திருமழபாடி கைக்கோளர்

0

1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையை சேர்ந்த S. இராமசந்திரன் ஆய்வு செய்து எழுதிய திருமழபாடி ஊர் வரலாறு புத்தகத்தில் ஒரு காலத்தில் இவ்வூரில் செல்வாக்குடன் வாழ்ந்த செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் பற்றிய குறிப்புகள் 

book link


அரியலூர் மாவட்டம் திருமழபாடி ஊரில் முதல் செங்குந்தர் கல்வெட்டு பாண்டிய மண்டலத்தைச்‌ சேர்ந்த கருங்குடி நாட்டுத்‌ தொண்டைமான்‌ அகரத்துக்‌ கைக்கோளரில்‌ ஒருவனான “பின்‌ பழ௫யான்‌ இராசசிங்க தேவன்‌” என்பவன்‌ சடையவர்மன்‌ வீர பாண்டியன்‌ கல்வெட்டொன்றில்‌ நிலதானம்‌ கொடுத்ததனை குறிப்பிடப்படுகிறான்‌. கைக்கோளர்‌ தொடர்பு நமக்குத்‌ தெரிகிறதாயினும்‌ இவ்வூரில்‌ அவனுக்கு உறவினர்கள்‌ இருக்கக்கூடும்‌ என்ற அளவிற்கு மட்டுமே அனுமானிக்க முடிகிறது.


திருமஞ்சனத்துக்காகச்‌ காவிரிநீர்‌ எடுத்‌து வர நியமிக்கப்‌பட்ட ஆண்டார்கள்‌ கைக்கோளர்களாக இருக்க வேண்டும்‌. கைக்கோளர்‌ மரபின்‌ பூர்வீகம்‌ காஞ்சி மாநகரமாகவே கருதப்‌படுகிறது. அதற்கேற்ப இவ்வூரிலுள்ள கைக்கோளரிடையே வழங்கும்‌ கதைகள்‌, பாடல்கள்‌ முதலியனவும்‌ தொண்டை நாட்டோடு தொடர்புடையனவாகவே இருக்கின்‌றன. 


இவர்களது குலதெய்வம்‌ பொய்நாடியம்மன்‌ என்று அமைக்கப்படும்‌ மாரியம்மன்‌. மழபாடிக்‌ கோயிலின்‌ திருச்‌ சுற்று மதிலுக்கு வெளியில்‌ மணிகட்டி, ஐயனார்‌ எனப்படும்‌ தெய்வம்‌ உள்ளது. இந்த ஜயனார்க்கு எதிரில்‌- வாகனத்துக்‌ குரிய இடத்தில்‌- பக்தர்‌ ஒருவர்‌ நவகண்டம் கொடுக்கும்‌ சிலை உள்ளது. அதனால்‌ 'இவ்விடத்தைச்‌ சாவான்‌ கோயில்‌ என்று அழைக்கின்‌றனர்‌. இந்த ஐயனாரும்‌ இவர்களுடைய தெய்வமே. நவகண்டங்‌ கொடுக்கும்‌ அடியார்‌, சுமார்‌ நூறு அண்டு களுக்கு முன்‌ இவ்வூரில்‌ வாழ்ந்தவராம்‌. தம்‌ நண்பர்‌ ஓருவர்‌ யாரிடமோ வாங்கிய கடனை ஏமாற்றி விட்டபோது, தான்‌ அதற்குப்‌ புணையேற்றிருந்ததால்‌ கெளரவத்தைக்‌ காத்துக்‌ கொள்வதற்காக இவ்வாறு தன்னைத்தானே மாய்த்துக்‌ கொண்‌ டாராம்‌. இது சரியான கால-அளவில்‌ குறிப்பிடப்படுகிறதா; உண்மையிலேயே நவகண்டம் கொடுத்ததாக இதனைக்‌ கருத முடியுமா என்ற ஐயங்கள்‌ எழுகின்றன. கோயிலின்‌ தென்புறச்‌ சாலையோரத்தில்‌ பட்டான்சாமி எனப்படும்‌ நான்கு சிலைகள்‌ உள்ளன. நவகண்டம் கொடுக்கும்‌ நிலையிலுள்ள இந்தப்‌ பழைய சிலைகள்‌ இடுப்பளவிற்கு மண்ணில்‌ புதைந்து நிற்கின்றன : இவற்றையும்‌ பார்க்கும்போது சைக்கோளரிடையே நவகண்டம் கொடுக்கும்‌ பழக்கம்‌ இருந்திருக்க வேண்டும்‌ என்று தெளியமுடிகிறது. நவகண்டம் கொடுத்தல்‌ போன்ற சுயபலி முறைகள்‌ சாக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவை. பைரவ மதத்திலும்‌ இவை நடைமுறையிலிருந்துள்ளன. இ.பி, 1824 அளவில்‌ கூட மராட்டியப்‌ பகுதியில்‌, மலைமேலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக்‌ கொள்வதின்‌ மூலம்‌ காலபைரவரைத்‌திருப்தி செய்துள்ளனர்‌ பலர்‌. இங்கு மணிகட்டி ஐயனார்‌ என அழைக்கப்படும்‌ தெய்வம்‌ பற்றி விரிவாக ஆராய்ந்தால்‌ பைரவ மதத்தின்‌ கூறுகள்‌ வெளிப்படலாம்‌.


