கரூர் ராஜலிங்க முதலியார் ex Chairman

0


கரூரில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டி இருந்த தனது பெயரை மாற்றிய செங்குந்த முதலியார் குறித்து அறிவோம்.


தமிழகத்தில் தொன்மை வாய்ந்த மாநகராட்சியில் கரூரும் ஒன்று இந்த மாநகராட்சியில் 1955-60 வரை நகர்மன்றத்தலைவராக இருந்தவர் ஏ.ராஜலிங்கமுதலியார்


சுதந்திர போராட்டத் தியாகிகள் கரூரைச் சேர்ந்த சர்பகதூர் நடராஜா முதலியார். திருச்சி டி எஸ் அருணாசலம், எலவனூர் ராமசாமி முதலியார், முருகையை முதலியார் மற்றும் கரூர் கொட்டை மாப்பிள்ளை முதலியார், திண்ணப்ப செட்டியார் ஆகியோருடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த இவர், நகர்மன்றத்தலைவராக இருந்த காலங்களில் செய்த சாதனைகள் குறித்து அவரது இளைய மகன் ஆர். சண்முகம் கூறியது: நகர்மன்றத்தலையராக இருந்தபோது தற்போதைய திருவள்ளுவர் மைதானத்தை ரூ.85 ஆயிரம் வாங்கி நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் பின்னர் திருவள்ளுவர் மைதானத்திலேயே நாடக அரங்கு அமைத்தார்.


அவர், இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில், தொடர்ந்து நகர்மன்றத்தலைவராக பதவி வகிக்க வாய்ப்பு வந்தபோதும் மறுத்து விட்டார். கரூர் நகரில் ஐந்துரோடு பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைவழிச்சாலை, கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கஸ்தூரிபா ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியனவற்றை அமைத்து கொடுத்தவர் இவர்.


நகர்மன்றத் தலைவராக இருந்தபோது இவரது சாதனையைப் பெருமைப்படுத்தியதும் வகையிலேயே செங்குந்த முதலியார் அதிகளவில் வசித்த பகுதியில் ராஜலிங்க முதலியார் சாலை என பெயர் சூட்டப்பட்டது எதிர்ப்பு தெரிவித்த ராஜலிங்க முதலியார் தனது பெயர் தாங்கிய பலகையை சில நாள்களிலேயே அப்புறப்படுத்தினார். அதன் பின்னர் தான் ராஜலிங்கம் முதலியார் சாலை, செங்குந்தபுரம் என பெயர் மாறியது.


இவரின் முழு வாழ்க்கை வரலாறு, பிறந்த தேதி, கூட்டம் பெயர் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app எண்ணிற்கு அனுப்பவும்.




Post a Comment

0Comments
Post a Comment (0)