திருஞானசம்பந்தர் 64 சீடர்கள் வள்ளலார் மரபு செங்குந்தர் ஆதீனங்கள்

0

வள்ளலார் மரபை பற்றிய ஒரு சிறு விளக்கம்


வள்ளலார் மரபு என்பது 14ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் உதித்த காழி கண்ணுடைய வள்ளலார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.


இருப்பினும் இதன் காலம் இதற்கு முற்பட்ட ஒரு சம்பிரதாயத்தில் இருந்து தோன்றிய மரபு என்று சிலர் கூறுகின்றனர்


இந்த கண்ணுடைய வள்ளல் மற்றும் பிற பிற வள்ளல்கள் வழியாக வந்த நூல்கள் வள்ளலார் சாஸ்திரம் எனப்படும்


இந்தக் கண்ணுடைய வள்ளல் மரபு மெய்கண்ட சந்தானத்தில் உதித்த மரபில் இருந்து சற்று வேறுபட்டது


மை கண்டர் மரவில் உதித்த சைவ சித்தாந்தத்திற்கு வேறாக மெய்க்கண்ட மரபை மூலமாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சைவ வள்ளல் மரபு உதித்தது.


இவர் மெய்கண்ட மரபில் உதித்த குருமார்களின் சீடராக இருந்து பின்னர் அதில் இருந்து விலகியவர் என்றும் சிலர் இவர் தனித்த ஒரு பாதையில் இருந்து தோன்றியவர் என்றும் இருவகையான கருத்துக்களும் வைக்கப்படும்.


வள்ளலார் மரபின் தோற்றத்தைப் பற்றிய செய்தியை இதுவரை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம் ஆனால் வள்ளலார் மரபு எப்படி சமூகத்தில் வழங்கப்பட்டது அந்த மரபில் உதித்த ஆச்சாரியர்கள் யார் அவர்கள் எங்கெல்லாம் இருந்து சேவையாற்றியுள்ளனர் என்று பார்ப்போம்.


முத்து தாண்டவராய பிள்ளை என்பவர் 1913இல் இந்த கண்ணுடைய வள்ளல் மரபில் இருந்து வந்த சீர்காழி வள்ளலார் மடத்தினர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்


அந்த மடம் அக்காலத்தில் மிகவும் நலிவுற்று பெயரளவில் மற்றும் மடம் என்ற முறையில் இயங்கி வந்தது ,உள்ளே ஏடுகளை பதிப்பிக்கும் முயற்சியில் முத்து தாண்டவராயப் பிள்ளை ஈடுபட்டும் அந்த மடத்தின் வாரிசோடும் தொடர்பில் இருந்தார்.


அந்த வாரிசின் மூலம் வள்ளலார் மரபின் தோற்றத்தை பற்றி கூறும் பொழுது சீர்காழி திருஞானசம்பந்தருக்கு நேரடி சீடர்கள் 64 பெயர் இருந்ததாகவும் அந்த நேரடி சீடர்கள் சீடர்களின் வாயிலாக தோற்றுவிக்கப்பட்டதுதான் வள்ளலார் மரபு என்றும் அந்த மடத்தின் வாரிசு அவரிடம் கூறியதாக அவர் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்


இதுதான் வள்ளலார் மரபு பற்றி அந்த மரபில் வந்தவர்கள் கூறும் தோற்றம் பற்றிய கதை இது வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்திற்கு சற்று மாறாகவே உள்ளது ஏனெனில் வள்ளலார் சம்பிரதாயத்தை பொருத்தவரை இதனுடைய மூலம் காளி கண்ணுடைய வள்ளலார் கிடையாது மாறாக திருஞானசம்பந்தரே


காளி கண்ணுடைய வள்ளலார் என்ற 14 ஆம் நூற்றாண்டு ஆளுமையினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடம் என்ற கருத்தை மு அருணாச்சலம் முதன்முதலாக முன் வைக்கிறார்


முத்துபாண்டவராய பிள்ளையின் கருத்தை சீர்தூக்கும் பொழுது மு அருணாச்சலம் அவர் அந்த மடத்தினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அவர்கள் கூறியதை அப்படியே இவர் ஏற்றுக்கொண்டு எழுதிவிட்டார் இந்த 64 வள்ளல் என்ற ஒரு கருத்து ஒரு வாய்வழி செய்தியாகவே இருக்கக்கூடும் அது ஆதாரமற்றது புறக்கணித்து விடுகிறார்


