இவர் திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர் அல்லர். இவர் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருந்த முதண்ட முதலியார் என்பவருக்கும் அவருடைய மனைவியாராகிய முத்தம்மையார் என்பவருக்கும் புதல்வராகத் திருவண்ணாமலையில் தோன்றியவர். செங்குந்தர் மரபைச் சேர்ந்த மேற்படி முதலியாரும் அவர் மனைவி யாரும் மக்கட்பேற்றை விரும்பித் திருத்தலப்பயணஞ் செய்த போது தோன்றினார்.
இவர் தமிழ்மொழியை நன்கு பயின்று தமிழ்ச் செய்யுளை நன்றாகப் பாடுந் திறம்பெற்றார். முருகக் கடவுள் மீது பல புகழ்ப் பாடல்களைப் பாடினார். வள்ளிநாயகன் மாலை என்னும் நூல் ஒன்றும் இவரால் இயற்றப்பட்டது. இந்நூல் இராமாயண சாரம், பாகவதசாரம், பாரதசாரம், தசாவதாசாரம், பிரதாப சாரம் முதலியவைகளைக் கொண்டுவிளங்குகிறது.
அகரவரிசை
"பாதபங் கயமுத் திருமுகம் ஆறும் பன்னிரு கரங்களும் மருங்கில் கீதகிண் கிணியும் கனவிலும் மறவேன் கேசவன் முராரிகோ வித்தன் தேசன் முகுந்தன் அச்சுதா நத்தள் தேவகி நந்தனன் கண்ணன் மாதவன் வரதன் மாயவன் திருமால் மருகவே வள்ளி நா யகனே "
என்பது நூலின் முதற்பாட்டு, இவரையும் ஆதி அருணகிரி நாதரையும் ஒருவரெனச் சிலர் எண்ணினர். இவருடைய வரலாற்றைப் பின்வரும் தனிப்பாடல் ஒன்றும் ஒருவாறு கூறு கிறது:
"கார்முகில் வண்ணனும் கமலமலர் வாசனும் காணவரி தாகி நின்று கல்லால் அமர்த்தவள் கருணைபெறு மாதர்பால் சுந்தவேள் துணைவ ராகச் சூர்தனை ஒழிக்கவே தோன்றிமுசு குத்தனின் தூண்டாப் படைத்து ணைவராய்ச் சோணடு மேவீதிரு வானாடும் ஆண்டசிவ தோமில்செங் குத்தர் மரபில் சீர்பரவு திலகமாய்த் திருவருணை யம்பதியில் சிவனருளி னால்உதித்துத் நென்சுடல் கடந்துமுரு கக்கடல் படித்துவரு செந்நெல் நற் பயிர்த ழைக்க வார்ருவடு தொறுநின்று வான்திருப் புகழ்மாரி வருடித்த அருண கிரிமா வள்ளன்மே சுத்தினது வண்டிருப் புகழ்பாடி வனசமா மலர்சூ டுவாம்.