அருணாசல முதலியார் நா (19- .)
பாண்டிய வளநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரப் பிரிவில் உள்ள வீரவநல்லூரில் நாராயணசாமி முதலியார் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றிய இவர் நூல் பல கற்றுச் செய்யுள் பாடும் திறம்பெற்றார். இவரால் இயற்றப் பெற்ற நூல்கள் "வீரை பூமிநாதன் கலித்துறையந்தாதி, வீரை பூமிநாதன் ஆசிரியவிருத்தம், வீரை மரகதவல்லியம்மன் ஆசிரிய விருத்தம்" என்பன.
"கற்பகமாகி அருளளிப் பாய்இந்தக் காசினியில் சொற்பன மீதினில் தோற்றது தோற்றித் துயரறுந்த அற்புதமான தென்வீரையில் உன்றன் அருளொளியைப் பற்பலகாலமும் பாராது பார்த்துப் பயனுறவே "
தமிழ்ப்புலவர்
என்பது வீரைப் பூமிநாதன் கலித்துறையந்தாதியில் முப்பதாவது பாடல்.