அம்மையார்குப்பம் துரைசாமி முதலியார் - திருத்தணி கோவில் அறங்காவலர்

0

சுதந்திரப் போராட்ட வீரர், தமிழக வடக்கு எல்லைப் போராட்ட வீரர், சிறந்த ஆன்மீகவாதி, திருத்தணி முருகன் கோவிலுக்கு 25 ஆண்டு காலத்துக்கு மேல் அறங்காவலராகவும், சிவபெருமான் ஐந்து சபைகளில் ரத்தின சபை ஆன சிறப்புமிக்க திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்  அறங்காவலராகவும், ஆந்திராவில் இருந்து திருத்தணியை மீட்க 12 வருடம் சிறைக்கு சென்றவர்.

அம்மையார்குப்பம் நகரத்தந்தை செங்குந்தர் குல திருப்பணி செம்மல் G.S. துரைசாமிமுதலியார்




பிறப்பு

திருத்தணி அருகே அம்மையார் குப்பம் என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் மரபு குதிரைவீரன் கோத்திரம் பங்காளிகள் குடும்பத்தில் ஆகஸ்ட் 28, 1922 ஆம் ஆண்டில் பிறந்தார் G.S. துரைசாமி முதலியார்.


இவர் செய்த சேவைகள்

1.இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு 1963 வரை துணைத் தலைவர் பின்பு 1996 வரை ஊராட்சி மன்றத்தலைவராக பணியாற்றினார்.


2. தமிழாசான் மங்கலங்கிழார் ம.பெ.சி. நாடார், தளபதி K. வினாயகம் வன்னியர், கோல்டன். சுப்பிரமணி, சரவண. கண்ணப்பன், ஏ.ச.தியாகராசன் முதலியார், ஏ.ச. சுப்பிரமணிய முதலியார் போன்றவரோடு இவரும் ஒருவராய் இருந்து 12 ஆண்டுகள் சிறை சென்று ஆந்திராவில் இருந்து திருதணிகைப் பகுதியை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்டு வெற்றிபெற்றார். ஆந்திரா மாநிலம் பிரிக்கபட்டபொது திருதனிப்பகுதி ஆந்திராவுக்கு சென்றது. இங்கு உள்ள செங்குந்தர் சமூகம் நடத்திய பொராட்டதாலயே பிறகு 1960ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது.


3. 30.3.1960 ஆம் நாள் நடைபெற்ற செங்குந்தர் மாநில மாநாட்டை திருத்தணியில் முன்னின்று நடத்தி பெருமைப்பட்டார்.


4. 01.04.1960 இல் அன்றைய கல்வியமைச்சர் திரு. சி.சுப்பிரமணியம் கவுண்டர் அவர்களால் தமிழகத்தோடு தணிகை வட்டம் இணையும் வடவெல்லை வெற்றிவிழா கொண்டாடியது போன்ற அரும் பெரும் செயல்கள் செய்தார்.


5. 1960 க்குபின் 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அம்மையார்குப்பத்து குழந்தைகள் உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டி உயர்நிலைப்பள்ளியை தன் சொந்த உழைப்பால் கொண்டுவந்தார். அன்றைய கல்வி அமைச்சர் திரு. M. பக்தவத்சலத்தைக் கொண்டு துவக்கினார்.


6. மின்சாரமே கண்டிராத பெரிய கிராமத்திற்கு மின் இணைப்பைக் கொண்டு இருள் மண்டிகிடந்த இல்லங்களும் வீதிகளும் ஒளி பெறச் செய்தார்.


7. 1963 ஆம் ஆண்டு மணியோசை மட்டுமே கேட்ட இவ்வூர் சங்கொலியை கேட்கச் செய்தார்.