திருமழபாடி, நாடே ஒரு காலத்தில்‌ கைக்கோளர்‌ ஆதிக்‌கத்திலிருந்ததாகவும்‌ கோயிலில்‌ இவர்களே தலைமை பெற்றிருந்ததாகவும்‌ கூறுகின்றனர்‌. அப்போது 12000 தறிகள்‌ இருந்தனவாம்‌. தேர்த்திருவிழாவில்‌ தற்போது வேளாளர்‌ ஏற்று நடத்திவரும்‌ முதல்‌ காள்‌ மண்டகப்படி, கொடியேற்றம்‌ கைக்கோளரால்‌ நடத்தப்பட்டதாகவும்‌, கொட்டுமேளத்தோடு ஸ்தானிகரும்‌ குருக்களும்‌ வந்து தாம்பாளத்தில்‌ கொடிச்சீலை வாங்கச்‌ செல்லும்‌ அந்தக்‌ காலம்‌ கடந்து போய்விட்டதென்‌ன கழிவிரக்கங்‌ கொள்கின்றனர்‌. 


சுமார்‌ 50ஆண்டுகள்‌ முன்வரை இக்நிலையிருந்ததாம்‌. இப்போதும்‌ இந்நாட்டில்‌ 75 தலைக்‌ கட்டுகள்‌ (குடும்பங்‌ கள்‌) உள்ளன என்கின்றனர்‌. ஊரில்‌ சுமார்‌ 15 அல்லது 20 குடும்பங்கள்‌ இருக்கலாம்‌. யாரும்‌ நெசவுத்‌ தொழில்‌ செய்வதில்லை. துணி வியாபாரம்‌, பெட்டிக்கடை முதலியவற்றுல்‌ பிழைத்து வருகின்றனர்‌. இத்தகைய ஒரு வீழ்ச்சிக்குக்‌ கம்பங்கூத்தாடி (கழைக்‌ கூத்தாடி) ஒருவனின்‌ சாபமே காரணமென்கின்றனர்‌. ஆண்டுதோறும்‌ தை மாதத்தில்‌ நடைபெறும்‌ பொய்நாடியம்‌மன்‌ திருவிழாவின்போது காஞ்சிபுரத்திலிருந்து தொம்பர்‌ இனத்தைச்‌ சேர்ந்த அந்தக்‌ கம்பங்கூத்தாடி வருவானாம்‌. (இப்போதும்‌ ஆண்டுதோறும்‌ வருவதுண்டாம்‌.) இங்குள்ள சேரியில்‌ தங்கியிருந்து மக்களிடம்‌ நெல்லாகவோ பணமா கவோ வசூல்‌ செய்துகொண்டு திரும்பி விடுவானாம்‌. (இந்த உரிமையை இவனுக்களிக்கும்‌ அரசப்பட்டயம்‌ இருக்கிறதென்‌கின்றனர்‌.) இவ்வாறு அவன்‌ தங்கியிருக்கும்போது அவனுக்‌ குத்‌ திருப்தியளிக்கும்‌ வண்ணம்‌ சோறளிக்கவேண்டும்‌. அவன்‌, தேவியின்‌ ஆணை கிடைத்தால்தான்‌ திரும்பிப்போவது வழக்கமென்றும்‌, அவன்‌ தங்கியிருக்குமிடத்தில்‌ அரிசி மாவைக்‌ குவித்துவைத்து அதில்‌ தேவி பாதந்தெரிந்தால்‌ (தேவி நடந்ததற்கடையாளமாகப்‌ பாதச்சுவடு தெரிந்தால்‌) தான்‌. தேவி ஆணை கிடைத்ததாகக்‌ கருதப்படுமென்றும்‌ தெரிகிறது. ஒருமுறை அவன்‌ தங்‌கியிருக்கும்‌ காலம்‌ நீடித்ததால்‌ அதிருப்தியடைந்த கைக்கோளர்‌ அவனுக்குச்‌ சரியாகச்‌ சோறிடவில்லை யென்றும்‌ அதனால்‌ அவன்‌ 

“அழிநாடு”' பாடித்‌ தன்‌ அறம்பாடும்‌ வன்மையால்‌ நாட்டையே அழித்துவிட்டான்‌ என்றும்‌ கதை வழங்குகிறது.பொய்நாடியம்மன்‌ இருவிழாவும்‌ 1962-க்குப்‌ பின்‌ நடைபெறவில்லை. 



பொய்நாடியம்மன்‌ ஊரின்‌ மேற்கு எல்லையில்‌ பள்ளிக்கெதிரில்‌ வடதிசை கோக்கி இக்கோயில்‌ உள்ளது. நத்தத்தேவதை (கிராமத்தின்‌ தெய்வம்‌) என்‌றழைக்கப்படும்‌ இந்தப்‌ பிடாரி அம்மன் கைக்கோளரின்‌ குலதெய்வமாகும்‌. மாகேஸ்வரியும்‌ வாராகியும்‌ இருபுறமும்‌ சூழ நடுவில்‌ வீற்றிருக்கும்‌ மாரியம்மனைத்தான்‌ பொய்நாடியம்மன்‌ என்‌றழைகின்றனர்‌. 1962-க்கு முன்‌, வருடந்தோறும்‌ தைமாதம்‌ அறுவடைக்கு முன்‌ இவளுக்குத்‌ திருவிழா நடைபெற்று வந்தது. மங்கலவாரத்தில்‌ (செவ்வாய்க்‌ கிழமை) காப்புச்‌ கட்டுவதில்‌ தொடங்கும்‌ இத்திருவிழா பத்து காள்கள்‌ மண்டகப்படியுடன்‌ சிறப்பாக நடைபெற்றதாம்‌. பெண்ணாகடம்‌ அருகிலுள்ள திட்டகுடியிலிருக்‌து பண்டாரம்‌ ஒருவர்‌ அருள்‌ பெற்று ஓடி வரு வாரென்றும்‌ அதன்‌ பின் தான்‌ காப்புக்‌ கட்டுவார்கள்‌ என்றும்‌ கூறப்படுகிறது. சிலம்பம்‌, கரகம்‌, உடலில்‌ அலகிட்டு ஆடு தல்‌ உண்டு. சாவான்‌ கோயிலின்‌ முன்‌ உடலில்‌ கீறி ரத்தம்‌ எடுத்து சபதம்‌ செய்வார்களாம்‌, விரதம்‌ நேர்க்‌ இருக்கும்‌ சில கைக்கோளர்கள்‌. திருவிழாவில்‌ ஆடுவெட்டிப்‌ படைப்பதும்‌ உண்டு. வைத்தியநாதசுவாமி  கோயிலிலிருந்து, இத்திருவிழா நடைபெறுவதற்காக மானியம்‌ கொடுத்திருக்கறார்களாம்‌. பொய்நாடியம்மன்‌ உற்சவவிக்ரகமும்‌ அக்கோயிலில்தான்‌ உள்ளது.




