செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம்
குலத்தின் முதல் தலைமுறை: முருகனின் போர்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள்.
குலதெய்வம்: முருகன், அங்காளம்மன், காமாட்சியம்மன், நிசும்பசூதனி(காளி)
குலகுரு: காஞ்சிபுரம் கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம், திருவாலங்காடு கார்க்கோடக ஆதீனம், இறையமங்கலம் பரஞ்சோதி ஆதினம், கூனம்பட்டி மாணிக்கவாசகர் ஆதினம், சிதம்பரம் மௌன தேசிகர் ஆதீனம்.
குல பட்டம்:
சமுதாய தலைநகர்: காஞ்சிபுரம் மகாநாடு, இம்மகாநாடு செங்குந்தர் தலைவர் நாட்டாமைக்கு ஆண்டவர் என்று பெயர். இவர் நியாயம் சொல்லும் இடம் காஞ்சி பிள்ளையார்பாளையம் திருக்கச்சி திருமேற்றளி கோவில் அருகே திருஞானசம்பந்தர் சந்நிதி முன்பு உள்ள ஒதியடிமேடை
