E.M. சாமிநாத முதலியார்

0



திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் 01.07.1939-ல் செங்குந்த கைக்கோளர் குலம், எச்சான் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த ஏகிரி. முருகேச முதலியார்- சொர்ணம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து Β.Α. பட்டதாரியான இவர் திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அ.இ.அ.தி.முகவில் ஈடுபாடு கொண்டார். 

1980- ஆண்டு பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டவர். 

1986 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பள்ளிப்பட்டு ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

1989-ம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு, வாய்ப்பை இழந்தார். பொதட்டூபேட்டை பெருந்தலைவராக 2001 பேராட்சியின் 2006 வரை சிறப்புற பணியாற்றினார். 

பொது வாழ்விலும், சமுதாய பற்றிலும் மிக சிறந்து விளங்கிய பெருமகனார் 26.12.2015-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)