ஆறகளூர் செங்குந்த முதலியார் வரலாறு மகத நாடு தலைநகரம்

0

சேலம் மாவட்டம் ஆறகளூர் அம்பாயிரம் அம்மன் கோவில் கடைசி நாள் ஒன்பதாம் திருவிழா 

மாலை தேர் நிலையை அடைந்தவுடன் எல்லைசட்டியை உடைத்தல்.

மாலை 7.00 மணிக்கு ஆறகழூர் நாட்டுக்கு நாட்டார் ஆறுமுகம் செங்குந்தர் வகையறாக்கள், சேலம் நாட்டு எதிர்நாட்டார் மற்றும் பெரிய தனக்காரர்களையும் காரியக்காரர்களையும் 18 கிராம செங்குந்தர்களையும் எதிர்கொண்டு அழைக்கும் வைபவம்.


இரவு 8.00 மணிக்கு ஆறகழூர் நாட்டார் ஆறுமுகம் வகையறா பல்லாக்கிலும் எதிர் நாட்டார் எதிர் பல்லக்கிலும்

கூகையூர் நாட்டார் சிற்றம்பலம் முதலியார் வகையறாக்கள் குதிரையிலும் வருவார்கள். அத்துடன் குடை பிடித்து செங்குந்தர் சமூகத்தினர் அனைவரும் நடத்தும் "பட்டினப்பிரவேசம்" ஊர்வலம் நடைபெறும்.


விடியற்காலை 4.00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். (திட்டக்குடி செங்குந்தர் மக்கள்)

ஆடி மாதம் 16ம் தேதி 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு செங்குந்தர்கள் தீவட்டி பிடிக்கப்பட்ட மரியாதையுடன் பட்டிணபிரவேச ஊர்வலம் நடைபெறும்.

காலை 10.00 மணிக்கு 'அலகு குத்துதல்" நடைபெறும்.

மாலை 2.00 மணிக்கு 'அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா' நடைபெறும்.

மாலை 4.00 மணிக்கு அம்பாள் ஊர்வலமாக சென்று மூலவரிடம் காப்பு அவிழ்த்தல் நடைபெறும்.


ஆறாம் திருவிழா-உற்சவதாரர்கள் : ஆறகளூர் சாவான் செங்குந்தர் குல S.R.நாராயணசாமி முதலியார் மற்றும் S.R .ஆறுமுக முதலியாரி வகையறாக்கள்


விசுவாவசு ஆண்டு ஆடி மாதம் 12 ம் தேதி 28.07.2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிவன் கோவிலிலிருந்து 108 வலம்புரி சங்குடன் திருவீதி உலா வந்து மூலவர் அம்பாளுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறும். சுவாமி மீனாட்சி அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வானவேடிக்கையுடன் நையாண்டி மேள கச்சேரியுடன் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.


ஆறகளூர் செங்குந்த முதலியார் பெருமை விளக்கும் கல்வெட்டு: 

ஆறகளூர் கைக்கோளர் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த கொத்தன் என்பவர்கள் பாண்டியர்கள் காலத்தில் 13 ஆம் நூற்றாண்டில்  கோட்டைக்கரை என்ற பகுதியில் குடி அமர்த்தப்பட்டதற்கான கல்வெட்டு ஆறகளூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.

கோயிலில் மெய்க்காவல் பணி செய்வதற்காக இந்த இடம் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தியாகனூரில் உள்ள ஆறகளூர் மலைமண்டல பெருமாள் கோயிலில் இந்த கைக்கோளர்களுக்கு மெய்க்காவல் பணி வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33


ஊர்:ஆறகளூர்                                             வட்டம்:ஆத்தூர்

திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்

அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்

காலம்: கி.பி.1287

மொழி:தமிழ்                                     க.ஆ.அ. 138-1913

செய்தி  :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு புதிதாக குடிமக்களைக் குடியேற்றிய  செய்தியை குறிக்கிறது..

  


கல்வெட்டு    ;

1.     ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ  ர்க்   கூற்றத்து  ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு


2.      ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்


3,   டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்

     குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 


4.    டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)


 5.  ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்

  கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்


 6.  த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து


#ஆறகளூர்பொன்வெங்கடேசன்


Post a Comment

0Comments
Post a Comment (0)