இந்த வள்ளலார் மடத்தைப் பற்றி முதன்முதலாக ஒரு ஆய்வு ரீதியாக எழுதியது மு அருணாச்சலமே என்பதினால் அவருடைய இந்த கருத்து வள்ளலார் மரபின் பற்றி முதன்மை கருத்தாக நிலை பெற்று விட்டது


ஆனால் அக்காலத்தில் அவர்கள் கண்டுகொள்ளாத வேறு ஒரு வள்ளலார் மரபு பற்றிய செய்தி அருணாச்சலத்தால் விடப்பட்டது அதனை இதோடு தொடர்பை பொழுது முத்து தாண்டவராயப் பிள்ளையிடம் அந்த மடத்தின் வாரிசு கூறிய செய்தி உண்மை என்பது பார்ப்பதற்கு ஒரு சான்றாக அமையும் வாய்ப்பு அமைகிறது


சீர்காழி வள்ளல் மடம் போன்றே காஞ்சியில் கட்சி ஆளவந்த வள்ளலார் என்ற ஒரு வள்ளல் மரபு தொடர்ந்து தொட்டு இயங்கி வருகிறது அதன் வாரிசுதாரர்கள் என்றளவும் உள்ளனர் எந்த வாரிசுதாரர்களும் ஆளவந்த வள்ளல் பற்றிய தோற்றத்தை கூறும் பொழுது திருஞானசம்பந்தரால் நேரடியாக தீட்சை அளிக்கப்பட்ட ஒரு மரபு என்று வழங்குவது இவர்கள் கூற்று


இந்தக் கட்சி ஆளவந்த வள்ளல் மடம் முத்து தாண்டவராய பிள்ளைக்கும் மு அருணாச்சலத்திற்கும் பெயரளவில் பரிச்சயமாக இருந்தாலும் இவர்கள் முன்வைக்கும் வள்ளலார் மரபின் பற்றிய தோற்றமும் சீர்காழி கண்ணுடைய வள்ளல் வாரிசு வைக்கும் தோற்றமும் ஒன்று என்பது இன்றே நமக்குத் தெரிகிறது.


மேலும் எந்தக் கச்சி  ஆளவந்த வள்ளலார் மடத்தின் வழி வந்த ஒரு தேசிகர் 1897 இல் வள்ளலார் சாஸ்திரம் என்று கண்ணுடைய வள்ளலார் மற்றும் பிற வள்ளல் எழுதிய சாஸ்திர நூல்களின் கோவையின் சிறப்பாயிரத்தில் திருஞானசம்பந்தருக்கு 64 சீடர்கள் உள்ளனர் அந்த சீடர்களுக்கு வள்ளலார் என்ற பெயரும் அந்த வள்ளல்களில் ஒருவராக இருந்த சிவஞான பிரகாச வள்ளலின் தொகுப்பு என்றும் ,முத்துதாண்டவராயப் பிள்ளையிடம் சீர்காழியை சேர்ந்த வாரிசுகள் கூறிய அதே தோற்றம் பற்றிய 64 வள்ளல்கள் என்ற செய்தியை கச்சி ஆளவந்த வள்ளலாரும் கூறியிருக்கிறார்


ஆதலால் மு அருணாச்சலம் புறக்கணித்த வாய்மொழி கதை என்ற கூற்று ஏனைய பிற வள்ளலார் மரபினும் வழங்கி வருவது இன்று நமக்கு தெரிய வருகிறது ஆதலால் அந்த கூற்றை மு அருணாச்சலம் செய்தது போன்று நாம் புறக்கணிக்க இயலாது


சீர்காழி கண்ணுடைய வள்ளல் எந்த மரபில் இருந்துவந்த மடம் என்று இதுவரை பலருக்கு புலப்படவில்லை இந்த மடத்தைப் பற்றி கூறும் பொழுது இவர்கள் பூணூல் அணிந்த வெள்ளை வேட்டி அணிந்த கிரகஸ்த குருமார்கள் என்பது மட்டுமே பலருக்குத் தெரிந்தது உள்ளது இவர்கள் வேளாளர் மரபா? சிவாச்சாரியார் மரபா? என்று பலருக்கும் குழப்பம் திருவாடுதுறை ஆதீனம் முதற்கொண்டு முத்து தாண்டவராய பிள்ளைக்கும் இது சரிவர தெரியவில்லை அவர்களை பூணூல்அணிந்ததால் பிராமணர்கள் என்றே எண்ணி வந்தனர்


