சைதை இரா. பாலசுந்தரம்
இவர் 1924. ஆம் ஆண்டு செங்குந்த முதலியார் வகுப்பில் பிறந்தார்.
கும்பகோணம் திருநாகேஸ்வரம் இவர் ஊராகும். அடங்கன் முறை அருணாசலம் ஐயா
அவர்களின் சீடரான இராமலிங்க முதலியார் இவருடைய தந்தையார் ஆவார்.
பயிற்சி
தேவாரஇசை வல்லுநர் பலரிடம் இவர் பயிற்சி பெற்றுள்ளார். தம்
பதினைந்தாவது வயதில் தம் தந்தையாரிடமும், பிறகு 25-வயது வரை சைதை நடராசன்
*1. திரு. கபாலி ஒதுவாருடன் நேர்காணல், 89.4.1994, சென்னை.
*2. அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோயில் தலவரலாறு, 1989.
அவர்களிடமும் இவர் தேவாரம் கற்றார். காஞ்சிபுரம் விநாயக முதலியாரிடமும் பிறகு
1979இல் தருமபுரம் சுவாமிநாதன் அவர்களிடமும் இவர் தேவாரம் பயின்றார். பிறகு
சித்தார் சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடமும் ஐந்து ஆண்டுகள் கர்நாடக இசை
பயின்றுள்ளார்.
பணி
இவர் 40 அண்டுக்காலங்களாக தேவாரம் பாடி வருகிறார். 1986 ஆம் ஆண்டு
இவர் அருள்மிகு கச்சாலீசுவரர் ஆலய ஓதுவாராக ஆனார். இவருக்கு முன் இதே
ஆலயத்தில் திரு சிவசங்கர முதலியார் அவர்கள் 20 ஆண்டுக்காலம் ஒதுவாராகப்
பணிபுரிந்துள்ளார்.
ஊதியம்: ரூ.575/- இவருக்கு ஒட்டுமொத்த மாத ஊதியமாக வழங்கப்பட்டு
வருகிறது. ்
சிறப்புகள்
1980இல் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இவருக்கு “திருமுறை
இசைமணி" என்ற பட்டம் வழங்கியுள்ளார். தென்னிந்தியக் கலாச்சார மையம் இவருக்குச்
சான்றிதழ் வழங்கியுள்ளது. 1992 ஆம் ஆண்டு இவர்*சில மாதங்கள் சிறப்புப் பயிற்சி
பெற்றமைக்காக தெய்வீகப் பேரவை சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னை வானொலி நிலையத்தின் இரண்டாம் நிலை இசைக் கலைஞர் ஆவார்
இவர். தொலைக் காட்சியிலும் நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு
மேலாக புரசை நேத்தப்பாக்கம் முனுசாமி முதலியார் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட
மாணவர்களுக்குத் தேவார வகுப்புகள் நடத்தி வருகிறார். தனியாகவும் மாணவர்களுக்குத்
தேவார வகுப்புகள் நடத்தி வருகிறார். திருக்குறளை இசையமைத்து ஒலிநாடா
வழங்கியுள்ளளார். ஒதுவாராகப் பணி புரிவதோடு தமிழ் முறைத் திருமணங்களையும்
நடத்தி வருகிறார்.
சைவ சித்தாந்த திருமுறை மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கைப்
பயணம் மேற்கொண்டுள்ளார். கந்தர் சஷ்டி விழாவிற்காக காசி மற்றும் மைசூர் சென்று
பாடி வந்துள்ளார். தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 7.20 மணி வரை இவர் ஆலய
அலுவல் நேரம் ஆகும். சிறப்பு நாட்களில் காலையிலும் 9.00 மணி முதல் 72.00 மணி
வரை பணிபுரிவார்.