கொங்கு காணியான பட்டயம்
இது ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.
செப்பேடு செய்தி: வேளாளர் குலப் பமக்கள் சோழ நாட்டிலிருந்து குடியேறி கொங்கு நாட்டில் காணி, ஊர் இவைகளைப் படைத்துக் கொண்ட விபரம் இதில் கூறப்படுகிறது. குருக்கள் நியமனம் செய்து கோயில் கட்டி வழிபாடு செய்த விபரம் கூறப்படுகிறது. கொங்கு வேளாளர் குலத்துக் கவுண்டர்கள் பலர் கையொப்பமிட்டுள்ளனர். கவுண்டர்களைத் தவிரக் செங்குந்தர் குலப் பெருமக்கள் மட்டுமே இப்பட்டயத்தில் கூறப்பட்டுள்ளனர். செங்குந்தர்களும் கொங்கு நாட்டில் காணி, பூமி, பரிவட்டம் பெற்றுள்ளனர்.
கொங்கு காணியான பட்டயத்தில் செங்குந்தர் பற்றிய செய்தி👇
"செங்குந்தரில் மாலைமுதலி, நாராயணமுதலி, வெள்ளைமுதலி வித்தாரணமுதலி, அணஞ்சாமுதலி இந்தக் குடிகளில் உள்ள சகலமான குடிகளும் கூடி முந்திய சிவாலய மாகிய திருமுருகன் பூண்டி முருகநாதர் சன்னதியில் அடிவணங்கித் தெண்டனிட்டுக் காணி பூமி பட்டம் பரிவட்டங்களும் பெற்று" என்ற பகுதியில் செங்குந்தர்கள் சிறப்புப் பெற்ற விபரம் தெரிகிறது.
இப்பட்டயதின் முழு பகுதியை படிக்க👇