1937 இல் பிறந்த இவர் செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்தவராவார்.
திருக்கழுக்குன்றம் பஞ்சாயத்தைச் சேர்ந்த தேசிமுகப் பேட்டையில் ஒரு நெசவாளர்
குடும்பம்பத்தில் தோன்றியவர் இவர்.
பயிற்சி:
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீசுவரர் தேவாரப் பாடசாலையில்
ஆசிரியராகப் பணியாற்றி வந்த தம் தந்தை திரு. நடேச முதலியாரிடம் இவர் தேவாரம்
கற்றுக் கொண்டார். நடேச முதலியார் காஞ்சீபுரம் நயினா பிள்ளை அவர்களிடம்
கர்நாடக இசையைப் பயின்றவர் ஆவார்.
பணி:
அருள்மிகு வடபழனியாண்டவர் ஆலய ஒதுவாராக 76.4.1963 முதல் திரு. ஆறுமுக
ஒதுவார் பணியாற்றி வருகிறார்.
சிறப்புகள்:
3. தமிழ்நாடு தெய்வீகப் பேரவை மயிலாடுதுறையில் நடத்திய தேவாரப் பயிற்சி
வகுப்புகளில் 48.5.1969 முதல் 31.5.1969 முடிய பங்கு கொண்டு, சான்றிதழைப்
பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு 1983 இல் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்.
3. திருஞான சம்பந்தர் இசைவிழாவில் “தேவாரத் தமிழிசைத் தென்றல்” பட்டம்
பெற்றுள்ளார்.
திரு ஆறுமுக ஒதுவார் மாணவர்களுக்குத்தேவார வகுப்புகள் நடத்தி வருகிறார்.
தேவாரம் பாடல் கற்பிப்பதோடு, அவற்றின் விளக்கங்களையும் கூறித்
தெளிவுபடுத்துகிறார். வடபழநியாண்டவர் ஆலயத்தில் அவருடைய பணி நேரம் மாலை
4,00 மணிமுதல் 10.00 மணி வரை ஆகும்.
* 1. நா.ரா. முருகவேள், “ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் வரலாறு”, 1964.
சென்னை வானொலி நிலையத்தாரால் இரண்ட ம் நிலை இசைக் கலைஞராக
அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சண்முகக் கவசம்' ஒலிநாட வழங்கியிருப்பதோடு 15
ராகங்களில் பாம்பன் சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்கு இசையமைதீதிருக்கிறார்.
ஆரம்பத்தில் கஞ்சீரமெனும் இசைக் கருவியை வாசிப்ப்வராக விளங்கி வந்த இவர்
கடந்த 40 ஆண்டுகளாக முழுநேர ஆலய ஒதுவாராகப் பணியாற்றி வருகிறார். 1