ஆனால் இன்று கட்சி ஆள வந்த வள்ளலார் மடத்தின் மரபை பார்க்கும் பொழுது அவர்கள் செங்குந்தர் மரபை


சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் வெள்ளை வேட்டி அணியும் முறை பூணூல் அணிவது மேலும் வள்ளலார் ஆதீனத்திற்குரிய அனைத்து லட்சணமும் பொருந்தி 64 இல் ஒருவராக இன்றும் உள்ளனர் அதுபோலவே சீர்காழி திருஞானசம்பந்த குருமூர்த்தி வள்ளல் என்று மற்றொரு வள்ளலார் ஆதீனம் செங்குந்தர் இனத்தில் இருந்து ஒருவரால் இயங்கிவரப்பட்டிருந்தது ,அதுமட்டுமில்லாமல் கச்சி ஆளவந்த வள்ளலார் போன்று காஞ்சிபுரம் கற்பக வள்ளலார் என்று வேறு ஒரு வள்ளலார் ஆதீனமும் செங்குந்தர் வம்சத்தில் இருந்துள்ளது ஆதலால் 64 வள்ளல் என்ற கூற்று வந்து வெறும் ஒரு வார்த்தை நயத்திற்கு மட்டுமில்லாமல் உண்மையிலேயே 64 வள்ளல் இருந்திருக்க கூடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது


இது சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆளவந்த வள்ளலார் மடமும் பிறரால் பிராமணர் என்ற ஒரு எண்ணத்தில் பார்க்கப்பட்டு வந்தது வேறு சிலரோ வேளாண் மரபை சார்ந்தவர் என்று கூறுவதாகவும் இருந்தது ஆனால் உண்மையிலேயே ஆளவந்த வள்ளலார் செங்குந்தர் வம்சத்தை சேர்ந்த ஆதீனகத்தாக்கள் மேலும் சீர்காழி முதற்கொண்டு காஞ்சிபுரம் வரை இதுவரை நமக்குத் தெரிந்து மூன்று வள்ளல் மடமும் செங்குந்தர்களே, பூணூல் அணிந்து வெள்ளை வேட்டி அணிந்து கிரகஸ்தக் குருக்களாக உள்ள சைவாச்சாரியர்கள் ஆன அவர்கள் பிற இனத்தவராக எண்ணிக் கொள்வதற்கு அவர்களுடைய ஆச்சார நடைமுறைகளால் பிற செங்குந்தர்களாக அவர்கள் அடையாளம் காணப்படாமல் போய்விட்டனர்.


இதன் மூலம் எழும் ஐயம் என்னவென்றால் 64 வள்ளல் மரபும் செங்குந்தர் வம்சத்தினாலே ஏற்படுத்தப்பட்டதா என்ற ஐயமும் சீர்காழியில் எழுகிறது இருந்த வேறு ஒரு வள்ளல் மரமான ஞானசம்பந்த குருமூர்த்தி வள்ளல் செங்குந்தர் வம்சத்தவராய் இருந்ததாலும் சீர்காழி கண்ணுடைய வள்ளலின் மரபை பிறர் அறியாதாலும் இந்த வள்ளல் மரபும் மற்ற வரவும் செங்குந்தர்களாகவே இருந்தால் கூட அல்லது செங்குந்தர்களில் இருந்து கிளைத்திருக்க வேண்டும்.




சிவ ஞான வள்ளலின் - வள்ளலார் சாஸ்திரம் நூலுக்கு - கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம் செங்குந்தர் குல கச்சபேஸ்வர தேசிகர் (1864) எழுதிய சிறப்பாயிரம். link





சீர்காழி ஞானசம்பந்த குருமூர்த்தி வள்ளல் ஆதீனம் செங்குந்தர் குல முத்துக்குமார தேசிகர் முயற்சியால் வெளியிட்ட குமரேச சதகம் நூல் 1897




Post a Comment

0Comments
Post a Comment (0)