின் பெயரை சரித்திரத்தில் பதிவு செய்யும் ...
தொகுப்பு: திருநாவுக்கரசு செங்குந்தர்