8.லோக்கல் லைப்ரரி மாவட்ட உறுப்பினரான பின் கிளை நூலகம் ஊரில் துவக்கினார். அதற்கு தன் சொந்த இடத்தை விட்ட தோடுமட்டுமின்றி ரூபாய் ஐம்பதாயிரம் தமிழக அரக்கும் செலுத்தி G.S.D. நூல் நிலையம் என மாற்றம் செய்தார்.


9. அன்று முதல் 3 ஆரம்பப்பள்ளிகளை ஊரில் ஆரம்பித்து அதற்கான இடங்களையும் பலரிடம் போராடி துவக்கிவைத்தார். கல்விக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட அவர் B.C. ஆஸ்டலையும் ஊருக்கு கொண்டுவந்து இட வாடகையை 3 ஆண்டுகள் அவர் சொந்த செலவிலேயே கொடுத்துவந்தார்.


10. ஆரம்ப சுகாதார நிலையங்கள் வந்தபோது அரசுடன் போராடி அம்மையார்குப்பத்தில் நிறுவினார். அதற்குண்டான இடத்தை தேர்வு செய்து முதன் முதலில் அழகான கட்டிடங்களை கட்டி மகிழ்ந்தார். அது சீரும் சிறப்புமாய் நடைபெற்று நோயில் நலிந்தோரை காக்கிறது.


11. கிராமப்புற அஞ்சலகமாய் இருந்த நிலையை மாற்றி சப் போஸ்டாபீஸ் வரவழைத்தார். 3 ஆண்டுகள் இலவசமாய் அதற்கு தன் சொந்த வீட்டை விட்டுவைத்தார்.


12. குடிநீரால் யானைக்கால் நிறைந்த இவ்ஊரில் அதை போக்க குழாய் கிணருகள் அமைத்து இளநீர் போல் ஊருக்கு நீர்வழங்கினார். தற்போது யானைக்கால் இல்லாத நிலையை உண்டாக்கினார்.


13. பல மேல்நிலை நீர்த்தொட்டிகள் கட்டி தண்ணீர் பஞ்சமே இல்லாத கிராமமாக்கினார்.


14. வங்கி என்பதறியாத இவ்ஊருக்கு பலரை சந்தித்து போராடி இந்தியன் வங்கியை பெற்றுத் தந்த பெருமை இவரையே சாரும்.


15. துர்நாற்றம் வீசிய கசக்கரையை பலர் வியக்கும் வண்ணம் சுத்தம் செய்து பலருக்கும் வீட்டுமனையாக இலவசமாகதந்து மகிழ்ந்தார்.


16.நகரங்களில் இருப்பதுபோல் அவ்விடத்தில் பேருந்து நிலையத்தை கட்டி முடித்தார்.


17.கிராம வியாபாரக் கடைகள் கட்டி ஊராட்சிக்கு வாடகை வரவழைத்தார். இடத்தை தானமாகத்தந்தார்.


18. சுகாதாரம் சீர் பெற வீதிகள் தோரும் கழிவு நீர் கால்வாய்கள் கட்டி ஊர் நலம்பெற உழைத்தார்.


19. பல பள்ளிக் கட்டிடங்களை நன்கொடையாக கட்டி பாராட்டப்பட்டார்.


20. பள்ளிக் கட்டிடக் குழுத் தலைவராய் இருந்து மேல் நிலைப்பள்ளியை இவ்வட்டாரத்தில் முதல்முதல் அமைத்து பெருமை சேர்த்தார். பெண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியை தமிழகத்திலேயே முதன்முதலில் மேல்நிலைப் பள்ளியில் அமைத்து பல பெண்கள் இன்று ஆசிரியைகளாய் இருக்க அன்று பாடுப்பட்டார்.


21. காலனிகளுக்கும் இடுகாட்டுக்கும் பாதை இல்லாமல் இருப்பதைக் கண்டு தன் சொந்த நிலத்தை விட்டு பாதை அமைத்துத் தந்தார்.