பொய்நாடியம்மன்‌ விருத்தம்‌ கைக்கோளரின்‌ குலதெய்வமான பொய்நாடியம்மன்‌ பேரில்‌ விருத்தம்‌ ஓன்று வழங்குகின்றது. கும்பகோணத்தைச்‌

சேர்ந்த ஒருவர்‌ இதனைப்‌. பதிப்பித்திருக்கிறாராம்‌. ,இவ்விருத்‌ தத்தில்‌ தொண்டை காடு, திருவொற்றியூர்‌ என்ற சொற்களும்‌. அவை சார்ந்த நிகழ்ச்சிகளும்‌ இடம்பெறுவது இதன்‌ மூலத்தை ஐயுறச்‌ செய்கிறது. உதாரணமாக, 


“சந்திரன்‌ இரவி வன்னி தருமமாய்‌ நின்‌ற பன்னீர்‌

 . கந்தவேள்‌ திருமால்‌ போற்றும்‌ கடவுளாய்‌ நின்ற நாடு

சுந்தரர்‌ தமிழுக்காகத்‌ தூதுபோய்‌ மீண்ட நாடு

செந்தமிழ்‌ மணக்கும்‌ காடு திருமழபாடி. நாடு”  


என்பது பொய்நாடியம்மன்‌ திருவிமாவில்‌ காப்பு கட்டுமுன்‌ பாடப்படும்‌ ஒரு பாடல்‌. “பன்னீர்‌” என்பது சரியான வடிவ மாகத்‌ தெரியவில்லை. ஒருவேளை “பொன்னி” என்று :பாட பேதமாகக்‌ கொண்டாலுங்கூட, இறைவன்‌ “சுந்தரர்‌ தமிழுக்‌ காகத்‌ தூதுபோய்‌ மீண்ட நாடு” திருமழபாடியாக இருக்க முடியாது. (சுந்தரருடைய கனவில்‌ தோன்றி, மழபாடி வருவ குற்கு நினைப்பூட்டிய நிகழ்ச்சியைத்‌ தூது என்று குறிப்பிட முடியுமா?)


தவிர வீராணத்தேரி, தரணிபுகழ்‌ ஒற்றி (திருவொற்றி யூர்‌) முதலியன இப்பகுதியில்‌ இல்லை. இச்சொற்கள்‌: விருத்‌ தத்தில்‌ நிரம்ப இடம்பெற்றுள்ளன. எனவே இக்த விருத்தம்‌, கைக்கோளரின்‌ பூர்வதேசமாகக்‌ கருதப்படும்‌ தொண்டை மண்டலத்தில்‌ தோன்றியிருக்க வேண்டும்‌,


தவிர வீராணத்தேரி, தரணிபுகழ்‌ ஒற்றி (திருவொற்றி யூர்‌) முதலியன இப்பகுதியில்‌ இல்லை. இச்சொற்கள்‌: விருத்‌ தத்தில்‌ நிரம்ப இடம்பெற்றுள்ளன. எனவே இக்த விருத்தம்‌, கைக்கோளரின்‌ பூர்வதேசமாகக்‌ கருதப்படும்‌ தொண்டை மண்டலத்தில்‌ தோன்றியிருக்க வேண்டும்‌, 

“காளை வாகனம்‌ மேலேறி கள்ளத்‌ தெருவுக்குப்‌ போகை 

பொறுமை பொறுத்தவள்‌ பொய்நாடியம்மனும்‌ . . [யிலே 

. போற சிங்காரத்தைப்‌ பாருங்கடி:” 

“மூஞ்சூறு வாகனம்‌ மேலேறி முதலியார்‌ தெருவுக்குப்‌ போ 

பொறுமை பொறுத்தவள்‌ பொய்காடியம்மனும்‌ [கையிலே 

போற சிங்காரத்தைப்‌ பாருங்கடி” 

முதலிய பாடல்கள்‌, ஓசையுடன்‌ பாடக்‌ கேட்கும்போது இன்பமளிக்கின்றன.




