![]() |
சொற்கவாசல் நுழைவுத்தூணில் அமைந்துள்ள இராமசாமி செங்குந்த முதலியாரின்(இடது புறம்)சிற்பம். |
திருத்தல சிறப்பு(அருள்மிகு அழகிரிசாமி சுவாமி திருத்தல சிறப்பு): ஸ்ரீயப்படியான பகவான் திருநாட்டில் இருந்த வண்ணமே தாழவந்து உரையும் பதிகளில் ஒன்றானதும், ஐம்பெரும் பதிகளில் இரண்டாவதுமான ஸ்ரீசைலபுரம் என்னும் இச்சேலம் மாநகரில் மூர்த்தி, ஸ்தலம்,தீர்த்தம் திருக்கோயில் கல்வெட்டுகளில் மூலமாக பத்து நூற்றாண்டிற்கு முந்தினதாக கருதப்படும் வைஷ்ணவ திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
![]() |
சொற்கவாசல் பரம்பரை கட்டளைதாரர் கல்வெட்டு |
பிருகு முனிவர் தன் சாப விமோசனம் பெற்று அழகியவள்ளியை அழகிரிநாதருக்கு கரம் பிடித்து திருமணம் செய்து கொடுத்த திருத்தலம் என்னும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் எடுத்து காட்டப்படுகிறது. ஜகத் குருவான ஸ்ரீ விகனஸ மாமுனிவரால் முதலில் எம்பெருமானை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், ஆகையால் இத்தலம் "ஆருஸம்"என்று ஸ்ரீ வைகானஸ திவ்ய பகவத் சாஸ்திரத்தில் புகழப்படுகிறது.
மூவேந்தர்களும், பிற்காலத்தில் கி. பி 12-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் முதன் முதலாக கருங்கல் திருப்பணி செய்து மகா ஸம்ப்ரோக்ஷணம் செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.
திருமாள் அருளாள் சொற்கவாசலை நிலைநிருத்தல்:
ஆதி காலத்தில் பரமபதவசலை அமைக்க கல் தூண்களை நிறுத்தினர் ஆனால், அந்த மாயவனின் லீலையால் அத்தூண்கள் நிற்காமல் கவிழ்ந்தது. பல முறை முயன்றும் தூண்களை நிலைநிறுத்த முடியவில்லை. பின் இராமசாமி முதலியார்-அங்கமுத்தம்மாள் தம்பதியினரின் திருக்கனவில் தோன்றிய திருமால் நீர் சொற்கவாசலின் முன் நின்று எம்மை மனமுருகி வணங்கி நின்றால் சொர்கவாசல் தூண்கள் நிற்கும் என்றார். இதனை கடைபிடித்த அத் தம்பதியினரின் முன் திருமால் காட்சியளித்து அவர்களது குலம் தழைக்க அருளாசி வழங்கினார். அவர்களது திருவுரும் பொரித்த தூண்கள் சொர்கவாசல் நுழைவில் இடம்பெற்றுள்ளது.
இது முதல் தற்போது வரை இவர்களின் சந்ததியாரே சொற்கவாசலை திறக்கும் கட்டளையை மரபுவழி மாறாமல் தொன்று தொட்டு செய்துவருகின்றனர்.
சேலம் பாவடித்தெருவை பூர்வீகமாக கொண்ட இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் வசித்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு ஏழு என்பது சிறப்பு போல இராமசாமி முதலியார் வழி வந்த ஏழு குடும்பத்தாருக்கு மாலை அணிவித்து வருடம் ஒருவராக முதல் மரியாதை பெற்று பட்டம்கட்டிக்கொண்டு வைகுண்ட ஏகாதசி திருநாளில் சொர்கவாசலை திறந்து வைக்கின்றனர். பின் திருமால் சொற்கவாசலை கடப்பார்.
கட்டளை செய்யும் குடும்பத்தினர் பெயர்கள்:
1) சடகோபன் முதலியார் குடும்பம்.
2) தாமோதரன் முதலியார் குடும்பம்.
3) பெருமாள் குடும்பத்தார் குடும்பம்.
4) விஜயகுமார் முதலியார் குடும்பம்.
5) ஆறுமுக முதலியார் குடும்பம்.
6) ராதாகிருஷ்ணன் முதலியார் குடும்பம்.
7) மனோகரன் முதலியார் குடும்பம்.
மண்டககட்டளை நடைமுறைகள்:
சேலம் செங்குந்தர் பாவடித்தெருவில் அமைந்துள்ள கோயில் வீட்டிலிருந்து 19 பூசைக்கூடைகளுடன் மேளதாளங்கள் முழங்க கட்டளைதாரர்களை வரவேற்று முதல் மரியாதை செலுத்தப்பட்டு திருமாலுக்கு பூசை நடைபெறும். பூசை முடிந்தவுடன் துளசி பிரசாதம் கட்டளைதாரரிடம் வழங்கப்படும். பின் பூசை கூடையில் உள்ள தேங்காய்கள் உடைக்கப்பட்டு. யாக வேள்வியும் நடைபெறும். பின் கட்டளைதாரர் சொற்கவாசலை திறப்பார்.
11 நாட்கள் கழித்து கட்டளைதாரர்களை வரவேற்று முதல் மரியாதை செலுத்தப்பட்டு திருமாலுக்கு பூசை நடைபெறும். பூசை முடிந்தவுடன் புல்லும், துளசி பிரசாதமும் கட்டளைதாரரிடம் வழங்கப்படும். பின் யாக வேள்வியும் நடைபெறும். பின் கட்டளைதாரர்கள் சொற்கவாசலை மூடுவார்கள்.
இவர்களது குடும்பத்தில் யாரேனும் இயற்கை எய்தினால் (இறந்தால்) சேலம் கோட்டை பெருமாள் கோயில் பட்டாச்சாரிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருமாலுக்கு அணிவிக்கப்பட்ட துளசி மாலையை சவத்திற்கு அணிவித்த பின்பே அடக்கம் செய்வர். இந்த பழக்கம் ஆதி முதல் பலநூறு ஆண்டுகளாக செய்துவருகின்றனர். இவ்வாறாக செங்குந்த மரபின் வழி வந்த ஒருவர் வைணவமான திருமாளாள் ஆட்கொள்ளபட்ட இவ் மரபு தொடர்ச்சி வியப்பையளிக்கிறது.
![]() |
சொற்கவாசல் நுழைவுத்தூணில் அமைந்துள்ள அங்க முத்தம்மாள்(வளது புறம்)சிற்பம். |
![]() |
பெருமாள் முதலியார் முதல் மரியாதை பெருதல் |
![]() |
19 பூசைகூடையுடன் சிதம்பரம் முதலியார் |
![]() |
சொற்கவாசல் மூடிய காட்சி |