22. தந்தி, டெலிபோன் என்றால் யாருக்கும் தெரியாத காலத்தில் முதன் முதலில் அம்மையார் குப்பத்து அஞ்சலகத்தில் தந்தியும் டெலிபோன் எக்சேஞ்சும் கொண்டு வந்தார்.


23. ஊருக்கு பல வகையிலும் பல அரிய பெரிய காரியங்களை செய்து அம்மையார் குப்பம் என்றால் அமெரிக்கா குப்பம் என்று பலர் போற்ற வளர்ச்சி செய்தார்.


24 .இதனால் அது தமிழகத்திலேயே  தன்னிறைவு பெற்ற கிராமம் என்று பாராட்டிய தோடுமட்டுமின்றி, 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவு நூலில் ஒரு பாடம் வைக்கச் செய்து அம்மையார் குப்பத்தை அகிலம் அறியச் செய்தார்.


25. 1989 ஆண்டு சுமார் 5 இலட்சம் நன்கொடை மூலம் பெண்கள் கல்வி சிறப்புப் பெற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பெண்களை பிரித்து ஆசிரியர் மங்கலங்கிழார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் துவக்கினார். அதை 1997 ஆண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகவும் மாற்றினார்.


26.கல்வித்தொண்டை உண்ணாமலும், உறங்காமலும் வெறுப்புயின்றி தொடர்ந்து செய்தார். பலருக்கு கல்வி கூடங்களில் ஆசிரியர்பணியையும் பலருக்கு வங்கிகளிலும் அரசிடம் பெற்றுதந்தார்.


27. இப்படி ஆயிரம் ஆயிரம் தொண்டுகளை துணிந்து செய்து எப்போதும் ஓர் துவக்கவிழாவை ஊரிலே நடத்திவந்தார்.


இவர் செய்த ஆன்மீக சேவை

பொதுவாக தெலுங்கர்கள் முருக கடவுளை வணங்க மாட்டார்கள் இந்த காரணத்தால் திருத்தணி ஆந்திரா பகுதியில் இருந்த காலத்தில் திருத்தணி கோவில் சரியாக பராமரிப்பின்றி மின் இணைப்பு கூட இல்லாமல் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது. 


1963 இல் இருந்து 15 ஆண்டுகள் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறக்காவலர் தலைவராக இருந்து அரும்பாடுபட்டார். இவர் காலத்தில் தமிழகத் திருக்கோயில்களிலேயே முதன்முதலில் மலைப்பாதையை திரு. M. பக்தவச்சலம் முதலமைச்சரைக் கொண்டு துவக்கம் செய்து பின்பு பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆன பின் அவரை கொண்டு திறப்பு விழா நடத்தி மகிழ்ந்தார்.


திருத்தணியில் எண்ணற்ற தங்கும் விடுதிகளை தன் சொந்த செலவில் இடத்தை வாங்கி அதை அன்பளிப்பாய் திருக்கோயிலுக்கு தந்து குடில்களை கட்டி முடித்தார்.


1969 மே மாதம் பலநூற்றாண்டுகளுக்கு பின் திருத்தணி திருக்கோயில் திருப்பணி சிறப்புறச் செய்து குட முழுக்கு விழா நடத்தி பெருமைப்பட்டார்.


தேங்காய் நாருகள் மலிந்து துர்நாற்றம் கொண்டிருந்த கோயிலை மணக்க வைத்த துரையே என்று வாரியார் புகழும் பேருபெற்றார். மீண்டும் 1987 ஆம் ஆண்டு அக்கோயில் குட முழுக்கு விழாகமிட்டி தலைவராய் இருந்து குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.


அங்கும் கல்விச் சேவையில் சோடையின்றி செய்து "அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லூரியை" இவர் காலத்தில் அமைத்து மகிழ்ந்தார்.


தன்னுடைய சொந்த ஊரான அம்மையார் குப்பத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பலர் போற்றும் வண்ணம் 5 நிலை மாட கோபுரத்தை சுமார் 20 இலட்சம் செலவு செய்து கட்டிமுடித்து இரண்டு குடமுழுக்கு விழா செய்து மகிழ்ந்தார்.