திருமழபாடி செங்குந்தர் நாட்டாண்மை எல்லைகள் 

உள்ளூர்க் கைக்கோளரிடையே வழங்கும் செவி வழிச் செய்தியிலிருந்து நமக்கொரு பயனுள்ள குறிப்பு கிடைக் கிறது. திருமழபாடி நாட்டில் 16 சிறு நாடுகள் அடங்கி யிருந்ததாகவும் திருமழபாடியில் விசேடமான நிகழ்ச்சி, திருவிழா ஏதாகிலும் நடைபெற்றால் 16 நாட்டாண்மைக்காரரும் கூடிடுவர் என்றும் அச்செய்தி கூறுகிறது.


திருமழபாடிக் கோயிலில் நடைபெறும் தேர்த் திரு விழாவின்போது 15 நாட்டாண்மைக்காரர்கள் (அல்லது.


அவர்களின் பிரதிநிதிகள்) வருவார்களென்றும் கோயில் பொற்பண்டாரி (தலைமை ஸ்தானிகர்) அவர்களைப் பெயர் விளித்துக் கூப்பிடுவார் என்றும் தெரிகிறது. இந்த நாட் டாண்மைக்காரர்களின் நாடுகள் (ஊர்கள்) திருமழபாடி நாட்டுக்கு உட்பட்டவை.


கொள்ளிடத்தின் தென்கரையில் வைத்தியநாதபுரம் என்ற ஊர் உள்ளது. இது திருமழபாடி இறைவரின் பெய ரால் ஏற்படுத்தப்பட்ட ஊர். இதேபோல் ஊருக்கு வடக்கில் வைத்தியநாதன் பேட்டை என்ற ஊர் உள்ளது. இவை திருமழபாடி நாட்டுக்கு உட்பட்டவை.


மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலமைந் திருக்கும் கண்டராதித்தம் என்ற ஊர் சோழர் காலத்திய சதுர்வேதி மங்கலங்களுள் ஒன்று.? இதனருகில் செம்பியக்குடி என்ற ஊர் உள்ளது. செம்பியன்மாதேவிக்குடி என்பதே இதன் சரியான பெயராகக் கருதப்படுகிறது.


வடக்கில் பாளையப்பாடி, அரண்மனைக்குறிச்சி முதலிய ஊர்கள், அரச இருக்கையோடு தமக்கிருந்த பிற்காலத் தொடர்பை அறிவிக்கின்றன. இவையும் மழபாடி நாட்டுக் குட்பட்டவை.


திருமழபாடி நாட்டுக்கு எல்லையாகத் தெற்கில் கொள்ளிடத்தின் மறுகரையிலுள்ள வைத்தியநாதபுரத்திலும், வடக்கில் அரண்மனைக்குறிச்சியிலும், மேற்கில் செம்பியக்குடியி லும், கிழக்கில் கொள்ளிடத்தைக் கடந்து புனவாசல் என்ற ஊரிலும் பிள்ளையாரைப் பிரதிஷ்டத்து எல்லை வகுத்ததாகவும் கைக்கோளர்களிடையே செவிவழிச் செய்தி நிலவுகிறது.


புனவாசல் என்ற ஊரின் சரியான பெயர் புனல்வாயில் என்பதாகும். இவ்வூரில் ஆதித்தசோழன் காலத்திலேயே கணபதி கோயில் இருந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)