பொன்னம்பலத்தார் நாட்டு கிட்டான் கைக்கோளர்

0

தாரமங்கலம் காட்டுக்கார கூட்டம் பங்காளிகள் சிவகுரு. அர்த்தனாரி முதலியாரின் பொன்னம்பலத்தார் செங்குந்தர் பற்றிய பாடல்கள் (அவரின் கையெழுத்துப் பிரதியிலிருந்து தொகுக்கபட்டது)


சேலம் மாவட்டம் தாரமங்கலம் சன்மார்க்க சீலர் சிவகுரு என்கிற காட்டுக்கார அர்த்தனாரி முதலியார் அவர்கள் உள்ளுரில் நடைபெறும், அருள்மிகு மாரியம்மன் பண்டிகையின் போது பழைய நம் குல வரலாற்றை நினைவுகூறும் வகையில் "பொன்னம்பலத்தார்" வேடம் பூண்டு செங்குந்தர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளை பற்றிய பாடல்களை முக்கிய வீதிகளின் வழியே பாடிக்கொண்டு, இறுதியில் கோயிலை அடைந்து பல மாயாஜல வித்தைகளை செய்து மக்களை மகிழ்விப்பார். அவர் பாடிய அக்காலத்து பாடல்களின் தொகுப்பு சிலவற்றை கீழே தரப்பட்டுள்ளது.


1. ஈசர் கலியுகந்தனில் சீமையிலிருந்து சென்னைப்பட்டிணத்தில் சீமை நூல் வந்திறங்கும் செட்டி, கோமிட்டிகள் கடிதாசி எழுதியே அது செவ்வாய்ப்பேட்டையில் வந்திறங்கும். சிவனுடைய கோத்திரம் செங்குந்தமுதலியார் சில வேலைகள் செய்வதற்கு சேலமது போயுமே சிலவுக்கு தகுந்த சீமை நூல் எடுத்து வந்து அதை அவசரமாகவே தட்டி பிழிந்து அறுபது முழ பாவுகள் நீட்டி அஞ்சாமல் தோய்ந்து வந்தார். அதை ஆறு முழ, ஏழு முழ அளவில் புனைந்துமே அன்றாடம் ஒரு சோமனம் தப்பாமல் நெய்து வந்தார். முப்பத்தி ரெண்டு குஞ்சத்தில் மூன்று முழ அகலத்தில் பெரிய அஞ்சி, சிறிய அஞ்சி ஜரிகைகள் வைத்துமே வெகுவி

நோதமாய் நெய்து வந்தார். பட்டுத் தறிகளும் பாலர்கள் நெய்கிறார்கள் என்று சொல்லி அதை


ஆட்டையாம்பட்டி சந்தைக்கு அநேக உருமாலைகளை கொண்டு போய் அதை அறு நூற்று ஐம்பது ரூபாய்க்கு கடனாக

போட்டு கை தட்டி வந்த குந்தம். வியாழச் சந்தைக்கு செலவுக்கு இல்லாமல் வெகு தடுமாட்டம் ஆன குந்தம். அதற்குமே அஞ்சாமல் பொன்னம்பல வேஷம்

பகராக போட்டு வந்தார். திங்கள் அணி சங்கரன் தன் பங்கினில் அருள் புரியும் ஜெயவீர செங்குந்தரே!

2. சூர பொற்பாவையையும் வல்லாளையும் வென்று தூர்க்கைக்கு அளித்த பெரியோர்!

மடி அழகு காஞ்சி நகர் காமாட்சி அம்மனுட பாதசிலம்பில் பிறந்த பெரியோர்! பாவலர்க்கு சிரசு சிம்மாசனம் கொடுத்து பண்புடன் நடத்தும் பெரியோர்! படி தமிழ் புலவர்க்கு பசி தீரவே சொன்னேன் மலை போல் கொடுத்த பெரியோர்!

வானகரமெங்கும் பல தேர்கள் திருநாளுடன் வளமுடன் நடத்தும் பெரியோர்!