ஊர் பொன்னியம்மன் கோயில் அறங்காவலர் தலைவராய் இருந்து பல இலட்சம் செலவு செய்து மூன்று நிலை இராஜ கோபுரம் கட்டி குடமுழுக்கு விழா செய்து மகிழ்ந்தார்.


செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மாவட்ட கிராமங்களிலும் நகரங்கலிலும் நூற்றுக் கணக்கான கோயில்களை கட்ட ஆலோசகராகவும் திருப்பணிகள் செய்யவும் குடமுழுக்கு விழாக்கள் செய்யவும் துணை நின்ற தோடு விழாச் செலவுகளை எத்தனையோ இடங்களில் இவரே ஏற்றுச்செய்துள்ளார்.


திருத்தணி கோயில் காலை சந்தி பூசையை காலம் காலமாய் செங்குந்தர் மரபினர் செய்து வந்ததை கல்வெட்டுகளில் கண்டு அதை அப்படியே நாள்தோரும் செய்ய அதற்கு ஏற்றன செய்தார்.


வள்ளிமலை திருக்கோயிலில் அறங்காவலராக அரசால் தேர்வு செய்யப்பட்டு அக்கோயில் வளர்ச்சிக்கு பாடுபட்டார். மற்றும் திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகளுடன் இணைந்து வள்ளியம்மை தவப்பீடத்தை கட்டி முடித்தார். திருவிழாக் காலங்களில் அங்கு அன்னதானம் செய்ய ஓர் கமிட்டியை அமைத்து அது சிறப்புற நடைப் பெற்று வருகிறது.


தொண்டின் அடையாளமாக இவரின் 60ஆம் ஆண்டு மணிவிழாவில் வாரியார் சுவாமிகள் இவருக்கு "திருப்பணிச்செம்மல்" என்று பட்டம் தந்து பராட்டி மகிழ்ந்தார்.


அடுத்து அம்மையார்குப்பத்தில் சேக்கிழார் மன்றத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து ஆண்டுக்கு ஒரு முறை பல ஆயிரம் செலவு செய்து பல ஆன்மீக அறிஞர்களை ஊருக்கு அழைத்து அவர்களின் சொற்பொழிவுகளை நிகழ வைத்தார்.


அம்மையார் குப்பம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை "திருமுருக கிருபானந்தவாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி" என பெயர் மாற்றம் செய்ய அரசுடன் போராடி பெற்றார்.


வள்ளிமலையில் ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் புத்தாண்டுக்கு முன் தினம் ஆன்மீகவாதிகளையும் இசைஞானிகளையும் கலைஞர்களையும் அழைத்து அவர்களுக்கு வாரியார் விருது தன் சொந்த பணத்தில் வழங்கி சிறப்பு செய்து வந்தார். சென்னை தமிழ் இசை சங்கத்தின் தலைவராக இருந்து ஆன்மீக தமிழ் இசையை பலர் அறிய அரும்பாடுப்பட்டார்.


செங்குந்தர் சமுதாயத்துக்கு செய்த சேவைகள்

ஒன்றுபட்ட செங்கை மாவட்ட (இன்றைய திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்கள்) செங்குந்த மகாஜன சங்கத் தலைவராய் இருந்து செங்குந்தர் சமூதாயத்திற்கு அரும்பாடு பட்டதோடு செங்குந்த மித்திரனுக்கு பலரை ஆயுள் சந்தாதாராக மாற்றிவைத்தார். செங்குந்தர் சமுதாய தொண்டு மன்றம் டிரஸ்ட் (SES) ஆற்றி வரும் தொண்டுக்கு துணையாய் நின்று பலநூறு பேரை ஆரம்ப காலத்திலேயே அதில் உறுப்பினராய் சேர்த்தார்.