அடி வரிசை தவறாத ஆறுமுகன் துணைவராக அவணியில் உதித்த பெரியோர்! அழகான பூவேழ் தாரநகர் தனில் உறையும் அதிவீர செங்குந்தரே!



3. சீமை தனில் ஒரு தீவு செங்குந்தர் பணி தேசமெல்லாம் செழிக்க சென்னைப்பட்டிணம் லாட்டுபட்டமது மாறிடும் இந்த செங்குந்தர் பட்டமாமோ சேனைத் தலைமுறை கண்ட போதிலும் மாறாமல் இது தேச பிரசித்தமாகும்.

சீரான கவர்னர் எழுவர், நாடேழு செங்குந்தகவர்னர் எழுவர், தக்கபுகழ் நாட்டாண்மை, பெரிய தனம் தகு காரியக்காரராம், சாரட்டு குதிரை வீதிதனில் உலாவுமே தன்மை நகர் பாவடி தனில் அன்றாட வழக்குகளை வாய் மொழியாகவே அனுகுநூல்சாயாமல் தீர்ப்புகள் கூறியுள்ளார் பெரிதான தாரை நகர் செங்குந்தர் பங்கில் வளர் அம்மை மகமாயி உமையே!

4. காரணமதாகவே வீராணம் ஏரியில் கம்பம் ஒன்று நாட்டி அறுபதடி உயரத்தின் மேலே கம்பம் ஒன்று கட்டி அதன்மேல் இருந்த வல்லான், சேர,சோழ,பாண்டிய மூவர் ராஜாக்களும் ஜெயிக்க அறியாமலே செங்குந்தமுதலிமார் ஏரிக்கரைதனிலே ஐந்து பேரைக் குத்தி ஏறுதல் தெப்பம் கட்டினர் ஏறமாட்டாமலே, கம்பத்தின் அடியிலே இருவரைக் குத்தி, ரத்தத்தை மணலில் பிசைந்து வாரி இறைத்தார், ஏறியே வல்லானை கூறிடும் சமயத்தில் அவன் தேவி மாங்கல்ய பிச்சை என்று கேட்டாள், இதோ, நிஜம் மடிப்பிச்சை தந்தோம், தந்தோம் என்று வாக்குரைத்தார், இனிதான செங்குந்தர் பங்கில் வளர்

ஜெய வீர செங்குந்தரே!


5. ஆவலாய் திரிந்து நடந்து நூலெடுத்து அதை ஆண் இழை, பெண் இழை கண்டெடுத்து செங்கண்மால் திருவடி தாமரை நூல் கொய்து சேர, திருவட்டத்திலே இழைத்து பங்கை ஜடாமுனி பட பலகையாகவே பச்சை மால் முன் தண்டு தான் பரிவான அகத்தியர் விழுது கோள் புனியதாய் பாரி செய்த வள்ளிய கயிறும் அன்னநடை பாத்திரம் வேங்கை விரித்தாட வித வித பட்டு செய்தார், ஆண் பிள்ளைக்கு ஆறுமுழம், பெண் பிள்ளைக்கு பதினாறு முழம் என்று அபிமானம் காத்த பெரியோர்! அழகான பூவேழுள் தாரை நகர் வாழ்பவர் தீரமுள்ள செங்குந்தரே!!

6.நேசமான சேரனும், சோழனும், பாண்டியனும் நின்று மெச்ச வாசமான வண்டை மல்லாரிகள் கொட்டி வந்தே சபையில் பாசமான பனை கம்பம் ஏற்றியே தேசத்திலே நட்டு கட்டியும் ஆடுவார் இந்த செங்குந்தரே!

7. ஆவகுடா உடன் மகேந்திரத்திலே உணர்சிரம்

கூவ படை வெட்டி நின்ற வெங்கொன்றன் குமரன் மெச்ச யோக சரிகையும், பட்டாடையும், வைடூரிய கொத்தும் சேவற் கொடியும், வேலும் பெற்றார்கள் இந்த செங்குந்தரே!

-

Post a Comment

0Comments
Post a Comment (0)