காஞ்சியிலும், திருத்தணியிலும் செங்குந்தர் திருமணக் மண்டபம் கூடங்கள் அரும்பாடுப்பட்டார். அமைய பலரின் நன்கொடைகளை அச்செயலுக்கு பெற்றுதந்து மகிழ்ந்தார். அம்மையார்குப்பத்திற்கு இவருடைய காலத்தில் வந்திருந்து வாழ்த்தி செல்லாத மடாதிபதிகளோ ஆன்மீகவாதிகளோ அரசியல் தலைவர்களோ அதிகாரிகளோ இருக்க முடியாது என்ற பெருமையை இவ்வூருக்கு சேர்த்து சிறப்பித்தார்.


1926 ஆண்டில் நாகலிங்க முனிவர் வெளியிட்ட செங்குந்த பிரபந்த திரட்டு நூல் 1993 காஞ்சிபுரம் ஒட்டக்கூத்தர் மன்றத்தால் மறுபதிப்பு செய்தப்போது தனி நபராக 15,000 ரூ நன்கொடை வழங்கினார்.  வேறு எந்த தனி நபரும் இவ்வளோ தொடை வழங்கவில்லை.


அம்மையார் குப்பத்தில் உள்ள பொன்னியம்மன், காமாட்சியம்மன், இராமர் கோயில் போன்ற வற்றில் காலை சந்தி பூஜை தவராமல் நடக்க ஏற்பாடு செய்தார். அம்மையார் குப்பம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் சுமார் 1.5 லட்சம் தன் சொந்த பணத்தைக்கொண்டு திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிக்கு தமிழகத்திலேயே முதன்முதலாக முழுஉருவச் சிலையை அமைத்து அரிய பெரிய பாராட்டைப்பெற்றார்.

மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த திருத்தணி வட்டத்தையும் ஆந்திராவில் சேர்த்துவிட்டனர். மீண்டும் திருத்தணி பகுதியை தமிழகத்துடன் இணைக்க வடக்கு எல்லை போராட்டம் என்ற பெயரில் போராட்டத்தை திருத்தணி தொகுதியை சேர்ந்த செங்குந்தர் சமூகம் சார்ந்த தியாகராஜ முதலியார்,சுப்பிரமணிய முதலியார், G.S.துரைசாமி முதலியார் போன்றவர் ஆரம்பித்து காரணத்தினாலேயே போராட்டம் வெற்றி பெற்று இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.


ஊர் தொண்டும் கல்வித் தொண்டும் கலை தொண்டும் அரசியல் தொண்டும் சமுதாய தொண்டும் ஆன்மீக தொண்டும் படுத்துறங்க நேரமின்றி அமர்ந்து பேசிக் கொண்டே உறங்கிய பெருந்தகை "தொண்டு செய்து பழுத்த பழம் தூய கதராடை உடுத்திய திருப்பணிச் செம்மல்" திரு.G.S. துரைசாமி முதலியார் அவர்கள் 13.01.2004 இரவு 9.00 மணிக்கு இறைவனடி சேர்ந்து ஓய்வு பெற்றார் என மனம் வருந்தி தெரிவித்துக்கொள்கிறோம்.




இவரின் வரலாறு தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவுக்கு கொடுத்த திருப்பணிசெம்மல் அம்மையார்குப்பம் துரைசாமி முதலியார் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி..


இவரின்

கோத்திரம் பெயர்: குதிரைவீரன் கூட்டம்

குலதெய்வம்: ராமகிரி அங்காளம்மன் மற்றும் திருத்தணி முருகன் 

குலகுரு : காஞ்சிபுரம் கச்சி ஆளவந்தார்  வள்ளலார் ஆதீனம்

இவர் பற்றிய வேறு வரலாறு தகவல்கள் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app - 7826980901 எண்ணிற்று தகவலை அனுப்பவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)